சிரிய விமான நிலையத்தின் மீது 'ஐ.எஸ்' போராளிகள் தாக்குதல் : 20 பேர் பலி
23/12/2014 கிழக்கு
சிரியாவிலுள்ள விமான நிலை நிலையமொன்றின் மீது ஐ.எஸ். போராளிகளால்
மேற்கொள்ளப்பட்ட பிந்திய தாக்குதல் நடவடிக்கையின் போது குறைந்தது
20 போராளிகள் பலியாகியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம்
தெரிவித்தது.
ஐ.எஸ். போராளிகள் அந்த விமான நிலையத்தின் மீதான தாக்குதலை
சனிக்கிழமை பின்னிரவு ஆரம்பித்திருந்தனர்.இதனையடுத்து
அவர்களுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 20 ஐ. எஸ்
போராளிகள் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்த போராளிகளில் 19 பேர் சிரியாவைச் சேர்ந்தவர்களாவர்
ஒருவர் மொரோக்கோ பிரஜையாவார்.இந்த மோதலின் போது இராணுவத்தினர் கடும்
ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அதேசமயம் அங்கிருந்து பின் வாங்கிச் சென்ற ஏனைய போராளிகள் தம்முடன்
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பலவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக சிரிய
மனித உரிமைகள் அவதான நிலையத்தின் பணிப்பாளர் ரமி அப்டெல் ரஹ்மான்
தெரிவித்தார்.
இது டெயிர் எஸோர் இராணுவ விமானத்தளத்தினைக் கைப்பற்ற ஐ.எஸ்.
போராளிகளால் ஒரு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது
முயற்சியாகும்.
ஈராக்கிய எல்லையில் ஐ.எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களுக்கு அண்மையில் டெயிர் எஸோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கிய எல்லையில் ஐ.எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களுக்கு அண்மையில் டெயிர் எஸோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment