கயல்
மைனா, கும்கி என்று மலை சார்ந்த படங்களை அழகிய காதலுடன் கோர்த்து
கொடுத்த பிரபு சாலமன் அடுத்து இயக்கியிருக்கும் படம் தான் இந்த கயல். பிரபு
சாலமன் தான் வைக்கும் தலைப்பிலேயே படத்திற்கான கருவை விதைத்து விடுவார்.
அந்த
வகையில் இதில் கயல் தான் கதை, கயலால் தான் திரைக்கதை என்று கூட சொல்லலாம்.
இப்படத்திலும் தன் வழக்கமான கண்ணை கவரும் லொக்கேஷனில் தனக்கே உரிய காதல்
என மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் பிரபு சாலமன்.
கதை விவாதம்
கதாநாயகன்
தமிழ் சினிமாவில் எப்போதும் வரும் நாயகர்கள் போலவே சாதிக்க வேண்டும் என்று
ஒரு குறிக்கோளும் இல்லை. ஆனால், பல ஊர்களை சுற்றி பார்க்க வேண்டும் என்று
மட்டும் ஒரு ஆசை அவருக்கு. அதற்கு என்ன வேணும், பணம் தான் வேணும் என்று
தெரிந்த பின் சிறு சிறு வேலைகளாக செய்து பணத்தை சம்பாதிக்கிறார்.
இதை
தொடர்ந்து செல்லும் வழியில் ஊரை விட்டு ஓடி வரும் காதல் ஜோடியை சேர்த்து
வைக்கிறார். இதனால் பெரிய பிரச்சனையில் ஹீரோ மாட்டி கொள்கிறார். இவரிடம்
இருந்து உண்மையை அடித்து வர வைக்க முடியாது என்று அறிந்த அந்த கும்பல் கயலை
அனுப்புகிறது. பார்த்தவுடன் பற்றி கொள்கிறது காதல் தீ.
சில காலம்
கழித்து ஓடிச்சென்ற பெண் திரும்பி வர பிடித்து வைத்திருந்த ஹீரோவை
விடுகிறார்கள். ஹீரோ கன்னியாகுமரி போக, பிறகு அவனை தேடி வரும் கயல், யாரும்
எதிர்ப்பாராத வகையில் பிரம்மிக்க வைக்கும் சுனாமி வர, இதற்கு பின் இவர்கள்
இணைந்தார்களா? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார் பிரபு சாலமன்.
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
ஹீரோ
கதையின் உயிரோட்டத்தில் அழகாக பயணிக்கிறார். அவர் கூடவே வரும்
கதாபாத்திரம் சிரிப்பிற்கு கேரண்டி. இவர்களை எல்லாம் விட மொத்த படத்தையும்
தன் கண்ணீலேயே தாங்கி செல்கிறார் கயலாக வாழும் ஆனந்தி.
பிரபு சாலமன் படத்தில் எந்த நடிகையை குறை சொல்ல, அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக செய்துள்ளனர்.
க்ளாப்ஸ்
படத்தின் மொத்த பலத்தையும் தாங்கி நிற்பது டி.இமானின் பாடல்களும், பின்னணி இசையும் தான். ஒளிப்பதிவு கண்களுக்கு செம்ம விருந்து.
கயலாக வரும் ஆனந்தி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அடுத்த பொக்கிஷம். அத்தனை அழகான கண் அசைவால் ஸ்கோர் செய்கிறார்.
சுனாமி
காட்சிகள் எடுக்கப்பட்ட விதம், கும்கி கிளைமேக்ஸில் சொதப்பிய பிரபு சாலமன்
இதில் கிராபிக்ஸ் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளார்.
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் அதிக பாடல்கள் கொஞ்சம் சோதிக்கிறது. மற்றபடி ஏதும் இல்லை.
மொத்தத்தில் இந்த கயல் அனைவரையும் கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறாள்.
நன்றி cineulagam
No comments:
Post a Comment