கன்பராவுக்கு கடத்தப்பட்ட நடராஜர் காப்பற்றத் தவறிய இந்தியா

.
                          வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் 
இந்தியா என்கிற ஒரு மாபெரும் தேசத்தின் ஆன்மிகச் சொத்துக்களை ,புராதனமான  கோயில்களை,  விலை மதிப்பில்லா விக்கிரகங்களை பாதுகாக்கும் பெரும் கடமையிலிருந்து இந்தியா தவறியுள்ளது வருத்தத்துக்குரியது. அதன் விளைவு தென் நாடுடைய சிவன் நூற்றெண்பது பாகை பயணித்து ஆஸ்திரேலிய தலை நகர் கன்பெராவில் தேசிய  கலை காட்சியகத்தில் ஆனந்த நடமாடுகிறார். தவிர விருத்தாச்சலம் கோவிலை சார்ந்த அர்த்த நாரீஸ்வரர் சிலை ஒன்று நியூ சவுத் வேல்ஸ் கலை காட்சியகத்தில் வாங்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே சோழர் காலத்தை சேர்ந்தவை. இரண்டுமே ஒரே நபரால் திருடி ஆஸ்திரேலியாவுக்கு விற்கப்பட்டவை.இரண்டுமே சர்வதேச சட்டங்களின் படி திருட்டு சிலை என்று தீர்மானிக்கப்படும் பட்சத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டியவை.

சுபாஷ் கபூர் அமெரிக்காவில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே குடியேறி விட்ட இந்திய வர்த்தகர்  . தென்னிந்தியாவில் இருந்து சிலைகளைக் கடத்தி நியூ யார்க்கில் உள்ள தனதுஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ கேலரி மூலம் விற்றுப் பல கோடி டாலர்கள் சம்பாத்தித்தவர். தவிர, ‘நிம்பஸ் எக்ஸ்போர்ட்’ என்ற பெயரில் சிலைகளை ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்தையும் இவர் நடத்தி வந்திருக்கிறார். தனது நிறுவனத்துக்கு ஒரு இணையத் தளத்தைத் தொடங்கி,அதன் மூலம் இணையத்தில்  சிலைகளை விற்று வந்திருக்கிறார்.அமெரிக்காஇங்கிலாந்து,ஹாங்காங்துபாய்ஜெர்மனிதாய்லாந்து ஆகிய ஆறு நாடுகளில் சுபாஷ் கபூருக்குச் சொந்தமாக  கலைக் காட்சியகங்கள்  உள்ளன. இவரது வியாபாரத் தொடர்புகள் இந்தியா,இந்தோனேஷியாபாகிஸ்தான்துபாய்ஹாங்காங்ஆப்கானிஸ்தான்பங்களாதேஷ்கம்போடியா,பாங்காக் என்று உலகளாவி  விரிந்திருந்தது. மேலும் உலகெங்கும் இது போன்ற அருங்காட்சியகம்  வைத்திருப்பவர்களுடனும் தொடர்புகொண்டு தனது சிலைகளை விற்று வந்திருக்கிறார்.


இவரிடமிருந்து ஆஸ்திரேலிய தேசிய  கலை காட்சியகம் 900 ஆண்டு பழமையான சோழர் காலத்து நடராஜர் சிலையை வாங்கியது. ஆஸ்திரேலியா இச்சிலைக்கு கொடுத்த விலை 5.6 மில்லியன் டாலர்கள்.சுபாஷ் இந்த சிலையை ராஜ் மெக்பூப் என்பவரிடமிருந்து வாங்கியதாக பற்று சீட்டு காட்டி தனது சிலையின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளார்.


அம்மணி இந்த சிலை தவிர வேறு ஏழு பொருட்களையும் சுமார் முப்பது மில்லியனுக்கு சுபாஷிடம் விற்றுள்ளார் எனத்தெரிகிறது.ஆனால் தேசிய  கலை காட்சியம் தமது நம்பகத்தன்மை தொடர்பான பூர்வாங்க ஆய்வுகளை 2008 இல் நடராஜர் சிலையை வாங்கும் போதே மேற்கொண்டது.அப்போது தான் இக் காட்சியகத்தின்  முதன்மைக் காப்பாளர் ரொபின் மாக்ஸ்வெல் இச்சிலையின் முந்தைய உரிமையாளர்கள் பற்றி மேலதிக விபரங்களை  சுபாஷ் கபூரிடமிருந்து கோரியிருக்கிறார். சுபாஷ் இச்சிலை ராஜின் கணவர் அப்துல்லா சூடானில் ராஜ தந்திரியாக இருந்த போது வாங்கியதாக கூறியிருக்கிறார்.

அதே சமயம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால அர்த்த நாரீஸ்வரர் 44 அங்குல கற்சிலை தவிர மேலும் ஆறு பொருட்கள் நியூ சவுத் வேல்ஸ் கலை காட்சியகத்தினால் 1994 – 2004 க்கிடையில் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு கழகம் இந்த அர்த்த நாரீஸ்வரர் சிலை தொடர்பான ஆவணங்களை  1958,1967,1974 ஆகிய காலகட்டங்களில் அது இருந்த விருத்தபுரீஸ்வரர் கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஆவணப்படுத்தியுள்ளது.

சுபாஷ் வழங்கிய பற்று சீட்டு மற்றும் நம்பக பத்திரங்கள் 1970 இல் இச் சிலை உத்தம் சிங் என்ற புது தில்லி கைவினைப் பொருட்கள் விற்பனை யாளர்களிடமிருந்து ராஜ தந்திரியால் வாங்கப் பட்டதாக தெரிவித்துள்ளன. எப்படி 1974 இல் கோவிலில் இருந்திருக்கும் ஒரு சிலையை  1970 இல் ஒருவர்  வாங்க முடியும்என்பதே கேள்வியாகும். உத்தம் சிங் விற்பனை யாளர் இச் சிலை விற்பனையை மறுத்திருக்கிறார்.தவிர இவ் விற்பனை  சீட்டில் இருக்கும் கை எழுத்து உத்தம் சிங்கினது அல்ல என்றும் உறுதியாக்கப்பட்டுள்ளது. உத்தம் சிங் உருதுவில் கையெழுத்திடுபவர். ஆஸ்திரேலியாவிலிருப்பது கையெழுத்தே இல்லாத சீட்டு.


சுபாஷ்.அரியலூர் மாவட்டம் சுத்தமல்லியில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த 900 ஆண்டு பழமையானஒரு மீட்டர் உயரமுள்ள வெண்கல நடராஜர் சிலையை திருடி விற்று இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.. தனது தொழில்  கூட்டாளி சஞ்சீவி அசோகன் மூலம் 2006ம் ஆண்டில் திருடியுள்ளார். நியூயார்க் நகரில் இருந்து இவற்றை ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்துக்கு சுபாஷ் விற்றுள்ளார்.

மேன்ஹட்டன் நகரில் உள்ள சுபாஷ் கபூரின் பிரமாண்ட விற்பனை மையத்தில் திடீரென அமெரிக்க உள்நாட்டுப்பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகிற குடியுரிமைசுங்கத்துறை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஆகியோர்  அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிவபெருமான்பார்வதி சிலைகள்பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிலைகள்,கலைப்பொருட்கள் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.110 கோடி ஆகும். இதையடுத்து சுபாஷ் கபூரை கைது செய்ய அமெரிக்க அதிகாரிகள் ஆணை  பிறப்பித்துள்ளனர்.இவ் வழக்கு நியூயார்க்கில் தொடரப்பட்டுள்ளது. வழக்கின் முதல் கடத்தல் பொருளாக வெண்கல நடராஜர் சிலை உள்ளது. இவை இந்திய அரசுக்கு சொந்தமானவை என்றும்ரூ.218 கோடி மதிப்புள்ள பழங்கால சிலைகளை சுபாஷ் கபூர்,இந்தியாவின் அரியலூர் மாவட்டத்தில் இருந்து கடத்தி வந்துள்ளதாகவும் வழக்கில் உறுதி செய்யப்பட்டுள்ளது.2011ம் ஆண்டில் ஜெர்மனியில் ஃபிராங்க்பர்ட்டில்  நடந்த ஒரு கண்காட்சியில் கலந்துகொண்ட சுபாஷ் கபூர்கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அரியலூர் சிலைகள் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே சுபாஷ் கபூரை கைது செய்வதற்காக இன்டர்போல் போலீசாரின் உதவியை இந்திய அரசு நாடியிருந்தது.
ஒரு கலைச்சின்னம் வாங்கும் முன் பல பல் பிடித்து சுழி பார்க்கும் படலங்கள் நடக்க வேண்டும். ஆஸ்திரேலிய தேசிய கலைக் காட்சியகம் தாம் இந்தியாவிலுள்ள   சோழர் கால சிலை நிபுணர்  இரா நாகசாமியிடம் தொடர்பு கொண்டு அவரது அங்கீகாரம் பெற்ற பின்னரே இச்சிலையை வாங்கியதாக கூறியிருக்கிறது. ஆனால் இரா நாக சாமியோ அப்படி எவரும் இச் சிலையின் பூர்வாங்கம் குறித்தோ அல்லது அதன் நம்பகத்தன்மை குறித்தோ தம்மிடம் ஒரு போதும் தொடர்பு கொள்ளவில்லை என்று மறுத்திருக்கிறார்.

இந்த சிலைகளை வாங்கியதால்  ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் சிக்கல் வந்துள்ளது.சிலை பழம் பொருள் வாங்கும் மரபுகளைப் பின்பற்றி வாங்கப்படவில்லை என்றால்அது திருட்டு சிலையாக இருக்கும் பட்சத்தில்  , 1970 யுனெஸ்கோவின் ஒப்பந்தப்படிசட்டத்துக்கு புறம்பான முறையில் புராதன கலைப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதிஅல்லது இறக்குமதி அல்லது உடமை மாற்றீடு செய்வது  தடை செய்யப் பட்டுள்ளது. இதையொட்டிய இந்திய சட்டம் 1986 இல் கொண்டுவரப்பட்ட அசையும் கலாச்சார மரபுப் பொருட்களை பாதுகாக்கும் சட்டமாகும்.

இவற்றின்  படி ஆஸ்திரேலிய அரசு தனது ஆஸ்திரேலிய தேசிய கலை காட்சியகத்தின் கௌரவத்தை காப்பாற்றும் வகையில் மேற்படி சிலையை உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அளிப்பதே உசிதமாகும். அப்படி திருப்பி கொடுக்காமல் இருந்தால் சர்வதேச அரங்கில் தலை குனியும்.அட்டர்னி ஜெனெரல் செனட்டர் பிரண்டீஸ்  இது குறித்து மேலும் விசாரணை நடப்பதாக கூறியிருக்கிறார்.தவிர தனது வெளி விவகார அமைச்சர் ஜூலி பிஷப்புடன் பேச்சு வார்த்தை  நடத்துவதாகவும் இந்தியாவுடன் கலந்து இரு நாடுகளூம் இச்சிலைகள் பற்றி முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இச்சிலைகள் அறுபத்து மூன்று நாயனாரின் சிலைகள் அல்ல.ஒன்றை உருவினால் கணக்கு விட்டுப்போவதற்கு. ஆளுயர நடராஜர் சந்தடியில்லாமல் இந்தியாவிலிருந்து எப்படி வெளியேறி இருப்பார்வழக்கமாக ,இந்தியா தீவிரவாதம் பற்றி தீவிர குடைச்சலை தந்தே தன் சுங்க சேவைகளை நடத்தும். கப்பலில் ஏறும் முன் நடராஜர் எந்த சோதனைக்கும் உள்ளாகவில்லையாஅல்லது சுங்கம் உறங்க விடப்பட்டதாகோடிக்கணக்கான டொலர்களிடம்  சில லட்சம் ரூபாய்கள்  சமரசமாகி விட்டதாகோயில்களில் உள்ள சிலைகளை பாதுகாப்பது  அரசின் கடமை இல்லையாபாழடைந்த கோயில்களில் விலை மதிப்பில்லா வெண்கலச்சிலைகளை கவனிக்காமல் புறக்கணிக்கலாமாசிலைகள் களவாடப்பட்டது தெரிந்த மறுகணம் சுங்கமும் எல்லைகளும்விமானம் மற்றும் கப்பல் முனையங்களும் ஏன் உஷார் படுத்தப்படவில்லைஇவற்றுக்கெல்லாம் இந்திய அரசிடமும்,தமிழக அரசிடமும் அதிகாரிகளிடமும் பதிலில்லை.

  
(வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் தொடர்புக்கு lawyer.chandrika@gmail.com)

No comments: