.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
மன்னவன் செய்த மாபெரும் தவறு!
இளைஞன் ஒருவன் ஓரு பெண்ணைக் காண்கிறான். அவளைக் கண்டதுமே அவனக்குப் பித்துப் பிடித்ததுபோல இருக்கிறது. அவள் அவ்வளவு அழகாக இருக்கிறாள். “அடடா! இப்படியொரு அழகா? இத்தனை வசீகரமான பெண்களும் இந்த உலகிலே இருக்கிறார்களா? இவ்வளவு காலமும் நான் இப்படியொருத்தியைக் காணவேயில்லையே” என்று மலைத்து நிற்கிறான். இவ்வளவு அழகாக இவள் இருந்தால் பார்ப்பவர்களின் உள்ளங்களெல்லாம் பற்றி எரியுமே! காண்பவர்களின் உயிரை இந்த அழகு கவர்திழுத்துக் குடித்து விடுமே. ஓவ்வொருவரும் இந்த அழகை அடைவதற்காக உயிரையும் கொடுப்பார்களே! இவள் யார்? பொன்னில் வார்த்தெடுத்து உயிரூட்டிய புதுச் சிலைபோல மின்னுகிறாளே. பூரண சந்திரனின் தண்ளொளிக்கு இணையாக இவளது அழகிய முகம் பிரகாசிக்கிறதே. மாiனைப் போல மருண்ட பார்வையும், அன்னத்தைப்போல அழகிய நடையும், மயிலைப்பேன்ற சாயலும், புறாவைப்போன்ற இளமை ததும்பும் அழகுடலும் கொண்ட இந்தப் பெண்ணை இவளின் பெற்றோர்
வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு எப்படி அனுமதித்தார்கள்? ஏன் அனுமதித்தார்கள். இவளைக் கண்டு எத்தனைபேருக்கு வேதனை ஏற்படும். இவளது கண்ணழகென்ன? காலழகென்ன? தோளழகென்ன? தொடையழகென்ன? மார்பழகென்ன? வளைந்த கையழகென்ன? இடையழகென்ன? எழிலான நடையழகென்ன? என்றெல்லாம் எண்ணியெண்ணி, வியந்து வியந்து வைத்தகண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான். “இவளை யாராவது கொத்திக்கொண்டு போவதற்குமுன்னர் இவளோடு பேச்சுக் கொடுத்து இவளது நிலைமையை அறிவோம். எப்படியாவது இவளை அடைய முயல்வோம்” என்று நினைக்கிறான். மெல்ல அவளருகே சென்று பேச்சுக் கொடுக்கிறான்.
“ மானே! மயிலே! என் மனதைக் கவர்ந்த அழகியே! உன்னைப் போன்ற அழகி விட்டைவிட்டு ஊருக்குள் வந்தால் பலரின் உயிர் போய் விடுமே. அத்தனை அழகாக இருக்கிறாயே! வெளியே நீ வரலாமா? என்பொன்றவருக்கு வேதனையைத் தரலாமா?” என்று அவளிடம் துணிந்து பேசுகிறான். அவளோ எதுவுமே பதில் சொல்லாமல் ஏழனப் பார்வையொன்றை வீசிவிட்டுப் அவனைக் கடந்து தன்வழியே செல்கிறாள். அவன் தொடர்ந்து சென்று பேசுகிறான். அவளது அழகை அங்கம் அங்கமாக வர்ணித்துää அவளுக்கு மகிழ்ச்சியூட்ட முனைகின்றான். ஆனால் அவள் வாய் திறப்பதாகவே இல்லை. கடைசியாக இப்படிச் சொல்கிறான்:
“நானும் எவ்வளவோ கூறினேன். நீ எதுவுமே போசாமல் இருக்கிறாய்? இறுதியாக ஒன்று சொல்கிறேன். இதை மட்டும் கேட்டுக்கொள். நீ வீட்டைவிட்டு மற்றவர்கள் காணும்படி வெளியே வந்து பலரைக்கலங்க அடிக்கிறாயே! அப்படி வெளியே வந்தது உனது தவறல்ல. அப்படியானால் அது யாருடைய தவறு? உன்னை வெளியே வர அனுமதித்தார்களே உனது பெற்றோர், அவர்களது தவறா? இல்லையில்லை, அவர்களின் தவறும் இல்லை. இது யாருடையதவறு தெரியுமா? சொல்கிறேன் கேள். நீ வெளியே வரும்போது உனக்கு முன்னால் மக்களுக்கு அபாயத்தைத் தெரிவிக்கு முகமாகப் பறையடிப்பவர்களைப் பறையறைந்து போகச் செய்யவேண்டும் என்று இந்த நாட்டு மன்னன் கட்டளையிட்டிருக்க வேண்டும். அப்படிக் கட்டளையிடாத அந்த மன்னன்தான் குற்றவாளி. நீயல்ல. உன்பெற்றோருமல்ல” என்று சொல்கிறான். இந்தக்காட்சியைத் தருகின்ற பாடல் ஒன்று கலித்தொகையில் வருகின்றது.
பாடல்:
ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க்கால்
கொழுநிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு
கழும முடித்துக் கண்கூடுகூழை
சுவல்மிசைத் தாதொடு தாழ, அகல்மதி
தீங்கதிர் விட்டதுபோல, முகன் அமர்ந்து
ஈங்கே வருவாள் இவள்யார் கொல்? ஆங்கே ஒர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்பெலாங் கொண்டு, இயற்றியாள் கொல்? வெறுப்பினால்
வேண்டுருவம் கொண்டதோர் கூற்றம் கொல்? ஆண்டார்
கடிது, இவளைக் காவார் விடுதல் கொடிஇயல்
பல்கலைச் சிலபூங் கலிங்கத்தள் ஈங்கு இதோர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்
இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து
நல்லாய்! கேள்
ஆய்தூவி அனம்என, அணிமயில் பெடைஎனத்
தூதுணம் புறவுஎனத். துதைந்தநின் எழில்நலம்
மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉம என்பதை அறிதியொ? அறியாயோ?
நுணங்கு அமைத் திரள்என, நுண்இழை அணைஎன
முழங்குநீர்ப் புணைஎன, அமைந்தநின் தடமென்தோள்
வணங்கு இறை வால்எயிற்று அம்நல்லாய்! நிற்கண்டார்க்கு
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ? அறியாயோ?
முதிர்கோங்கின் முகைஎன முகம்செய்த குரும்பைஎனப்
பெயல்துளி முகிழ்எனப், பெருத்தநின் இளமுலை
மயிர் வார்ந்த வரிமுன்கை மடநல்லாய்! நிற்கண்டார்
உயிர்வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?
எனவாங்கு,
பேதுற்றாய்போலப் பிறர்எவ்வம் நீ அறியாய்
யாதொன்றும் வாய்வாளாது இறந்துஈவாய்! கேள் இனி
நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப்
போதரவிட்ட நுமரும், தவறிலர்
நிறைஅழி கொல்யானை நீர்க்க விட்டாங்குப்
‘பறை அறைந் தல்லது செல்லற்க’ என்னா
இறையே தவறுடையான்
(கலித்தொகைää குறிஞ்சிக்கலி பாடல் இல: 20 பாடியவர்: கபிலர்)
இதன் நேரடிக் கருத்து:
புத்தம் புதுக் கொன்றை மலரைத் தலைஉச்சியிலே சூடிக்கொண்டுää தலை மயிரையும் மலரையும், பிணைத்துப் பின்னிய கூந்தல் தோள்களிலே அழகாக வீழ்ந்து கிடக்க, ஒளிவீசுகின்ற முழு மதியைப்போலப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருககும்; முகத்துடன் இங்கே வந்துகொண்டிருக்கும் இவள் யாரோ?
வல்லவன் ஒருவன் செய்து உயிர் ஊட்டி மண்ணில் உலவ விட்ட பொற் பாவையோ? சிறந்த பெண்களின் உறுப்புக்களை எல்லாம் ஒன்றாகக் கூட்டிச் சமைக்கப்பட்ட பெண்ணோ? தனது உண்மையான தோற்றத்திலே வெறுப்படைந்த கூற்றுவன் ஆண்களின் உயிர்களைப் பறிக்க நினைத்து இப்படி அழகான உருவத்தை எடுத்து வந்தானோ? இப்படிப்பட்ட அழகிய பெண்ணைப் பெற்றோர் வீட்டிலே பூட்டி வைத்திருக்க வேண்டாமா? இவளை வெளியே உலவ விடுவது எவ்வளவு கொடுமையானது? பலவிதங்களில் கோர்த்து அமைக்கப்பட்ட மேகலை இடையிலே தவழ, பூக்கரையிடப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு மெல்லிய கொடியைப்போல அசைந்து வருகிறாளே! இவள் நெடுங்காலம் பிள்ளையில்லாமல் இருந்த பெற்றோருக்கு அருமையாகப் பிறந்த ஒரேயொரு செல்வ மகளோ? இவளோடு பேசிப் பார்த்து இவளது தகைமையையும் காண்பேன்.
மானைப்போலக் கண்டவரை மயக்கும் கண்களைக் கொண்டவளே! அன்னம் போன்ற உன் நடையழகும், மயிலைப் போன்ற உன் ஒயிலான தோற்றமும்ää புறாவைப் போன்ற இளமை ததும்பும் உனது பேரழகும் உன்னைக் கண்டவரை மயக்கி அழித்துவிடும் என்பதை நீ அறிவாயா? இல்லை அறியமாட்டாயா?
அழகான வளைந்த முன்கையினைக் கொண்டவளே! வெண்மையான பற்களைக் கொண்டவளே! நிறத்திலும் திரட்சியிலும் மூங்கிலைப் போன்றும்ää மென்மையில் பட்டுத் தலையணையைப் போன்றும் உள்ள உனது தோள்கள் காமக் கடலைக் கடப்பதற்கான தெப்பத்தைப் போல உள்ளன. ஆனால் அவை மற்றவர்க்கு வேதனையைக் கொடுக்கின்றன என்பதை நீ அறிவாயோ? இல்லை அறியமாட்யாயோ?
முற்றிய கோங்கின் இளம் மொட்டுக்களைப் போலவும், அடி பெருத்த குரும்பைகளைப் போலவும், மழைத்துளிகள் விழும் போது கிழம்புகின்ற குமிழ்களைப் போலவும் உனது பெருத்த இளம் மார்பகங்கள் அழகாக உள்ளனவே. அழகிய மயிர் வரிசையாக வளர்ந்துள்ள முன்கைகளையுடை இளம்பெண்ணே! இவையெல்லாம் உன்னைக் காண்பவர்களின் உயிரைப்பறித்துவிடும் என்பதை நீ அறிவாயோ? இல்லை அறிய மாட்டாயோ?
நான் இவ்வளவு சொல்லியும் மற்றவர்களின் வேதனையை நீ அறியவில்லையா? மயக்கமடைந்தவர்களைப் போல எதுவுமே சொல்லாது நீ என்னைவிட்டு அகன்று போகின்றாயே! நான் சொல்வதைக் கேள்! நீ எந்தத் தவறும் செய்யவில்லை. உன்னை இப்படி வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அனுமதித்த உன் சுற்றத்தவர்களும் தவறு செய்தவர்களல்லர். மற்றவரைக் கொல்லும் தகைமைவாய்ந்த மதம்பிடித்த யானையைத் தண்ணீர்த்துறைக்கு கொண்டு செல்லும்போது மக்களுக்கு அபாயத்தை அறிவிப்பதற்காக அதற்கு முன்னால் பறையடிதுத்துச் செல்பவர்களை விடுவார்களே அதைப் போல நீயும் வெளியே செல்லும் போது உனக்கு முன்னால் பறையறைவித்தே செல்ல வேண்டும் என்று ஆணையிடாத இந்த நாட்டு மன்னனே தவறு செய்தவன் ஆவான்.

No comments:
Post a Comment