அருள்மிகு குன்றத்துக் குமரன் ஆலயம் மகோற்சவத் திருவிழா நிறைவு பெற்றது.

.

                                                          நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேர்ன்


மெல்பேர்ன் ரொக்பாங் குன்றத்துக் குமரன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் கடந்த வருடம் நடைபெற்றது. இந்த வருடம் முதலாவது ஆண்டு நிறைவாக மகோற்சவத் திருவிழா நடந்தேறியது. மகோற்சவத்திருவிழா கடந்த மாதம் 16.02.2013 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. விஷேச தினங்களாக திருவிழாக்களாக சப்பறத்திருவிழா இரதோற்சவம் தீர்த்தோற்சவம் பூற்காவளம் திருக்கல்யாணம் என்பனவாகும்.
இந்த ஆலயத்தின் வளர்ச்சி அடியார்களின் அளவிடற்கரிய ஆதரவுடன் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருத்தலத்தின் சிறப்புக்கள் பலவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆலயத்திற்குரிய வளவு நுழைவாயிலில் வழிப்பிள்ளையார் ஆலயம் இருக்கின்றது. அதனுடைய விஷேசம் என்னவென்றால் அமர்ந்திருப்பவர் இரண்டு கைகளை மட்டுமே கொண்டிருக்கும் கற்பகவிநாயகர். இந்தியாவிலே இருந்து விஷேசமாக வரவழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தினுள் வீற்றிருக்கும் நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் தங்களது தேவிமாருடன் அமர்ந்திருக்கின்றனர். சிவபெருமானுடைய இடபவாகனம் எருது பசு மாடு ஆறுமுகப்பெருமானின் மயில் வாகனமான மயில் ஆகியன வளர்க்கப்படுகின்றன. ஆலயத்தின் அருகில் 350 தொடக்கம் 400 பேர் அமர்ந்திருக்கக்கூடிய கலாச்சார மண்டபம் கட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எமது கலாச்சார நிகழ்வுகள் பல நடைபெறவிருக்கின்றன. அருகில் கொரரொயிட் என்ற சிற்றாறு (மழசழசழவை உசநநம) ஓடுகின்றது. காலப்போக்கில் தீர்த்தோற்சவம் அங்கு நடைபெறக்கூடிய வசதிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர்.


உலக மக்களைக் காக்கும் காத்தற்கடவுளான திருமாலின் மருகன் குமரன் குன்றுகள் தோறும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றான். குன்றத்துக் குமரனின்; முதலாவது மகோற்சவத் திருவிழா நந்தன வருடம் உத்தராயனகாலம் மாசி மாதம் நாலாம் நாள் சனிக்கிழமை 16.02.2013 அன்று ஆரம்பமாகியது. பத்து நாட்கள் பகல் இரவுத் திருவிழாக்கள் நடை பெற்றது. முக்கண் முதல்வனின் அருளில் தோன்றி நான்முகன் பிரம்மதேவனிடம் ஓம் என்ற பிரணவத்தின் தத்துவப்பொருளை வினவிய வேலவனின் திருவிழாக்கள் யாவும் சிறப்பாகவே நடந்தேறின.
சப்பறத்திருவிழாவில் புதிதாகக் கட்டப்பட்ட சப்பறத்தில் எமது குலப்பெருமையைக் காத்து குறை தீர்க்கப் பிறந்த குமரப்பெருமான் உலாவந்த காட்சி அழகாக இருந்தது. மறுநாள் 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை ஜந்தொழில்களில் ஒன்றான அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்த்திருவிழா நடைபெற்றது. காலை மூலஸ்த்தான சுற்றுப்பிரகார விக்கிகங்களுக்கு அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து கொடித்தம்ப அபிஷேகம் பூசை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை நடைபெற்று எம்பெருமான் சிவனுடைய சத்யோஜாதம் தற்புருஷம் வாமதேவம் ஈசானம் அகோரம் திருவதனம் ஆகிய ஆறுமுகங்களில் இருந்து உருவான ஆறுமுகப்பெருமான் வள்ளிநாயகி தெய்வநாயகி சமேதரராய் உள்வீதி வலம் வந்து இரதத்தில் ஆரோகணித்தார். இரதத்தின் வடங்களை ஆண்கள் ளெண்கள் பக்திமயத்துடன் இழுத்திருந்தனர். இரதம் ஆலயத்தின் அட்டதிக்குகளையும் நான்கு மூலைகளையும் சுற்றி வந்தது. கட்டுத்தேரான இரதம் வர்ணத்துணிகள் வாழை கரும்பு மரங்கள் கட்டப்பட்டு தோரணங்கள் மாலைகள் தொங்கவிடப்பட்டு அழகாகச் சோடிக்கப்பட்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான பக்தகோடிகள் புடைசூழ ஆதவனின் ஆதரவுடன் நாதஸ்வர தவில் வித்துவான்களின் கச்சேரியுடன் வெளிவீதியில் வலம் வந்த அருள்மிகு அற்புதக்காட்சியைப் பார்த்த போது மிகவும் சந்தோஷமாகவிருந்ததுசிறுவர்கள்கள் உட்பட பலர் காவடிகள் எடுத்து தவில் நாதஸ்வர பால்களுக்கேற்ப ஆடியபடி தமது நேர்த்திக்கடன்களைச் செய்திருந்தனர். அதே போல் பெண்கள் பலர் கற்பூரச் சட்டிகளைக் கைகளில் காவி வந்தனர். தேரின் பின்னால் முருகன் அடியார்கள் குமரன் நாமாவளிப் பாடல்களைப் பண்ணோடு இசைத்த வண்ணம் இரதத்திதை; தொடர்ந்தார்கள். சுற்று வீதியில் தேர் நிறுத்தப்பட்டு அடியார்கள் பலர் அருச்சனை செய்வித்தார்கள். உபசாரப் பந்தல்கள் துணிகள் சோடனைப் பொருடகள் கடைகள் சர்க்கரை மோர்த் தண்ணீர்ப் பந்தல்கள் போடப்பட்டிருந்துது. இரதம் மீண்டும் இருப்பிடத்தை அடைந்ததும் அருச்சனைகளைத் தொடர்ந்து சான்றோருக்கு சான்றானாகத் திகழும் சண்முகப்பெருமானுக்கு பச்சை சாத்தி மீண்டும் வசந்தமண்டபத்தை அடைந்து பிராயச்சித்த அபிஷேம் தீபாராதனைகள் வேதபாராயணங்கள் நடைபெற்றது. குமரனின் அடியார்களுக்கு பகல் அன்னதானம் வழங்கப்பட்டது.இங்கு வரும் பெரும்பாலான அடியார்கள் எமது சமயää கலாச்சார வழக்கப்படி ஆடைகளை அணிந்து வருவதைப் பார்க்கக்கூடியதாவிருந்தது. முக்கியமாக ஆண்கள் உற்சவமூர்த்திகளைத் தூக்கி வலம் வருபவர்கள் அனைவரும் வேட்டிää சால்வையுடன் மட்டுமே காணப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் மேலாடை அணிவதில்லையென்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இயன்றவரை சமயää கலாச்சாரப்படி திருவிழாக்களை நடாத்தும் போது எம்மையெல்லாம் எமது ஊர்ர் திருவிழாக்களுக்கு கொண்டு செல்கின்றது எனலாம்.


25.02.2013 திங்கட்கிழமை புலம் பெயர்நாடான அவுஸ்திரேலிய அடியார்கள் அவலம் தீர்க்கும் ஆறுமுகக்கடவுள் குன்றத்துக் குமரனுக்கு தீர்த்தோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை 26.02.2013 அன்று அடியார்களின் குறைகளைத் தீர்க்கப்பிறந்த குகனவன் குமரப்பெருமானுக்கு பூங்காவனம் திருக்கல்யாணம் நடைபெற்றது. பிரபல சிவாச்சாரியார்கள் நிகழ்ச்சிகளை நடாத்தி வைத்தனர்.
தேர்த்திருவிழாவிலன்று சிறுவர்கள் வயோதிபர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருக்கும் முருகப்பெருமானின் அடியார்கள் நலம் வேண்டி அவர்களுக்காக 24 மணி நேர வானொலிகளான இன்பத் தமிழ் வானொலியூடாகவும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாகவும் நேர்முகவர்ணனை மூலம் நிகழ்வுகளை வர்ணணையாளர்கள் எடுத்துச் சென்றது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். சகல முருகப் பெருமானின் பூசைகளில் அடியார்கள் அனைவரும் கலந்து கந்தனின் கிருபையைப் பெற்று வாழ்வோமாக.
நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேர்ன்

No comments: