அவுஸ்திரேலியாவில் குளோபல் சக்தி சூப்பர் ஸ்டார் தேடல் - சுனிதா.

.

இலங்கையில் சக்தி தொலைக்கட்சியில் இடம் பெரும் "சக்தி சூப்பர் ஸ்டார்" நிகழ்ச்சி யாவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக இந்த அற்புதமான நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
சக்தி தொலைக்கட்சி நிறுவனம் இந்த வருடத்திலிருந்து உலகளாவிய ரீதியில் இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு, அதாவது உலகத்தமிழரின் பாடும் திறமையை நிரூபிக்க "குளோபல் சக்தி சூப்பர் ஸ்டார்" என்னும் பாடல் போட்டியை 2015-ல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதற்கான தேடல் இந்த டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியா, மலேசியா, கனடா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற இருக்கின்றது.

அதற்கமைய நான் அவுஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் "குளோபல் சக்தி சூப்பர் ஸ்டார்" தேடல்  பற்றிய விளக்கத்தை கொணர முன்வந்தேன். இந்த நிகழ்ச்சிக்கான குரல் தெரிவு  டிசம்பர் மாதம் 20 மற்றும் 21-ம் திகதிகளில் Liverpool ல் உள்ள Heaven Centre ல்  காலை 10.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியில் 15 முதல் 35 வயது எல்லை வரை உட்பட்ட, பாடும் திறமை வாய்ந்த (ஆண்ஃபெண்)  விண்ணப்பிக்கலாம்.   டிசம்பர் 10-ம் திகதி விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி நாளாகும். மேலதிக விபரங்களுக்கு "www.globalsuperstar.tv"  எனும் வலைதளத்தை பார்க்கவும்.
இந்த போட்டி நடைபெற இருப்பதை அறிந்த நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது எங்கள் வருங்கால சந்ததியினருக்கு கிடைத்த ஒரு அரிய நல்வாய்ப்பாகும், நம்மவர்களில் எத்தனையோ பேர் தங்களது திறமையை உலகிற்கு எடுத்துகாட்ட இப்படி ஒரு வாய்ப்பிற்கு  நெடுநாட்களாக காத்திருந்து இருக்கலாம். அத்துடன் எம் இளமைக்காலங்களில் இப்படி ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என பலமுறை ஏங்கியதும் உண்டு.
ஆகவே இது உங்களுக்கு கிடைத்த உன்னதமான சந்தர்ப்பம்இ அவுஸ்திரேலியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உங்களின் பாடல் திறமையை காண்பிக்கவும், ரசிகர்களாகிய எங்களின் காதுகளுக்கு உங்கள் குரல் வளத்தால் இனிய விருந்துபடைக்கவும், இன்றே விண்ணப்பியுங்கள்.

No comments: