இலங்கைச் செய்திகள்

.
விடு­தலைப் புலி­களின் புதிய தலைவர் கோபி? : தகவல் தரு­வோ­ருக்கு ஒரு மில்­லியன் பரிசுத் தொகை

நீதிகோரி நுண்கலைப்பீட மாணவர்கள் போராட்டம்

புலிகளின் புதிய தலைவர் கோபியின் நெருங்கிய உதவியாளர் கைது

புலிகளின் பிரதானி ஒருவரை தேடி விஷேட வேட்டை : கொழும்பை அண்டிய பகுதிகளில் இருக்கலாம் எனவும் தகவல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தேடுதல் நடவடிக்கைகள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது : இராணுவப் பேச்சாளர்

தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு கோரி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது

இலங்கை நிலைமை குறித்து ஜெனிவாவில் இன்று விவாதம் : நவியின் அறிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்படும்

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரை தடுத்துவைத்து பொரும்பான்மையின மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

விடு­தலைப் புலி­களின் புதிய தலைவர் கோபி? : தகவல் தரு­வோ­ருக்கு ஒரு மில்­லியன் பரிசுத் தொகை

24/03/2014  பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு பொலி­ஸா­ரினால் மேற்­கொள்­ளப் பட்டு வரும் விஷேட விசா­ர­ணை­களில் தேடப்­பட்டு வரும் சந்­தேக நபர்­க­ளான பொன்­னையா செல்வ நாயகம் கஜீபன் எனப்­படும் கோபி அல்­லது காசியன் மற்றும் அவ­ரது உத­வி­யா­ள­ராக கூறப்­படும் நவ­ரத்னம் நவ­னீதன் எனப்­படும் அப்பன் ஆகியோர் தொடர்பில் தகவல் வழங்­கு­வோ­ருக்கு ஒரு மில்­லியன் ரூபா பணப் பரி­சினை பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது.
31 வய­தான கோபி மற்றும் 36 வய­தான அப்பன் ஆகியோர் தொடர்பில் சரி­யான தகவல் ஒன்­றினை வழங்­கு­வோ­ருக்கே இந்த பரி­சுத்­தொகை அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோகன சுட்­டிக்­காட்­டி­ய­துடன் தகவல் வழங்­கு­வோரின் இர­க­சியம் பேணப்­பட்டு அவர்­களின் பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் அளிக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்டார்.

கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி, தர்ம புரம் பிர­தே­சத்தில் கோபியை கைது செய்ய விஷேட பொலிஸ் குழு­வொன்று சென்­றி­ருந்த நிலையில் உப பொலிஸ் பரி­சோ­தகர் ரத்ன குமார மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்­டு­விட்டு அவர் தப்பிச் சென்­றி­ருந்தார். இதனைத் தொடர்ந்து விசா­ர­ணை­களைத் தொடர்ந்த பயங்­கர வாத புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் கோபிக்கு பாது­காப்பு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கிய குற்­றச்­சாட்டின் கீழ் 50 வய­தான பாலேந்­திரன் ஜெய­கு­மா­ரியை பயங்­க­ர­வாத தடை சட்­டதின் கீழ் கைது செய்­த­துடன் 18 நாள் தடுப்புக் காவலின் கீழ் பூசா முகாமில் தடுத்து வைத்து விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.
விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரணின் மர­ணத்தை தொடர்ந்து அந்த இயக்­கத்­தினை மீளவும் புத்­துயிர் செய்யும் நட­வ­டிக்­கை­களை கோபி மேற்­கொண்டு வந்­த­தாக பொலிஸார் குறிப்­பி­டு­கின்­றனர். பொட்டு அம்­மானின் கீழ் இயங்­கிய விடு­தலைப் புலி­களின் புல­னாய்வுப் பிரிவில் முக்­கிய உறுப்­பி­ன­ராக திகழ்ந்­துள்ள கோபி, 2009 ஆண்டு இடம்­பெற்ற இறு­திக்­கட்ட யுத்­ததின் போது இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­துள்ளார்.
எனினும் பூந்தோட்டம் புனர்­வாழ்வு முகா­மி­லி­ருந்து தப்பிச் சென்­றி­ருந்த கோபி கட்டார் நாட்­டுக்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்­ள­துடன் அங்­கி­ருந்து நோர்வே சென்று நாடு­க­டந்த தமிழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் எனக் கூறப்­படும் சிவ­ப­ரனை சந்­தித்து அவரின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுள்ள நிலை­யி­லேயே மீண்டும் இலங்­கைக்கு வந்­துள்ளார். இந் நிலை­யி­லேயே அவரை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொன்­டு­விட்டு கோபி தப்பிச் சென்­ருள்­ள­துடன் அவரை தேடி இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்து பொலிஸார் விஷேட தேடுதல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர்.
6 அடி உய­ரமும் பொது நிற தோற்­றத்­தை­யு­மு­டைய கோபியின் இடது பக்க உதட்டின் மேல் வெட்­டுக்­காய அடை­யாளம் (தழும்பு) ஒன்று காணப்­ப­டு­வ­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
அத்­துடன் நவ­ரத்னம் நவ­னீதன் என்ற அப்பன் 5 அடியும் 2 அங்­கு­லமும் உய­ர­மா­னவர் எனவும் பொது நிற தோற்­றத்தை உடை­யவர் எனவும் பொலிஸார் குறிப்­பி­டு­கின்­றனர்.
இந் நிலை­யி­லேயே இவர்கள் இருவர் தொடர்­பிலும் தலா ஒரு மில்­லியன் ரூபா பணப்­ப­ரி­சினை அறி­வித்­துள்ள பொலிஸ் திணைக்­களம் தகவல் தெரிந்தவர்கள் 0112451636 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0112321838 என்ர பெக்ஸ் இலக்கத்தினுடனோ தொடர்பினை ஏற்படுத்தி அல்லது பெக்ஸ் ஊடாக தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 






நீதிகோரி நுண்கலைப்பீட மாணவர்கள் போராட்டம்

24/03/2014    யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீட மாணவர்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக்கண்டித்து இன்று காலை 10 மணிமுதல் 11 மணிவரை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 21 ஆம் திகதி மருதனார்மடம் நுண்கலைபீட வளாகத்தில் நின்று கொண்டிருந்த நுண்கலைப்பீட மாணவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த  இனம் தெரியாத கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக  தாக்கிவிட்டு சென்றுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.நன்றி வீரகேசரி 





புலிகளின் புதிய தலைவர் கோபியின் நெருங்கிய உதவியாளர் கைது

24/03/2014  தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என கருதப்படும் கோபி எனப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனின் மிக நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினருடன் இணைந்து இராணுவத்தினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றின் போது வட்டுகோட்டை பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கோபியின் உதவியாளர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபரை கைது செய்து இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி 




புலிகளின் பிரதானி ஒருவரை தேடி விஷேட வேட்டை : கொழும்பை அண்டிய பகுதிகளில் இருக்கலாம் எனவும் தகவல்

24/03/2014  இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ராதா படையணியின்  முக்கியஸ்தரும் புலிகளின் விமானிகளில் ஒருவர் என கருதப்படுபவருமான தேவியன் எனப்படும் விடுதலைப் புலிகளின் பெயரில் அறியப்படும் பிரதானி இலங்கைக்கு மீண்டும் வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் அவரை கைது செய்ய விஷேட நடவடிக்கைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தேவியன் நடமாடுவதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் அவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸ் தலைமையகம் நாடியுள்ளது.
வடக்கு கிழக்கு மாத்திரமன்றி கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் குறித்த புலிகள் இயக்க சந்தேக நபரின் நடமாட்டம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண, தேவியன் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவோருக்கு ஒரு மில்லியன் ரூபா பணப் பரிசினை வழங்கவும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு மிகவும் அவசியமான நபர் என்ற ரீதியில் தேவியன் தொடர்பில் தகவல் தருவோரின் இரகசிய தன்மை பாதுகாக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதிக்கட்ட யுத்ததின் போது விடுதலைப் புலிகளின் பிரதானிகளில் ஒருவரான விநாயகத்துடன் தேவியன் உள்ளிட்டவர்கள் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுத் துறையின் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 
இந்நிலையில் இந்தியாவுக்கு சென்ற தேவியன் அங்கேயே தங்கியுள்ளதாகவும் வினாயகம் அங்கிருந்து  பிரான்சுக்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ள தேவியன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடிக்கடி சஞ்சரிப்பது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
இதனை அடுத்தே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தேவியன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0112451636 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது  0112321838 என்ற தொலை நகல் இலக்கத்திற்கோ அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை வேண்டியுள்ளது.
அனுராதபுரம் விமானப்படை முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்துடனும் தேவியனுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் சந்தேகிக்கின்ற நிலையில் இலங்கைக்குள் இவர்களின் மீள் நடமாட்டம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு உசார் நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 





யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தேடுதல் நடவடிக்கைகள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது : இராணுவப் பேச்சாளர்

25/03/2014 யாழ், கிளி நொச்சி உள்­ளிட்ட வடக்கில் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விஷேட தேடுதல் நட­வ­டிக்­கையில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக உள் நாட்டு சட்ட திட்­டங்­களின் அடிப்­ப­டையில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தா­கவும் இரா­ணு­வத்­தே­டு­தல்­களின் போது கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு அவர்­க­ளூ­டாக நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய தெரி­வித்தார்.
யாழில்இ புலி­களின் புதிய தலைவர் எனப்­படும் கோபி என்ற நப­ரையும் அவ­ரது உத­வி­யா­ள­ரான அப்­ப­னையும் தேடி நடத்­தப்­படும் தேடு­தல்கள் குறித்து கேசரி வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.
யாழ். வட்­டுக்­கோட்டை பகு­தியில் இரா­ணு­வத்­தினர் மேற்­கொண்ட நட­வ­டிக்கை ஒன்றின் போது பலர் கைது செய்­யப்­பட்­ட­ தா­கவும் அவர்கள் பொலி­ஸா­ரூ­டாக நீதி­மன்னாரில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
இதே­வேளை அண்­மைய நாட்­களில் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் தேடுதல் நட­வ­டிக்­கை­களின் போது, கைது செய்­யப்­பட்ட சில­ரி­ட­மி­ருந்து நிலத்­துக்­க­டியில் உள்ள ஆயு­தங்­க­ளை­கண்­டு­பி­டிக்கும் உப­க­ரணம், ரீ 56 துப்­பாக்­கிக்கு பயன்­ப­டுத்தும் தோட்டா, மோட்டார் குண்­டுகள் உள்­ளிட்ட ஆயு­தங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளதா­க வும் இவற்றின் அடிப்­ப­டையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள சந்­தே­கங்­களின் கீழேயே தேடுதல் நட­வ­டிக்கை தொடர்­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் இந்த தேடு­தல்­களின் போது இரா­ணு­வத்­தினர் தமக்­கு­ரிய அதி­கா­ரங்­க­ளுக்கு உட்பட்டே செயற்படுவதாகவும் இராணுவத்தினர் பொலி ஸாருக்கு உதவி யாகவே தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் அனைத்தும் சட்ட திட்டங்களின் பிரகாரமே இடம் பெறு வதா கவும் அவர் சுட்டிக் காட்டி னார்.
நன்றி வீரகேசரி 





தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு கோரி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

25/03/2014  தமிழ் யுவதிகளை இராணுவப் படையில் இணைந்து கொள்ளுமாறு கோரி தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
ஆலங்கேணி, ஈச்சந்தீவு, உப்பாறு, சின்னத்தோட்டம் முதலான பகுதிகளில் அறிவிக்கப்பட்டு வருவதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இளம் யுவதிகளே உங்களுக்கு விருப்பமான தொழில் என்று தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் இலங்கை இராணுவத்திற்கு தமிழ் பயிலுநர் பெண் சிப்பாய்களை ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை திருகோணமலை 22 ஆவது படைமுகாமில் நடைபெற்று வருகின்றன. 
தகைமைகளாக திருமணம் செய்யாத இலங்கைப் பெண் பிரஜையாக இருத்தல் வேண்டும் 18-24 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல்,  நல்ல உடல் ஆரோக்கியமிக்கவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 8 ஆம், 9 ஆம் தரங்கள் படித்திருத்தல் வேண்டும்.
மாதாந்தம் 42 ஆயிரத்து 498 ரூபாய் பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும். உணவு, தங்குமிடவசதிகள் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படும். 
அத்துடன் 15 வருடங்கள் முடிந்து ஓய்வு காலத்தில் ஓய்வூதியமும் வழங்கப்படும். மேலும் இலவசக் காப்புறுதி, இலவச வைத்திய வசதி, இலவச சீருடை, இலவச பயண வசதி, இராணுவ நலன்புரி வசதிகள் என்பனவும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நன்றி வீரகேசரி 




புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது

25/03/2014   பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரான செல்வநாயகம் ராசமலர் என்பவரும் அவருடன் தங்கியிருந்த மற்றுமொரு பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி 





இலங்கை நிலைமை குறித்து ஜெனிவாவில் இன்று விவாதம் : நவியின் அறிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்படும்

26/03/2014   ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் வெளி­யிட்­டி­ருந்த அறிக்கை குறித்து உறுப்பு நாடு­க­ளுக்கிடை­யி­லான விவாதம் இன்று புதன்­கி­ழமை ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. 
இந்த விவா­தத்தில் அமெ­ரிக்கா, கனடா, இந்­தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளன. அத்­துடன் இலங்­கையின் சார்­பிலும் விவா­தத்­தின்­போது இலங்கை தூதுக்­கு­ழு­வினர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் இன்று நடை­பெ­ற­வுள்ள இரண்டாம் கட்ட அமர்­வி­லேயே இலங்கை குறித்த விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது.
இலங்கை தரப்பில் நவ­நீதம் பிள்­ளையின் அறிக்­கையை நிரா­க­ரித்து உரை­யாற்­றப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் அமெ­ரிக்கா கனடா மற்றும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் நவ­நீதம் பிள்­ளையின் அறிக்­கையை வர­வேற்று உரை­யாற்றும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
எனினும் இந்­தியா, பாகிஸ்தான், சீனா ரஷ்யா உள்­ளிட்ட நாடுகள் இலங்­கைக்கு சார்­பாக உரை­யாற்­ற­வுள்­ளன. அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் உள்­ளிட்ட ஐந்து நாடு­க­ளினால் மனித உரிமைப் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இலங்கை குறித்த பிரே­ரணை தொடர்­பா­கவும் உறுப்பு நாடுகள் இந்த விவா­தத்­தின்­போது உரை­யாற்­ற­வுள்­ளன.
இலங்­கையில் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்பில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை கடந்த பெப்­ர­வரி மாதம் 24 ம் திகதி இல்­ஙகை குறித்த அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார்.
அந்த அறிக்­கையில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்று நவ­நீதம் பிள்ளை கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் மனித உரிமை பேர­வையின் ஆரம்ப அமர்வில் உரை­யாற்­றிய ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் நவ­நீதம் பிள்­ளையின் இலங்கை தொடர்­பான அறிக்­கையை வர­வேற்­ப­தாக தெரி­வித்­துள்ளார்.
எனினும் இலங்கை அர­சாங்கம் நவ­நீதம் பிள்­ளையின் அறிக்­கைமை நிரா­க­ரித்­தி­ருந்­தது. இது தொடர்பில் ஜெனி­வாவில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆண­யைாளர் நவ­நீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் அண்­மையில் வெளி­யிட்ட அறிக்­கையின் ஊடாக அவரின் ஆணையை மீறி செயற்­பட்­டுள்ளார் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.
அத்­துடன் நவ­நீதம் பிள்ளை முன்­வைத்­துள்ள பரிந்­து­ரைகள் ஒரு தலை­பட்­ச­மா­ன­வை­யா­கவும் அர­சியல் நோக்கம் கொண்­ட­தா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் வகை­யிலும் அமைந்­துள்­ளன என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.
நவ­நீதம் பிள்­ளையின் அறிக்கை மீதான விவாதம் இன்று நடை­பெ­ற­வுள்ள நிலையில் அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் உள்­ளிட்ட நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை மீதான விவாதம் நாளை வியா­ழக்­கி­ழமை அல்­லது நாளை மறு­தினம் வௌ்ளிக்­கி­ழமை இடம்­பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இது இவ்­வாறு இருக்க கடந்த ஆறாம் திகதி தனது வரு­டாந்த அறிக்­கையை வெளி­யிட்ட ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவ­நீதம் பிள்ளை இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணை பொறிமுறையை நிறுவவேண்டிய காலம் வந்துவிட்டது என்று கூறியிருந்தார்.
கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.நன்றி வீரகேசரி 





கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரை தடுத்துவைத்து பொரும்பான்மையின மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

25/03/2014   கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தரை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறவிடாது பொரும்பான்மையின சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்துக்குள் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.
எனினும் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருவதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது பல்கலைக்கழகத்தின் வாயிலை அடைத்து பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை வெளியேராவண்ணம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் உபவேந்தருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி






No comments: