சில்லையூர் செல்வராசனின் 18வது நினைவு 14-10-1995

.
சில்லையூர் செல்வராசனின் 18வது நினைவு
தினத்தை முன்னிட்டு இன்னினைவுப்பா !
கலாநிதி குமரகுருபரன் MPC
வித்திலே திருக்கொண்டான் வித்தகன் இவனொருவன்
வித்துவான்கள் வியந்திடவே வெண்பாவும் அகவலென
விருத்தங்கள் விருப்புடனே எதுகையுடன் மோனையென
முத்தமிழே தன் மூச்சாய் பல்கலையும் தனதாக்கி
தறித்ததமிழ் தனி மரபாய் வித்தினிலே திருக்கொண்டான்
தாந்தோன்றி கவிராயன் தரணியிலேவந்துதித்தான்
சூசையர் மகனாம் மருவிய செல்வராசன் !
சில்லாலை புகழோச்ச சொல்லாலை அவதரித்தான்
கல்லானைப் போலாமோ வல்லார் நாமென்னும்
பாவலர் பலருள் பாவல்லான் சில்லையூர் செல்வராசன்
பொல்லாத கவிஞனிவன் வீண் கூறாப் புலவனென
வித்துவச்செருக்குண்ட தத்துவக்காரனிவன் .
''தணியாத தாகமதாய்" நாற் திசையும் நம்கலைகள்
முத்தமிழும் மின்னலையாய் வானலையில் இடிமுழக்கம் !
நேயரென ஓர் குலமும் ,நடைபிணங்கள் நாமில்லை
நடைகோலம் தானில்லை கலைஞர் குளாம்ஓர் குலமாய்
கட்டி அவன் காத்ததினால் ''வாத்தி''என வாழ்த்தினரோ?
விளம்பரத்தில் வித்துவங்கள் புத்தலைகள் புதுக்கோலம்
பத்திரமாய் பாத்திரங்கள் வாழ்க்கையிலும் நாட்டியவன்;
காதற் கதையினிலே தன் தனையனவன் புகழ்காட்டி
தன் இனிய கமல மது கரமெடுத்து ி தொடுத்த

அதிசயன் மொழி கேட்டு வாழ்வாங்கு வாழ்ந்தவனே !


பாவலர்க்கேது அரசியற் பக்கவாதமென
சுதந்திரனுக்கு விடைகொடுத்தான், தக்கவாதம் தான் கொண்டால் சுதந்திரத்த மூச்சிழுத்து
வெண் புறாவாய்ப் ஒப்பாரி பாடிடுவான்.
நீத்தார் பெருமை கூற நின் போல்
புகழ்பூத்தார் நீயொருவன் தானென்று
நீத்தார் அழைத்தாரோ நின்புகழ் பாட !


மேதினியில் கூவிளங்கள் குரல் கேட்டு

வானலையில் பாவளப் பயிர் வளர்த்த

பாவலர் தலைவன் நீயன்றோ ஆசுகவி
ஆதலின்தான் நான் தந்தேன் அன்று
“பளிங்குச்சொற்பாவலன்”பட்டயம் !
பேராசான் சிவத்தம்பி பெருங்கரத்தால்
கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில்!
கட்டியம் போல் வந்தானோ காலன்,
இன்று போல் இருக்கின்றதே அன்றும்
பளிங்குச்சொற் பாவலனாய்
அகவையொன்று ஆகுமுன்னே !

சூசையருக்குப் பிள்ளை , பிள்ளையார்
சுழி போட்டுக் கவிதொடுத்த சில்லை !
வேறில்லை, நாம் பாவலர் தானென
ஓர் குலத்தைச் சுட்டிக்காட்டிய எல்லை
எம் பளிங்குச்சொற்பாவலன் சில்லையூர்
செல்வராசன் ஈழத்து தமிழ் வரலாற்றில்
இன்றில்லை எனும் பெருமைஉடைத்தென
நம் ஈழத்து தமிழ் உலகு காண்கவே !
- கைதையூரான் கலாநிதி குமரகுருபரன்

No comments: