என் அக்கா - சௌந்தரி கணேசன்

.


சிறு குழந்தையின் விரல்களைவிட
என் அக்கா மென்மையானவள்
தேய்ந்து வளரும் நிலவைவிட
என் அக்கா குளிர்மையானவள்
அதிக நேசம் அளவற்ற பாசம்
ஆனாலும் எதிரெதிர்த் துருவம்
நான் வெயிலென்றால் அவள் மழை
நான் முள்ளென்றால் அவள் ரோஐh
நான் ஆற்றலென்றால் அவள் அடக்கம்
நெருப்பிலும் நடக்கும் கால்களெனக்கு
நிழல்தேடி நீளும் சிறகுகள் அவளுக்கு
தானாகக் கிடைத்த வரமும் அவளே
தாயாகத் தலைகோதும் உறவும் அவளே
நாளை என் உலகம் குகையாகலாம்
நாளை என் உலகம் பொந்தாகலாம்
அப்போதும் எனைத்தேடும் உறவும் அவளே
மென்னிதயம் கொண்டவளை
கண்ணில் வைத்து நேசிக்க
சொந்த தேசம் வழிவிடவில்லை
வாழும் தேசம் ஆதரிக்வில்லை – ஆனாலும்
அவளன்புக்கும் எனதுயிருக்கும்
இடைப்பட்ட தூரம் அதிகமேயில்லை

No comments: