விழுதல் என்பது எழுகையே பகுதி 31 இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-

விழுதல் என்பது எழுகையே
பகுதி 31 எழுதியவர்
இளைய அப்துல்லாஹ் (அனெஸ்)  இலண்டன்

.
இளைய அப்துல்லாஹ் (அனெஸ்)  இலண்டன் அவர்களின் அறிமுகம்
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்

இளைய அப்துல்லாஹ் (1968)

1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள்இ இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ்.
இலங்கையில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல எழுத்தாளரானார்.
1995 களில் இருந்து ‘புலம்பெயர்’ தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். சுமார் 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதைஇ சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு புலம் பெயர் சஞ்சிகைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
1996இ 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
1998 இல் ஜேர்மனில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டார்.
2000ம் ஆண்டு ஜுலை 19 ஆம் மாதம் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர்இ அறிவிப்பாளர்இ நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராகஇ ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து ஐரோப்பியஇ பிரித்தானியஇ மத்திய கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பேரபிமானத்தை பெற்றார். 
சளைக்காது தொடர்ந்து விவரணக் கட்டுரைகளை மிகச் சுவைபட எழுதி வரும் இளைய அப்துல்லாஹ்வின் எழுத்துக்கள் பிரபல்யமானவை.
அவரது அனுபவங்கள் கூறும் உண்மைச் சம்பவங்களை பதிவதில் திறமையானவர்.
இளைய அப்துல்லாஹ் இப்பொழுதும் லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும்இ விவரணத் தயாரிப்பாளராகவும் 13 வருடங்கள் பணிபுரிந்தார்.


இளைய அப்துல்லாஹ்வின் ஆறு தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. 

1‘துப்பாக்கிகளின் காலம்’ சிறுகதை
2‘பிணம் செய்யும் தேசம்’ ‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்த ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதை நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது. 
3-அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்-கட்டுரை(உயிர்மை)இ
4-கடவுளின் நிலம்-கட்டுரை (விஸ்வ சேது இலக்கியபாலம்)
5-லண்டன் உங்களை வரவேற்பதில்லைகட்டுரை(காலச்சுவடு)இ 
6-நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்-கட்டுரை (காலச்சுவடு

தொடர்ந்து இந்தியா டுடே இதழில் நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார். 

தகவல் தொகுப்பு  
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி 
திரு.ஏலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்.

கதை தொடர்கிறது பகுதி 31

போன் அடித்தது. அட அம்மா எடுக்கிறா.
“ஹலோ அம்மா...||
மறு முனையில்  அம்மா
“தம்பி சீலன்........||
அம்மா அழுது கொண்டிருந்தா....
“என்னம்மா ஏன் அழுறீங்கள். அழாம விசயத்தை சொல்லுங்கோ...||
“தம்பி.....தம்பி....|| என்று அம்மா விம்மிக்கொண்டிருந்தாள்.
அம்மாவை தேற்றினான்.



“என்னவெண்டாலும் சொல்லுங்கோ நானிருக்கிறேன்.||
அம்மா எப்பொழுதும் அப்படித்தான் உடனே அழுது விடுவா.
“தங்கச்சி இண்டைக்கு காலையிலை கிணத்துப்படியில் இருந்து தடக்கி விழுந்திட்டாள். கால் முறிஞ்சு போச்சுது தம்பி......|| அம்மா தொடர்ந்து அழத்தொடங்கினாள்.
சீலன் எப்பவும் திடகாத்திரமானவன். பதட்டப்பட மாட்டான் முடிவுகளை சரியாக எடுப்பான்.
“அவளுக்கு சின்ன வயதுதானே அம்மா கால் முறிஞ்சாலும் கவலைப்படத்தேவையில்லை நல்ல ஒரு வைத்தியராப்பார்த்து சரியாக்கிடலாம். நீங்கள் தைரியமாக இருங்கோ நாளைக்கு உங்களுக்கு காசு அனுப்பி வைக்கிறேன்.||
“அங்கை பெரியாஸ்பத்திரியில் என்ரை நண்பன் ஒருவன் முறிவு வைத்தியராக இருக்கிறான் அவனிட்டை இப்பவே கதைக்கிறன். அவன் நாளைக்கு வீட்டுக்கு வருவான்.போனை ஒருக்கால் தங்கச்சியிட்டை குடுங்கோ.||
அவளுக்கு அண்ணா என்றால் உயிர் அவனைத்தவிர அவளுக்கு இந்த உலகத்தில் வேறு ஒருவர் மீதும் அவ்வளவு பாசம் இல்லை. அண்ணா என்ன சொல்றானோ அதுதான் வேதம்.
அம்மாதான் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு கால் வலிதான் ஆனால் அவள் அண்ணாவின் தங்கையல்லவா. அவள் தையிரியமானவள். அது சீலனுக்கும் தெரியும்.
“என்னடி காலை உடைச்சுப்போட்டியா?||
“நான் என்ன வேணுமெண்டா என்ரை அழகான கால்களை உடைச்சனான்.||
“மடைச்சி பாத்து காலை வைக்கிறதில்லையா? மடச்சி மடச்சி....|| ஏசினான்.
அவளுக்கு தெரியும் அண்ணா தன்மேலை உயிரையே வைத்திருக்கிறான். தனக்கு ஒன்று என்றால் தாங்க மாட்டான். அவர்கள் இருவரும் அண்ணன் தங்கச்சி மாதிரி இல்லை . நண்பர்கள் மாதிரி. அவன் அடிக்கடி சொல்லுவான்  நீ எனக்கு தங்கச்சியாக கிடைத்தது நான் பெற்ற தவமடி. அப்படி சொல்ல அவள் அண்ணாவை முத்தமிடுவாள்.தங்கச்சி எப்பொழுதும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டாள்.
காலையிலை எழும்ப முதல் அவனுக்கு கோப்பி ஊத்திக்கொண்டு வந்து தலைமாட்டில் இருந்து விடுவாள். அண்ணாவின் முகத்தில்தான் அவள் முதலில் விளிக்கவேண்டுமாம்.
ஊராட்களுக்கே தெரியும் இவர்களின் பாசம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களை சின்ன வயதில் இருந்தே பார்த்து வருகிறார்கள்.
இரண்டு பேருக்கும் நான்கு வயது வித்தியாசம் சின்னனிலை தங்கச்சியை கொஞ்சிக்கொஞ்சி இடுப்பிலையே தூக்கி வைத்து வளர்த்தவன் சீலன். அப்பொழுதே ஊராட்கள் வியந்து போவார்கள். உவன்கள் இரண்டு பேரும் என்ன பாசம். என்று சொல்லாத ஆட்களே இல்லை.
~~அண்ணாச்சி நீ இப்ப எனக்கு வேணும் போல இருக்கு உன்ரை மடியிலை படுத்துக்கிடந்தால் இந்த வலி காத்தாய் போய் விடும். நீ இல்லாதது வெறுமையாய் கிடக்கெடா...||
“எனக்கு மட்டும் எப்பிடி இருக்கும் எண்டு உனக்கு தெரியாததா? நீ காலுடைஞ்சு கிடக்க நான் இங்கை எப்பிடி நிம்மதியா இருப்பன். உன்ரை வலி என்ரை வலியல்லவா||
இரண்டு பேரும் விம்மி விம்மி அழுது விட்டார்கள்.
“எல்லாம் உனக்காகவும் அம்மாவுக்காகவும் மற்றது அங்கை நான் இருக்கேலாது என்ன செய்யுறது புடிச்சுக்கொண்டு போய் விடுவான்கள். இதுதானடி எங்கடை சனத்துக்கு வந்த துன்பம். பாப்பம் எல்லாம் சரி வரும். இங்கை எனக்கு அகதி அந்தஸ்த்து கிடைச்சுதெண்டால் முதல் வேலை உன்னையும் அம்மாவையும் இங்கை கூப்பிடுறதுதானே||
இருவரையும் சோகம் பிய்த்துக்கொண்டது.
சோகத்தை திருப்பினான் சீலன்.
“அடி நாளைக்கு என்ரை பிரண்ட் ஒருத்தன் வாறான் முறிவு டொக்டர். அவனை சைட் அடிச்சு துலைச்சிடாதை அவனுக்கு எற்கனவே கேர்ள் பிரண்ட் இருக்கு. கடைசியிலை அவள் பாடு அவ்வளவுதான்.||
~~ம்ம்ம்ம்..... இந்த அழகை கண்டிட்டு உன்ரை டொக்டர் என்னிலை விழுந்திட்டால் நான் ஒண்டும் பண்ண முடியாது சீலா! அதுவும் இந்த வாளிப்பான காலை பார்க்க வாறார்.||
தங்கச்சியும் அண்ணனும் போடுற கூத்தை பாத்தா அம்மாவுக்கு பத்திக்கொண்டு வந்தது.
~~அடியேய்.. நீ கால் முறிஞ்சு கிடக்கிறாய். குமர்ப்பிள்ளை நான் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறன்.|| அம்மா கத்தினாள்.
“அம்மா எப்பவும் அப்படித்தான். ஓகே நீ சாப்பிட்டியா? பின்னேரம் என்ன சாப்பிட்டனீ குளிருக்கு நல்ல உடுப்பு போடு..||
“அது சரி கல்ல்ல்லாh.... என்ன கதை றொமான்ஸ் ஓடுதோ... டெலிபோன் கதைச்சே காசைக்கரியாக்காதை..||
“அடி இப்ப கனடாவுக்கும் சுவிஸ_க்கும் ஃபிறீ கோல் வந்திட்டுது. முந்தின மாதிரி இல்லை. தெரியுமோ.
“அப்ப கல்ல்ல்லா ...... வை நினைச்சு டெலிபோனைக்கட்டிப்பிடிச்சுக்கொண்டு கிடக்கிறியோ சீலா!||
தங்கச்சி சீலா! என்று சொல்வதை அவன் ரசிப்பான். அதில் எவ்வளவு பாசம் இருக்கிறது என்று அவர்கள் இருவருக்கும் மட்டும்தான் தெரியும்.
முதல் வேலை அவளின் காலை குணமாக்க வேண்டும். என்ரை அழகு தேவதையை எழும்பி நடக்க பண்ண வேணும்....
“ஓகேயடி  நான் டொக்டருக்கு பேசீட்டு உனக்கு நாளைக்கு எடுக்கிறன். யோசிக்காதை நான் இருக்கிறன்.||
~~உன்ரை டொக்டர் நாளைக்கு......சரி......|| சிரி சிரி என்று சிரித்தாள் அவள். அவளின் அந்த சிரிப்பே போதும் அவனுக்கு....
“ஓக்கே சீலா!||
-------------------
வீட்டுக்கு வந்து  குளிர் உடுப்பை கழட்டினான் சீலன். வீட்டுக்குள் ஏதோ மாற்றம் இருந்ததை உணர்ந்தான். கள்ளர் யாரும் வந்தார்களோ? மனம் சும்மா நினைத்தது.
நினைத்தது சரி பின் கதவை போய் திறந்த பார்த்தான். அது தொட்டவுடன் திறந்து கொண்டது. சுவிஸில் கள்வர்கள் வரமாட்டார்களே. இது தெரிந்த கள்ளராகத்தான் இருக்கவேண்டும். தமிழ் கள்வர்களா?
அதையும் அவன் சுவாரஸயமாகத்தான் பார்த்தான். மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.
திருடன் என்றவுடன் சீலனுக்கு இப்பொழுதெல்லாம் நினைவுக்கு வருபவர் திருடன் மணியம்பிள்ளைதான்.
64 வயதான மணியன்பிள்ளை ஒரு காலத்தில் கேரள போலீஸாரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய பெரிய திருடர். வாழ்க்கையின் பெரும் பகுதி ஓட்டத்தில் கழிந்தாலும் தன் மனைவியின் இறப்புக்குப் பின்பு மணியன்பிள்ளை திருந்தி வாழ ஆரம்பித்தார். பிறருக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்ற யோசனையில்ää ஒரு கட்டத்தில் சுயசரிதை எழுதத் தீர்மானித்தார்.
அவர் இவ்வாறு எழுதுகிறார்
“திருடனைப் போன்ற துயரம் நிரம்பிய வாழ்க்கை வேறு யாருக்குமே கிடையாது. திருட்டை நிறுத்தினாலும் பெயர் மாறாது. உறவினர்கள் வீட்டுக்கோ தெரிந்தவர்கள் வீட்டுக்கோ போக முடியாது. கண்கள் நம்மையறியாமல் எங்காவது தட்டுப்பட்டுவிட்டால்ää வீட்டுக்காரர்களுக்கு நோட்டமிடுகிறானோ என்ற சந்தேகம் வந்துவிடும். வாழ்க்கை முழுவதுமே குனிந்த தலைதான்.
இப்போதெல்லாம் நான் திருடுவதில்லை என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். திருடனுடைய பச்சாதாபத்தில் யாருக்குமே நம்பிக்கை வராது. பீடி வாங்கவும்கூட இரவு நேரங்களில் திருடன் வெளியே வர பயப்படுவான். போலீஸ் வேன் பக்கத்தில் வந்து பிரேக் போட்டு நிறுத்தப்படலாம்.||
அந்தப்புத்தகத்தை படித்ததில் இருந்து திருடர்கள் மீது ஒரு பற்று இருந்து கொண்டே இருந்தது சீலனுக்கு.
எல்லாம் வைத்தது வைத்தபடியே இருந்தது. மேலே அறையில் போய் பார்த்தான் லப்டொப்பை காணவில்லை.
அதைத்தான் கொண்டு போய் விட்டார் திருடன். பொலிஸில் சொன்னால் அது இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுவார்கள். அதன் சீரியல் நம்பரை பொலிஸில் பதிந்து வைத்திருந்தான். ஆனால் மணியம்பிள்ளையை நினைத்துக்கொண்டான். பொலிஸ_க்கு போவதை தவிர்த்து விட்டான் பிளைச்சு போகட்டும்.
படுக்கையில் விழுந்தான். மனம் முழுக்க தங்கச்சியின் முறிந்த காலின் நினைவாகவே இருந்தது. இன்று கலாவுடனும் கதைக்கவில்லை நாளைக்கு அம்மாவுக்கு காசு அனுப்ப வேண்டும். நினைத்தபடியே தூங்கி போய் விட்டான்.

தொடரும்- பகுதி - 32

No comments: