மறந்து போகாதே! -சிறுகதை - நவீனன்



.
என் அன்புத் தந்தை காவலுர் ராசதுihக்கு சமர்ப்பணம்
மத்தியானம் சாப்பிட வந்த அப்பா அவசர அவசரமாக இருந்தார். மாலை கிளிநொச்சிக்குப்பயணமாகிப் போவதாகவும் பையை அடுக்கி வைக்குமாறு சொன்னார்.
போன முறையைமாதிரி சாரத்தையும் பற்பசையையும் மறந்து போகாதே என்றார்.
இல்லை இல்லை மறக்க மாட்டேன் என்றேன். போனமுறை ஏதோ யோசனையில் மறந்தே போயிருந்தேன்.
அப்பாவின் பாக்கை அடுக்குவது நான்தான். அடிக்கடி இப்படி வெளியிடங்களுறங்குப் வேலை காரணமாகப் போய் வருவார். அம்மாவுக்கு இப்படிப் போவது விருப்பமில்லை. அப்பா எப்போது தான் வெளியிடத்துக்கு; போகப்போவதாகச் சொல்லுவாரா அம்மா தொடங்கிவிடுவார்.
அப்பாவுக்கு நிரந்தரமான தொழில் இல்லை என்கிற கோபத்தில் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் உள்ள அனைவருக்கும் ஏச்சும் பேச்சும் விழும். எல்லோரும் கள்ளப்பயல்கள் என்று முடியும்.




ஆனால் உண்மை வேறு. நிரந்தர தொழில் செய்ய அப்பாவுக்குத்தான் விருப்பமில்லை. அப்பா சுதந்திரப்பறவை. மற்றவர்களுடைய விதிமுறைகளுக்கும் கட்டுக்கோப்புகளுக்கும் அடங்காதவர். எப்போதும் எது சரியோ அதைத்தான் சொல்லுவார் செய்வார். ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலை செய்தால் அப்படி இருக்க முடியாதே! அரச கூட்டுத்தாபனமாயிற்றே!
சிலமாதங்களுக்கு முன்னரும் இப்படித்தான்! அப்பா ஏதோ எழுதியதாக அப்பாவின் நண்பர் யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தார். தீயாரைப்பற்றி! அதுவும் வேலைசெய்யுமிடத்தில்! எப்படித்தான் தப்பினாரோ தெரியவில்லை! அந்தக்காலம் காப்பாற்றியிருக்கும்.
பையை அடுக்க ஆரம்பித்தேன். அப்பாவுக்கு என்ன தேவை என்று தெரியும்தானே! ஒன்று ஒன்றாகதேவையான எல்லாவற்றையும் அடுக்கி வைத்தேன்.
முதலும் ஒருமுறை இப்படித்தான்.
எங்கேயோ போகப்போவதாகச் சொல்லி பையை அடுக்கச் சொன்னார். இப்படி வெளியிடங்களுக்குப்போகும்போது சிலவேளைகளில் கூட்டுத்தாபன பாக்கைக் கொண்டுவருவார். அந்தசமயமும் அப்படித்தான். கூட்டுத்தாபன பாக்கை எடுத்தேன். அப்பாதான் மத்தியானம் வந்தசமயம் கொண்டுவந்து மேசையில் வைத்திருந்தார்.
பையோ பாரமாக இருந்தது. உள்ளே இருந்தவற்றை ஒன்றொன்றாக எடுத்து வைத்தேன். அதனுள் குதிரை ஓட்டத்துக்குக் கட்டிய ரசீதும் இருந்தது!என்னால் நம்ப முடியவில்லை.
உடனே அம்மாவிடம் சொன்னேன்.
அம்மா பாருங்கள்! அப்பாவும் குதிரைஓட்டத்துக்குக் காசை பேடுகிறார்போல! என்றேன்.
அம்மாவோ திடுக்கிட்டு அப்பா குதிரையில் காசைப் போடமாட்டாரே என்றார்.
இங்கே பாருங்கள் என்று குதிரையில் கட்டிய துண்டைக் காட்டினேன்!
பொறு வருகிறேன். மாமா வந்திருக்கிறார் அவருக்குத் தேத்தண்ணீர் போட்டுக் கொடுத்துவிட்டு என்றார் அம்மா.
நான் அடுக்கிக்கொண்டிருந்தேன்.
தேநீர் பரிமாறிவிட்டு அம்மா வந்தார். எங்கே பார்ப்போம் என்றார். குதிரையில் கட்டிய துண்டைக காட்டினேன்!
சிறிது நேரம் யோசித்த பின்னர் அம்மா கேட்டார்.
எந்த பாக்கிலிருந்து எடுத்தாய்?
அதோ அந்த பாக்தான் என்றேன்.
ஐயோ! அது மாமாவின் பாக் என்றார் அம்மா!
எனக்கோ தூக்கிவாரிப்போட்டது. அப்பா கொண்டுவந்த பையும் மாமாவின் பையும் ஒரேமாதிரிப்பைகள்!
உடனே எடுத்த சாமான்களையும் குதிரைக்குக் கட்டியதுண்டையும் மீண்டும் அதே பையினுள் வைத்துவிட்டு மற்றப்பையையை எடுத்தேன். அதுவோ வெறும் பை!
அதுதானே பார்த்தேன்! அப்பா குதிரையில் காசைப்போடுகிறவர் அல்லவே!

மீண்டும் அப்பாவின் இப்போதைய பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தேன்.
எல்லாம் வைத்துவிட்டேன். இரண்டு நாள் தான் நிற்கப்போகிறாராம் என்றார் அம்;மா.
வரும்போது அப்பா மரக்கறி எல்லாம் வாங்கிக்கொண்டு வருவார். வருகிற நேரம் நானும் ஸ்டேசனுக்குப் போவேன். அப்பா பைகளைக் காவ உதவி செய்வேன்.
மாலை ஆயிற்று.
அப்பா கூட்டுத்தாபன வானில் அவசர அவசரமாக வந்தார். மறந்துவிடாதே எனறு சொல்லிவிட்டு குளிக்கப் போய்விட்டார்.
சாரதி வெளியே வானில் காத்து நின்றான்.
புpன்னர் அவசர அவசரமாக அப்பா வெளிக்கிட்டார். நூன் பாக்கைத் தூக்கிக்கொண்டு வானருகில் சென்றேன்.
ஆப்பா கடின உழைப்பாளி! இவரா குதிரையில் காசைக் கட்டுபவர்?
அம்மா பின்னால் ஓடிவந்தார்.
என்ன மறந்து போனிர்களா? நாளை உங்கள் பிறந்த தினம். இதோ கேக் செய்து வைத்திருக்கிறேன். கொண்டு போய் சாப்பிடுங்கோ!


No comments: