உலகச் செய்திகள்

பங்களாதேஷில் தொடர் குண்டு வெடிப்புக்கள் மயிரிழையில் உயிர்தப்பினார் பிரதமர் ஹஸினா

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது வான் தாக்குதல்: 30 பேர் பலி

ஆர்ஜென்டீனாவில் இரு ஹெலிகள் மோதி விபத்து 3 பிரான்ஸ் விளையாட்டுவீரர்கள் உட்பட 10 பேர் பலி

உளவு பார்த்த குற்றச்சாட்டுக்குள்ளான இளைஞருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றம்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருடங்கள் சிறை









பங்களாதேஷில் தொடர் குண்டு வெடிப்புக்கள் மயிரிழையில் உயிர்தப்பினார் பிரதமர் ஹஸினா

09/03/2015 பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷெய்க் ஹஸினா குண்டு தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து மயி­ரி­ழையில் சனிக்­கி­ழமை உயிர்தப்­பி­யுள்ளார்.
தலை­நகர் டாக்­கா­வி­லுள்ள கர்வன் பஸார் பிராந்­தி­யத்தில் ஹஸி­னாவின் வாகன தொட­ர­ணிகள் கடந்து சென்­ற­தற்கு 10 நிமி­டங்­களின் பின்னர் பல குண்­டுகள் வெடித்­துள்­ளன.
தலை­ந­கரில் சுஹ்­ர­வர்டி உடியன் பிராந்­தி­யத்தில் அந்­நாட்டின் தந்­தை­யான ஷெய்க் முஜிபுர் ரஹ்மான் 1971 ஆம் ஆண்டு ஆற்­றிய வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க உரையைக் குறிக்கும் வகையில் ஆளும் அவாமி லீக் கட்­சியால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊர்­வ­லத்தில் கலந்து கொள்ள ஹஸினா சென்ற வேளை­யி­லேயே இந்த குண்டு வெடிப்­புக்கள் இடம்­பெற்­றுள்­ளன.
மேற்­படி குண்டு வெடிப்­புக்­களில் சிக்கி ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் காய­ம­டைந்­துள்ளார்.
கடந்த ஜன­வரி 5 ஆம் திகதி பங்­க­ளாதேஷ் எதிர்க்­கட்­சி­யான பி.என்.பி. கட்சி தலை­மை­யி­லான 20 கட்­சி­களின் கூட்­ட­மைப்பால் வீதி மறியல் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இடம்பெற்ற வன் முறைகளில் 100க்கும் அதிகமானோர் உயி ரிழந்துள்ளனர். நன்றி வீரகேசரி 









சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது வான் தாக்குதல்: 30 பேர் பலி

10/03/2015 வட சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவால் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரும் எண்ணெய் சுத்­தி­ரி­க­ரிப்பு நிலை­யங்கள் மீது அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் படை­யினர் நடத்­திய வான் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 30 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்­ளது.
ரக்கா நக­ரி­லுள்ள எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­களின் மீது அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­யினர் இரு வான் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.
அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் படை­யினர் கடந்த செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து சிரி­யாவில் வான் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.அத்­துடன் அயல் நாடான ஈராக்­கிலும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை இலக்கு வைத்து வான் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.
ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் எண்ணெய் விற்­பனை மூலம் நாளொன்­றுக்கு ஒரு மில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான வரு­மா­னத்தை ஈட்டி வரு­வ­தாக கூறப்­ப­டு­கின்ற நிலையில் அந்த தீவி­ர­வா­தி­களால் செயற்­ப­டுத்­தப்­படும் எண்ணெய் நிலை­யங்­களை இலக்கு வைத்து வான் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­வது வழ­மை­யா­க­வுள்­ளது.
அதே­ச­மயம் ஞாயிற்­றுக்­கி­ழமை வட­மேற்கு மாகா­ண­மான இட்­லிப்பில் அல் - கொய்­தா­வுடன் தொடர்­பு­டைய அல்-நுஸ்ரா போராளி குழுவை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தப்­பட்­டதில் அந்த போராளி குழுவைச் சேர்ந்­தது குறைந்­தது 9 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
மேலும் சிரிய தலை­ந­க­ருக்கு வடகிழக் கேயுள்ள புறநகரப் பகுதிகளில் அரசாங் கப்படையினர் நடத்திய வான் தாக்குதல் களில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நன்றி வீரகேசரி









ஆர்ஜென்டீனாவில் இரு ஹெலிகள் மோதி விபத்து 3 பிரான்ஸ் விளையாட்டுவீரர்கள் உட்பட 10 பேர் பலி

11/03/2015 ஆர்­ஜென்­டீ­னாவில் இரு உலங்குவானூர்­திகள் ஒன்­று­ட­னொன்று மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் 8 பிரான்ஸ் பிர­ஜை­களும் 2 ஆர்­ஜென்­டீன விமானிகளும் பலி­யா­கி­யுள் ­ளனர்.

பலி­யா­ன­வர்­களில் பிரான்ஸை சேர்ந்த ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையான கமிலி முப்பட், ஒலிம்பிக் குத்­துச்­சண்டை வீர­ரான அலெக்­ஸிஸ் வஸ்ரின், பட­கோட்ட வீராங்­க­னை­யான புளோரன்ஸ் ஆர்தோட் ஆகிய 3 விளை­யாட்டு வீரர்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

கமிலி (25 வயது) 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டி நிகழ்வில் 400 மீற்றர் நீச்­சலில் தங்கப் பதக்­கத்தை வென்­ற­வ­ராவார். அதே­ச­மயம் அலெக்ஸிஸ் (28வயது) 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்­டியில் வெண்­கல பதக்கம் வென்­ற­வ­ராவார்.
அவர்கள் பயணம் செய்த உலங்குவானூர்­தி­யா­னது சனல் ரி.எப்.1 தொலைக்­காட்சி சேவைக்­கான பிர­ப­லங்கள் தொடர்­பான படப்­பி­டிப்பில் பங்­கேற்­றி­ருந்த வேளை­யி­லேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மேற்படி விபத்துக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.   நன்றி வீரகேசரி







உளவு பார்த்த குற்றச்சாட்டுக்குள்ளான இளைஞருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றம்

12/03/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் பண­யக்­கை­தி­யாக பிடிக்­கப்­பட்ட 19 வயது இஸ்­ரே­லிய - அரே­பிய பிர­ஜை­யொ­ரு­வரை சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்­வதை வெளிப்­படுத் தும் புதிய வீடியோ காட்­சி­யொன்று அந்தப் போராளி குழுவால் வெளி­யி­டப்­பட்­டுள்ளது.

மேற்­படி இஸ்­ரே­லிய - அரே­பி­ய­ரான முஹமட் செய்த் இஸ்­மாயில் முஸலம் என்ற மேற்­படி பண­யக்­கைதி இஸ்­ரே­லிய புல­னாய்­வா­ளர்­களால் சிரி­யா­வி­லுள்ள ஐ.எஸ் குழு­வி­னரை உளவு பார்க்க அனுப்பப்­பட்­ டிருந்­ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இஸ்­மாயில் வெளி­நாட்டுப் போராளி போன்று காண்­பித்து தமது குழு­வி­ன­ருடன் இணைந்து கொண்­ட­தாக ஐ.எஸ் தீவி­ர­வா­தக்­குழு தெரி­வித்­துள்­ளது.
இஸ்­மாயில் இஸ்­ரே­லிய புல­னாய்வு நிலை­ ய­மான மொஸாட்டிற்­காக உளவு பார்த்­த­தாக தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்­டிற்கு இஸ்­ரேலும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் மறுப்புத் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

''ஐ.எஸ் தீவி­ர­வாத குழு தனக்­கென ஒரு குறிக்­கோளை கொண்­டுள்­ளதால், இதனை செய்­கி­றது. அது முழு உல­கையும் அச்­சப்­ப­டுத்த விரும்­பு­கி­றது'' என இஸ்­மா­யிலின் தந்­தை­யான செய்த் முஸலம் தெரி­வித்­துள்ளார்.
ஐ.எஸ் அமைப்பை விட்டு இஸ்­மாயில் தப்பிச் செல்ல முயற்­சித்­தமை கார­ண­மா­கவே அவரை உள­வாளி என தீவி­ர­வா­திகள் போலி குற்­றச்­சாட்டை சுமத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் உண்­மையில் அப்­பாவி எனவும் மேலும் அவர் கூறினார்.
தனது மகன் 2014 ஆம் ஆண்டு துருக்­கிக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்ட போது, காணாமல் போனதாகவும் பின்னர் வட சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பலம் பெற்று விளங்கும் ரக்கா நகரிலிருந்து அவர் தொலைபேசி மூலம் தன்னை தொடர்புகொண்டதாகவும் செய்த் முஸலம் தெரிவித்தார்.
அந்த 13 நிமிட வீடியோ காட்­சியில் செம்­மஞ்சள் நிற ஆடை அணிந்து காணப்­பட்ட இஸ்­மாயில் இரு சீரு­டை­ய­ணிந்த தீவி­ர­வா­திகள் முன்­பாக மண்­டி­யிட்டு அமர்ந்­தி­ருக்­கிறார். அந்த தீவிரவாதி­களில் ஒருவர் 12 வய­திலும் குறைந்த சிறுவன் போன்று காணப்­ப­டு­கிறான்.
அவன் துப்­பாக்­கியை இஸ்­மா­யிலை நோக்கி தூக்கிப் பிடிப்­பதும் பின்னர் அவ­ரது தலையை நோக்கி குறி பார்ப்­பதும் இஸ்­மாயில் துப்­பாக்­கியால் சுடப்­பட்டு நிலத்தில் சரிந்து கிடப்­பதும் அந்த வீடியோ காட்­சியில் காண்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
அந்த சிறு­வனின் கையி­லி­ருந்த துப்­பாக்­கி­யி­லி­ருந்து பாய்ந்த ரவையால் இஸ்­மாயில் கொல்­லப்­பட்டார் என்­பதை உறு­திப்­ப­டுத்த முடி­யாத வகையில் அந்த வீடியோ காட்சி பட­மாக்­கப்­பட்­டி­ருந்­தது.   நன்றி வீரகேசரி









மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருடங்கள் சிறை

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஹமட் நஷீட் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி






No comments: