விழுதல் என்பது எழுகையே பகுதி 32 இணுவையூர் சக்திதாசன்,டென்மார்க்

.


இணுவையூர் சக்திதாசன் டென்மார்க்
புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவர் இலங்கையில் யாழ் தாவடியி  பிறந்த இவர் இணுவிலை வசிப்பிடமாக கொண்டவர் கனகசபாபதி சக்திதாசன்.
கடந்த 25 வருடங்களா புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.
கொக்குவில் மேற்கு உஉவஅ தமிழ் கலவன்இ கொக்குவில் இந்துக்கல்லூரிஇ கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் பழய மாணவரான இவர் தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பட்டிமன்றம் கருத்தரங்கம் கவியரங்கம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவராக இருக்கிறார்.
இவர் புலம்பெயர்விற்கு பிறகு புதுக்கவிதையிலே அதிக ஈடுபாடு கொண்டவராக டென்மார்கில் பல மேடைகளில் தனது குரல்வளத்தால் இரசிகர்களை கவர்ந்து கொண்டவர்.
டென்மார்க்கில் தமிழ்த்தாய் நாடகமன்றம் ஒன்றின் அமைப்பாளராக இருந்து 24 வருடங்களாக பலவிதமான நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருப்பவர். தனிநடிப்பில் தொடங்கி .. 25 நடிகர்கர்கள் வரை இவரது நாடக மன்றத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்கள் வருடத்துக்கு குறைந்தது 2 நாடகங்களாவது இவரது நெறியாழ்கையில் மேடையேறும்.
40 நாடகங்களுக்கு மேல் இவரது நெறியாழ்கையில் மேடையேறியிருக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் டென்மார்கில் பல மேடைகளில் கடந்த 24 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.
ஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக்காட்சி பலவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றது. தொலைக்காட்சி நாடகங்கள் ஒரு சிலவவற்றில் நடித்திருக்கிறார் ...  டென்மார்கில் தயாரிக்கப்பட்ட முழு நிளத்திரைப்படம்  மன்னிப்பாயா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக இவர் நடித்திருக்கிருக்கிறார்.
இவரது கவிதைகள் பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் இணைய சஞ்சிகைகள் பலவற்றில் வெளியாகிக்கொண்டிருக்கிறது.


நெஞ்ச நெருடல் இ காற்றை கானமாக்கிய புல்லாங்குழல்இ ஒர் அகதியின் கைரேகை ஆகிய இவரது 3 கவிதைத்தொகுதிகள் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன
இதுதவிர ´ கவிச்சாறல்;; ´ இவரது குரலில் கவிதைகள் இறுவெட்டாக வந்திருக்கிறது.
10 பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு இவரது பாடல்வரிக்கு தென்னிந்திய திரைப்படப் பாடகர் மாணிக்கவினாயகம் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம். ஆகியோருடன் மற்ரும் பலரது குரலில் பாரதிமோகன் இசையில் வெளியாகியிருக்கிறது. இலக்கியத்துறையில் பன்முக ஆற்றல் கொண்டவராக இருந்தாலும்
 டென்மார்கில் கொல்பெக் என்னும் நகரினில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் 1969 ம் ஆண்டு பிறந்த இவர் டென்மார்க்கில் வாடகை கார் ஓட்டுனராக பல வருடங்கள் பணியாற்றி விட்டு தற்போது ஒரு சிறிய வியாபார கடை ளரடிநச அயசமநன   ஒன்றை நடாத்திக்கொண்டிருக்கிறார் .
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.எலையா முருகதாசன்
தமிழ் இணைய எழுத்தாளர் அகம்
Tamil WNP  Germany
------------------------------------------------
கதை தொடர்கிறது
ஆர்ப்பாட்டமில்லாத மார்கழிமாத .. ’ காலைப்பொழுதொன்று,’  ஐரோப்பாவுக்கே உரிய மிடுக்கோடு விடிந்திருந்தது.’  பட்சிகளின் ரீங்காரமில்லை…. தென்றலின் சங்கீதமில்லை…..                                          கதிரவனின் ஆர்ப்பரிப்;பில்லை ….
காலை 8 மணி …….
இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு வெறிச்சோடிப் போயிருந்த…. மரங்களை பாரத்;தபடி …… ஐன்னல் கம்பியை பிடித்தபடி ’மாரிமுத்து’’ அவனது மனமும் வெறிச்சோடிப் போயிருந்தது.!’
”  சன் கோலம் அகதிமுகாம் ”
’டென்மார்க்கிற்கு அகதித்தஞ்சம் கோரி வருகின்ற வெளிநாட்டவர்கள் அனைவரும் முதற்கட்ட விசாரணை முடியும்வரை …… தடுத்து வைக்குமிடம்!’ ”பாதுகாப்பு அதிகாரிகள், அரச அலுவலர்கள், கிறிமினல் மொழிபெயப்பாளர்களைத் தவிர ….. யாரும் உள்ளே போக முடியாது.”
’அவனும், அவனுடனிருந்த சிலரும் ..  காவலதிகாரி அழைத்த பக்கமாக இன்னொரு மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்ட போது……’ கம்பி வேலிக்கு வெளியே நின்ற பலரும் ….  தத்தமது உறவினர்களை பார்பதற்காக… நின்றுகொண்டிருந்தனர்.!
ஆனால் ’தமிழர்கள் ஒன்றிரண்டு பேர் மட்டும் ……..  நிற்பதை ’ மாரிமுத்து கடைக்கண்ணால் அவதானிக்க தவறவில்லை அவனோடு தஞ்சமடைந்திருந்த ஒரு தமிழ் பெண்ணின் உறவினர்களாக இருக்கலாமென்று …… தனக்குள்ளே எண்ணிக்கொண்டான். ’தன்னைத் தேடி இஞ்சே யாரும் வந்திருக்கமாட்டார்கள் என்பது அவனது நம்பிக்கை.’
” பல நாட்களாக சேவெடுக்காமல் தாடி வளர்த்த முகம், முடி வெட்டாத தலை கசங்கிய உடை .. பாரக்;கப்  பரதேசிக் கோலத்தில்தான் அவனிருந்தான்.
சில்லென்ற குளிர்காற்றுடன் …. அமைதியான சூழல்,  ’வெண்ணிற ஆடை பூண்டு .பவுடர் பூசி ... வெளிக்கிடுத்தி விட்ட பொம்மை போல … வானமாய் கதிர்களை ஆங்காங்கே …. தெறிக்க வைக்கும் சூரியன்…. ’இந்த அழகான ரம்மியக் காட்சிகளைக் கூட ரசிக்கமுடியாத மனதுடன்  அவனிருந்தான்.’
”அண்ணா நீங்களும் தமிழரா .? எங்க இருந்து வாறியள்…. ?  கலியாணம் கட்டியிட்டீங்களா.. ? கட்டாட்டியும் கட்டியாச்சுது என்று சொல்லுங்கோ இஞ்சை கூப்பிட்டு தருவாங்கள் !                     ’கம்பி வேலிக்கு அங்கல நின்ற ஒரு பெண் இலவச ஆலோசனைகளை எறிஞ்சு கொண்டு நின்றாள்.’ ‘ எதையும் காதில் வாங்கிக்கொள்கின்ற நிலையில் அவனில்லை’ ”
’அவன் பாகிஸ்தானோ இல்லை எந்த நாடோ …..                                                          உனக்கேன் தேவையில்லாத வேலை …. ’ஒரு ஆணின் குரலும் பின்னால் தொடர்ந்தது ….. பல நாட்டவர்களோடு இவனும் வரவேற்பு கூடத்தில் அமரவைக்கப்பட்டான். ஓவ்வொருவராக ஒவ்வொரு அதிகாரிகள் வந்து அவர்களது பெயர்களை கூப்பிட்டதும், அவர்கள் கூப்பிடுகின்ற அறைகளுக்கு அவர்களின் பின்னால் சென்றுகொண்டிருந்தனர்.
”விழுதல் என்பது எழுவதுக்கு தானென்றால்
இறைவ என்னை மட்டுமேன்
தொடந்து வீழ்த்திக்கொண்டிருக்கிறாய்
.பழுதலில்லாத வாழ்வை கேட்டதற்காக
இன்னும் எத்தனை நாட்டில்தான்
என்னை விழுத்தப்போகிறாய் .. ? ”
”மா..ரி..மு..த் ..து   சி..வ..க்..கொ..ழு..ந்…து.”  என்று தடக்கி தடக்கி அதிகாரி பெயரை வாசித்ததும் இவனெழுந்து போகாததால் …. அதிகாரி கிட்ட வந்து இவனை தட்டி மீண்டும்  ” மா..ரி..மு..த் ..து   சி..வ..க்..கொ..ழு..ந்…து.” என்ற போதுதான்                                                  சுய நினைவு வந்தவனாய் எழும்பி அவன் பின்னால்  ……. சென்றான் !                                                     ” அறையின் உள்ளே இன்னுமொரு அதிகாரி …..  இவனையொத்த நிறத்தில் இன்னுமொருவர் ’ மொழிபெயர்ப்பாளர் … இருந்தார்கள் ”
டேனிசில் வணக்கம் சொல்லி ….அதிகாரி வரவேற்க .. அதை தமிழில் மொழி பெயர்த்து மொழிபெயர்ப்பாளர்  சொல்ல … தொடர்ந்த விசாரணையில் முதற்கட்ட விசாரணை முடிந்து முகாமுக்கு கொண்டு வந்து விடும் வரையில் மொழிபெயப்பாளரும் கூட நின்றார்.
” மொழிபெயர்ப்பாளர் மாரிமுத்துவையே தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாலும், மாரிமுத்து யாரையும் நேரே பார்க்கின்ற மனநிலையில் இல்லாமல் இருந்தான். ஏற்கனவே, விசாரனையில் இவனை உளவியல் ஆலோசகரிடம் காட்ட வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டு, இருந்ததால் மீண்டும் நாளை சந்திப்பதாக கூறி அதிகாரியுடன் மொழிபெயப்பாளரும் விடை பெற்றுக்கொள்கின்றார். இவனுக்கு கொடுக்கப்பட்ட அறையில் நாலு கட்டில்கள் இருந்தாலும் தற்போது வேறு யாருமில்லாதது கொஞ்சம் நின்மதியாக இருந்தது.
”நேரம் மாலை ஆறு மணியாகிவிட்டதால் சாப்பாடு … ரீ ஏதாவது எடுப்பதாக இருந்தால் ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைதான் கன்ரின் திறந்திருக்கும்.
பின்பு நாளை காலை ஆறு மணிக்குத்தான் திறக்குமென்று …… ’அதிகாரிகள் சொல்லிவிட்டிருந்ததால்.’அவனுக்கு பசியில்லாமல் இருந்தாலும் எடுத்துக்கொண்டு வந்து வைப்பம் என்று’ அவனுக்கு கொடுத்த கோப்பையையும் கப்பையும் எடுத்துக்கொண்டு கதவைத்திறந்து …. ’கன்ரின் நோக்கி விரைந்தான்.’….
’சீலன் என்று சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தவன்’ மீண்டும் தன்னை சுதாரித்துககோண்டு நடக்கத்தொடங்கினான் ….
”மீண்டும் மீண்டும் சீலன் ….. டேய் சீலன் …..  என்று தன்னை ஒருவன் துரத்தி வர நிற்காமல் நடந்தவனை ஓடிவந்து மறித்தவுடனே நிமிர்ந்து பார்த்தபோதுதான். காலை தனக்கு வந்த மொழிபெயர்ப்பாளர் நின்றுகொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டுப்போனான். ”        
ஆரயோவெண்டு நினைச்சு என்னைக் கூப்பிட்டிட்டியள் போல…’ என்று முடிக்கமுன்னம்
”டேய் உண்மையை சொல்லு என்னை தெரியேல்லையா ?                                                    உன்ர பத்மகலா எங்கயடா இருக்கிறாள் …. ?   கலியாணம் கட்டிட்டியேடா ..?                                நான் சாந்தனடா …..   உன்னோட ஒன்றா …. ஒரே மேசையில… அருகருகாய் இருந்த சாந்தனடா  இன்னும் என்னை நம்பேல்லையடா …? ”
அப்பவே நான் உன்னை அடையாளம் பிடிச்சிட்டன். அங்க நான் மொழிபெயப்பாளராக …. இருந்தபடியால் என்னையே கட்டுப்படுத்திகொண்டிருந்தன் ….. அதாலதான் வேலை முடிஞ்சும் வீட்டை போகமல் உனக்காக காத்துக்கொண்டிருந்தனான்.!
”இப்ப அதிகாரிகள் எல்லாரும் போய்விட்டினம்…….  நாளைக்கும் அதிகாரிகளோடதான் வரவேணும் உன்னோட தனியக் கதைக்க முடியாது என்று தான் இஞ்ச நின்டனான”;.
”அதுக்கு பிறகுதான் சீலன் விக்கிவிக்கி அழத்தொடங்கிவிட்டான்……”
”அழாத சீலன் அழாத …..  ஊரில நீ பட்ட கஸ்ரத்தை விட இஞ்சை ஒன்றும் உயிர் போறளவுக்கு பிரச்சனையிலலை ”
”என்ன கோலமடாப்பா ! என்ன சிமாட்டான ஆள் நீ ! நானே உன்னைப்பார்த்து பொறாமைப்பட்டனான். அவ்வளவு அழகானவன் ஏனிப்படி அலங்கோலமா …..” ?
”நான்தான் நாட்டுப்பிரச்சனையென்று அப்பவே பாதியில் படிப்பை விட்டிட்டு வந்திட்டன் நீயும் பத்மகலாவும்  இப்ப டொக்டராக இருப்பியள் என்று நினைச்சுக்கொண்டிருக்க  ….”
”என்;னடா நடந்தது உனக்கு….. ”?
”நான் சுவிசுக்கு வந்து, அங்கே அக்சற்ப்பும் கிடைச்சு,  ஒரு மக்டோனாசில வேலையும் கிடைச்சது………”  சொல்லத் தொடங்கினான் சீலன். …
” தன் வாழ்வின் கடந்தகால நினைவுகள் மனத்திரையில் ஒன்றன்பின் ஒன்றாக படமாக வந்து விழ மனசு அசை போடத்தொடங்கியது.”  பட்ட கஸ்ரங்கள், அவமானங்கள், நம்பிக்கைத்துரோகங்கள், நன்றிமறப்புக்கள்…. ஆதனால் அவன் எதிர்கொண்ட போராட்டங்கள்.”
”சொந்தம், பந்தம், பாசம், காதல், பின்னர் இவையெல்லாம் தாண்டி .., கண்டம் தாண்டிய பிரிவு, இப்ப .. தனிமை ஏக்கம்!  என, ஒன்றன் பின் ஒன்றாக நடந்தவற்றையெல்லாம் சொல்லத் தொடங்கினான்.
முகாமில் இருக்கும் போதே வேலை கிடைச்சதில் சந்தோசம்!
வழமைபோல அன்றும் வேளையோடு படுக்கைக்கு போனாலும்  பாதியில் நித்திரை குழம்பிவிட்டது. நினைவலைகளில் முழ்கினான் …. வந்த கடன் தங்கச்சியின்ர கலியாணம் எல்லாம் மிச்சம்பிடிச்சு வேளைக்கு செய்து வைக்க வேணும் அதற்குப்பிறகுதான் தன்ர வாழ்க்கை என்று ஒன்றன்பின் ஒன்றாக … நினைவலைகளில் ….இருக்க,  மணிக்கூடின் மணிச் சத்தம் கேட்டு வேலை நேரத்தை ஞாபகப்படுத்துவும் சரியாக இருந்தது!”
”காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தேத்தண்ணியும் போட்டு எடுத்துக்; கொண்டு வந்து சோபாவில் இருக்க முன்னம் மணிக்கூட்டை பார்த்ததும் தாமதம் தேத்தண்ணியையும் குடிக்காமல் படிகளில் இறங்கி ஓடினான்.”
;ஐந்து நிமிடம் நடைதூரம்; ”பஸ்தரிப்பிடம்”இப்பவே நடக்க வெளிக்கிட்டால் தான் ”பஸ்” வருவதற்கு முன்னம்; பஸ்தரிப்பிடத்தைச் சென்றடைய முடியும்.  அவசரமாக இறங்கி வாசல் கதவை திறந்து கொண்டு முகாமைவிட்டு வெளியேற … ”முகாம் ஒப்பிசில் கடமையிலிருந்த அதிகாரி இவனை கூப்பிடுவதை கேட்டு திரும்பி பார்க்க, அதிகாரியே கதவைத்திறந்து வந்துகொண்ருப்பதை கண்டவுடன் அதிகாரியை நோக்கி வணக்கம் சொல்லிக்கொண்டு கை கொடுத்தான்.!
”எங்கே அதிகாலையில் போகின்றாய் ?  வேலைக்கா ! என்று அவனே விடையையும் சொல்ல, ”ஆம்” என்று தலையாட்டி விட்டு அமைதியாக நின்றான் .”
எவ்வளவுதான் நல்லாப்பழகினாலும் வெள்ளைக்காறர்களின் சுபாவம் வெட்டொன்று துண்டொன்று என்று பட்டென்று முடிவுகளை சொல்லி விடுவார்கள.; இப்ப அதிகாரி சொல்லப் பொகிற முடிவும் இவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கப்போகிறது. ஆமாம்! நீ வேலை செய்ய தொடங்கிவிட்டபடியால் இனிமேல் இங்கே தங்க முடியாது. தனியாக வீடு எடுத்துக்கொண்டு போகும்படி அதிகாரி சொன்னதுடன் அகதி முகாமைவிட்டுப் போவதற்கு ஒரு கிழமை அவகாசம் கொடுத்தார்.
”உலகமே இருண்டது போன்ற சூனியமாக இருந்தது அவனுக்கு!”
எதுவுமே பேசாமல் தலையாட்டிவிட்டு, பஸ்ராண்டை நோக்கி நடக்க தொடங்கினாலும் அவனால் வேகமாக நடக்க முடியவில்லை  … ”அதற்கு இரண்டு காரணங்கள் அதில,; ஒன்று பஸ் போயிருக்கும்! இரண்டாவது ’அவனது மனமும் சோர்ந்து விட்டது’.”
”அப்போது தான் அம்மாவின் அருமை தெரிஞ்சது.” சுடச்சுட ஆவி பறக்க …. அம்மா தரும் தேத்தண்ணி சர்க்கரையுடன் நக்கி,நக்கி குடிச்சாலும் இப்பவும் நெஞ்சுக்குள்ள இனிக்குது. ”அந்த நினைப்புத்தான் இப்பவும் தெம்பாக நடக்க உதவுகிறது.”
அடுத்த பஸ் வர இன்னும் அரை மணித்தியாலம் காத்திருக்க வேண்டும் என்ற சலிப்பு ஒரு புறமும் வேலைக்கு அரை மணித்தியாலம் பிந்தப்போகிறேனே….. என்ற படபடப்பு மறுபுறமுமாய்…. பஸ்ரான்டில் இருந்த சீலனுக்கு ”வீடெடுக்கிற பிரச்சனை பெரும் தலையிடியாய் இருந்தது.”  கேட்கமுன்னம் ’தவத்தார்’ தன்னோடு வந்திருக்க சொல்லுவார்தான் ஆனாலும், ….. முரளி அங்கே இருப்பதினால் இவனுக்கு அங்கே இருப்பது விருப்பமில்லை.!”
’லப்டப்’துலைந்ததினால் ஒரு வாரமாக கலாவுடனும் கதைக்கவில்லை. என்ற கவலை ஒருபுறம் தங்கையின் கால் முறிவு மறுபுறம் ஒன்றன் பின் ஒன்றாக …..சிந்தித்துக்கொண்டிருந்ததில் அரை மணித்தியாலம் போனதே தெரியவில்லை ”பஸ் வந்துவிட்டது.!”
”ஓடிச்சென்று பஸ்சில் ஏறியமர்ந்து கொண்டு யாருமில்லாத பின் சீட்டில் உக்கார்ந்து கண்களை இறுக்க மூடிக்கொண்டு ……”பட்டாம் பூச்சியைப்போல ’மூளை ஓரிடத்தில் நிக்காமல் அங்குமிங்கும் சிறகடித்து பறக்கிறது”
அடுத்த பஸ் தரிப்பிடத்தில், பஸ் நிக்க, தமிழில் யாரோ கதைப்பது கேட்டு, விழித்து கொள்ள ”; ரெலிபோன் கதைத்தபடி ஒருவர் ஏறி ... உள்ளே வந்துகொண்டிருந்தார்!
”வாட்ட சாட்டமான ஒரு இளைஞன் ”
வைத்த கண் வாங்காமல் ‘இவன்’  அவனையே பார்த்துக்கொண்டிருக்க, ’அவனும், ஏறியவுடன் பின்னிருக்கையை நோக்கியே வந்து இவனருகில் இருந்து கொண்டாலும், வேற்றினத்தவர்கள் இருக்கின்றார்களே… என்ற கவலை சிறிது கூட இல்லாமல் சத்தமாக  தமிழில் கதைத்துக்கொண்டே இருந்தான்.’
தொடரும்  பகுதி -33

No comments: