ஞாயிற்றுக்கிழமை நடந்த கலை ஒலி மாலை 2013.


சென்ற ஞாயிற்றுக்கிழமை 14.07.2013 அன்று அவுஸ்ரேலிய  தமிழ்  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடாத்திய கலை ஒலி  மாலை 2013. அரங்கம் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. 5 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவித்திருந்த நிகழ்வு 5,30 மணிக்கு ஆரம்பமானது. அதற்கான காரணம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம் பெற்றுக்கொண்டிருந்த விளையாட்டு காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசல் என்பது எல்லோரும் அறிந்தது. அதற்காக நிகழ்ச்சி அறிவிப்பாளர் சபையோரிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.


குத்து விளக்கு அவுஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதின் அனுசரணை யாளர்களால் ஏற்றிவைக்கப்பட்டது . அவுஸ்ரேலிய தேசிய கீதத்தை அபிசாயினி பத்மஸ்ரீயும்  தமிழ் வாழ்த்தினை கேசிகா அமிர்தலிங்கமும் மிக அழகாக பாடினார்கள். அதனைத் தொடர்ந்து அவுஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கீதத்திற்கு நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் மாணவிகள் நடனம் ஒன்றை வழங்கினார்கள் .தொடர்ந்து போரினால் இறந்த மக்களுக்காக ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல் நிகழ்வாக நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் மாணவிகள் நடனம் ஒன்றை வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த விவேக் சங்கரின் பிரயத்னா நாடக குழுவினரும் உள்ளூர் கலையர்களும் இணைந்து விவேக் சங்கரின் நெறியாள்கையில் இரண்டு நாடகங்களான "காசுவந்தால் கதவைச் சாத்து"  "மாத்தி யோசி "  என்பன இடம் பெற்றது அத்தோடு  கார்த்திகா கணேசரின் மாணவிகலின்  நடனம் உன்னை காணாத என்ற விஸ்வருபம் பட பாடலுக்கான நடனமாக அமைந்தது.


தொடர்ந்து கலைஞர்கள் கெள ரவிக்கப் பட்டர்கள் இதன்போது  50 பது வருடங்கள்  நடிப்புத்துறையில் பணியாற்றும் திரு காத்தாடி ராமமூர்த்தி அவர்களை திரு ஈழலிங்கம் அவர்கள் கேடயம் வழங்கியும் திரு குணசிங்கம் அவர்கள் பொன்னாடை போர்த்தியும்  கௌரவித்தார்கள். அத்தோடு அவுஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பட்டமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது .நன்றியுரையை சவுந்தரி கணேசன் கூறினார் நிகழ்ச்சியை செ .பாஸ்கரன் தொகுத்து வழங்கியிருந்தார் .
அன்றைய இரவு இனிய இரவாக நிறைவுற்றது.


6 comments:

Anonymous said...

பல மேடை நாடகங்கள் பார்த்து பழகிய எமக்கு, இது ஒரு புது அனுபவம் தான்.
அழகான மேடை அமைப்பு, தமிழ் நாட்டில் இருந்து சிறந்த நாடக கலைஞர்கள் , காட்சி அமைப்பு, ஒழி ஒலி அமைப்பு போன்ற பல புதிய விடயங்களை நான் மிகவும் ரசித்தேன்.பார்வையாளர்களும்
நிச்சயம் ரசித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த புதிய முயற்சிக்கு ATBC க்கு நன்றி.

ATBC மட்டும் அல்லாமல் இங்கே பல அமைப்புகள் செய்யும் சில காரியங்கள் எனக்கு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது , அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்வதே இந்த மடலின் நோக்கம்.

எங்கே தொடங்குவது என்றே எனக்கு புரியவில்லை.

ஒரு நிகழ்ச்சி நடாத்தப்படும் நோக்கம்:

இன்று sydney இல் நடை பெரும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் , ஏதாவது ஒரு
நல்ல நோக்கதிற்ற்கு (இலங்கையில் உள்ள அனாதை இல்லங்கள், பழைய பாட சாலைகள் , ATBC சமூக வானொலிக்கு நிதி ) பணம் சேர்க்கும் முயற்சியில் தான் நடாத்தப் படுகின்றது. பல சிரமங்களின் மத்தியில் ஒவ்வரு அமைப்பின் தொண்டர்களும் ticket வித்து , அவர்களது சொந்த நேரங்களை ஒதுக்கி உதவி புரிவார்கள்.

ஆனால் பல நேரங்களில் இந்த தொண்டர்களின் சேவை வீணடிக்கப் படுகின்றதோ என்ற ஆதங்கம் எனக்கு தோன்றுகிறது. கஷ்டப்பட்டு நிதி சேர்த்து , கடைசியில் பெரும் செலவுகளால் "profit " என்ற சொல்லுக்கே இடம் இருக்காது. இங்கே ticket வித்துகொடுத்த தொண்டனின் நேரம் வீணடிக்கப் படுகின்றது. ஏன் எனில் , தொண்டன் நல்ல நோக்கத்திற்கு பணம் சேர்கிரார்களே என்ற ஒரே நோக்கதிற்காக தனது நேரத்தை செலவழிக்கிறான்.

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தமிழர்கள் தான். இதில் எனக்கு மாற்று கருத்தேதும் கிடையாது
ஆனால் இந்திய சினிமா , இந்திய நாடகங்கள் , இந்திய பாடகர்கள் மேல் எமக்கு ஏன் இவ்வளவு நாட்டம் என்பது எனக்கு புரியவில்லை

இந்திய கலைஞர்கள் -
இவர்களுக்கு India விலே பல மேடைகள் காத்திருக்கும் போது பெரும் பண செலவில் இவர்களை இங்கு கொண்டுவருவதன் நோக்கம் என்ன? அவர்களுக்கு செலவு செய்யும் பணம் , அவர்களுக்கு தங்கும் வசதி ,ஊர் சுற்றிகாட்டுவது என்று எவ்வளவு நேரம் பணம் விரயம். இவ்வளவு செய்தும் அவர்கள் மக்களை கவர்கிரார்களா?

அவர்களை விட திறமை வாய்ந்தவர்கள் , மக்களை சிரிக்க ,சந்தோஷபடுத்த கூடியவர்கள் இங்கே
Sydney இல் உள்ளார்களே! எனக்கு தெரிய Dr Jeyamohan, Selliah Baskaran இன்னும் பலர் நாடகத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இங்கே இருக்கிறார்கள். இவர்களால் நல்ல படைப்புக்களை கொடுக்க முடியும் என்பது நாம் எல்லோரும் அறிவோம். உள்ளூர் கலைஞர்கல் ஒரு நிகழ்ச்சி நடத்தினால்
நாம் அவர்களுக்கு ஒரு $ கூட கொடுபதில்லை ஆனால் இந்திய கலைஞர்கலுக்கு ஆயிரக் கணக்கில் செலவு செய்வோம்.

ஜாம்பவான்கள் KJJ,SPB,Ilayarajah , போன்றோர் வருகை தருவது வரவேற்கத் தக்கது ...ஏன் என்றால் இவர்கள் சாதனையாளர்கள் . ஆனால் புது பாடகர்கள் , புது இசை அமைப்பாளர்கள் போன்றோரை அதிக பணம் செலுத்தி அழைப்பது ஏன்? எமது சமுதாயத்தில் சாதிக்க துடிக்கும் அல்லது முன்னேற நினைக்கும் கலைஞர்களை ஊக்கபடுத்த மறப்பது ஏன் ?

நானும் ஒரு இந்திய சினிமா கூட விடாமல் பார்பவர்களில் ஒருவன் தான், ஏன் என்றால் எமக்கு வேறு சினிமா கிடையாது காரணம் எம்மவர்கள் எடுக்கும சினிமாவை நாம் ஊக்கப்படுத்துவதும் இல்லை உதவி புரிவதும் இல்லை. அவற்றை இந்திய சினிமாவுடன் ஒப்பிட்டு பார்த்து விட்டு, இதல்லாம் ஒரு படமா என்று சொல்லி வளரவிடுவதில்லை.

இந்தியாவில் பாடும் குழந்தைகளுக்கு பல மேடைகள் பல தொலைகாட்சிகள் பக்க பலமாக இருகின்றன. ஆனால் சாதிக்க துடிக்கும் எம்மவர்கள் எம்மை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் .

நாம் எப்போது ஒரு SPB யையோ ,சித்ராவயோ அல்லது ஒரு Rahmanஐயோ உருவாக்குவது.?.. பல திறமை வாய்ந்த பாடகர்கள் நம் மத்தியில் உள்ளார்களே......
சமீபத்தில் Elan Elango (sydney), முதன் முதலாக ஒரு ஆஸ்திரேலியா தமிழனாக ஒரு திரைப்படம் தயாரித்தார். இது எத்தணை பேருக்கு தெரியும் ?...Puthiyavan (london) இல் இருந்து ஒரு தமிழ் இளைஞன் ஒரு தமிழ் படம் எடுத்தார்... இவர்களுக்கு நாம் கொடுக்கும் ஊக்கம் என்ன ?
நிகழ்ச்சி ஒருங்கினைபாலர்களே சிந்தியுங்கள்......எமது அடையாளங்களை நாமே குழிதோண்டி புதைப்பதா ?..... மக்கள் விழிக்கு முன் நீங்கள் விழிப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

இது யாரையும் மறைந்திருந்து தாக்கும் முயற்சி அல்ல. எனது கவலையை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மட்டுமே, என்றபடியால் எனது சொந்த பெயரிலேயே இந்த கருத்துக்களை பதிவு செய்கிறேன்.
கறுத்துகல் தவறாயின் மன்னியுங்கள்.

நன்றி

Ramesh Nadarajah
Sydney

Anonymous said...

well said ramesh

PAARTHIPAN said...

ரமேஷ் சொன்னதை நானும் ஆதரிக்கிறேன். ஆனால் அவர் சொன்ன உதாரணம் தமிழ் சினிமா விடயத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் உலகம் எங்கோ போய்விட்ட பிறகு ஒரு இலங்கையர் எடுத்த தமிழ்படம் ஒரு பெண்ணின் கால்களுக்கிடையில் காமராவை காட்டி யங்கியை கழட்டும் ஒரு காட்சியையும் காட்டி சித்திரவதை என்று விளக்கம் கொடுத்த கேவலமான சிந்தனை ஒரு இலங்கை தமிழ் இயக்குனருக்கு வந்திருப்பது வேதனைக்குரியது . தமிழர்களுக்கு இவ்வளவுதான் சிந்தனை உள்ளது என்று மற்றவர்கள் நினைக்க வைத்த கேவலம் அவருக்குத்தான் உரியது. இவை போன்றவற்றை பார்த்து ஆதரவு கொடுக்கவேண்டுமா ரமேஷ்

Anonymous said...

விமர்சனம் எழுதுபவர்கள் தமது கருத்துக்கள் முரன்பாடு இல்லாமல் உள்ளதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் விமர்சனம் விசர்த்;தனம் ஆகிவிடும். ஓரிடத்தல்; போற்றுவதும் பின்னர் எழுதியதை மறந்து தூற்றுவதும் அவர்களின் அவலமன நிலையை காட்டுகின்றது.

இந்தியாவிலிருந்து வந்திருந்த நாடகக் கலைஞர்களை “ரசித்தேன்”, “ATBCயின் முயற்சிக்கு நன்றி” பின்னர் இந்திய கலைஞர்களின் செலவு, தங்குவசதி…..மக்களை கவர்கின்றார்களா எனக்கேட்கின்றார்.
எழுதியவர் தானே “ரசித்தேன்” என்று எழுதியபின் அடுத்த வரிகளில் மக்களை கவர்கின்றார்களா எனக்கேட்கின்றார் ? இதற்கு என்ன பதில்?

பச்சத்தண்ணியில் பலகாரம் சுட்டு பணம் சேர்ப்;பவர்களும், தரமற்ற நிகழ்ச்சிகளை வழங்கி பணம் சேர்ப்;பவர்களும், தரமான நிகழ்ச்சிகளை வழங்கி பணம் சேர்ப்;பவர்களும் உண்டு. இதில் நீங்கள் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பதில் தான் profitம் lossம் உண்டு. நிகழ்ச்சியின் நோக்கம் அறிந்து, அல்லது தரம் அறிந்து, அல்லது சுயநலத்திற்காக, போழுது போக்கிற்காகவும் நுழைவுச்ச{ட்டுக்களை வாங்குபவர்கள் உள்ளனர். இவ்வாறன பல காரணங்களால் profit/loss நிர்ணயக்கப்படுகின்றது. “தொண்டர்” தன்னலம் அற்ற பிரதிபலன் எதிர்பாரதவன்தான் தொண்டர். profitஐ எதிர் பார்த்து ticket விற்பதோ, வேலை செய்வதோ தொண்டன் அல்ல! அவ்வாறுதான் இல்லையெனில் profit வராவிட்டால் தொண்டன் செய்த பணி பற்றாது என்பதுதான் முடிவாகுமோ?

இங்கே நாடகக் கலைஞர்கள் இருக்கும் போது ஏன் இந்திய கலைஞர்கள் என்கிறார்? ஆனால் KJ Yesudas, SPB, Illayarajah போன்றோர் வருகை தருவது வரவேற்கத் தக்கது என்கிறார். ஏன் இங்கே பாடகர்கள் இல்லையா ?
இந்திய நாடகக் கலைஞர்களுக்கு அழைப்பதனால் ஏற்படும் பணம் விரயத்தை பற்றி பேசும் இவர் ஜாம்பவங்கள் KJ Yesudas, SPB, Illayarajah போன்றோருக்கு கொடுக்கும் பல மடங்கு பணவிரயத்தை புதைத்து விடுகின்றார். ஏன் ! ஏனனில் இவருக்கு. . . . .

உள்@ர் கலைஞர்களில்; திறமை உள்ளவர்கள் உள்ளனர். ஆனால் உள்@ர் கலைஞர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் தரம், அவர்களின் திறமை என்பவற்றை வெறும் பேச்சிலிருந்தோ, கிடைத்த வாழ்த்துக்களின் மூலமாகவோ கணிப்பிடுவது தவரானது. ஏனனில் உற்றார்,உறவினர், நண்பர்கள், கலைஞர்களின் முகத்திற்காவும், வேறுசிலர் நிகழ்ச்சியின் நோக்கத்திற்காவும் அதனை திறம்பட செய்தார்கள் என வாழ்த்துவார்கள்.
நடந்த சம்பவங்களை, தமிழ் மக்களை இழிவு படுத்;தும் நிகழ்வுகளை மீளாக்கம் செய்து “நாடகம்” என நடிப்பவர்களுக்கும் அதனை “நாடகம்” என ஏற்று இரசிப்பவர்களும் இருக்கின்றார்கள்.


பலர் ATBC நிகழ்ச்சியை இடைவேளையின் போதும் நிகழ்ச்சிமுடிந்த பின்னரும் போற்றியதை என்னால் அவதானிக்க முடிந்தது. இது “நாடகம்” என்று சொல்லி நாலுபேர் நடிப்பதற்கு அப்பாற்பட்டது.

ஏல்லாவற்றிற்கும் மேலாக ATBC கலை ஒலி மாலை 2013 நிகழ்ச்சி நாடகத்தில் பாத்திரம் ஏந்திய இவருக்கு(Ramesh) இவ்வாறன உணர்ச்சிகள் இருந்திருந்தால் பாத்திரம் எடுக்காது ஒரு பார்வையாளனாக இருந்து எழுதுவது மேலாய் இருந்திருக்கும். பாத்திரம் ஏந்தியபின் விமர்சிப்பது தன்னேயே தானே விமர்சிப்பதற்கு சமம்.
இது எனது கருத்து - தமிழ்முரசுஅவுஸ்திரேயாவுக்கு நன்றி.

Anonymous said...

பார்த்திபன் - இவ்வளவு முன்னேறியிருக்கும் இந்திய சினிமாவே இன்னும் எவ்வளவு வக்கிரமான படைப்புக்களை கொடுக்கின்றன? நான் இவ்வாறான காட்சி அமைப்புக்களை ஆதரியுங்கள் என்று சொல்லவில்லை. அவற்றை அந்த இயக்குனருக்கு தெரியப் படுத்துங்கள்/ விமர்சியுங்கள். அவர்கள் வருங்காலங்களில் நல்ல படைப்புக்களை தர வாய்ப்புக் கொடுங்கள் என்று மட்டும் தான் கூருகின்றேன்.

மற்ற கருத்து கூறிய ( பெயர் குறிப்பிடாத நண்பருக்கு)
விமர்சனங்கள் கூறுபவர்களை விமர்சிப்பது, துரோகி பட்டம் கட்டுவது எமக்கு கை வந்த கலை. ("Shooting the messenger").

வாசகர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன், நான் ATBC நிகழ்ச்சியின் பின் இதை எழுதியதால், நான் ATBC இக்கு எதிரானவன், அல்லது ATBC இக்கு தான் இந்த கருத்து என்று எடுப்பவர்களை நான் என்ன செய்ய?

நண்பர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு, எனக்கு ATBC யுடன் என்ன கோபம் என்று கேட்டார் ? ஐயோ....எனது கருத்துக்களை அப்படி புரிந்து கொள்ளாதீர்கள். இது பொதுவான ஒரு கருத்து மட்டுமே.ATBC தொண்டர்களில் நானும் ஒருவன், ATBC இல் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து அதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த கருத்து ATBC நண்பர்களை / தொண்டர்களை பாதித்து இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்....
விசர்த்தனம், அவலமன நிலை,பச்சை தண்ணியில் பலகாரம் என்று கூறுவதிலேயே, எழுதுபவரின் கருத்தை விட கோபம் தான் தெரிகிறது. கோபத்தில் விமர்சனம் பண்ணுபவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை, இருப்பினும் சில விடயங்களை சற்று தெளிவு படுத்தவே இந்த மடல்

கோபத்தில் எனது கருத்துக்களை தவறு தவறாக புரிந்து எழுதுகிறார்.

மேடை அலங்காரம்,நாடக வடிவமைப்பை ரசித்தேன் என்று தான் கூறினேன். நாடகத்தை ரசித்தேன் என்று கூறவில்லையே ? நானும் நாடகத்தில் பங்கு பற்றினேன்,ஆர்வத்தால் அல்ல... நண்பர்களின் அன்பிற்காக.
மேலும் நான் நாடகத்தை ரசித்திருந்தாலும் தப்பில்லையே...நான் இந்த நிகழ்ச்சியை குறை கூற வேண்டும் என்பதற்காக எழுதவில்லையே, எமது சமுதாயத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் மட்டும் தான் எழுதினேன்.

There are differences between criticism and constructive criticism…..

இந்த நிகழ்ச்சியை குறை கூற வேண்டுமானால் , இன்னும் பல குறைகளை நான் கூறி இருக்கலாமே ?

உள்ளூர் கலைஞர்கல் நடாத்தும் நிகழ்சிகளுக்கு வரும் ரசிகர்கள் முகத்துக்காக நல்லா இருக்கு என்பார்களாம், இவர் குறிப்பிடும் நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் சொன்னால் அதை ஏற்றுகொல்ள்ளலாமாம் !!!! எல்லா நிகழ்சிகளுக்கும் ஒரே சமூகத்தினர் தான் செல்லுகிறார்கள்

தொண்டன் பிரதி பலன் எதிர்பார்க்கிறான்? நான் அப்படி கூறவில்லையே?
நல்ல காரியத்துக்கு பணம் சேர்க்க தொண்டன் பாடு படுகிறான், ஆனால் அது நடக்கா விட்டால், அவன் நேரம் வீணடிக்கப் படுகிறது என்று தானே கூறினேன் .... ஆத்திரத்தில் படித்துப் பார்க்காமல், கொஞ்சம் புரிந்து படிப்பது நல்லது.

KJJ SPB போன்ற சாதனையாளர்களை இங்கு இருக்கும் பாடகர்களுடன் ஒப்பிடுவதா?.... என்ன கொடுமை இது ? .....இலங்கையில் கருத்து சுதந்திரம் இல்லை என்று பல நாடுகளுக்கு விரட்டப் பட்டோம்....இங்குமா?......

(அவரின் கருத்து ) :“இந்திய நாடகக் கலைஞர்களுக்கு அழைப்பதனால் ஏற்படும் பணம் விரயத்தை பற்றி பேசும் இவர் ஜாம்பவங்கள் KJ Yesudas, SPB, Illayarajah போன்றோருக்கு கொடுக்கும் பல மடங்கு பணவிரயத்தை புதைத்து விடுகின்றார். ஏன் ! ஏனனில் இவருக்கு. . . . .”

ஈழத்து மக்களுக்கு உதவி புரிய நிகழ்சிகள் , சமூக வானொலிக்கு பணம் சேர்க்கும் நிகழ்சிகள், சொந்த லாபத்திற்காக நிகழ்சிகள் .....இதன் வித்தியாசங்களை முதலில் அறிந்து கொள்ளுங்கள்
ஜாம்பவான்களை கொண்டு வருபவர்கள் - வடக்கு கிழக்கு நிதி என்று கூறி கொண்டுவந்து பணம் சேர்க்க முடியாவிட்டால், அதுவும் தப்பு தான்......

என்னையே நான் விமர்சனம் செய்கிரேணாம்... அதற்கும் ஒரு துணிவு வேண்டும், அது என்னிடம் உள்ளது...
மீண்டும் நன்றி...

Ramesh Nadarajah
Sydney

Rankan said...

Sabash Ramesh. Hats off.