ஞாயிறு மாலை இடம் பெற்ற சிட்னி உயர்திணை சந்திப்பு



வாழ்வனுபவங்களும்    வாசிப்பு   அனுபவங்களும்  சங்கமித்த     சிட்னி    உயர்திணை     சந்திப்பு.



சிட்னியில்    இயங்கும்    உயர்திணை    சந்திப்பு   அரங்கின்   மாத   இறுதியிலான    ஒன்று    கூடல்   கடந்த   ஞாயிற்றுக்கிழமை   30 ஆம்   திகதி மாலை    சிட்னி   பரமட்ட   பூங்காவில்   நடைபெற்றது.
செல்வி   யசோதா  பத்மநாதன்   ஒழுங்குசெய்திருந்த   இச்சந்திப்பில் படைப்பு    இலக்கியத்தில்   வாழ்வனுபவங்கள்   என்ற   தலைப்பில் மெல்பனிலிருந்து   வருதைந்த  எழுத்தாளர்   முருகபூபதி  உரையாற்றினார்.




இந்நிகழ்வில்     கலந்துகொண்ட   எழுத்தாளர்கள்  -  கலைஞர்கள் - ஊடகவியலாளர்கள்   மற்றும்   வாசகர்கள்   சுய அறிமுகவுரைகளை நிகழ்த்தியதையடுத்து  -  முருகபூபதி    உரையாற்றினார்.  தொடர்பாடல்கள்தான்    ஆரோக்கியமான   சமுதாயத்தை   வளர்க்கும் எனவும்    படைப்பாளிகளும்    ஊடகவியலாளர்களும்    தொடர்பாடல்களை மேற்கொள்வதன்    ஊடாகவே   வாசகர்களுக்கு   சமுதாயம்    பற்றிய பதிவுகளை     தரமுடியும்.     அந்தப்பதிவுகள்தான்    செய்திகளையும்  -  இலக்கியப்படைப்புகளையும்     உலகத்திற்கு    வரவாக்குகின்றன    என்றும் முருகபூபதி    தெரிவித்தார்.
பிரிஸ்பேர்ண்    தாய்த்தமிழ்ப்பள்ளி    நடத்திய    சிறுகதைப்போட்டியில் மூன்றாவது    பரிசுபெற்ற   வானொலி   ஊடகவியலாளர்    இரா. சத்தியநாதனின்     விண்ணைத்தாண்டி    வருவேனே   என்ற  சிறுகதையின்   வாசிப்பு    அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சியும்   இச்சந்திப்பில் இடம்பெற்றது.



இலங்கையிலிருந்து   வருகைதந்திருந்த    எழுத்தாளர்   தாமரைச்செல்வி   -  கந்தசாமி     மற்றும்    பாஸ்கரன்  -    யசோதா பத்மநாதன்   -   முருகபூபதி ஆகியோர்    குறிப்பிட்ட    சிறுகதை      உண்மைச்சம்பவத்தை    பின்னணியாக வைத்து    எழுதப்பட்டிருப்பதனால்    அவுஸ்திரேலியா    தமிழ்   வாசகர்களுக்கு     புதிய களத்தை    அறிமுகப்படுத்துவதாக    குறிப்பிட்டனர். 


பல   வருடங்களுக்கு   முன்னர்    இந்த நாட்டில்    நடந்த   ஒரு உண்மைச்சம்பவம்     தமிழ்ச்சிறுகதையாகியிருப்பதனால்    அதனை    எழுதிய அனுபவம்    தொடர்பாக     இரா.சத்தியநாதன்   தமது ஏற்புரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்    திருமதி    கார்த்திகா   கணேசர்  -    நடராஜா   கருணாகரன் - சுந்தரதாஸ்,  -    ஆரீஃப்  -    கௌரி  -   காணா. பிரபா,  -   பானுரேகா   -   ஸ்ரேயா  -  ரவீந்திரன்  -    சுந்தரச்செல்வன்     உட்பட   பலரும்   உரையாற்றினர்.
பரமட்டா    பூங்காவில்   இனியதொரு    மாலைப்பொழுதில்    இலக்கிய வாசம் கமழ்ந்த    இச்சந்திப்பு   வாழ்வனுபவங்களையும்   வாசிப்பு   அனுபவங்களையும்   சங்கமிக்கச்செய்தது   பயனுள்ள  அனுபவமாக   அமைந்தது.

                                                   ----0-----


No comments: