வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 2. அமிழ்தம்ஞானா -    (உரத்து) அமிழ்தம் அநியாயமாய் போகுது. . .. அமிழ்தம்           அநியாயமாய் போகுது வந்து பாருங்கோம்மா . . ..

சுந்தரி -    என்ன பிள்ளை ஞானா கத்திக் கொண்டிருக்கிறாய் நான் ஏங்கியெல்லே போனன். எங்கை தடக்கிக் கிடக்கி விழுந்திட்டாயோ எண்டு.

ஞானா -    இல்லை அம்மா. உந்த தண்ணி பைப்பை பாருங்கோ. . இப்ப இரண்டு கிழமையாய் தண்ணி ஓடிக்கொண்டிருக்குது. கவனிப்பார் ஒருத்தரும் இல்லை.

சுந்தரி -    உன்ரை அப்பருக்கு நான் எத்தனையோ முறை சொல்லிப்போட்டன் ஒரு washer  வாங்கியந்து பூட்டிவிடுங்கோ எண்டால் மனிசன் அசையுதில்லை. அது சரி நீ ஏன் அமிழ்தம், அமிழ்தம் எண்டு கத்தினனீ.


ஞானா -    தண்ணீர் அமிழ்தம்தானே அம்மா. . .உலகத்திலை உயிர்கள் சாகாமல் இருக்கச் செய்யிறது தண்ணீர் தானே அம்மா. அதுதானே திருவள்ளுவர் தண்ணீரை அமிழ்தம். எண்டவர்;.

சுந்தரி    -    அட ட டா. . .நீ அங்கை போட்டியோ. உன்ரை அப்பருக்குச்  சொல்லு இந்நச்      சாவா மருந்தை சள சள       எண்டு ஓட விடவேண்டாம் எண்டு
     
ஞானா -    அவர் என்ன செய்வர் அம்மா. . .அது pடரஅடிநச ன்ரை வேலையெல்லே?

சுந்தரி -    உண்மைதான். . .ஆனால் உதையும் பழகச் சொல்லுறன் அவருக்கு.

அப்பா -    ஓமோம் பழகிறன். . .பழகிறன். தேத்தண்ணி போடப்
    பழகியாச்சு, சோறு காச்சப் பழகியாச்சு, இப்ப தோசை சுடப் பழக்கம் நடக்குது, இனிப் பேனை பிடிச்ச கையாலை சம்மட்டி, கோடாரி, சாவணம், குறடு எண்டு ஆரம்பிப்பம்.

சுந்தரி -    கொஞ்சம் விளக்கமாய் சொல்லு ஞானா? mJ plumber   ஐ கூப்பிட்டால் அவன் வாறதுக்கு அறுபது டொலர். பிறகு பாத்து என்னபிழை எண்டு திருத்திறதுக்கு மணத்தியாலக் கணக்கிலை charge ஆக உந்த பைப்புக்கு
washer போட குறைஞ்சது 100 டொலர் எண்டாலும் வேணும்.

ஞானா -     அப்ப ஒரு plumber  க்கெண்டாலும் phone பண்ணி உந்த அமிழ்தம் அநியாயமாய் போறதை நிப்பாட்டுங்கோவன்.

அப்பா -    என்ன? அமிழ்தமோ? இதென்ன புதுக் குழப்பாமியிருக்கு. தேவர்களுக்கே கிடையாத அமிழ்தம் இஞ்சை     அநியாயமாய் போகுதே?

ஞானா -    அப்பா திருக்குறளை ஊண்டிப் படிக்கேல்லை.

“வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று”

         
        வானத்தில் இருந்து மழையாய் பெய்து, தண்ணீர்
குழாயிலை தண்ணீராய்  வருகுது. அந்த அமிழ்தம், சாவா                   மருந்து, வீணாய்ப் போகலாமோ?

அப்பா -    எங்கடை வீட்டிலை திருக்குறள் புத்தகம் கனகாலமாய் இல்லாமல் இருந்தது.

சுந்தரி
-    எங்கடை வீட்டை ஏன் குறை சொல்லுறீங்கள். உங்கை எத்தினை வீட்டிலை திருக்குறள் இருக்கெண்டு கேட்டுப் பாருங்கோ.

அப்பா    -எங்கடை குறையை முதலிலை தீர்ப்பம் எண்டிட்டுத்தான் ஒரு திருக்குறள் புத்தகத்தை வாங்கியந்து புத்தக அலுமாரியிலை வைச்சனான்.

ஞானா -    ஆகப் பிழை சொல்லக்கூடாது அப்பா, எங்கடை ஆக்கள் இப்ப எவ்வளவோ முன்னேற்றம். வீடெல்லாம் திருக்குறள்
    புத்தகம் இருக்கு.

அப்பா -       திருக்குறளைக் காட்டியாவது எனக்குத் திருகாணி வைக்கப்
          பாக்கிறியள்.

சுந்தரி -    சும்மா நாட்டு நடப்பு தெரியாமல் பேசாதையுங்கோ, பக்கத்து வீட்டு டோமினோவைப் பாத்தியளே, எப்பவாவது பைப் திருத்த வான் வந்திருக்கோ? ஒரு handy man     அவையின்ரை வீட்டு கேட்டைத் திறந்திருப்பனே?

அப்பா -    பக்கத்து வீட்டு டொமினோவைப் பார்த்து நீர் என்னை இப்ப
dominate பண்ணப் பாக்கிறீர். இங்கை ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொருவர் இருக்கினம் எல்லே,

ஞானா-      உந்த handy work எல்லாம் பொல்லாத விலை எல்லே அப்பா,

அப்பா -    தெரியாத வேலையைச் செய்யப்போய் பிறகு தண்ணீர் சீறியடிச்சு வீடெல்லாம் வெள்ளமாக்க அதாலை வாற செலவு நூறு மடங்கு ஆகுமெல்லே?

சுந்தரி -    ஒருக்கால் உதிலை கிடக்கிற BCC harware stores க்கு
    போட்டுவந்தால் அலுவல் வெகு சுலபமாய் முடிஞ்சுபோம்.


 அப்பா    -   ஏன் சுந்தரி அவங்கள் வந்து பைப்பைத் திருத்துவங்களே?

ஞானா
-    அப்பாவுக்கு நாட்டு நடப்பே தெரியாது

சுந்தரி
-    வேறை என்ன? officeக்குப் போறது வீட்டை வாறது, சாப்பிடுறது,
TV பாக்கிறது, paper வாசிக்கிறது, இல்லை எண்டு நான் கத்தினால் மாதத்துக்கு ஒருக்கா புல்லு வெட்டுறது. . அவ்வளவுந்தானே!

அப்பா    -    தாயும், மோளுமாய்ச் சேந்து என்னை வெட்டுறியள்.  அதுசரி
BCC hardware store க்குப் போய் என்ன செய்யிறது?

சுந்தரி -    முதல்லை ஒரு pipe wrench  வாங்குங்கோ. பிறகு இரண்டு
tap washer வாங்குங்கோ. ஒரு இருவது இருபந்தைந்து டொலர்தான் ஆகும்

அப்பா -    உதுகளை என்னெண்டு கண்டுபிடிக்கிறது அப்பா?

சுந்தரி -    அங்கை பிராக்குப் பாத்துக் கொண்டு நிக்கிறவங்களைக் கேட்டால் அவங்கள் எடுத்துத் தருவாங்கள்.

ஞானா -    நூறு டொலர் செலவிடாமல் 25 டொலரோடை வேலையும் முடிஞ்சு போம் அப்பா
                           
       
சுந்தரி -    ஓமப்பா. . .போங்கோ போய் வாங்கியாருங்கோ.  .எங்களுக்கு அடுப்படியிலை ஒரு வேலை இருக்கு
               
                --- சிறு இசை ---

அப்பா -    முதல் முறை Hardware Store க்குப் போய், சுந்தரி சொன்ன சாமான்களை வாங்கிவரப் பட்ட பாடு போதும். ஏதோ அங்கை நிண்டவனுக்குப் பின்னாலையும் முன்னாலையும் திரிஞ்சு ஒருவிதமாய்
wrench  சும்  washer ம் வாங்கியந்தாச்சு. இனி என்ன செய்யிறது எண்டுதான் விளங்கேல்லை


 சுந்தரி
-    முன்னை பின்னை இதுகள் திருத்திற இடத்திலை நிண்டு கவனிச்சால் எல்லோ விளங்கும். உதுக்கு எங்கடை அப்பாவைக் கேட்டுத்தான் . . ..மனிசன், electric bell மாத்திறதிலை இருந்து switch மாத்திறது tap க்கு washer மாத்திறது எல்லாம் தானே செய்வர்.

அப்பா -    ஓலை வீட்டிலை இருந்து, கிணத்திலை தண்ணியள்ளிக் குளிச்ச உம்மடை அப்பருக்கு உதெல்லாம் எப்பிடித்   தெரியும் எண்டு கேக்கிறன்.

சுந்தரி
    - ஆகவும் விண்ணாணம் பேசாதையுங்கோ என்ரை அப்பா  கொழும்பிலை  முப்பது வருசம் சீவிச்சு உத்தியோகம் பாத்த ஆளாக்கும்.

ஞானா -    அமிழ்தம் கடைய தேவரும் அசுரரும் சண்டை பிடிச்சினமாம். இஞ்சை அமிழ்தத்தாலை நீங்கள் சண்டை பிடிக்கிறியளே.

அப்பா -    ஞானா உன்ரை கொம்மா தகப்பன் பைப் பூட்டினதைப் பாத்துக் கொண்டு நிண்டவவாம். இஞ்சை தேவையான சாமான்களை எல்லாம் வாங்கியந்தாச்சு. ஒருக்கால் பூட்டிக் காட்டச்  சொல்லு.

சுந்தரி
-    ஏன்ன. . .எனக்கு முடியாதெண்டு நினைச்சியளே? இஞ்சை கொண்டாங்கோ அந்த பைப் wrench முதல்லை பைப் wrench  ஆலை அந்த ஒழுகின வயி ஐ கழட்டவேண்டியது. பிறகு அதுக்குள்ளை கிடக்கிற தேஞ்ச
washer ஐ எடுத்தெறிஞ்சு போட்டு இந்தப் புது washer ஐ அதுக்குள்ளை போட்டிட்டு tap ஐ பூட்டவேண்டியதுதானே.

ஞானா -    அம்மா குடுங்கோ கை. . .இந்த ஆம்பிளையளுக்கு பெரிய எண்ணம். தாங்கள்தான் விண்ணர் எண்டு.

அப்பா -    (கெக்கட்டம் விட்டுச் சிரிச்சு) உதுக்குத்தான் சொல்லுறது பெண்புத்தி பின்புத்தி எண்டு. டக்கெண்டு பைப்பைக் கழட்டினால் தண்ணியெல்லே சீறி அடிக்கும். முதலிலை main tap ஐப் பூட்டவெல்லே வேணும். 

சுந்தரி    -    உது தெரியாதே எங்களுக்கு, நீ போய் அந்த main tap ஐப் பூ+ட்டிப்போட்டு      வா பிள்ளை.  நான் காட்டுறன் விளையாட்டு இவருக்கு.

ஞானா -    அம்மா main tap   எங்கை அம்மா கிடக்கு.

சுந்தரி -    அது வந்து- - -- வந்து
 

அப்பா -    புல்லு வெட்டியிருந்தால் main tap எங்கை கிடக்கும் எண்டு தெரியும். இனிமேல் நீங்களே புல்லையும் வெட்டுங்கோ. அந்த டொமினோவின்ரை மனிசியும் புல்லு வெட்டுறதைப் பாக்கேல்லையே.
                
ஞானா -    சும்மா கதை அளக்காமல் main tap    எங்கை கிடக்கெண்டு சொல்லுங்கோ அப்பா.


அப்பா -     முன்புறத்திலை drive way க்குப் பக்கத்திலை றோட்டுக் கரையோரமாய் நிலத்தோடை இருக்கிற வயி தான்  main tap.

சுந்தரி -    நீ போய் பூட்டிப்போட்டு வந்து சொல்லு ஞானா? மிச்சத்தை நான் பாக்கிறன்.

அப்பா -    பாப்பம். . பாப்பம் . . .கெட்டித்தனத்தை ஒருக்கால் பாப்பம். Australian மனிசி எண்டால் ஒரு கை பாத்திடும். உங்கடை கெட்டித்தனத்தையும் ஒருக்கால் பாப்பம்.

ஞானா -    main tap    ஐ இறுக்கிப் பூட்டிப்போட்டன் அம்மா.

சுந்தரி -    சரி வா. . .இந்தப் புது GJ wrench    ஆலை அந்த leak பண்ணிற tap ஐக் கழட்டுவம். இஞ்சை பார் இந்த tap லை nut மாதிரி இருக்கிற பாகத்திலை இந்த
wrench  ஐ இப்பிடி உறுட்டி உறுட்டித் திறந்து அந்த nut லை வைச்சு இப்பிடித் திருப்ப வேண்டியதுதான். ம். . .ம். .. என்னடியிது அசையுதில்லை.. . .ம். .ம். .. என்னப்பாயிது நகருதில்லை.

ஞானா -    உங்களுக்கு கைப்பெலன் இல்லையம்மா.

அப்பா -    வாய்ப் பெலனாலை உதைத் திறக்கேலாது மேனை.

சுந்தரி -    சும்மா விசர்க்கதையை விட்டிட்டு இதை இறுக்கிப் பிடிச்சுத் திறவுங்கோ அப்பா.

அப்பா -    சரி சரி இஞ்சை விடும். நான் திருப்பிக் கழட்டுறன். பிறகு என்ன செய்ய வேணும் எண்டு சொல்லும். ம். . . ம். . .கொஞ்சம் இறுக்கித்தான் கிடக்கு. . .ம். .........ம்........
 ஞானா -     அங்கை- - -அங்கை- - -திரும்புது அப்பா.

சுந்தரி -    சரியப்பா சரி. . .மெள்ள மெள்மா அந்த tap ஐ திருப்பிக் கழட்டி எடுங்கோ.

அப்பா -    வாறன். . . வாறன். . .நல்ல புரிதான்.

சுந்தரி -     ஆ. . .அந்தா. . .அதுதான் அந்த பழைய washer. இந்தாங்கோ இந்தப் புது
washer ன்ரை அந்தத் தண்டை வயி லை உள்ள அந்த ஒட்டையிலை விட்டு tap ஐ    பழையபடி பைப்பிலை வைச்சுப் பூட்டுங்கோ.

அப்பா -    சரி சரி washer ஐ வைச்சாச்சு இனி tap ஐப் பூட்டுறதுதான் வேலை. பிழையில்லை. . .அவ்வளவு கஸ்டமில்லை.

ஞானா -     இனிமேல் அப்பாவை அசைக்க முடியாது.

சுந்தரி -    மனமுண்டானால் இடமுண்டு. நீ போய் main tap ஐ திறந்துபோட்டு வா ஞானா.

அப்பா -    tap ஐ இறுக்கிப் பூட்டியாச்சு. . .ம் .. ..ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுதான்

ஞானா -     main tap ஐத் திறந்தாச்சு

சுந்தரி -    தண்ணியைத் திறந்து போட்டு பூ+ட்டிப் பாருங்கோவன்

அப்பா -    பாக்கிறன் பாக்கிறன்.  ..ம். .ம். . .சரியாத்தான் இருக்கு. பாத்திளே ஒரு சொட்டுத் தண்ணியும் விளேல்லை

ஞானா -    congratulation அப்பா. . .good job. ஒரு புது
    வேலையை இப்ப படிச்சிட்டியள்

அப்பா -    எனக்கு job training தந்தது போதும். போய் ஒரு கோப்பி போட்டுக் கொண்டு வாங்கோ......அமிழ்தம் saved!!!!

-இசை-
No comments: