மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார்

.

இலங்கையின்   மூத்த  எழுத்தாளரும்  இலங்கை   வானொலியின்  முன்னாள்   நிகழ்ச்சித்தயாரிப்பாளரும்   வானொலி    ஊடகவியலாளருமான  காவலூர்  ராஜதுரை   நேற்று (14-10-2014)  மாலை   அவுஸ்திரேலியா  சிட்னியில்  காலமானார்.
இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  மூத்த உறுப்பினராகவும்  இயங்கிய   காவலூர்  ராஜதுரையின்  கதை வசனத்தில்  வெளியான   பொன்மணி    திரைப்படம்  இலங்கை    தமிழ்த்திரைப்படங்களில்  குறிப்பிடத்தகுந்தது.
கொழும்பில்   வசீகரா  விளம்பர  நிறுவனத்தின்  இயக்குநராகவும்  இயங்கிய காவலூர்   ராஜதுரை  பல  வருடங்களாக  அவுஸ்திரேலியா  சிட்னியில் தமது    குடும்பத்தினருடன்    வசித்தார்.
இங்கு    இயங்கும்  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தினதும்   மூத்த  உறுப்பினரான  காவலூர்  ராஜதுரை   சிறுகதை,  விமர்சனம்,    கட்டுரை,   விளம்பரம்   முதலான    துறைகளிலும்    எழுதியிருப்பவர்.    சில  நூல்களின்  ஆசிரியருமாவார்.

அன்னாரின் மறைவிற்கு தமிழ்முரசுஅவுஸ்ரேலியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது.

-----0----

3 comments:

Unknown said...

https://www.facebook.com/moorthy.n.moorthy/posts/10152805052862490:0

பிறின்ஸ் இம்மானுவேல் . said...

திரு. காவலூர் ராஜதுரை அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுமானங்கள்

யசோதா.பத்மநாதன் said...

நோயுற்று இருந்த போதிலும் போய் பார்க்க முடியாமல் போன குற்ற உணர்வுகளோடு என் துயரையும் பகிர்ந்து கொள்கிறேன்.

சுகமாக இருந்த பொழுதுகளில் காணுறும் போதிலெல்லாம் சந்தோஷத்தைச் சொல்லும் முகக் குறிப்புகள்; புத்தகங்களைத் தயங்காமல் தூக்கித் தரும் பரந்த மனம்; கை காட்டி தன் பக்கத்தில் இருத்திக் கொள்ளும் பாசம்......

எப்பிறப்பில் காண்போம் இனி?

யசோதா.பத்மநாதன்.