இலங்கைச் செய்திகள்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்

மலையகத்தில் கடும் மழை : 110 பேர் பாதிப்பு

இந்திய மீனவர்கள் 28 பேர் விடுதலை

வெள்ளத்தினால் பலியானோரின் எண்ணிக்கை ஆறாக உயர்வு 

சீரற்ற கால நிலை கார­ண­மாக 10 பேர் பலி : 1இலட்­சத்து 61 ஆயிரம் குடும்­பங்கள் பாதிப்பு

 96 மீனவர்கள் விடுதலை

வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு

=======================================

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்


22/12/2014 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி


மலையகத்தில் கடும் மழை : 110 பேர் பாதிப்பு

22/12/2014
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் வசிக்கும்  39 குடும்பங்களை சேர்ந்த 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.

இதேநேரம் மினிப்பே பிரதேச செயலக பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டி நகரை அண்மித்த பல பிரதான வீதிகளில் மண்சரிவுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உடுதும்பறை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 22 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக அவர்களின் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 


இந்திய மீனவர்கள் 28 பேர் விடுதலை

 23/12/2014 இலங்­கையின் வட­ கடல் பரப்பில் கடந்த 9ஆம் திகதி அத்­து­மீறி மீன்­பி­டித்­த­தாகக் கூறி கைது ­செய்­யப்­பட்ட இந்­திய மீன­வர்­களில் 28 பேரை பருத்­தித்­துறை நீதி­மன்றம் நேற்று விடு­தலை செய்­தி­ருக்­கின்­றது.

இதனை உறுதி செய்­துள்ள யாழ்ப்­பா­ணத்தில் உள்ள இந்­திய துணைத்­தூ­த­ரக அதி­கா­ரிகள், அவர்­களைத் தாங்கள் பொறுப்­பேற்­றுள்­ள­தாகத் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.
விடு­தலை செய்­யப்­பட்ட மீன­வர்கள் தமிழ்நாடு நாக­பட்­டி­னத்தைச் சேர்ந்­த­வர்கள் என தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது,கடந்த 9ஆம் திகதி 43 இந்­திய மீன­வர்கள் இலங்கைக் கடற்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.
இவர்­களில் 28 பேர் தமிழ்­நாட்டின் நாக­பட்­டி­னத்தைச் சேர்ந்­த­வர்கள் என்றும் ஏனைய 15 பேரும் புதுச்­சே­ரியைச் சேர்ந்தவர்கள் என்றும் விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
 நன்றி வீரகேசரி


வெள்ளத்தினால் பலியானோரின் எண்ணிக்கை ஆறாக உயர்வு  

 24/12/2014 நாட­ளா­விய ரீதியில் தொடரும் அடை­மழை கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வெள்­ளப்­பெ­ருக்கில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை ஆறாக உயர்ந்­துள்­ள­துடன், இருவர் காணாமல் போயுள்­ளனர். அத்­து டன், இந்த வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண் சரிவு அச்­சு­றுத்தல் கார­ண­மாக ஏழு மாகா­ணங்­களின் 16 மாவட்­டங்­களை உள்­ளடக் கிய 159785 குடும்­பங்­களை சேர்ந்த 567237 பேர்பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் 1940 வீடுகள் முற்­றா­கவும் 8,571 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கு மாகா­ணத்­துக்கே அதி­க­ள­வான பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் கோரளைப் பற்று மற்றும் கோர­ளைப்­பற்று தெற்கு ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் தலா ஒரு உயி­ரி­ழப்­புக்­களும், அம்­பாறை மாவட்­டத்தின் நிந்­தவூர் பிர­தே­சத்தில் ஒரு மர­ணமும் இடம்­பெற்­றுள்­ள­துடன் எம்­பி­லி­பிட்­டிய, மக­பெ­லஸ்ஸ பிர­தே­சத்தில் சப்­பாத்து பாலத்தின் ஊடாக கரையை அடைய முயற்­சித்த மூன்று பெண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்­லப்­பட்டு உயி­ரி­ழந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.
அத்­துடன் அனு­ரா­த­புரம், கஹட்­ட­கஸ்­தி­கி­லிய பிர­தே­சத்தில் நபர் ஒருவர் காணாமல் போயுள்­ள­துடன் வவு­னியா பிர­தே­சத்­திலும் ஒருவர் கணாமல் போயுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.
இதனை விட பாதிக்­கப்­பட்­டுள்ள 4,96,105பேரில் 23,038 குடும்­பங்­களை சேர்ந்த 82,171 பேர் 258 நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­த­கவும் அவர்­க­ளுக்கு தேவை­யான உலர் உண­வு­களை அனர்த்த நிவா­ரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்­கி­வ­ரு­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் ஊடகப் பேச்­சாளர் சரத் லால் குமார குறிப்­பிட்டார்.
வடக்கின் யாழ்ப்­பாணம்,வவு­னியா, கிளி­நொச்சி, முல்லை தீவு,மன்னார் மாவட்­டங்­களும், கிழக்கின் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு , அம்­பாறை மாவட்­டங்­களும் வட­மத்­திய மாகா­ணத்தின் அனு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை மாவட்­டங்­களும், வடமேல் மாகா­ணத்தின் குரு­ணாகல், புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களும் மத்­திய மாகா­ணத்தின் கண்டி, நுவ­ரெ­லியா மற்றும் மாத்­தளை ஆகிய மாவட்­டங்­களும் அடை மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளப் பெருக்­கி­னாலும் ஊவா மாகா­ணத்தின் பதுளை மாவட்டம் மண்­ச­ரிவு அச்­சு­றுத்­த­லாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.
இந்த அடை­மழை கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வெள்­ளத்­தினால் கிழக்கே அதிக அதிக பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன.
கிழக்கு நிலவம்
கிழக்கை பொறுத்­த­வரை நேற்றும் அடை மழை­யுடன் கூடிய கால நிலை நீடித்­தது.இதனால் வெள்ளம் கார­ண­மாக திரு­கோ­ண­ம­லையில் 9679 குடும்­பங்கை சேர்ந்த 35333 பேரும் மட்­டக்­க­ளப்பில் 88925 குடும்­பங்­களை சேர்ந்த 322416 பேரும் அம்­பா­றையில் 9111 குடும்­பங்­களை சேர்ந்த 33586 பேரும் பாதிக்­கப்ப்ட்­டுள்­ளனர். கிழக்கை பொருத்­த­வரை மொத்­த­மாக 391335 பேர் வெள்­ளத்தால் பாதிக்­கப்ப்ட்­டுள்ள நிலையில் அவர்­களில் 9910 குடும்­பங்­களை சேர்ந்த 35288 பேர் 105 நலன்­புரி முகாம்­களில் தங்­க­வைக்­கப்ப்ட்­டுள்­ளனர்.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கில் மூன்று மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக கூறும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அவற்றில் இரண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் கோற­ளைப்­பற்று, கோற­ளைப்­பற்று தெற்கு பிர­தே­சங்­க­ளிலும் மற்­றை­யது அம்­பாறை மாவட்­டத்தின் நிந்­தவூர் பிர­தேச செய­லாளர் பிரி­விலும் பதி­வா­கி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யது.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கில் 1889 வீடுகள் முற்­றா­கவும்5703வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பி­டு­கின்­றது.
கிழக்கு மாகா­ணத்தின் பெரும்­பா­லான விளை நிலங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­துடன் அந்த மாகாண மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் பெரிதும் பாதிக்­கப்ப்ட்­டி­ருந்­தது.
அனு­ரா­த­புரம்
அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் அதி­க­மான பகுதி நீரில் மூழ்­கி­யுள்ள நிலையில் அந்த நக­ரத்தின் வழ­மை­யான நட­வ­டிக்­கைகள் நேற்றும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. இரா­ணுவ வைத்­தி­ய­சாலை, அனு­ரா­த­புரம் சிறைச் சாலை ஆகி­யன நேற்றும் வெள்ள நீர் புகுந்­த­மை­யினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. இதனை விட அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் நேற்று மழை ஓர­ளவு ஓய்ந்­தி­ருந்த போதிலும் ஆங்­காங்கே மழை வீழ்ச்சி பதி­வா­ன­தாக அறி­ய­மு­டி­கின்­றது.
அத்­துடன் திஸ்ஸ்­ம­ஹ­ராம உள்­ளிட்ட அனு­ராத புர குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்தும் மல்­வத்து ஓயாவின் நீர்­மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்­கெ­டுத்­துள்­ளது.
அனு­ராத புரம் பிர­தே­சத்தில் 6224 குடும்­பங்­களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்­ள­த­கவும் குறிப்­பிட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 908 குடும்­பங்­களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்­புரி நிலை­யங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனையோர் உற­வினர் வீடு­களி9ல் தஞ்சம் அடைந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டனர்.
பொலன்­ன­றுவை
பொலன்­ன­றுவை மாவட்­டத்­திலும் வெள்ள அச்­சு­றுத்தல் தொடர்­கின்­றது. பொலன்­ன­று­வையை பொறுத்­த­வரை அங்கு பெரும்­பா­லான குளங்கள் நிரம்­பி­யுள்­ள­தா­கவும் இதனால் பல குளங்­களின் வான் கத­வுகள் நேற்றும் திறக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் நீர்­பா­சன திணைக்­களம் தெரி­வித்­தது.பொலன்­ன­றுவை மாவட்­டத்தை பொறுத்­த­வரை 3969 குடும்­பங்­களை சேர்ந்ட்5ஹ 15361 பேர் மழை வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்ப்ட்­டுள்­ளனர். இப்­பி­ர­தே­சத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்­பாலும் தடை பட்­டுள்ள நிலையில் மகா­ப­ராக்­கி­ர­ம­பாகு, கவு­டுல வாவி, மின்­னே­ரிய குளம், ஆகி­ய­னவும் பெருக்­கெ­டுத்­துள்­ளன. இதன் கார­ண­மாக ஆயிரக் கணக்­கான பயிர் நிலங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.
மின்­னே­ரிய குளம் மின்­னே­ரிய விகா­ரையை அண்­மித்த பகு­தி­யூ­டாக உடைப்­பெ­டுக்கும் அபாயம் காணப்­ப­டு­வ­தா­கவும் பிர­தேச மக்கள் குறிப்­பி­டு­கின்­றனர். இதன் கார­ண­மாக அந்த பிர­தே­சத்தை இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்து அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் ஊழி­யர்­களும் மண் மணல் மூடை­களைக் கொண்டு நிரப்பி வைத்­துள்­ளனர்.
வடக்கு நில­வரம்
இதே­வேளை நிலவும் சீரற்ற கால நிலையால் வடக்கின் யாழ்ப்­பாணம், கிளி­னொச்சி, வவு­னியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்­டங்கள் பாதிப்­புக்­களை சந்­தித்­துள்­ளன. யாழ்ப்­பா­ணத்தில் 4656 பேரும் வவு­னி­யாவில் 5269 பேரும், கிளி­னொச்­சியில்10781 பேரும், முல்லை தீவில் 2044 பேரும் மன்­னாரில் 27152 பேரும் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்ப்ட்­டுள்­ள­தாக அனர்த்த நிவார மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.
இதனை விட வடக்கில் 22 வீடுகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 2697 வீடுகள் பகு­தி­ய­ள­வான பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.
மலை­யகம்
மலை­யகப் பகு­தியில் மாத்­தளை, கண்டி, மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் தொடர்ந்தும் அடை­மழை பெய்து வரும் நிலையில் வெள்­ளத்­தினால் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் குறிப்­பி­டு­கின்­றது. மாத்­த­ளையில்528 பேர் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்ப்ட்­டுள்­ள­தா­கவும் நுவ­ரெ­லி­யாவில் 275 பேரும் கண்­டியில்160 பேரும் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் நேற்றும் மலை­ய­கத்தில் பெய்த அடை மழை கார­ண­மாக பிர­தே­சங்கள் பல­வற்­றி­னதும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்­பித்­துள்­ளன.
அத்­துடன் கண்டி, நுவ­ரெ­லி­யா­மற்ரும் பதுளை ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளுக்­கான மண் சரிவு அபாய எச்­ச­ரிக்கை அடுத்த 24 மணி நேரத்­துக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது. பதுளை மாவட்­டத்தில் மட்டும் மண் சரிவு அச்­சு­றுத்தல் கார­ண­மாக 63 குடு­மப்ங்­களை சேர்ந்த 259 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
வடமேல் மகாணம்
மழை வெள்ளம் கார­ண­மாக வடமேல் மாகா­ணத்தின் புத்­தளம், குரு­ணாகல் ஆகிய மவட்­டங்கள் மோச­மாக பதிக்­கப்ப்ட்­டுள்­ளன. புத்­த­ளத்தில் 18211 பேரும் குரு­ணா­கலில்1046 பேரும் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்ப்ட்­டுள்­ள­தாக அன்ர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது. புத்­த­ளத்தில் நேற்று பெய்த அடை மழை கார­ண­மாக அனு­ரா­த­புரம் வீதியும் மன்னார் வீதியும் போக்கு வரத்துப் பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­னது. அத்­துடன் புத்­தளம் கரு­வ­ல­கஸ்­வெவ பிர­தே­சத்தின் இயல்பு வாழ்க்கை முற்­றாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் குரித்த பகு­தியில் மட்டும் 6000 பேர் வரை­யுஇல் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். குரித்த கிராம மக்கள் படகு மூல­மாக பாது­காப்­பான இடங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.
குளங்கள் பெருக்­கெ­டுப்பு
அடை­மழை கார­ண­மாக வடக்கு, கிழக்கு, வட­மத்­திய, மடமேல் மாகா­ணங்­களில் காணப்­படும் பெரும்­பா­லான குளங்கள் நிரம்­பி­யுள்­ளன. அத்­துடன் நிரம்­பிய்ட குளங்­களில் 70 சத­வீ­த­மா­னவை நிரம்பி வழி­வ­தா­கவும் பல குளங்­களின் குளக்­கட்­டுகள் உடைப்­பெ­டுக்கும் அபாயம் நில­வு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. அத்­துடன் 53 பிர­தான நீர்த் தேக்­கங்­களின் வான் கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன.
போக்­கு­வ­ரத்து பாதிப்பு
மழை வெள்ளம் கார­ண­மாக புத்­தளம், அனு­ரா­த­புரம் ஊடான வடக்கை நோக்­கிய போக்­கு­வ­ரத்து பாதையும் ஹப­ரன, பொலன்­ன­றுவை ஊடான கிழக்கை நோக்­கிய போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதனி விட மழை­யக்த்தின் மண்­ச­ரிவு அபாயம் கார­ண­மாக பதுளை மஹி­யங்­கனை வீதி­யிலும் போக்கு வரத்து குறைந்­துள்­ளன.
மழை தொடரும்
இதே­வேளை மழை­யுடன் கூடிய கால நிலை இன்றும் தொட­ரலாம் என கால நிலை அவ­தான நிலையம் குறிப்­பி­டு­கின்­றது.
வளி­மண்­ட­லத்தில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­மான நிலைமை கார­ண­மாக தொடர்ந்தும் நாட்டில் சீரற்ற கால நிலை ஒன்று நிலவும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் குரிப்­பிட்­டது. இதனால் நாட்டின் பல பாகங்­க­ளிலும் மழை அல்­லது இடி­யுடன் கூடிய புரம் ஊடான வடக்கை நோக்கிய போக்குவரத்து பாதையும் ஹபரன, பொலன்னறுவை ஊடான கிழக்கை நோக்கிய போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனி விட மழையக்த்தின் மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மஹியங்கனை வீதியிலும் போக்கு வரத்து குறைந்துள்ளன.    நன்றி வீரகேசரிசீரற்ற கால நிலை கார­ண­மாக 10 பேர் பலி : 1இலட்­சத்து 61 ஆயிரம் குடும்­பங்கள் பாதிப்பு


24/12/2014 நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 6 மாகாணங்களில் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்துக்குள் மட்டும் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினாலேயே இந்த 10 பேரும் உயிரிழந்துள்ளதுடன் நேற்று மாலை ஆகும் போது 5 இலட்சத்து 74 ஆயிரத்து 495 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அத்­துடன் 3227 வீடுகள் முற்­றா­கவும் 10587 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­து ள்­ளன. வெள்ள அனர்த்தம் அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏற்பட்ட மரணங்கள் 8 உம் மண்சரிவால் ஏற்பட்ட மரணங் கள் இரண்டும் நேற்று மாலைவரை பதிவா கியிருந்தன.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கு மாகா­ண த்­துக்கே அதி­க­ள­வான பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் மட்­டக்­க­ளப்பு மாவ ட்­டத்தின் கோறளைப் பற்று மற்றும் கோற ளைப்­பற்று தெற்கு ஆகிய பிர­தேச செய­ லாளர் பிரி­வு­களில் தலா ஒரு உயி­ரி­ழப்­புக்­களும், மட்டக்களப்பு பிரதேசத்தின் வீச்சுக் கல்முனை பிரதேச விமானப்படை முகாமை அண்மித்த பகுதியில் ஒரு மரண மும், அம்­பாறை மாவட்­டத்தின் நிந்­தவூர் பிர­தே­சத்தில் ஒரு மர­ணமும் திருகோண மலை மாவட்டத்தின் மூதூர், கேர்ணிக்காடு பிரதேசத்தில் ஒரு மரணமும் பதிவாகியுள் ளன. அதன்படி கிழக்கு மாகாணத்தில் மட் டும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் எம்­பி­லி­பிட்­டிய, மக­பெ­லஸ்ஸ பிர­தே­சத்தில் சப்­பாத்து பாலத்தின் ஊடாக கரையை அடைய முயற்­சித்த மூன்று பெண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்­லப்­பட்டு உயி­ரி­ழந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளனர். இதனால் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
இதேவேளை நேற்று முன் தினம் மலை யகத்தின் மினிப்பே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார். இதனுடன் சேர்த்தே சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இந்தவாரம் 10 பேரை எட்டியுள்ளது.
அத்­துடன் அனு­ரா­த­புரம், கஹட்­ட­கஸ்­தி­கி­லிய பிர­தே­சத்தில் வெள்ளம் காரணமாக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வவு­னியா பிர­தே­சத்­திலும் ஒருவர் காயமடைந் துள்ளதாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.
இதேவேளை நேற்று முன்தினம் தமண பிரதேசத்தில் தாயொருவர் தனது மூன்று வயதான குழந்தை, மற்றும் இருவருடன் பயணித்துக் கொண்டிருந்த போது பாரிய நீரோட்டம் ஒன்றினால் அடித்துச் செல்லப் பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இந்த பாரிய நீரோட்டத்தில் சிக்கி 100 மீற்றர்கள் வரை அடித்துச் செல்லப்ப ட்ட இவர்கள் நால்வரும் தமணை பொலி ஸாரின் நடவடிக்கை காரணமாக மீட் கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவர்கள் நால்வருக்கும் எவ்வித பாதிப்புக் களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்­கப்­பட்­டிருந்த 574495 பேரில் 21439 குடும்­பங்­களை சேர்ந்த 75489 பேர் 299 நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­த­ாகவும் அவர்­க­ளுக்கு தேவை­யான உலர் உண­வு­களை அனர்த்த நிவா­ரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்­கி­வ­ரு­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் ஊடகப் பேச்­சாளர் சரத் லால் குமார குறிப்­பிட்டார்.
வடக்கின் யாழ்ப்­பாணம்,வவு­னியா, கிளி­நொச்சி, முல்லைத்தீவு,மன்னார் மாவட்­டங்­களும், கிழக்கின் திரு­கோ­ண­மலை, மட்­ட க்­க­ளப்பு, அம்­பாறை மாவட்­டங்­களும் வட­மத்­திய மாகா­ணத்தின் அனு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை மாவட்­டங்­களும், வட மேல் மாகா­ணத்தின் குரு­ணாகல், புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களும் மத்­திய மாகா­ணத் தின் கண்டி, நுவ­ரெ­லியா மற்றும் மாத்­தளை ஆகிய மாவட்­டங்­களும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலையிலும் அடை மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளப் பெரு க்­கி­னாலும் ஊவா மாகா­ணத்தின் பதுளை மாவட்டம் மண்­ச­ரிவு அச்­சு­றுத்­த­லாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.
இந்த அடை­மழை கார­ண­மாக ஏற்­பட்­டு ள்ள வெள்­ளத்­தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன.
கிழக்கு நிலைவரம்
கிழக்கை பொறுத்­த­வரை நேற்றும் அடை மழை­யுடன் கூடிய கால நிலை நீடித்­தது.இதனால் வெள்ளம் கார­ண­மாக திரு­கோ­ண­ம­லையில் 11555 குடும்­பங்களைச் சேர்ந்த 36238 பேரும் மட்­டக்­க­ளப்பில் 117762 குடு ம்­பங்­களை சேர்ந்த 421702 பேரும் அம்­பா­றையில் 8062 குடும்­பங்­களை சேர்ந்த 28797 பேரும் பாதிக்­கப்பட்­டுள்­ளனர். கிழக்கை பொறுத்­த­வரை மொத்­த­மாக 486737 பேர் வெள்­ளத்தால் பாதிக்­கப்பட்­டுள்ள நிலையில் அவர்­களில் 14406 குடும்­பங்­களை சேர்ந்த 50493 பேர் 141 நலன்­புரி முகாம்­களில் தங்­க­வைக்­கப்பட்­டுள்­ளனர்.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கில் ஐந்து மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ள­ன.
இதேவேளை கிழக்கில் 3106 வீடுகள் முற் ­றா­கவும் 6541 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பி­டு­கின்­றது. கிழக்கு மாகா­ணத்தின் பெரும்­பா­லான விளை நில ங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­துடன் அந்த மாகாண மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் பெரிதும் பாதிக்­கப்பட்­டி­ருந்­தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அனு­ரா­த­புரம்
அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் அதி­க­மான பகுதி நீரில் மூழ்­கி­யுள்ள நிலையில் அந்த நக­ரத்தின் வழ­மை­யான நட­வ­டிக்­கைகள் நேற்று ஓரளவு வழமைக்கு திரும்பியிருந்தன.
அத்­துடன் திஸ்ஸ­ம­ஹ­ராம உள்­ளிட்ட அனு­ராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலை யில் தொடர்ந்தும் மல்­வத்து ஓயாவின் நீர்­மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்­கெ­டுத்­ துள்­ளது.
அனு­ராதபுரம் பிர­தே­சத்தில் 6224 குடும்­பங்­களை சேர்ந்த 20884பேர் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்­ள­த­ாகவும் குறிப்­பிட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத் திய நிலையம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 908 குடும்­பங்­களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்­ புரி நிலை­யங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனையோர் உற­வினர் வீடு­களில் தஞ்சம் அடைந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­ட னர்.
பொலன்­ன­றுவை
பொலன்­ன­றுவை மாவட்­டத்­திலும் வெள் ள அச்­சு­றுத்தல் தொடர்­கின்­றது. பொலன்­ன­று­வையை பொறுத்­த­வரை அங்கு பெரும்­பா­லான குளங்கள் நிரம்­பி­யுள்­ள­தா­கவும் இதனால் பல குளங்­களின் வான் கத­வுகள் நேற்றும் திறக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் நீர்ப்­பா­சன திணைக்­களம் தெரி­வித்­தது.பொலன்­ன­றுவை மாவட்­டத்தை பொறுத்­த­வரை 3579 குடும்­பங்­களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப் பட்­டுள்­ளனர். இப்­பி­ர­தே­சத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்­பாலும் தடை பட்­டு ள்ள நிலையில் மகா­ப­ராக்­கி­ர­ம­பாகு, கவுடுல வாவி, மின்­னே­ரிய குளம், ஆகி­ய­னவும் பெருக்­கெ­டுத்­துள்­ளன. இதன் கார­ண­மாக ஆயிரக் கணக்­கான பயிர் நிலங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.
வடக்கு நிலை­வரம்
இதே­வேளை நிலவும் சீரற்ற கால நிலை யால் வடக்கின் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்­டங்கள் பாதிப்­புக்­களை சந்­தித்­துள்­ளன. யாழ்ப்­பா­ணத்தில் 4656 பேரும் வவு­னி­யாவில் 5494 பேரும், கிளி­நொச்­சி யில் 10781 பேரும், முல்லை தீவில் 2044 பேரும் மன்­னாரில் 6573 பேரும் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்பட்­டுள்­ள­தாக அனர்த்த முகாமைத்துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது. இதனை விட வடக்கில் 34 வீடுகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 2725 வீடுகள் பகு­தி­ய­ள­வான பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.
மலை­யகம்
மலை­யகப் பகு­தியில் மாத்­தளை, கண்டி, மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­க ளில் தொடர்ந்தும் அடை­மழை பெய்து வரும் நிலையில் வெள்­ளத்­தினால் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் குறிப்­பி­டு­கின்­றது. மாத்­த­ளையில் 531 பேர் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் நுவ­ரெ­லி­யாவில் 275 பேரும் கண்­டியில் 273 பேரும் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் நேற்றும் மலை­ய­கத்தில் பெய்த அடை மழை கார­ண­மாக பிர­தே­சங்கள் பல­வற்­றி­ன தும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்­பித்­துள்­ளன.
இதனை விட கண்டி, மினிப்பேயில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண் சரிவு கார ணமாக இரு மரணங்கள் பதிவாகின.அத்­துடன் கண்டி, நுவ­ரெ­லி­யா­மற்றும் பதுளை ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளுக்­கான மண் சரிவு அபாய எச்­ச­ரிக்கை அடுத்த 24 மணி நேரத்­துக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது. பதுளை மாவட்­டத்தில் மட்டும் மண் சரிவு அச்­சு­றுத்தல் கார­ண­மாக 102 குடு­ம்பங்­களை சேர்ந்த 361 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.     நன்றி வீரகேசரி

 96 மீனவர்கள் விடுதலை

24/12/2014 இலங்கை மற்றும் இந்தியா சிறைகளில் இருந்த 96 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புது வருடத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய சிறைகளில் இருந்த 30 இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்துள்ளதுடன் இலங்கை சிறையில் இருந்த 66 இந்திய மீனவர்களை இலங்கை அதிகாரிகள் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி

வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு

26/12/2014 நாட­ளா­விய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை கார­ண­மாக 7 மாகா­ணங்­களில் 17 மாவட்­டங்கள் பாதிக்­கப்பட்­டுள்­ள­துடன் 12 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த வாரத்­துக்குள் மட்டும் வெள்ளப் பெருக்கு, மண் ­ச­ரிவு ஆகிய அனர்த்­தங்­க­ளி­னா­லேயே இந்த 12 பேரும் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் நேற்று மாலைவரை 6 இலட்­சத்து 63 ஆயி­ரத்து 228 பேர்
பாதிக்­கப்பட்­டி­ருந்­தனர்.

அத்­துடன் 3519 வீடுகள் முற்­றா­கவும் 11366 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. வெள்ள அனர்த்தம் அல்­லது நீரில் அடித்துச் செல்­லப்­பட்டு ஏற்­பட்ட மர­ணங்கள் 8 உம் மண்­ச­ரிவால் ஏற்­பட்ட மர­ணங்கள் மூன்றும் நேற்று மாலை­வரை பதி­வா­கி­யி­ருந்­தன. வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்­காக அர­சாங்கம் 35 மில்­லியன் ரூபாவை மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.ஹம்­பாந்­தோட்டை பீகொக் பீச் ஹோட்­டலில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு நீடிக்கும் நிலை உள்­ளது. மக்­களை பாது­காத்து மக்­க­ளுக்கு தேவை­யான சகல வச­தி­க­ளையும் செய்து கொடுக்க ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அவர்கள் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க உள்ளார் எனவும் அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கு மாகா­ணத்­துக்கே அதி­க­ள­வான பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் அம்­மா­க­ணத்தில் மட்டும் ஐந்து மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அத்­துடன் எம்­பி­லி­பிட்­டிய பிர­தே­சத்தில் மூன்று மர­ணங்­களும் கண்டி மாவட்­டத்தில் மூன்று மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. கண்டி மாவ்­வட்­டத்தில் பதி­வான மூன்று மர­ணங்­களும் மண் சரி­வினால் ஏற்­பட்­ட­தாகும்.
மலை­ய­கத்தின் மினிப்பே பிர­தே­சத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் சிக்கி அவர்­களில் இருவர் உயி­ரி­ழந்­த­தா­கவும் பேரா­தெ­னிய பிர­தே­சத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­த­தா­கவும் கண்டி மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் இந்­திக்க ரண­வீர தெரி­வித்தார்.
அத்­துடன் அனு­ரா­த­புரம், கஹட்­ட­கஸ்­தி­கி­லிய பிர­தே­சத்தில் வெள்ளம் கர­ண­மாக நபர் ஒருவர் காய­ம­டைந்­துள்­ள­துடன் வவு­னியா பிர­தே­சத்­திலும் ஒருவர் காய­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது. அத்­துடன் கண்டி மாவட்­டத்தில் மன்­ச­ரிவில் சிக்­கிய குழந்தை உள்­ளிட்ட மூன்று பேர் காய­ம­டிந்­துள்­ளனர்.
இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்­கப்­பட்­டி­ருந்த 650635 பேரில் 22941 குடும்­பங்­களை சேர்ந்த 80736 பேர் 334 நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­க­ளுக்கு தேவை­யான உலர் உண­வு­களை அனர்த்த நிவா­ரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்­கி­வ­ரு­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் ஊடகப் பேச்­சாளர் சரத் லால் குமார குறிப்­பிட்டார்.
மேல் மாகா­ணத்தில் தலை நகர் கொழும்பும் வடக்கின் யாழ்ப்­பாணம்,வவு­னியா, கிளி­நொச்சி, முல்லை தீவு,மன்னார் மாவட்­டங்­களும், கிழக்கின் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு , அம்­பாறை மாவட்­டங்­களும் வட­மத்­திய மாகா­ணத்தின் அனு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை மாவட்­டங்­களும், வடமேல் மாகா­ணத்தின் குரு­ணாகல், புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களும் மத்­திய மாகா­ணத்தின் கண்டி, நுவ­ரெ­லியா மற்றும் மாத்­தளை ஆகிய மாவட்­டங்­களும் சப்­ர­க­முவ மாகா­ணத்தின் கேகா­லை­யிலும் அடை மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளப் பெருக்­கி­னாலும் ஊவா மாகா­ணத்தின் பதுளை மாவட்டம் மண்­ச­ரிவு அச்­சு­றுத்­த­லாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.
இந்த அடை­மழை கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வெள்­ளத்­தினால் கிழக்­கிற்கே அதிக பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன.
கிழக்கு நிலை­வரம்


கிழக்கை பொறுத்­த­வரை நேற்றும் அடை மழை­யுடன் கூடிய கால நிலை சற்று தணிந்­தி­ருந்­தாலும் திரு­கோண மலை மாவட்­டத்தில் மழை­யுடன் கூடிய கால நிலை நீடித்­தது. .இதனால் வெள்ளம் கார­ண­மாக திரு­கோ­ண­ம­லையில் 10037 குடும்­பங்­களைச் சேர்ந்த 36169 பேரும் மட்­டக்­க­ளப்பில் 124070 குடும்­பங்­களை சேர்ந்த 443691 பேரும் அம்­பா­றையில்19335 குடும்­பங்­களை சேர்ந்த 72552 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கிழக்கை பொறுத்­த­வரை மொத்­த­மாக 486737 பேர் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­களில் 14896 குடும்­பங்­களை சேர்ந்த 14896 பேர் 142 நலன்­புரி முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கில் ஐந்து மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

வெள்ளம் கார­ண­மாக கிழக்கில் 3387 வீடுகள் முற்­றா­கவும் 7067 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பி­டு­கின்­றது.
கிழக்கு மாகா­ணத்தின் பெரும்­பா­லான விளை நிலங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­துடன் அந்த மாகாண மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்­வாறு வெள்­ளத்தால் பாதிக்­கப்ப்ட்­டுள்­ளன.
அனு­ரா­த­புரம்
அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் அதி­க­மான பகுதி நீரில் மூழ்­கி­யுள்ள நிலையில் அந்த நக­ரத்தின் வழ­மை­யான நட­வ­டிக்­கைகள் நேற்று ஓர­ளவு வழ­மிக்கு திரும்[­பி­யி­ருந்­தன.
அத்­துடன் திஸ்­ஸ­ம­ஹ­ராம உள்­ளிட்ட அனு­ரா­த­புர குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்தும் மல்­வத்து ஓயாவின் நீர்­மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்­கெ­டுத்­துள்­ளது.
அனு­ரா­த­புரம் பிர­தே­சத்தில் 6224 குடும்­பங்­களை சேர்ந்த 20884 பேர் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்­ளதா கவும் குறிப்­பிட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 908 குடும்­பங்­களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்­புரி நிலை­யங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனையோர் உற­வினர் வீடு­களில் தஞ்சம் அடைந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டனர்.
பொலன்­ன­றுவை
பொலன்­ன­றுவை மாவட்­டத்­திலும் வெள்ள அச்­சு­றுத்தல் தொடர்­கின்­றது. பொலன்­ன­று­வையை பொறுத்­த­வரை அங்கு பெரும்­பா­லான குளங்கள் நிரம்­பி­யுள்­ள­தா­கவும் இதனால் பல குளங்­களின் வான் கத­வுகள் நேற்றும் திறக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் நீர்ப்­பா­சன திணைக்­களம் தெரி­வித்­தது.பொலன்­ன­றுவை மாவட்­டத்தை பொறுத்­த­வரை 3579 குடும்­பங்­களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இப்­பி­ர­தே­சத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்­பாலும் தடை பட்­டுள்ள நிலையில் மகா­ப­ராக்­கி­ர­ம­பாகு, கவு­டுல வாவி, மின்­னே­ரிய குளம், ஆகி­ய­னவும் பெருக்­கெ­டுத்­துள்­ளன. இதன் கார­ண­மாக ஆயிரக் கணக்­கான பயிர் நிலங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.
வடக்கு நிலை­வரம்
இதே­வேளை நிலவும் சீரற்ற கால நிலையால் வடக்கின் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்­டங்கள் பாதிப்­புக்­களை சந்­தித்­துள்­ளன. யாழ்ப்­பா­ணத்தில் 4656 பேரும் வவு­னி­யாவில் 10634 பேரும், கிளி­நொச்­சியில் 10781 பேரும், முல்லை தீவில் 9715 பேரும் மன்­னாரில் 8979 பேரும் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.
இதனை விட வடக்கில் 45வீடுகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 3831 வீடுகள் பகு­தி­ய­ள­வான பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.
மலை­யகம்
மலை­யகப் பகு­தியில் மாத்­தளை, கண்டி, மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் தொடர்ந்தும் அடை­மழை பெய்து வரும் நிலையில் வெள்­ளத்­தினால் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் குறிப்­பி­டு­கின்­றது. மாத்­த­ளையில் 750 பேர் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நுவ­ரெ­லி­யாவில் 845 பேரும் கண்­டியில்590 பேரும் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் நேற்றும் மலை­ய­கத்தில் பெய்த அடை மழை கார­ண­மாக பிர­தே­சங்கள் பல­வற்­றி­னதும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்­பித்­துள்­ளன.


இதனை விட கண்டி, மினிப்­பே­யிலும் பேர­தெ­னி­ய­விலும் ஏற்­பட்ட மண் சரிவு கார­ண­மாக இரு மர­ணங்கள் பதி­வா­கின. அத்­துடன் கண்டி, நுவ­ரெ­லியா, கேகாலை மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளுக்­கான மண் சரிவு அபாய எச்­ச­ரிக்கை அடுத்த 24 மணி நேரத்­துக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது. பதுளை மாவட்­டத்தில் மட்டும் மண் சரிவு அச்­சு­றுத்தல் கார­ண­மாக 108 குடும்­பங்­களை சேர்ந்த 384 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
வடமேல் மாகாணம்
மழை வெள்ளம் கார­ண­மாக வடமேல் மாகா­ணத்தின் புத்­தளம், குரு­ணாகல் ஆகிய மவட்­டங்கள் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. புத்­த­ளத்தில் 15389 பேரும் குரு­ணா­கலில் 339 பேரும் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது. புத்­த­ளத்தில் நேற்று பெய்த அடை மழை கார­ண­மாக அனு­ரா­த­புரம் வீதியும் மன்னார் வீதியும் போக்கு வரத்துப் பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­னது. அத்­துடன் புத்­தளம் கரு­வ­ல­கஸ்­வெவ பிர­தே­சத்தின் இயல்பு வாழ்க்கை முற்­றாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் குறித்த பகு­தியில் மட்டும் 6000 பேர் வரையில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். குறித்த கிராம மக்கள் படகு மூல­மாக பாது­காப்­பான இடங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.
சப்­ர­க­முவ மாகாணம்
இதே­வேளை சப­ர­க­முவ மாகா­ணத்தின் கேகாலை மாவட்­டித்­திலும் அதி­க­ள­வன மழை­வீழ்ச்சி பதி­வ­கி­யுள்­ளன.
மேல் மாகாணம்
இதே­வேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகா­ணத்தின் பல பிர­தே­சங்­க­ளிலும் தொடர்ச்­சி­யான மழை வீழ்ச்சி காணப்­பட்­டது. இதன் கார­ண­மாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்­கா­லி­க­மாக வெள்­ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பகு­தி­ய­ளவில் இரு வீடு­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டுள்ள நிலையில் அந்த வீடு­களில் வசித்த 8 பேர் பாதிக்­கப்ப்ட்­டுள்­ளனர்.
சப்ரகமுவ மாகாணம்
இதேவேளை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டித்திலும் அதிகளவன மழைவீழ்ச்சி பதிவகியுள்ளன.
மேல் மாகாணம்
இதேவேளை நேற்று முன் தினம் முதல் மேல் மகாணத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக தலை நகர் கொழும்பின் பல வீதிகள் தற்காலிகமாக வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் பகுதியளவில் இரு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வீடுகளில் வசித்த 8 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.
போக்­கு­வ­ரத்து பாதிப்பு
மழை வெள்ளம் கார­ண­மாக புத்­தளம், அனு­ரா­த­புரம் ஊடான வடக்கை நோக்­கிய போக்­கு­வ­ரத்து பாதையும் ஹப­ரண, பொலன்­ன­றுவை ஊடான கிழக்கை நோக்­கிய போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதனை விட மலையகத்தின் மண்­ச­ரிவு அபாயம் கார­ண­மாக பதுளை மஹி­யங்­கனை வீதி­யிலும் போக்கு வரத்து குறைந்­துள்­ளன. அத்துடன் குருணாகல், பாதெனிய ஊடான வடக்கு நோக்கிய போக்கு வரத்தும் முற்றாக தடை பட்டுள்ளன.
நன்றி வீரகேசரி


No comments: