கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் துரைவி நினைவுப்பேருரையும் விருது வழங்கலும்

.
 இலங்கை    பதிப்புத்துறைக்கும்   எழுத்தாளர்களுக்கும்  பெரும்  பணியாற்றிய   துரைவி  என  அன்புடன்  அழைக்கப்படும்  அமரர்  துரை விஸ்வநாதன்  அவர்களின்   84  வது  பிறந்தி  தின   நினைவுப்பேருரையும் துரைவி  விருது  வழங்கலும்  அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்  எழுத்தாளர்  திரு லெ.முருகபூபதி       தலைமையில்  நடைபெற்றது.
இவ்விழாவில்  வரவேற்புரையை   மேமன்கவி  நிகழ்த்தினார். 
தலைமையுரையை   திரு லெ.முருகபூபதி   நிகழ்த்த,  துரைவி விருது விபரத்தை   திரு தெளிவத்தை ஜோசப்  அறிவித்தார்.




2014 ஆம்  ஆண்டு   ஈழத்தில்  தமிழில்  வெளிவந்த  மொழிபெயர்ப்பு நூல்களில்    ஒன்றான  பியதாஸ  வெலிகண்ணகே வின்    ‘ அவன்   ஓர் அபூர்வ   சிறுவன் ’ எனும்   சிங்கள    இளைஞர்    நாவலை    தமிழில்  மொழிபெயர்த்த   மலரன்பன்   அவர்களுக்கு   மொழிபெயர்ப்பு   நூலுக்கான துரைவி    விருது   வழங்கப்பட்டது.
அடுத்து, 2014  ஆம்   ஆண்டு   ஈழத்தில்  தமிழில்  வெளிவந்த   கட்டுரைத் தொகுப்புக்கான    துரைவி  விருது   ‘’ஞாபகிக்கத்தக்கதோர்  புன்னகை.’’    எனும் நூலைத் தந்த    கெகிறாவ  ஸூலைஹா   அவர்களுக்கு  வழங்கப்பட்டது.
துரைவி     நினைவுப்பேருரையை  திரு எம்.வாமதேவன்   அவர்கள்   ‘’மலையக   புனைவு    இலக்கியம்  - தற்காலபோக்கை  பற்றி   ஓர் அவதானிப்புஎனும்    தலைப்பில்  நிகழ்த்தினார்.


நன்றியுரையை  ராஜ்பிரசாத்  துரை விஸ்வநாதன்  நிகழ்த்தி,   2016   ஆம்   ஆண்டு    துரைவி யின்  85  வது   பிறந்த  தினத்தை  முன்னிட்டு   ஈழத்து   பிராந்திய   தமிழ்  நாவல்  இலக்கியம்  என்ற  தலைப்பிலான  ஆய்வுக் கட்டுரைப் போட்டியினை  அறிவித்ததுடன்,  அது வரை    காலம் நிகழ்த்தப்பட்ட   துரைவி   நினைவுப்பேருரைகளை   அடங்கிய  தொகுப்பு நூல்   ஒன்றும்   வெளியிடப்படும்  எனவும்  அறிவித்தார்.
 நிகழ்ச்சியினை   மல்லியப்பு  சந்தி  திலகர்  தொகுத்தளித்தார்.

தகவல்: மேமன்கவி

No comments: