தமிழ் சினிமா

மெட்ராஸ்  

அட்டக்கத்தி படத்தின் புறசென்னையை காட்டிய ரஞ்சித் மீண்டும் வடசென்னையை யதார்த்தமாக காட்டியிருக்கும் படம் மெட்ராஸ்.


சுவருக்கு ஒரு போரா பெரிய அக்கப்போராகல்லவா இருக்கிறது என்பது போல பெரிய சுவரில் விளம்பரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் போராட்டமும், அதற்காக உயிர்கள் பலியாவதும் தான் கதை.

தொடர் தோல்விக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் யதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் கார்த்தி. நட்பு, காதல், துரோகம், வலி என ஒவ்வொன்றையும் எதிர்கொள்வதில் பிரமாதப்படுத்துகிறார். நண்பராக வரும் கலையரசனை இனி அதிகபடங்களில் காண வாய்ப்புள்ளது.

மலையாள புதுவரவான கேத்ரின் தெரஸாவுக்கு டுயட் பாடுவதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது.

வட சென்னை இளைஞரான கார்த்தி அவரது நண்பர் கலையரசனுடன் ஜாலியாக சுற்றிக்கொண்டு நடுவில் கேத்ரின் தெரசாவை காதலித்து வருகிறார். இந்த சமயத்தில் அரசியல்வாதிகளின் சண்டையில் மாட்டி என்னவானார் என்பதே மீதி கதை.


கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தனித்துவமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது கருத்து சொல்லி விட்டுப்போகும் மனநிலை பாதிக்க பட்ட கதாபாத்திரமான ஜானி, கார்த்தியின் அம்மா, அப்பா, பாட்டியாக வரும் என ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது.


நகைச்சுவைக்கென தனி டிராக் வைக்காமல் கதையோடு ஒட்டியே திரைக்கதை அமைந்துள்ளது.
படத்தின் சில இடங்கள் மெதுவாக நகர்கின்றன. யூகிக்கும் படியான க்ளைமேக்ஸ் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்திவிட்டார் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு, எடிட்டிங்கும் ரசிக்கும்படியாக உள்ளது.மொத்தத்தில் “மெட்ராஸு”க்கு மெர்சலாகம ஒருவாட்டி போய்ட்டு வரலாம்.
நன்றி cineulagam




No comments: