தமிழ் சினிமா


புலிப்பார்வை


விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதிப்போரின் போது இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்களை சொல்ல வந்திருக்கும் மற்றொரு படம் தான் இந்த ‘புலிப்பார்வை’.


கதை 

பாலச்சந்திரன் எப்படி இலங்கை ராணுவத்தினரிடம் பிடிபட்டிருப்பார். அவரைக் காப்பற்ற புலிகள் படை எவ்வாறு முயற்சித்திருக்கும், பிடிபட்ட பாலச்சந்திரன், எந்த மனநிலையில் இலங்கை ராணுவத்தினர் பிடியில் இருந்திருப்பார் என்ற கற்பனையை, தனது திரைக்கதை யுக்தியின் மூலம் முழு நீள கமர்ஷியல் படம் போல சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரவீன் காந்தி.
படத்தின் ஆரம்பத்தில் தாக்குதல் நடத்த போவதாக புலிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது, அதில் பிரவீன் காந்தி ஒரு கதாபாத்திரமாக தோன்றுகிறார். 

இந்த படத்தில் அதிகமாக சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு வசனம் பேசும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கம் போர் புரியும் போது கண்ணி வெடி அகற்றுவதற்க்கு பொது மக்களை பயன்படுத்துகிறார்கள். இதில் கதாநாயகியும் ஒருவராக வருகிறார்.

படத்தின் முக்கியமான அடித்தளம் என்னவென்றால் கதாநாயகி செய்யும் வேலையும், தன் காதலனுக்கு வழங்கும் காதல் பரிசான கண்ணிவெடியும் தான். இதை தொடர்ந்து படத்தில் நிகழும் சுவாரசிய சம்பவங்களே மீதிக்கதை.


பலம்

இப்படத்தின் முக்கியமான பலம் என்னவென்றால் ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு மற்றும் பின்னணி இசை. இதில் வரும் நடிகர்கள் வசனமே பேசாமல் தங்களது நடிப்பின் மூலமாகவே அனைத்தையும் உணர்த்துவது மற்றுமொரு பலம். சிறுவனாக வரும் கதாபாத்திரம் மிக தத்ரூபமாக யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பலவீனம்

போரின் போது புலியின் சின்னத்தை வெளிப்படையாக காட்டி சிங்கள கொடியை மட்டும் கிராஃபிக்ஸ் மூலம் மறைத்து காட்டுவது உணர்ச்சியை தூண்டி விடுகிறது. திரைக்கதையை நாம் தான் இழுத்து செல்ல வேண்டும் போல, அந்த அளவிற்கு பொறுமையை சோதிக்கிறது.

மொத்தத்தில் புலிப்பார்வை கொஞ்சம் கூராக இல்லை.
 - நன்றி cineulagam

No comments: