ஸ்ரீ வள்ளுவன் நமஹ…-அறிவுமதி

 

  

                                                              

வருகிறார்கள்
வந்தவர்கள்
வருகிறார்கள்

கொல்ல முயல்வார்கள்
முடியாது
போனால்
உறவு படுத்தி
வெல்ல
முயல்வார்கள்
கொற்றவை
பிள்ளை
அப்படித்தான்
பார்வதிப்
பிள்ளையாய்
ஆக்கப்பட்டான்
அப்படி
ஆக்கப்பட்டவன்
அண்ணனுக்குத்
தம்பியாய்
ஏக
இந்தியாவில்
ஏற்கப்
பட்டானா
ஏன்
நம்
பாட்டன்
திருமுருகன்
திருப்பதிக்கு
வடக்கே
ஸ்ரீ
முருகனாகக்
கூட
சீண்டப்படவில்லையே

வருகிறார்கள்
வந்தவர்கள்
வருகிறார்கள்
இப்போது
திருவள்ளுவனை
ஸ்ரீ
வள்ளுவனாக்க
வருகிறார்கள்
கங்கா ஜலம்
தெளித்து
சு+த்திரத்
தீட்டைச்
சுத்தமாக
கழுவி விட்டு
அய்யன்
வள்ளுவனை
அய்யர்
வள்ளுவனாக்க
வருகிறார்கள்
இனத்
தலைவன்
முருகனை
இந்துக்
கடவுள்
ஆக்கியவர்கள்
மதம்
கடந்த
திருக்குறளை
மதப்
படுத்த
வருகிறார்கள்
விநாயகன் இடத்தில்
பகவத்
கீதையை
முருகன் இடத்தில்
திருக்
குறளை…
ஆம்
கொல்ல முயல்வார்கள்
முடியாது
போனால்
உறவு படுத்தி
வெல்ல
முயல்வார்கள்
வருகிறார்கள்
வந்தவர்கள்
வருகிறார்கள்
கைப்பிடியளவு
இந்தி
மண்ணைக்
கொண்டு
வந்து
கொடுத்து
விட்டு
ஒட்டு மொத்தத்
தமிழ்
மண்ணையும்
ஒரேயடியாய்த்
தூக்கிப்
போக
வருகிறார்கள்
வருகிறார்கள்
வந்தவர்கள்
வருகிறார்கள

No comments: