skip to main |
skip to sidebar
18/07/2013 திரையுலகின் சகாப்தமான கவிஞர் வாலி தனது உடல்நல குறைவால் தனது 82 ஆவது வயதில் காலமானார். நுரையீரல் தொற்று
மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை
தேனாம்பேட்டையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
35
நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில
தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை
சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
1958-ம்
ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் ஆரம்பித்த கவிஞர் வாலி இதுவரை ஆயிரம்
படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய
விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எதுகை மோனையில் பாடல்கள் எழுதுவதில்
இவரைவிட சிறந்த கவிஞர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment