கவனம்; தாலிக்கொடி, சங்கிலி அறுக்குமிடம்
மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்திய மீனவர்களும் விடுதலை
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை : 678 குடும்பங்கள் இடம்பெயர்வு
சன்மாஸ்டருடன் த.தே.கூட்டமைப்பினர் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்:பயங்கரமான பிரச்சினை என்கிறது அரசாங்கம்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீ
ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8 : தேர்தல்கள் ஆணையாளர் ===========================================================
கவனம்; தாலிக்கொடி, சங்கிலி அறுக்குமிடம்
18/11/2014 திருடர்களின் தொல்லைகளில் இருந்து பெண்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் நோக்குடன் முன்னெச்சரிக்கையாக திருட்டுக்கள் இடம்பெறும் இடத்தைக் குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தில் திருடர்கள் கவனம் என்ற சுலோக அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மேற் படி வீதியால் செல்லும் பெண்கள் மிக அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் மத்திய சந்தைக்கு முன்பாகச் செல்லும் முத்துத்தம்பி வீதியில் குறிப்பிட்ட இடத்தில் சுலோக அட்டைகள் தொங்கவிட ப்பட்டுள்ளன.
மேற்படி வீதியில் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைந்துள்ள காணிப் பகுதியிலுள்ள இருபக்க வேலிகளும் சுமார் பத்து மீற்றர் நீளம் வரை புதர்கள் வளர்ந்து மறைவிடம் போல் காட்சியளிப்பதனால் இப்பகுதியில் ஏற்கனவே திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, ''கவனம் தாலிக்கொடி, சங்கிலி அறுக்குமிடம்'' என்று எழுதப்பட்ட சுலோக அட்டைகள் தொங்க விடப்பட்டு ள்ளன. நன்றி வீரகேசரி
மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்திய மீனவர்களும் விடுதலை
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை : 678 குடும்பங்கள் இடம்பெயர்வு
மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்திய மீனவர்களும் விடுதலை
19/11/2014 போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐந்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பிற்குள் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 5 பேரும் இலங்கை மீனவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இவர்கள் 8 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையிலேயே விடுதலையான 5 இந்திய மீனவர்களையும் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை : 678 குடும்பங்கள் இடம்பெயர்வு
19/11/2014 சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 678 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இடம்பெயர்ந்த 2 ஆயிரத்து 73 பேர் 15 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
சன்மாஸ்டருடன் த.தே.கூட்டமைப்பினர் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்:பயங்கரமான பிரச்சினை என்கிறது அரசாங்கம்
18/11/2014 வன்னியில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜாவின் நண்பரான சன்மாஸ்டருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் புகைப்படங்களை எடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாதொழித்துள்ள போதும் சர்வதேச மட்டத்தில் ஈழத்தினை ஏற்படுத்த தலைமறைவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நாட்டிற்கு பயங்கரமான பிரச்சினையாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கிருஷ்ணராஜா கைது
விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட கிருஷ்ணராஜா வன்னியில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது பலரின் யையொப்பம் இடப்பட்ட வெற்றுத்தாள்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையிடம் இருந்து நஷ்டஈடு பெறுவதற்காக இந்த வெற்றுத் தாள்கள் தன்னத்தேகொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பல பேரின் விபரங்களை உள்ளடக்கிய டயரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் பெயர், வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாகன அனுமதிப்பத்திர விபரங்கள் என்பன கணப்பட்டன. இந்த ஆவணங்களை வைத்து பார்க்கும் போது குறித்த நபர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு போலியான சாட்சியங்களை வழங்க இந்த தகவல்களை வைத்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது.
சன்மாஸ்டர்
கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜா என்பவருக்கு நிதி உதவி வழங்கியவரே சன்மாஸ்டர். சன்மாஸ்டருக்கும் கிருஷ்ணராஜாவுக்கும் இடையில் இரு மாதங்களில் 67 தொலைபேசி உரையாடல்கள் பதிவாகியுள்ளன. குறித்த நபர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு போலியான சாட்சியங்களை ஆவணங்கள் வழங்க முற்பட்டுள்ளனர்.
த.தே கூட்டமைப்பினருடன் புகைப்படங்கள்
சன்மாஸ்டர் என்பவர் தற்போது நாட்டில் இல்லை. ஆனால் அவருடைய முக்கிய புகைப்படங்கள் சில எமக்கு கிடைத்தன. அப் புகைப்படங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்களும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் பலரும் ஒன்றாக இருக்கின்றனர்.
சாட்சியங்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி ஒக்டோபர் 30 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பின்னர் சாட்சியங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக சன்டே லீடர் பத்திரிகையில் தலைப்புச் செய்;தி ஒன்றும் பிரசுரமாகியிருந்து. இதனையடுத்து இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பேச்சாளர் கொல்வின், சாட்சியங்கள் தொடர்பான ஆவணங்களை ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுகொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டாலும் முக்கியமான சாட்சியங்கள் அடங்கிய ஆவணங்கள் குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் ஏற்றுகொள்ளப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையானது உலகளாவிய ஒரு அமைப்பாகும். அவ்வாறு இருக்கையில் எவ்வாறு கால வரையறைகளை மாற்ற முடியும். மேற்கூறிய விடயங்களை வைத்து பார்க்கும் போது நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அதன் ஆதரவுடன் இலங்கைக்கு எதிராக பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்திருந்தாலும் சர்வதேச மட்டத்தில் தமிழ் ஈழத்தை உருவாக்க பாரிய செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது நாட்டுக்கு பயங்கரமான விடயமாகும். நன்றி வீரகேசரி
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீ
ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8 : தேர்தல்கள் ஆணையாளர்
20/11/2014 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வைத்தியசாலையின் பேராசிரியர் பிரிவிலேயே இந்த தீபரவியுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் டபிள்யூ அத்தபத்து தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு பிரிவினர் தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி வீரகேசரிஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8 : தேர்தல்கள் ஆணையாளர்
21/11/2014 ஜனாதிபதித் தேர்தல் 2015 ஆம் ஆண்டு 8 ஆம் திகதி நடை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment