பத்திரகாளியம்மன் ஆலயம் இரவோடு இரவாக தரைமட்டம்
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்
காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்
முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வைத்தியசாலையில் அனுமதி
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தென்கொரியா உதவி
=========================================================================
அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் புனித பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இந்த ஆலயம் அமைந்திருந்தது.
அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட போதிலும் ஆலயத்தில் தொடர்ந்தும் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
ஆலயத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுமாறு பௌத்த விகாரையின் பிரதம பிக்குவினால் ஆலய பரிபாலகர்களுக்கு அழுத்தங்களும் நெருக்குதல்களும் இருந்ததாக அங்கு வாழும் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆலயத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு பொருத்தமான காணி வழங்குமாறு மத விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதம மந்திரி தி.மு ஜயரத்ன, காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் உட்டபட பலருக்கும் தங்களால் நேரில் கேரிக்கை முன்வைக்கப்பட்டும் சாதகமான பெறுபேறுகள் தங்களுக்கு கிடைக்க வில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ஆறு மாத காலத்திற்குள்வே 3-4 தடவைகள் தாக்கப்பட்ட இந்த ஆலயம் இறுதியாக கடந்த புதன்கிழமையும், தாக்கப்பட்டு ஆலயத்தின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு முன்பாக பறக்கவிடப்பட்டிருந்த நந்திக் கொடி கொடிக் கம்பத்துடன் பிடுங்கி வீசப்பட்டிருந்தது.
தற்போது ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ஆலய பரிபாலகரான கே.லட்சுமி, ஆலயத்திலுள்ள உடமைகளை அகற்றுவதற்கு நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் தான் கேட்டிருந்ததாகக் கூறுகின்றார்.
நேற்று திங்கட்கிழமை குறித்த விகாரையின் பிரதம பிக்குவினால் இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்பட்ட போது அதனை அகற்றுவதற்கு முன்னதாக சமய கிரியைகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி இந்தக் கால அவகாசத்தை தான் கேட்டிருந்தாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
ஏற்கனவே அம்மன் விக்கிரகம் அகற்றப்பட்டு சேதமாக்கப்பட்டதையடுத்து, புதிய விக்கிரகமொன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜனினால் வழங்கப்பட்டிருந்தது.
அதனைக் கூட வைத்து வழிபாடு செய்ய முடியாத நிலை தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி
29/10/2013 பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய
தேசிய கட்சி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கூட்டின் பங்காளிக்
கட்சிகளையும் சிவில் அமைப்புக்களையும் தொழிற்சங்கங்களையும்
இணைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம் ஒன்றை
எதிர்வரும் ஏழாம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக
நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும்
பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
30/10/2013 வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5 ஆயிரம் குடும்பங்களுக்கு அமெரிக்கா நிதியுதவிவழங்கும் : சிசனுடனான சந்திப்பின் பின் விக்னேஸ்வரன்
=========================================================================
பத்திரகாளியம்மன் ஆலயம் இரவோடு இரவாக தரைமட்டம்
29/10/2013 மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர
பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் ஞாயிற்றுக்கிழமை இரவு
இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள்
தெரிவிப்பதாக பிபிசி செய்தி சேவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்த இந்த ஆலயம் அந்த பிரதேசத்திலுள்ள இந்துக்களுக்கான ஒரேயொரு வழிபாட்டுத் தலமாக அமைந்திருந்தது.
பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அவர்கள் கவலையடைந்துள்ளார்கள்.
யாழ்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்த இந்த ஆலயம் அந்த பிரதேசத்திலுள்ள இந்துக்களுக்கான ஒரேயொரு வழிபாட்டுத் தலமாக அமைந்திருந்தது.
பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அவர்கள் கவலையடைந்துள்ளார்கள்.
அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் புனித பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இந்த ஆலயம் அமைந்திருந்தது.
அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட போதிலும் ஆலயத்தில் தொடர்ந்தும் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
ஆலயத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுமாறு பௌத்த விகாரையின் பிரதம பிக்குவினால் ஆலய பரிபாலகர்களுக்கு அழுத்தங்களும் நெருக்குதல்களும் இருந்ததாக அங்கு வாழும் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆலயத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு பொருத்தமான காணி வழங்குமாறு மத விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதம மந்திரி தி.மு ஜயரத்ன, காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் உட்டபட பலருக்கும் தங்களால் நேரில் கேரிக்கை முன்வைக்கப்பட்டும் சாதகமான பெறுபேறுகள் தங்களுக்கு கிடைக்க வில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ஆறு மாத காலத்திற்குள்வே 3-4 தடவைகள் தாக்கப்பட்ட இந்த ஆலயம் இறுதியாக கடந்த புதன்கிழமையும், தாக்கப்பட்டு ஆலயத்தின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு முன்பாக பறக்கவிடப்பட்டிருந்த நந்திக் கொடி கொடிக் கம்பத்துடன் பிடுங்கி வீசப்பட்டிருந்தது.
தற்போது ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ஆலய பரிபாலகரான கே.லட்சுமி, ஆலயத்திலுள்ள உடமைகளை அகற்றுவதற்கு நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் தான் கேட்டிருந்ததாகக் கூறுகின்றார்.
நேற்று திங்கட்கிழமை குறித்த விகாரையின் பிரதம பிக்குவினால் இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்பட்ட போது அதனை அகற்றுவதற்கு முன்னதாக சமய கிரியைகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி இந்தக் கால அவகாசத்தை தான் கேட்டிருந்தாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
ஏற்கனவே அம்மன் விக்கிரகம் அகற்றப்பட்டு சேதமாக்கப்பட்டதையடுத்து, புதிய விக்கிரகமொன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜனினால் வழங்கப்பட்டிருந்தது.
அதனைக் கூட வைத்து வழிபாடு செய்ய முடியாத நிலை தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்
29/10/2013 பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய
தேசிய கட்சி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கூட்டின் பங்காளிக்
கட்சிகளையும் சிவில் அமைப்புக்களையும் தொழிற்சங்கங்களையும்
இணைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம் ஒன்றை
எதிர்வரும் ஏழாம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக
நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும்
பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கசினோ சட்டமூலத்தை முழுமையாக அகற்றுதல்,
வரவு-செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
ரத்துபஸ்வல மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுத்தல் மற்றும் 17
ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டுவருதல் போன்ற விடயங்களை
வலியுறுத்தியே இந்த அரசுக்கு எதிரான போராட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் தலைமையகமான
ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு
கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு
மேலும் கூறுகையில்
ஏழாம் திகதி பி.பகல் மூன்று மணிக்கு
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம்
நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சிவில்
அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு
திறந்த அழைப்பை விடுக்கின்றோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தை நான்கு முக்கிய
விடயங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கின்றோம். குறிப்பாக
கசினோ சட்டமூலம் தற்போது தற்காலிகமாகவே அகற்றப்பட்டுள்ளது.
எனவே அதனை முழுமையாக நீக்குமாறு இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக கோரிக்கை
விடுக்கவுள்ளோம். குறித்த வர்த்தமானி அறிவித்தலை திருத்தியமைத்து
மீண்டும் கொண்டுவரவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் அபாயம் இன்னும்
நீங்கிவிடவில்லை. எனவே இதனை முழுமையாக நீக்குமாறு
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்துவோம். எதிர்வரும் வரவு
செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவேண்டும்
என்று கோரிக்கை விடுக்கின்றோம். குறிப்பாக அரச ஊழியர்களுக்கு சம்பள
உயர்வு வழங்கப்படவேண்டும். எனவே ஆர்ப்பாட்டத்தில் இதனையும்
வலியுறுத்தவுள்ளோம்.
அடுத்ததாக அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும்
கொண்டுவரவேண்டும். அதற்கமைய சுயாதீன ஆணைக்குழுக்கள்
நியமிக்கப்படவேணடும்.
மேலும் ரத்துபஸ்வல மக்களுக்கு நியாயத்
தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
வலியுறுத்துவோம். இந்த நான்கு விடயங்களை வலியுறுத்தியே அரசாங்கத்துக்கு
எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். நன்றி வீரகேசரி
காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்
26/10/2013 "எட்டு
வருடங்களாக காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக்
குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைப் படுத்தப்பட்டது
போலத்தான் எங்களது வாழ்க்கை" - இது களுத்துறை மாவட்டத்தில்
அரம்பஹேனவில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.
ஹொரணை
பெருந்தோட்டக் கம்பனியின் ஹில்ஸ்ட்றீம் தோட்டத்தின் ஒரு பிரிவே
அரம்பஹேன. அங்குள்ள மக்கள் காட்டுக்குள் வாழ்வதாகவும் அடிப்படை
வசதிகள் எதுவுமின்றி பெரும்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து
வருவதாகவும் 'கேசரி'க்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.
ஆம்! புளத்சிங்ஹல
நகரிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் கரடுமுரடான பாதையில்
அரம்பஹேனவுக்கு பயணித்தோம். சுமார் 10 கிலோமீற்றர் பயணத்தின்
பின்னர் இருபுறமும் அடர்ந்த காடுகள் நிறைந்திருக்க வேறெங்கோ
தேசத்துக்கு வந்துவிட்டதுபோன்ற உணர்வு.
ஆங்காங்கே
காணப்படும் இறப்பர் மரங்களுக்கு நடுவே மனிதர்கள் உள்ளே போக
முடியாதளவுக்கு உயர்வான காட்டு மரங்களும், செடிகொடிகளும்
நிறைந்திருந்தன.
அடர்ந்த
காடுகளுடன் கூடிய சிறு மலைக்குன்றுகளுக்கிடையே
அமைந்திருக்கிறது லயன் குடியிருப்பு. அங்கு 14 தமிழ்க்
குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வருகிறார்கள்.
இந்தத் தோட்டம்
மூடப்பட்டு 8 வருடங்கள் ஆகின்றன. அன்று முதல் தொழிலாளர்களுக்கு வேலை
இல்லை. தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள்
தரப்படவில்லை. மேலும் இதர வசதிகள் எதுவும்
செய்துகொடுக்கப்படவில்லை.
இக்கட்டான
சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி
செய்வதற்காக கூலித் தொழில் செய்து வருகின்றனர்.
வளமான தோட்டமாக
இருந்த அரம்பஹேன, நிர்வாகத்தின் கவனயீனம் காரணமாக காடாகிப் போனது.
அந்தத் தோட்டம் 165 ஹெக்ரெயர் நிலப்பரப்பை கொண்டதாகவும் இறப்பர்
மரங்கள் மீள்நடுகை செய்யப்படாத காரணத்தினால் தோட்டம் முழுவதும்
காடாகிப் போனதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.
அரம்பஹேனவில்
தனித்துவிடப்பட்டுள்ள இந்த மக்களுக்கு போக்குவரத்து வசதிகள்
இல்லை, வைத்தியசாலை இல்லை, மலசலகூடங்கள் இல்லை, தண்ணீரைக் கூட காத
தூரத்தில் உள்ள கிணற்றிலிருந்துதான் பெற்றுக்கொள்கிறார்கள்.
"யாருக்காவது
சுகயீனம் என்றால்கூட நோயாளியை காட்டுவழியே தூக்கிக்கொண்டுதான்
போக வேண்டும். மலைப்பாம்புகள் அதிகமாக நடமாடும் இந்தக்
காட்டுப்பகுதியில் எங்கே கால் வைப்பது என்ற அச்சமே மரணத்தின்
விளிம்புவரை எம்மைக் கொண்டு சென்றுவிடும்" என்கிறார் சங்கர் என்ற
குடும்பஸ்தர்.
பி.பால்ராஜ் (53) என்ற குடும்பஸ்தர் தமது பிரச்சினைகளை இவ்வாறு விபரிக்கிறார்.
"நாம் பரம்பரை
பரம்பரையாக இங்கே வசிக்கிறோம். 1924 ஆம் ஆண்டு இந்த தோட்டத்துக்கு
எங்களுடைய குடும்பத்தார் வந்திருக்கிறார்கள். நல்ல இலாபத்துடன்
தோட்டம் இயங்கிவந்தது.
2005 ஆம்
ஆண்டிலிருந்துதான் இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இறப்பர்
மரங்களை பிடுங்கிவிட்டார்கள். கிட்டத்தட்ட 1600 மரங்கள் இருந்தன.
இப்போது 500 மரங்கள் கூட இல்லை. மற்றைய இடங்களெல்லாம்
காடாகிவிட்டது.
தோட்ட
முகாமையாளரிடம் பல தடவைகள் முறையிட்டோம். ஆனால் எமது அழுகுரலுக்கு
யாருமே செவிசாய்க்கவில்லை. திடீரென வேலை நிறுத்திவிட்டார்கள்.
சம்பளம் தராததால் வருமானத்துக்கு வழியும் இல்லாமல் திண்டாடினோம்.
இறப்பர் மரத்தின் உச்சிவரை பால் வெட்டி தோட்டத்துக்குக் கொடுத்தோம்.
ஆனால் எந்தப் பிரதிபலனும் கிடைக்கவில்லை.
நாம் தமிழர்கள்
என்பதால்தான் ஒடுக்கப்படுகிறோம். இங்குள்ள சிங்கள
அரசியல்வாதிகளிடம் போனால், நீங்கள் தமிழர்களுக்குத்தானே
வாக்களித்தீர்கள், அவர்களிடமே போய் கேளுங்கள் என்கிறார்கள்.
நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம். கடவுளும் எம்மை கைவிட்டுவிட்டதாகத்தான் தோன்றுகிறது" என்றார்.
எஸ்.சரோஜினி(66) என்பவர் கூறுகையில்,
"நாங்கள் இந்தத்
தோட்டத்துக்கு சேவையாற்றியிருக்கிறோம். வியர்வை சிந்தி உழைத்த
இடமெல்லாம் இப்போது காடாகிப்போய்விட்டது. காட்டு வழியாகத்தான்
எங்களுடைய லயனுக்கு வரவேண்டும் என்பதால் யாரும் இங்கே
வரமாட்டார்கள்.
வேலை இல்லாததால்
கால்வயிறு,அரைவயிறு என்றுதான் வாழ்ந்துவருகிறோம். ஒவ்வொரு நாளும்
நித்திரையின்றித் தவிக்கிறோம்" என்றார்.
அரம்பஹேனயிலுள்ள
சிறுவர்கள் அருகிலுள்ள குடகங்கை என்ற தோட்டத்திலுள்ள
பாடசாலைக்குச் செல்கிறார்கள். அந்தப் பாடசாலை தரம் 9 வரை மாத்திரமே
கொண்டு இயங்குகிறது.
அதற்கு மேல் கல்வி
கற்பதற்கு மத்துகமை நகருக்கு மாணவர்கள் செல்ல வேண்டும்.
அவ்வாறெனின் பல கிலோமீற்றர் தூரம் காட்டுவழியே நடந்து சென்றுதான்
பஸ்ஸில் பயணிக்க வேண்டும்.
அவ்வாறு
பாடசாலைக்கு செல்வோர் வீடு திரும்பும் வரை நிம்மதியின்றிக்
காத்திருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். நீண்டதூரம் நடக்க
வேண்டியதால் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியோரும் உள்ளனர்.
தோட்ட மக்கள் பகலில்
நடமாடுவதற்கும் அச்சம் கொண்டிருக்கிறார்கள். குடியிருப்பைச் சூழ
சிறுகுன்றுகளில் காட்டுப் பன்றிகளும் மலைப்பாம்புகளும்
விஷப்பூச்சிகளும் இருப்பதாகவும் இரவில் நடமாட முடியாத நிலை
உள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
தோட்டத்தில்
உள்ளவர்களுக்கு யாராவது கடிதம் அனுப்பினால் கூட அது உரியவர்களை
சென்றடைவதில்லை. தபால்காரரே இல்லாத தோட்டத்தில் எப்படி கடிதம்
கிடைக்கும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.
அரம்பஹேன தோட்டம்
மூடப்படுவதற்கு முன்னர் இறப்பர் மரங்கள் குத்தகை அடிப்படையில்
மக்களுக்கு வழங்கப்பட்டன. எனினும் தோட்ட மக்கள்
புறக்கணிக்கப்பட்டு பெரும்பான்மையினத்தவருக்கே
வழங்கப்பட்டதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தோட்டக்
குடியிருப்பிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் பால் சேகரிக்கும்
நிலையம் இருக்கிறது. உள்ளே போகமுடியாத அளவுக்கு காடுகள்
வளர்ந்துள்ளதுடன் உடைந்தும் சேதமடைந்தும்
பாழடைந்திருக்கிருக்கிறது அந்த நிலையம்.
அரம்பஹேன தோட்ட
மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள அபாயம் மற்றும் சிரமங்கள் குறித்து தமிழ்
அரசியல்வாதிகள் பலரிடமும் முறையிட்டிருக்கிறார்கள். இதுவரை
விமோசனம் கிடைக்கவில்லை.
அரசியல்வாதிகள்
பலர் தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து போயிருக்கிறார்கள். இந்த
மக்களின் குறைகளை தீர்ப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள்.
ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரம்பஹேன
தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் அவர்களுக்குரிய
கொடுப்பனவுகள் எதனையும் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக
பாதிக்கப்பட்டோர் கூறுகிறார்கள்.
தோட்ட நிர்வாகத்தின்
அசமந்தப் போக்கினால் முழுத் தொழிலாளர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் குரல் வெளியு லகுக்கு கேட்காவண்ணம் திட்டமிட்ட வகையில்
இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.
ஏனென்றால்
தோட்டத்தில் தொழில் வழங்கப்படாத தருணத்தில் நிர்வாகம், வேறு தோட்டங்களில்
இவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். அல்லது ஏதாவது
மாற்றீடான திட்டங்களை அமுல்படுத்தியிருக்கலாம். ஆனபோதும் தொழிலாளர்கள்
குறித்த எந்த அக்கறையும் இங்கு வெளி க்காட்டப்படாமை கவலையளிக்கிறது.
பெரும்பான்மையினத்தோர்
அதிகமாக வசிக்கும் பகுதிக்கு மத்தியில் இத்தோட்டம் அமைந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தத் தோட்டத்தையும் பெரும்பான்மையினருக்கு விற்கும் முயற்சி
இடம்பெற்று வருவதாகவும் ஒருபுறம் குற்றம் சுமத்தப்படுகிறது.
தாங்கள் இவ்வாறு
முடக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய கலை,கலாசார,விழுமியங்களையும் பாதுகாக்க
முடியாத சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
தோட்டம்
மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் தொழில் வழங்கப்பட வேண்டும் அல்லது வேறு
இடத்தில் தமக்கு காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின்
கோரிக்கையாக இருக்கிறது.
ஆக,தோட்டம்
முழுவதும் காடாக மாறியமைக்கு யார் பொறுப்பு? ஒவ்வொரு நிமிடத்தையும்
அச்சத்துடன் கழித்துக்கொண்டிருக்கும் மக்களை இந்த நிலைக்கு
ஆளாக்கியவர்கள் யார்? பெரும்பான்மை இனத்தோர் வாழ்கின்ற தோட்டங்கள்
சரியாக நிர்வகிக்கப்படுகின்ற போது, இந்தத் தோட்டம் மாற்றாந்தாய்
மனப்பான்மையுடன் நோக்கப்பட்டது ஏன்? போன்ற கேள்விகள் இயல்பாய்
எழுகின்றன.
உண்மையில்
வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல் காட்டுக்கு நடுவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள
இந்த மக்களுக்கு தோட்ட நிர்வாகம் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க
வேண்டியது அவசியமாகும்.
அதேபோன்று
பருவத்தில் பூக்கும் காளான்கள் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம்
சென்று வாக்கு கேட்டுக் கெஞ்சும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் இனிமேலும்
மௌனம் சாதிக்கக் கூடாது.
ஒரு சமூகம் உரிமைகள்
மறுக்கப்பட்ட நிலையில் ஒதுக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள
முடியாது. உலகம் நொடிக்கு நொடி மாற்றம் கண்டுகொண்டிருக்க இங்கே ஒரு சமூகம்
அடுத்த நிமிடத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் உரிய தரப்பினர்
இணைந்து தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
-இராமானுஜம் நிர்ஷன், எம்.டி.லூசியஸ்
படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்
நன்றி வீரகேசரி
முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வைத்தியசாலையில் அனுமதி
30/10/2013 வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் உபாதை காரணமாக மருத்துவப்
பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்குச் சென்ற முதலமைச்சரை விசேட வைத்தியப்
பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையேற்பட்டதால் வைத்தியர்கள்
வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு வேண்டியுள்ளனர்.
இதேவேளை
முதலமைச்சரை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்றவர்களுடன் அவர் சரளமாக
உரையாடியதுடன் தனக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண உபாதை எனவும் மாதாந்தம்
மேற்கொண்டு வருகின்ற பரிசோதனைகளுக்காக தான் வைத்தியசாலைக்கு வந்தபோது தன்னை
வைத்தியப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக குறித்த சிகிச்சைப் பிரிவில்
வைத்தியர்கள் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தனக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தென்கொரியா உதவி
30/10/2013 வடக்குமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தங்களாலான உதவிகளை
வழங்க தமது நாடு தயாராகயிருப்பதாக இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர்
அர்யுன யோங்மூன் சொய் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரிடம்
தெரிவித்துள்ளார்.
அத்தோடு தென்கொரியாவிற்கு மேற்படிப்புக்காக
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எவரும் வருகை தருவதில்லை இது எமக்கு மிகுந்த
மனவேதனையளிக்கின்றது எனவும் அந்நாட்டு உயர்ஸ்தானிகர் அர்யுன யோங்மூன் சொய்
யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கோவில்
வீதியிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் இன்றைய தினம் காலை சந்தித்து
கலந்துரையாடிய இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர் இது தொடர்பில்
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு தென்கொரியாவிற்கு மேற்படிப்புக்காக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எவரும் வருகை தருவதில்லை இது எமக்கு மிகுந்த மனவேதனையளிக்கின்றது எனவும் அந்நாட்டு உயர்ஸ்தானிகர் அர்யுன யோங்மூன் சொய் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment