கண்­ணீரை வர­வ­ழைக்­கின்­றது : யாழில் மோடி உருக்கம்

.

இலங்­கை­க்­கான இரண்­டு நாள் பய­ணத்தின் இறு­தி­நி­கழ்­வான இந்த நிகழ்வு எனக்கு கண்­ணீ ரை வர­வ­ழைக்கும் ஒன்­றாக அமைந்­துள்­ளது. இந்­திய வீட்­டுத் ­திட்­டத்தை மக்­க­ளுக்கு கைய­ளிப்­ப­தை­யிட்டு நான் மட்­டற்ற மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி தெரி­வித்தார்.
யாழ்ப்­பா­ணத்­திற்­கான நேற்­றைய தனது விஜ­யத்தின் இறுதி நிகழ்­வாக இள­வாலை வட­மேற்கு கூவில் கிரா­மத்தில் இந்­திய வீட்டுத் திட்­டத்தை கைய­ளிக் கும் நிகழ்வில் கலந்­து­ கொண்டு பேசு­கை­யி­லேயே,


அவர் இதனைத் தெரி­வித்தார். பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டிக்கு யாழ்ப்­பா­ணத்தில் வாழை தோர­ணங்­களை நாட்டி மகத்­தான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. வீதியின் இரு மருங்­கிலும் இலங்கை இந்­திய கொடி­களை அசைத்து மக்கள் தமது வாழ்த்­துக்­களை தெரி­வித்­தனர். பிர­தமர் மோடி மக்­களை பார்த்து கைய­சைத்த வண்ணம் சென்றார்.
இறு­தி­யாக இள­வா­லையில் நடை­பெற்ற கூட்­டத்தில் மிகவும் உருக்­க­மாக தனது உரையை ஆரம்­பித்தார். அத்­துடன் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு வீடு­களை இழந்த மக்­க­ளுக்கு வீடு­களை கைய­ளித்தார். அங்கு பிர­தமர் தொடர்ந்து பேசு­கையில்,
யாழ்ப்­பாண மக்­க­ளு­டைய வாழ்க்கை பாது­காப்­பா­ன­தா­கவும் சுகம் நிறைந்­த­தாக அமை­வ­துடன் இலங்கை மக்­க­ளு­டைய வாழ்க்கை பாது­காப்­புடன் அபி­வி­ருத்திப் பாதைக்கு இட்­டுச்­செல்ல வாழ்த்­துக்கள் கூறு­கின்றேன்.
இந் நிகழ்வு எனது இறுதி நிகழ்­வாக உள்­ளது. இலங்­கைக்­கான இரண்­டுநாள் பய­ணத்தின் நான் கலந்­து­கொண்ட நிகழ்வில் இது கண்ணீர் வர­வ­ழைத்த நிகழ்­வாக இது அமைந்­துள்­ளது.
இந்­திய வீட்­டுத்­திட்­டத்தை கைய­ளிப்­ப­தை­யிட்டு நான் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். இங்கு நாம் திறந்த வானத்தின் கீழ் வாழ்­கின்றோம். இது மிகவும் கஷ்­ட­மான நிலை­மை­யாகும் உண்­மையில் இந்த வீட்டு அமைப்­பா­னது குஜ­ராத்தில் பூகம்பம் வந்­த­போதும் இலங்­கையில் சுனாமி வந்­த­போதும் இந்­த­வ­கை­யான வீட்­டுத்­திட்­டங்­க­ளையே அமைத்­தி­ருந்தோம். 50ஆயிரம் வீடு­களில் 27 ஆயிரம் வீடு­களை அமைத்­துக்­கொ­டுத்­தி­ருக்­கிறோம்.


இந்த இந்­திய வீட்­டுத்­திட்­டத்தின் மூலம் சிறந்த எதிர்­கா­லத்தை உரு­வாக்­கிக்­கொள்ள வேண்டும். இந்த புதிய வீட்­டுத்­திட்­டத்தை ஒப்­ப­டைக்­கும்­போது இந்த வீட்டின் உரி­மை­யா­ளர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தார்கள் அந்த சிறு­வ­னிடம் எதிர்­கா­லத்தின் என்­ன­வாக வரப்­போ­கிறாய் எனக் கேட்­ட­போது ஆசி­ரி­ய­ராக வர­வேண்டும் என்றான். ஆகவே சிறந்த எதிர்­காலம் அமைய வேண்டும் என வாழ்த்­து­கின்றேன் .
மேலும் இந்­திய அர­சாங்­கத்தின் வீட்­டுத்­திட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­படும். இவ் வீட்டுத் திட்­டத்தின் ஒரு பகுதி சுமார் 4ஆயிரம் வீடுகள் மத்திய ஊவாவில் அமைத்துக்கொடுக்கப்படும். இளவாலையில் 361 வீடுகள் அமைக்கப்படவுள்ளன இதில் 12 வீடுகளுக்கான உறுதிப் பத்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில ஈடுபட்டார்.
நன்றி virakesari

No comments: