நம்மோடு வந்து நம்மோடு செல்லும் - - எச்.ஏ. அஸீஸ்

.
ஒரு தோற்றம் மட்டும் தெரியும் 
துல்லியமாய் வேறெதுவும் தென்படாது
காது மூக்கு கண்கள் வாய் என
யாதும் அதில் விளங்குமாமோ
முழுத்   தோற்றம் மட்டும் தெரியும்
இருளில் மறைந்து நின்று
ஒளியில் மீண்டு வரும்
பொத்தி எடுத்து பையில் வைக்க
பொருளு மல்ல அது
போவெனச் சொல்லி போவதுமில்லை
வாவெனச் சொல்லி வருவது மில்லை
சித்தரிக்க முடியாது வர்ணம் தீட்டி
காது கழுத்து
கையெல்லாம் நாம் அணியும்
ஏதும் அதன் தரிப்பில்
இடம் கொள்வ தில்லை
முகத்தழகு சந்தணமோ
மெருகூட்டும் கலவைகளோ
வாசனையோ 




வடிவழகு ஆடைகளோ
விளங்காது அதற்கு
முழுத் தோற்றம் மட்டும் தெரியும்
அது கூட உன் அழகு
காட்ட வில்லை யென்றும்
மெருகூட்ட வில்லை யென்றும்
ஏன் விசனம் என்றும்
உன்னோடு சேர்ந்து
உருவான ஒன்றை
மண்ணோடு பிடுங்க
முனைவதும் தான் என்ன
நிழல் நமது
நிதர்சனத்தின் பரிமாணம்
நம்மோடு வந்து
நம்மோடு செல்லும்
நிழல் கூட சாட்சி சொல்லும்
நேரம் வந்தால்
                            


No comments: