விழுதல் என்பது எழுகையே பகுதி 27 பொலிகை ஜெயா - சுவீஸ்

.
சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா  அவர்கள் பற்றிய அறிமுகம்



பொதுவாக இவர் ஒரு இலக்கியவாதி.முக்கியமாக அவர் ஒரு கட்டுரையாளர்.அதன் பின்பே சிறுகதைஇகவி வடிப்பவர்இ   அவரது கட்டுரைகள் இலங்கை வீர கேசரிஇஜீவநதிஇபுதிய பூமிஇஇந்தியா இனிய நந்தவனம்இகனடா உதயன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன
சிறு கதைகள் சில சுவிஸ் தமிழ் ஏடுஇவீரகேசரிஇஜீவநதி ஆகியவற்றில்
பிரசுரமாகியன.
கவிதைகள் பல ஐரோப்பிய வானொலிகளில் வெளிவந்தன .அத்தோடு வானொலிகளில் அரசியல் களத்தில் பங்கெடுத்துள்ளார்.
சுவிஸில் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் தலமை ஏற்றும் உள்ளார்.
முல்லையமுதன் டழனெழn டைஉ வானொலியில் நடாத்தும் இலக்கியப்பூக்கள்
நிகழ்வில் அண்மைக்காலமாக பங்குபற்றுகிறார்.
2010 பாரிசிலும்இ2014 ஜெர்மன் காம் ல் நடைபெற்ற உலக தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் பங்கு பற்றி கட்டுரைகள் சமர்ப்பித்து தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கெடுத்து தமிழ் ஆய்வு  செய்தார்.


கதை தொடர்கிறது

சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா எழுதிய   -      பகுதி 27


                                                                                         சிறிது நேரம் அவனை கவனித்தவள்இ "என்ன சீலன் கண்கள் கலங்கியிருக்கு முகத்தில் எவ்வித களையும் இல்லாமல் சோகத்துடன் இருப்பது போல் தெரிகிறதுஇ
என்ன நடந்தது கலாவுக்கு கனடாவில் முரளியை முடிவு செய்து விட்டார்களா? அல்லது அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா?“என தனது சகோதரனை கேட்பதுபோல உரிமையுடன் கேட்டாள்.



அவனோ பதில் எதுவும் கூறாது அமைதியாக இருந்தான்.மீண்டும் பானு கேட்டாள்.

அவனை நேசிக்கும் இரு உள்ளங்களில் பானுவும் ஒருத்தி.அவளிடம் தனது பிரச்சனைகளை சொன்னால் மனதுக்காவது சிறு ஆறுதல் கிடைக்கும் என எண்ணியவாறு...

தனது மவுனத்தை கலைத்து „அக்கா! .. எனக்கு.. என இழுத்தான்."எதுவாக இருந்தாலும் தயங்காது சொல்லுங்கள் என்றாள்" பானு.

“தங்கச்சிக்கு கொழும்பில் வெளிவாரி பட்டப்படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.அம்மா தங்கச்சியை கூட்டி வந்து வெள்ளவத்தை இராம கிருஷ்ணன் விடுதியில் நிற்கிறா.
அடுத்த மாதம் படிப்பு தொடங்குகிறது.குமர்ப்பிள்ளை.தனிமையில் இருக்க விட முடியாது.இருவருக்கும் கொழும்பு புதிய இடம்.அங்கு எவரையும் தெரியாது.யாரையும் அங்கு நம்பவும் முடியாதல்லவா?“

அதனால் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கவேணும்.அம்மா ஏற்கனவே வெள்ளவத்தையில் வீடு ஒன்று பார்த்துள்ளா. அவ்வீட்டிற்கு வாடகை முற்பணம் வேறு செலுத்த வேணும் மாதா மாதம் தங்கச்சியின் கல்விச்  செலவு நான் இங்கு வருவதற்காக பட்ட கடன்  எனது முடிக்கபடாத டாக்டர் படிப்பை தொடர இங்கு ஆங்கிலமும் டொச்சும் பயில விண்ணப்பித்துள்ளேன்.இன்னு இரு மாதமளவில் என் படிப்பை தொடங்கலாம் என எண்ணுகிறேன்.நீங்களும் மொழி தெரிந்தால் நல்ல வேலை எடுக்க முடியும் எனக் கூறினீர்கள்“ என்றான் சீலன்.
„முதல் நீங்கள்  கவலையை விடுங்கள் .மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.சகலதும் மெல்ல மெல்ல ஒழுங்காக நிறைவேறும்.நீங்கள்  விரும்பினால் சொல்லுங்கள் .நான் வேலை செய்யும் கம்பனியில் உங்களுக்கு அதிகாலையில்  பேப்பர் போடும் வேலை பெற்று தருகிறேன். நீங்கள்  பேப்பர் போட்டு விட்டு இங்கு பத்து மணி வேலைக்கு அல்லது ஒருமணி வேலைக்கு வர முடியும்.இரவு வேலையை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது.நீங்கள் நித்திரைகொண்டுவிட்டு அதிகாலை பேப்பர் போட வசதியாக இருக்கும்.அத்தோடு உங்களுடைய  உடம்பையும் பாது காத்திட முடியும்“ என்றாள்.

„ஓம் அக்கா நல்ல யோசனைதான்.ஆனால் இங்கு எனது வேலை நேரம் ஒத்து வராதே.இரவு ஒரு மணிக்கு வேலை முடித்து  எப்படியக்கா அதிகாலை நாலு மணிக்கு தூக்கத்தை விட்டெழுந்து பேப்பர் போட செல்ல முடியும்?

“நீங்கள்  அதைப்பற்றி யோசிக்க வேண்டாம்.இங்கு படிப்பதற்கும் இராணுவ பயிற்சிக்கும் முதலாளிகள் நிறுவனங்கள் ஊழியர்கள் கேட்கும் நேரங்களைஒதுக்கி கொடுக்கவேண்டியது கட்டாயம்.அது சட்டத்திலே கூட உண்டு".எமது மனேஜர் பீல்மான் நல்லவர் என்பது உங்களுக்கு தெரியும் தானே“.

„ஓம் அக்கா நீங்களும் பேசிப்பாருங்கள்.நானும் எனது படிப்பு பற்றி மனேஜருக்கு சொல்லுகிறேன்.அப்படி இரவு வேலையை தவிர்த்தால் என் எதிர்கால கல்வியை கற்பதற்கும் இரண்டாவது வேலை செய்வதற்கும் பெரும் வசதியாக அமையும்“.

"சீலன்! இப்ப அம்மாவுக்கும்  தங்கச்சிக்கும் வீடு எடுக்க எவ்வளவு பணம் தேவை"?

"அது.....அது....வந்து...வந்து...அக்கா...“ என இழுத்தான் சீலன்.

"சங்கடப்படாது சொல்லுங்கள்  என்றாள்“ பானு.

„இலங்கைப்பணம் எப்படியும் மூன்று இலட்சம் தேவை” என்றான்.அவள் சிறிது யோசனையின் பின்இ „ அப்பணத்தை நான் தருகிறேன்.நீங்கள்  உடனே அம்மாவுக்கு அனுப்பிவிடுங்கள்“ என்று சொன்னதை சீலன் சிறிதும்  எதிர்பார்க்கவில்லை பானு தனக்கு பணம் தருவாள் என்றுஇ „அக்கா என்ன சொல்லுகிறீர்கள்? என அவளை பார்த்தான்.

அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்திட்ட பானு புன்சிரிப்புடன் உண்மையாகத்தான் சொல்லுகிறன் சீலன் நான் பணம் தருகிறேன் என்றவள் தொடர்ந்து
எனக்கு நீங்கள்  உடனே திருப்பிதரவேண்டும் என்ற அவசரம் இல்லை.உனது பதின்மூன்றாவது சம்பளத்தில் திரும்ப தந்தால் போதும் எனச்  சொன்ன போது அவனையறியாது உணர்ச்சி பெருக்கத்தில் அவளது வலது கரத்தை பற்றி நன்றி கலந்த கண்களுடன் அவளை பார்த்தான்.
பதிலுக்கு அவளும் தன் பரவாயில்லை என்னும் சைகையை வெளிப்படுத்தினாள்.

இரு கிழமைகளின் பின்னர் பானு மனேஜருடன் பேசி சீலனுக்கு இரவு வேலையை தவிர்த்து பகல் வேலைக்கான அனுமதியை பெற்று கொடுத்தாள்.
ஆனால் சனிகிழமை மட்டும் இரவு வேலை சீலன் செய்தே ஆக வேண்டும்.அது கூட அவனுக்கு வசதியாகவே இருந்தது.மறுநாள் பேப்பர் போடும் வேலை இல்லை. விண்ணப்பித்த படிப்பு தொடங்கினால்  அதற்கும் ஞாயிறு விடுமுறை நாள்.நன்றாக தூங்கி உடலலுப்பை போக்க முடியும் என தனக்குள் நினைத்துக் கொண்டான்.

அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு மிக உற்சாகத்துடன் வந்து அன்றைய வீட்டு காரியங்களை முடித்துஇதொலைக்காட்சி பார்க்க விரும்பாது முன்னர் அறிமுகமற்ற நல்ல உள்ளம் படைத்த பானு அக்கா நான் எதிர்பாராத உதவிகளை எனக்கு செய்கிறா என வியந்து இப்பெரும் உதவிகளுக்கு நான் எப்படி நன்றிக்கடன் செலுத்தப்போகிறேன் என்ற பரிதவிப்புடனும் மறுநாள் காலை தாய்க்கும்காதலி கலாவுக்கும் வீடு எடுப்பதற்கான பணமும் இரண்டாவது வேலையும் கிடைக்க இருக்கும் செய்தியை கூற வேண்டும் என்ற ஆவலில் விழுதல் என்பது மறுபடியும் வீழ்ந்து விடாதிருப்பதற்கான முன் எச்சரிக்கையும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு முயல வைக்கும் முதல் படியுமே ஆகும் என்ற எண்ணக்கருவுடன் இனிது தூங்கி விட்டான்.
(தொடரும் )

தொடர்ச்சி  -28  - 28.11.2014 இல் (எழுதுபவர் திருமதி. தேனம்மை இலட்சுமனன் இந்தியா)


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி- 26     --14.11.2014
கதை தொடர்கிறது

தாயுடனும் காதலி கலாவுடனும் கதைத்த பின் அதிகாலை மூன்று மணிபோல் தூக்கத்திற்கு சென்ற சீலனை தூக்கம் அணைக்க மறுத்தது.படுக்கையில் சிந்தனை ஓட்டங்களை "தெறித்திட்ட முத்துக்களைப்போல சிதறவிட்டு" புரண்டு புரண்டு படுத்து தூக்கத்திற்கு முயன்றான்.

ஆனால் அவனால் தூங்க முடியவில்லை. அவனது மனமோ வேதனையில் துடிக்க பஞ்சணையும் நொந்தது அவனுக்கு.

தாய் தன்னை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக பட்ட கடன் குடியிருக்கும் வீட்டு காணியின் அடகை வட்டி முதலுமாக செலுத்தி மீட்க வேணும் சகோதரியின் படிப்பு செலவு கொழும்பு வெள்ளவத்தையில் வாடகைக்கு பெறவிருக்கும் வீட்டின் மாதாந்த  வாடகை அத்தோடு அதற்கு செலுத்த வேண்டிய முற்பணம்இ இவற்றோடு தான் கற்கவுள்ள ஜேர்மன் ஆங்கில கோசுக்கான செலவு வேறு.

இயற்றை எல்லாம் சமாளிக்க ஒரு தொகைப்பணம் ஒவ்வொரு மாதமும் கையில் புரளவேணுமே.அதற்குரிய பணத்தை எந்த வழிமுறையை கையாண்டு சமாளிப்பது என ஏங்கினான்  தவித்தான்.

உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் "சுவிஸில் வாழ்க்கை!
தரம் மிக்கது. ஆனால் வாழ்க்கை செலவோ அதிகமானது". இப்படிப்பட்ட ஒரு நாட்டில் இரு வேலை பாராது எமக்குள்ள அகபுற செலவுகளை இலகுவில் சமாளித்து விட முடியாது.

தான் தற்போது பார்த்திடும் மக்டொனல்ஸ் வேலையில் பெறும் ஊதியம் ஒருபக்க செலவுக்கே போதக்கூடியது.ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் எப்படி முக்கியமோ அதுபோல இரண்டாவது தொழில் முக்கியமாக இருந்தது சீலனுக்கு.

இரண்டாவது வேலை பார்க்கும் சர்ந்தர்ப்பம் கிடைக்குமானால்!தற்போதைய வேலை நேரம் பொருந்தி வராதே என்ற மறு பிரச்சனை தொக்கி நின்றது. "நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் அள்ளி சென்றது போல" ஆகிவிடாமல் பார்க்க வேண்டிய இக்கட்டான நிலையும் சீலனுக்கு.

இருந்த போதும் அப்துல் கலாம் சொன்னது போன்று "நல்லது நடக்க கனவு காணுங்கள் அது நிறைவுறும்" கண்ணதாசன் சொன்னது போல "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் அது தெய்வமாக காட்சி தரும்" இவற்றை விட அவனது யாழ் பல்கலைக்கழக விரிவுரை ஆசான் குமாரவேலு சொன்னது போல "முயற்சி திருவினையாக்கும்" போன்ற வேத வாக்குகளை மனதில் நிறுத்திஇ மனம் தளராது முயற்சி செய்வோம் என்ற முடிவுக்கு வந்தான்.
மறுநாள் சீலன் மக்டொனால்ஸ் வேலைக்கு செல்வதற்காக தனது வாசல் கதவை திறந்து வெளியில் வந்த போது! வானம் இருட்டி தமக்குள் குழம்பியபடி முகில்கள் மெல்ல மெல்ல நடை போட்டு அசைந்தன.பனிமலைகளுக்கு விடைகூறி அங்கிருந்து புறப்பட்ட இளம் காற்று சீலன் அணிந்திருந்த அழகு மிக்க ரீ சேட்டை ஊடறுத்து அவனுக்கு குளிரை உணர்த்தி நின்றன.

அவன் மேல்நோக்கி அண்ணார்ந்து வானத்தை ஒரு தரம் நோக்கினான்.மழை பெய்வதற்கான அறிகுறிகளை அவனது கண்கள் கண்டு கொண்டன.

தனது வீட்டிலிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் அவன் போய் சேர வேண்டிய இடத்துக்கான பேரூந்து நிலையத்தை அடைந்து விடலாம் இதே நேரம் வானம் சிறு சிறு துளிகளாக தனது கண்ணீரை தூறல் வடிவில் சிந்த தொடங்கியது. அவனோ தனது கால் பாதங்களின் இடைவெளியை மேலும் அகட்டி நடையின் வேகத்தை அதிகரித்தான்.அவனிடம் குடை வேறு இல்லை.

சுவிஸில் சொல்லாமல்கொள்ளாமல் காற்று வீசிடும் மழை பெய்திடும்.இவற்றை நாம் புரிந்து கொள்வது கடினமாகவே இன்னும் தோன்றுகிறது.

சீலனின் நடையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்கஇ வானத்தின் தூறல் வேகமும் அதிகரித்து. ஈற்றில் அவனது நடை வேகத்தை தூறல் வேகம் வென்று மழையாக நிலத்தை முத்தமிட்டது.

சிறிது நனைந்தபடி பஸ் தரிப்பிடத்தினுள் நுழைந்து தன் கைக்குட்டையால் நெற்றியிலிருந்து நாடி வரை துடைத்துவிட்டு தனது தலையை துவட்டும் வேளை! அவன் செல்ல வேண்டிய பஸ்சும் வந்து நின்றது.


பஸ்ஸினுள் கூட்டம் அதிகமாக இருந்தது.பஸ்ஸின் இருக்கை கம்பி வளையத்தை தான் விழுந்து விடாதபடி ஆதாரமாக பிடித்தவாறுதான் இறங்க வேண்டிய இடத்தை நோக்கினான்.
ஆனால் மழையோ தனது நீரால் பஸ்ஸின் சாரளத்தை ஆக்கிரமித்து வெளியிடங்களை பஸ்ஸினுள் இருந்து பார்க்க முடியாதவாறு யாழ் ஏலோல சிங்கன் போல தடைபோட்டு நின்றது.

பஸ் எங்கு செல்கிறது எந்த தரிப்பிடத்தில் நிற்கிறது என்பதனை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.இருந்த போதும்  பஸ்ஸினுள் உள்ள திரை பஸ் செல்லும் இடத்தையும் தரிப்பிடத்தையும் பறைசாற்றியபடி இருந்தது.

சில வேளை இயற்கையை கூட மனிதன் தனது மூளை சக்தியால் வெல்லுகிறான்.ஆனால் பலமுறை இயற்கையிடம் மனிதன்  தோற்று விடுகிறான்.
பஸ்ஸால் இறங்கி மக்டொனால்ஸ் உடுப்பு மாற்றும் அறைக்கு சென்று தனது வேலைக்கான உடுப்பை மாற்றியபின் இன்னும் வேலை ஆரம்பிக்க 20 நிமிடங்கள் இருந்த படியால் ஒரு கோப்பியை அடித்து எடுத்து வந்து உழியர் இளைப்பாறும் அறையில் மேசைமீது வைத்து விட்டு  கலக்கமான முகத்துடன் கோப்பியை அருந்தாது இருந்தான்.

அதே வேளை  தனது இளைப்பாறும் 30 நிமிட நேரத்தில் பானுவும் ஒரு கோப்பியுடன் அங்கு வந்தாள்.சீலன் சோகமே உருவாக கண்கள் கலங்கியபடி இருப்பதை கண்டு அவனருகில் உட்கார்ந்தாள்.

தொடரும் 27

No comments: