அகில அவுஸ்திரேலிய தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்

.


அவுஸ்ரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 8வது ஆண்டிலிருந்து அவுஸ்ரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின்  தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடம் சிட்னியில் மட்டும் 450க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். மேலும் அவுஸ்திரேலிய-நியூசிலாந்தின் மற்ற எல்லா மாநகர்களில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டன. சிட்னி தவிர மற்ற மாநகர்களிலிருந்தும் நியூசிலாந்திலிருந்தும் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்குபற்றினர். மொத்தமாக 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த வருடம் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1994ம் ஆண்டு சிட்னிப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரால் தொடங்கப்பட:;டு 8 ஆண்டுகள் நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்ää பட்டதாரிகள் குழுவினரால் 20வது வருடமாக நடாத்தப்பட்டு வருகிறது என்பது பெருமைக்குரிய விடயம்.




இவ்வருடப் போட்டிகளுக்கான கருப்பொருள்: ‘ஊக்கமது கைவிடேல்’ என்பதாகும். இந்தக் கருப்பொருளை மையமாக வைத்தே இவிவருடப் போட்டிகளுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டன.

கவிதை மனனம், பேச்சு, எழுத்தறிவு, வாய்மொழித் தொடர்பாற்றல், வினாடிவினா, விவாதம், தனி நடிப்பு, பல்திறன் போட்டிகள் என் 7 வயதுப் பிரிவினரிடையே நாடாத்தப்பட்டு வருகின்றது. வயதுப் பிரிவுகளாவன: பாலர், ஆரம்ப, கீழ், மத்திய, மேல், அதிமேல், இளைஞர் பிரிவுகளென, 3 வயது முதல் 18 வயது வரை போட்டிகள் இடம் பெறுகின்றன.

இந்தப் போட்டிகள் வௌ;வேறு மாநிலங்களில் எமது பிரதிநிதிகள் கொண்ட போட்டி உபகுழுக்கள் மூலம் நடாத்தப்பட்டு வருகின்;றன. மாநில மட்டத்திலான போட்டிகளும் பரிசளிப்பும் அந்தந்த மாநிலத்திலேயே நடைபெறுகின்றன.



சிட்னியில் பரிசளிப்பு விழா 2014


தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா செம்டெம்பர் மாதம் 29ம் திகதி மாலை 4.30 மணியிலிருந்து, ‘போமன் மண்டபம்’ (டீடயஉமவழறnஇ டீழறஅயn ர்யடட) மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பரிசளிப்பு விழாவில் மொத்தமாக 1000க்கு மேற்பட்ட பரிசுகளும்,  41 வெற்றிக் கேடயங்களும், 10 தங்கப் பதக்கங்களும் பரிசாக வழங்கப்பட்டன. இம்முறையும் எழுத்தறிவுப் போட்டி, கவிதைமனனப் போட்டி, பேச்சுப் போட்டி என 10 போட்டிகள் அகில அவுஸ்திரேலிய, நியூசிலாந்து மட்டத்தில் நடாத்தப்பட்டு முதற்பரிசுகளாக தங்கப் பதக்கங்கள்  வழங்கப்பட்டன.

போட்டிகளின் முதல் நாளான சனிக்கிழமை, 28ம் திகதி செம்டெம்பர் மாதம்ää ஐந்து தேசிய நிலைப் போட்டிகள் சிட்னியில் நடைபெற்றன. இதில் மொத்தமாக 61 போட்டியாளார்கள் வௌ;வேறு மாநிலங்களிலிருந்து வந்து பங்குபற்றினார்கள். தேசிய மட்டத்தில் கவிதை மனனப் போட்டிகளிலும்ää பேச்சுப் போட்டிகளிலும் சிட்னியிலிருந்து 21 மாணவர்களும் மற்றைய மாநகர்களிலிருந்து 40 மாணவர்களும் பங்குபற்றினர். இப்போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கும் சிட்னியில் பரிசளிப்பு நடைபெற்றது.


பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்தோரை செல்வி ஜெனனி ஜெகன்மோகன் வரவேற்றுப் பேசினார். தேசியப் பேச்சுப் போட்டிகளிலும், தேசிய கவிதை மனனப் போட்டிகளிலும் முதற்பரிசான தங்கப் பதக்கங்களை வெற்றி பெற்ற மாணவர்களின் சிறப்புப் பேச்சுக்களும் கவிதைகளும், மாநில நிலைகளில் பரிசுபெற்ற தனிநடிப்பு நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவில் இடம்பெற்றன.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் தேசிய இணைப்பாளர், திரு. க. நரேந்திரநாதன், தனது அறிக்கையை வழங்கிப் பேசினார். அவர் தனது உரையில் இந்தப் போட்டிகள் நாடத்;தப்படும் விதம் பற்றி எடுத்துக் கூறிää போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களைப் பாராட்டினார்.


பேராசிரியர் ஞானா குலேந்திரன் அவர்கள் இந்த விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்து கௌரவித்தார். 20 ஆண்டுகளாக தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கு உரம்சேர்த்த பிரதிநிதிகளும், பிரதம விருந்தினரும் மங்கள விளக்கை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்கள். பிரதம அதிதி அவர்கள் தனது உரையில், பரிசு பெற்ற சிறார்களை வாழ்த்தியதுடன், தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் போன்ற விடயங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் 20 ஆண்டுகளாக நடாத்தப்படுவருபதற்கு பாராட்டிப் பேசினார்.

முதலில் தேசிய மட்டத்தில் முதற்பரிசு பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும் மற்றைய மாணவர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிட்னிப் போட்டிகளில் பரிசு பெற்ற சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்தச் சிறுவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர். பரிசுகளை அன்பளிப்புச் செய்த நலன்விரும்பிகளும், தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் பரீட்சைக் குழு உறுப்பினர்களும் (டாக்டர் இளமுருகனார் பாரதி,திருமதி கலையரசி சின்னையா), பிரதம விருந்தினர் பேராசிரியர் ஞானா குலேந்திரன் அவர்களும் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தனர்.



இவர்களும் கடந்த ஆண்டுகளில் இந்தத் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்ததாக தெரிவித்தனர்.

தேசிய நிலையில் தங்கப்பதக்கம் பெற்றோர் பட்டியல்:
(Gold Medallists)

1) கீழ்ப் பிரிவில் (6-7 வயது) எழுத்தறிவுப் போட்டி – முதற் பரிசு
செல்வி. சாருகா  சிவசுதன் Miss. Sharuka Sivasuthan (VIC)

2) மத்திய பிரிவில் (8-9 வயது) எழுத்தறிவுப் போட்டி – முதற் பரிசு
செல்வி. ஜஸ்மின் ஆய்ஷா உஷாம் Miss. Jasmin Ayishah Usham (NSW)

3) மேற் பிரிவில் (10-11 வயது) எழுத்தறிவுப் போட்டி – முதற் பரிசு
                  செல்வி. மீரா தயாபரன்;   Miss. Meera Thayaparan (NSW)

4) அதிமேற் பிரிவில் (12-14 வயது) எழுத்தறிவுப் போட்டி – முதற் பரிசு
    செல்வி. மோஷிகா  பிறேமதாசா Miss Moshika Premathasa (VIC)

5) விசேட இளைஞர் பிரிவில் (15-17 வயது) எழுத்தறிவுப் போட்டி – 
முதற் பரிசு செல்வி. கிருஷிக்கா அரசநாயகம் Miss Kirushikka Arasanayagam (NSW)

6) கீழ்ப் பிரிவில் (6-7 வயது) பாடல்மனனப் போட்டி – முதற் பரிசு
செல்வி. விகாஷினி கார்த்திகேயன்;   Miss. Vicasini Carthigeyan (NSW)

7) விசேட மேற்பிரிவில் (10-12 வயது) கவிதை மனனப் (திருக்குறள்)  
போட்டி – முதற் பரிசு  செல்வி. புராதனி கிருபாகரன்;   
                                                        Miss. Puraathini Kirupaharan (NSW)

8) மத்திய பிரிவில் (8-9 வயது) பேச்சுப் போட்டி – முதற் பரிசு
              செல்வி. கிரிஷனா ஞானராஜா Miss Kirishana Gnanaraja (NSW)

9) மேற் பிரிவில் (10-11 வயது) பேச்சுப் போட்டி – முதற் பரிசு
              செல்வன். அனோச் வாசன்;   Mas. Anoch Vasan (NSW)

10) அதிமேற் பிரிவில் (12-14 வயது) பேச்சுப் போட்டி  – முதற் பரிசு
செல்வி. ஜர்லின் மேரி டோமனிக் Miss Jerlin Mary Dominic (NSW)



மேலதிக விபரங்களுக்கு கலப்பை இணையத்தளத்தைப் பார்க்கவும். 
(www.tamilcompetition.org)

நிர்வாகம் 
தமிழ் ஊக்குவிப்புக் குழு 2014





No comments: