தாய் பாலின் புதிய பயன் - ச. சுந்தர பெருமாள் .

.

தாய் பாலின் பலன்கள் எண்ணில் அடங்காதவை . தாய் பால் குறித்த ஆராய்சிகள் , ஒவ்வொரு  நாளும் புதிய உண்மைகளைதந்து கொண்டே உள்ளன.
தாய்ப்பாலுக்கு, புற்று நோய் வராமல் தடுக்கும் சிறப்பான பண்பு உள்ளது என்பது,
மிக சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவாகும்.தாய்ப்பாலில் ,ஹியுமன் ஆல்பா லேக்ட் ஆல்புமின்  என்னும் உயிரி வேதிப்பொருள் உள்ளது. இது ஹேம்லெட்என அழைக்கப்படுகிறது .இதை அடிப்படைப் பொருளாக வைத்து , புற்று நோய்க்கான எதிர்ப்பு மருந்து உருவாக்கப்பட்டது. 
இதனை பயன் படுத்திய புற்று நோயாளி களின் சிறுநீரில் இறந்து போன புற்று நோய் செல்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மற்ற புற்றுநோய் மருந் துகளுடன் ஒப்பிடுகையில் , உடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களை தவிர்த்து , புற்று நோய் செல்களை மட்டுமே இந்த ஹேம்லெட் உயிர் வேதிப்பொருள் சிதைக்கிறது .40 வகையான புற்று நோய் உயிர் அணுக்களை கொள்ளும் திறனை இந்த ஹேம்லெட் வேதிப்பொருள் பெற்று உள்ளது .


ஏழு இயற்கை அதிசயங்கள்;

உலக அதிசயங்கள் ஏழு என்பதை போல இயற்கை அதிசயங்கள் ஏழு தேர் ந்து எடுக்கப்பட்டு உள்ளன. 
இதில் அமேசன் மழை காடுகள் , ஏஞ்சல் அருவி , சாக்கடல் . ஹெலங்வளைகுடா , கிரேட் பேரியர்கடலோர பாறைகள், கிரான்ட் கேன்யன் என்னும் பள்ளத்தாக்கு , கலபகொஸ் தீவுகள் ஆகியன உள்ளன .இந்த ஏழு அதிசயங்களும் .உலக அதியங்களைபோல பார்க்க இயற்கையில் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர் .
இதில் ஏஞ்சல் அருவி என்பது நயாகராவை விட ,19 மடங்கு உயரமானது . உலகின் மிக உயரமான அருவி என்னும் அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த அருவியை முதன் முதலில் கண்டறிந்த ஜிம்மி ஏஞ்சலின் பெயரால் இது , ஏஞ்சல் அருவி என்னும் சிறப்பை பெற்று உள்ளது .
பிரேசில் மற்றும் வெனிசுல நாடுகளின் எல்லை களுக்கிடையில் கேநாய்மா என்னும் தேசிய பூங்காவில் இது உள்ளது .கலபகொஸ் தீவுகள் என்பது எரிமலை தீவுகள் ஆகும். இங்கு உலகின் அழியும் நிலையில் உள்ள சிற்றினங்கள் வாழ்கின்றன.


                                                                     
                  

No comments: