உலகச் செய்திகள்


அமெரிக்க தொண்டு நிறுவன பணியாளரின் படுகொலைக்கு பராக் ஒபாமா கண்டனம்

ஜெருசலேமில் யூத வழிபாட்டு ஸ்தலத்தில் தாக்குதல் : 4 பேர் பலி; 8 பேர் காயம்

கிழக்கு உக்ரேனில் வன்முறை தாக்குதல்களில் 6 படை வீரர்கள்; 3 பொலிஸார் பலி

அமெரிக்க நியூயோர்க்கில் கடும் பனிப்பொழிவு: 4 பேர் உயிரிழப்பு


=================================================================

அமெரிக்க தொண்டு நிறுவன பணியாளரின் படுகொலைக்கு பராக் ஒபாமா கண்டனம்

18/11/2014 அமெ­ரிக்க தொண்டு நிறு­வன பணி­யாளர் அப்துல் ரஹ்மான் காஸிக் கொல்­லப்­பட்­டமை பிசா­சுத்­த­ன­மான ஒரு நட­வ­டிக்கை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு திரும்­பிய வேளை­யி­லேயே பராக் ஒபாமா மேற்­படி கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்ளார்.


ஐ.எஸ். போராளி குழு­வா­னது வெட்­டப்­பட்ட தலை­யுடன் முக­மூ­டி­ய­ணிந்த நப­ரொ­ருவர் காணப்­படும் வீடியோ காட்­சி­யொன்றை வெளி­யிட்­டி­ருந்­தது.
இந்­நி­லையில் அந்த வெட்­டப்­பட்ட தலைக்­கு­ரி­யவர் காஸிக் என்­பதை அமெ­ரிக்க வெள்ளை மாளிகை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.பீற்றர் காஸிக் என இயற்­பெ­யரைக் கொண்ட அப்துல் ரஹ்மான் காஸிக் (26 வயது), கடந்த ஆண்டு ஒக்­டோபர் மாதம் சிரி­யாவில் வைத்து ஐ.எஸ்.போரா­ளி­களால் கடத்­தப்­பட்டார்.
அந்­நாட்டில் மோதல்­களால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மருத்­துவ பயிற்சி மற்றும் மனி­தா­பி­மான உத­விகள் என்­ப­வற்றை வழங்­கிய வேளை­யி­லேயே அவர் கடத்­தப்­பட்டார்.
சிரிய மக்கள் மீதான தனது அன்பின் பெறு­பே­றா­கவே காஸிக் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அவ­ரது பெற்­றோ­ரான எட் மற்றும் போலா தெரி­வித்­தனர்.

ஐ.எஸ்.போரா­ளி­களால் கொல்­லப்­பட்ட ஐந்­தா­வது மேற்­கு­லக ப­ணயக்­கை­தி­யாக காஸிக் விளங்­கு­கிறார்.இதற்கு முன் ஐ.எஸ்.போரா­ளி­களால் பிரித்­தா­னி­யர்­க­ளான அலன் ஹென்னிங், டேவிட் ஹெயின்ஸ் மற்றும் அமெ­ரிக்க ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான ஜேம்ஸ் போலி, ஸ்டீவன் ஸொட்லொப் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த 4 படு கொலைகளையும் மேற்கொண்ட போராளி பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் என நம்பப்படுகிறது.அதே சமயம் காஸிக் படு­கொலை செய்­யப்­பட்­டதை வெளிப்­ப­டுத்தும் காட்­சியை உள்­ள­டக்­கிய பிந்­திய வீடியோ காட்­சி­யா­னது சிரி­யாவில் அலேப்போ மாகா­ணத்­தி­லுள்ள தபிக் நகரில் பட­மாக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த வீடியோ காட்­சியில் போரா­ளிகள் பல­ரது முகங்கள் தெளி­வாக காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.போரா­ளிகள் சிரிய இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் விமா­னிகள் என அடை­யா­ளம் காணப்­பட்ட 18 பண­யக்­கை­தி­க­ளுக்கு மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வதை வெளிப்­ப­டுத்தும் காட்­சி­யையும் மேற்­படி வீடியோ காட்­சி­யையும் உள்­ள­டக்­கி­யுள்­ளது.
அந்த 16 நிமிட வீடியோ காட்­சியில் உரை­யாற்­றிய முக­மூ­டி­ய­ணிந்த போரா­ளி­யொ­ருவர் பிரித்­தா­னிய, அமெ­ரிக்க, பிர­ஜை­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார்.
"ரோமின் நாயான ஒபா­மா­வுக்கு, நாங்கள் இன்று பஷாரின் (சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் - அஸாத்தின்) படை­யி­னரை கொன்­றுள்ளோம். நாளை நாம் உங்கள் படை­யி­னரை கொல்வோம்" என்று மேற்படி போராளி கூறினார்.

"இறை­வனின் அனு­ம­தி­யுடன் ஐ.எஸ். போரா­ளிகள், உங்கள் கைப்­பாவை டேவிட் கமெரோன் கூறி­யது போன்று உங்கள் மக்­களை உங்கள் வீதி­யி­லேயே கொல்­வார்கள்" என அந்தப் போராளி அச்­சு­றுத்தல் விடுத்தார். நன்றி வீரகேசரி  







ஜெருசலேமில் யூத வழிபாட்டு ஸ்தலத்தில் தாக்குதல் : 4 பேர் பலி; 8 பேர் காயம்

19/11/2014 மேற்கு ஜெரு­ச­லே­மி­லுள்ள யூத வழி­பாட்டு ­ஸ்த­ல­ மொன்றில் துப்­பாக்கி, கத்­திகள், கோட­ரிகள் என்­ப­வற்­றுடன் இருவர் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 4 இஸ்­ரே­லி­யர்கள் பலி­யா­ன­துடன் 8 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

கிழக்கு ஜெரு­ச­லேமைச் சேர்ந்த பலஸ்­தீ­னர்­க­ளான இரு தாக்­கு­தல்­தா­ரி­களும் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
ஜெரு­ச­லேமில் இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கும் பலஸ்­தீ­னர்­க­ளுக்­கு­மி­டையே கடும் பதற்ற நிலை நில­வு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த தாக்­கு­த­லா­னது மனிதாபிமானமற்ற தீவிரவாத செயற்பாடு என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி குற்றஞ்சாட்டியுள்ளார்.  நன்றி வீரகேசரி  




கிழக்கு உக்ரேனில் வன்முறை தாக்குதல்களில் 6 படை வீரர்கள்; 3 பொலிஸார் பலி

17/11/2014 கிழக்கு உக்ரேனில் 24 மணி நேரத்தில் 6 உக்ரேனிய படை வீரர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் மகரோவிற்கு அருகில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதுடன் ஏனைய 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் அந்த பிராந்தியத்தில் இடம்பெற்ற வேறு தாக்குதல்களில் 6 படை வீரர்கள் பலியானதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பலம் பெற்று விளங்கும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் ஒரு பொதுமகன் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி பிராந்தியத்தில் திங்கட்கிழமை புதிதாக ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரேனில் நிலவும் பதற்ற நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்கள் பிரஸல்ஸில் கூடி கலந்துரையாடவுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
கிழக்கு உக்ரேனில் கடந்த 7 மாத காலமாக இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 4,100 பேர் பலியானதுடன் சுமார் 10,000 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.  நன்றி வீரகேசரி  





அமெரிக்க நியூயோர்க்கில் கடும் பனிப்பொழிவு: 4 பேர் உயிரிழப்பு

20/11/2014   அமெ­ரிக்க நியூயோர்க் மாநி­லத்­தி­லுள்ள பவலோ பிராந்­தி­யத்தை செவ்­வாய்க்­கி­ழமை தாக்­கிய கடும் பனிப்­புயல் கார­ண­மாக குறைந்­தது 4 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.

பல பிர­தே­சங்­களில் 24 மணி நேரத்­திலும் குறைந்த காலத்தில் 4 அடி முதல் 5 அடி வரை­யான பனிப் பொழிவு இடம்­பெற்­றதில், பலர் வீடு­க­ளிலும் வாக­னங்­க­ளிலும் வெளி­யேற முடி­யாது சிக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
சில பகு­தி­களில் 3 நாட்­களில் ஒரு வருட காலத்தில் இடம்பெறும் அள­வான பனிப்­பொ­ழிவு இடம்­பெற்­றுள்­ளது.
பனிப் பொழிவால் வீடொன்றின் கூரை இடிந்து விழுந்­ததில் குறைந்­தது ஒருவர் சிக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
நெடுஞ்­சா­லைகள் பனியால் மூடப்­பட்­டுள்­ளதால் வாகனங்கள் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி










No comments: