“ஆஸ்திரேலியா – பல கதைகள்” - சிறுகதைப் போட்டி


வணக்கம்,

தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும்  “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டி ஒன்றை  தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்திக்கொண்டிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கண்டத்துக்குட்பட்ட ஒரு போட்டியாகும்.

இப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும்.
இளையோர் பிரிவு – 17 வயதிற்குட்பட்டோர்
பெரியோர் பிரிவு – 17 வயதிற்கு மேற்பட்டோர்

போட்டியின் விதிமுறைகள்:
1.  போட்டியில் கலந்துகொள்வோர் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
2.  கதைக்களம் மற்றும் சூழல் ஆஸ்திரேலிய கண்டத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
3.  கதைக்களன்  குடும்பம், காதல், அமானுஷ்யம், அனுபவம், மர்மம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உண்மைக் கதையாகவும் இருக்கலாம், புனைக்கதையாகவும் இருக்கலாம்.
4.  கதையின் அளவு  500  வார்த்தைகளுக்குக்  குறையாமலும்  1500   வார்த்தைகளுக்கு  மிகாமலும்  இருக்க வேண்டும்.
5.  ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பலாம். ஆனால் வெவ்வேறு கதைக்களன்களில் இருக்கவேண்டும்.
6.  போட்டிக்கு வரும் சிறுகதை எந்தவொரு வடிவிலும் வேறெங்கிலும் வெளியாகியிருக்கக் கூடாது.




7.  வெற்றிபெறும் கதைகளையும் போட்டியில் பங்கெடுக்கும் கதைகளையும்  போட்டி  நடத்தும் அமைப்பு பயன்படுத்திக் கொள்ளலாம்
8.  தேர்வுக்குழுவினரின் முடிவே இறுதியானது.
9.  போட்டியில் தெரிவு செய்யப்படாத கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பியனுப்பப்பட மாட்டாது.
10. கதைகளின் காப்புரிமை “தாய்த்தமிழ்ப் பள்ளி”க்குச் சொந்தமானது.

தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர்களாக இளம் பத்திரிகையாளர்கள் திரு.அதிஷா, திரு.யுவகிருஷ்ணா ஆகியோரும், நடுவர்களாக கதாசிரியர் திரு.பாஸ்கர் சக்தி அவர்களும், தங்கமீன் இணைய இதழ் ஆசிரியர் திரு.பாலு மணிமாறன் அவர்களும் இருப்பார்கள். 
ஒவ்வொரு  பிரிவிலும்  மூன்று  பரிசுகள்  வழங்கப்படும். முத்திரைக்கதைகள், ஆஸ்திரேலியா - பலகதைகள் என்ற பெயரில் தொகுத்து புத்தகமாக வெளியிடப்படும். போட்டியில் பரிசு பெரும் கதைகள் SBS தமிழ் வானொலியிலும் வாசிக்கப்படும்.

தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்:
அதிஷா www.athishaonline.com -  "புதிய தலைமுறை" பத்திரிகைக்குழும பத்திரிகையாளர், திரைப்பட விமர்சகர், குறும்பட கதாசிரியர், சிறுகதை மற்றும் சிறார்களுக்கான பல சிறுகதைகளை அவருடைய இணையப்பக்கத்தில் எழுதியுள்ளார்.
உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து பல்வேறு பிரிவுகளில் வழங்கும் சுஜாதா விருதினை 2012ஆம் ஆண்டு இவர் இணையப் பிரிவில் பெற்றுள்ளார்.

யுவகிருஷ்ணா www.luckylookonline.com - இவர் விளம்பரத்துறை குறித்த சுண்டி இழுக்கும் விளம்பர உலகம், நடிகராய் இருந்து அரசியல்வாதியாய் உருபெற்ற  "விஜயகாந்த்", சைபர் க்ரைம், அழிக்கப்பிறந்தவன் போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார்.  குமுதம் இதழ் கடந்த 2008ஆம் ஆண்டு தொகுத்த முதல் பத்து சிறந்த வலைப்பதிவுகளில் இவரது வலைப்பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புதிய தலைமுறை எனும் வார இதழில் நிருபராகப் பணியாற்றி வருகிறார். உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து பல்வேறு பிரிவுகளில் வழங்கும் சுஜாதா விருதினை 2011ஆம் ஆண்டு இவர் இணையப் பிரிவில் பெற்றுள்ளார்.

நடுவர்கள்
திரு. பாலுமணிமாறன் - www.thangameen.com
சிங்கப்பூர் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் தங்கமீன் பதிப்பக உரிமையாளர். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் தொகுப்பு என பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தங்கமீன் இணைய இதழின் கர்த்தா இவர். சிங்கப்பூரில் சாமானிய மக்களிடமும் தமிழ் எழுதும், வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர். இளம் தலைமுறையினரை ஊக்கப்பட்டுத்தும் பொருட்டு பல்வேறு விதமான இலக்கியப் போட்டிகளையும் தங்கமீன் இணைய இதழின் மூலம் நடத்திவருகிறார்.

திரு.பாஸ்கர் சக்தி
எழுத்தாளராகத் தொடங்கிய இவரது இலக்கியப் பங்களிப்பு பின்னாளில் ஆனந்தவிகடனின் துணையாசிரியாக உயர்த்தியது. பின்னாளில் பல்வேறு திரைப்படங்களில் வசனகர்த்தாகவாகவும் முத்திரைப் பதித்தவர். பல திரைப்படங்களில் பங்காற்றியிருந்தாலும், வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை போன்ற திரைப்படங்கள் முத்திரைப்படங்களாகும். மிகப் பிரசித்தி பெற்ற மெட்டி ஒலி தொலைக்காட்சி நாடக ஆசிரியர், மிக வெற்றிகரமான திரையுலக, தொலைக்காட்சி நாடக ஆசிரியர்களில் ஒருவர்.

கதைகள் அனுப்புவதற்கான கடைசி நாள்  July 30/07/2013.

மேல்விபரங்களுக்கு கீழேயுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்:
சத்தியா: 0412452490
பார்த்தீபன்: 0432276977
முகுந்தராஜ்: 0423730122

கதைகளை தட்டச்சு செய்து thaaitamilschool@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
(தமிழில் தட்டச்சு செய்வதில் பிரச்சனை இருந்தால் தாளில் எழுதியவற்றை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பவும்.)

அன்புடன்,
முகுந்தராஜ்
தாய்த்தமிழ்ப் பள்ளி சார்பாக
http://www.thaaitamilschool.com/