ஆழ்வார் திவ்விய பிரபந்தம் - பகுதி 4 - மதி

.

பாணர்கள் வாழ்ந்த ஊர் உறையூர். பாணர்கள் சிறந்த பாடகர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக சாதிப் பாகுபாட்டில் குறைந்தவர்கள். ஸ்ரீரங்கத்தில் கோவிலுக்கு அண்மையில் வாழ்ந்தவர் திருப்பாணாழ்வார். கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் பெருமாளையே, கோபுரத்துக்கு அப்பால் காவேரிக்கரையில் மறுபக்கமாக நின்று தன்னையே மறந்து பாடித்துதிப்பார். கோவிலிலுள்ள பெருமாளின் உருவத்தையே பார்க்க மறுக்கப்பட்டவர். ஒரு நாள் பெருமாளை நினைந்து தன்னையே மறந்து காவேரி யாற்றங்கரையில் படுத்திருந்தார். கோவிலில் பூசை செய்பவர் பெருமாளின் அபிடேகத்து காவேரிக்கு நீரெடுக்க வந்தார். ஆனால் இந்தப் பாணரோ வழியில் கிடந்தார். கூப்பிட்டுப் பார்த்தும் அசையவில்லை. தீண்டத்தக்காதவர்களை விலக்குவது எப்படி? ஒரு கல்லை யெடுத்து எறிந்தார். பாணரின் நெற்றியில் பட்டு இரத்தம் வழியத்தொடங்கியது. பாணர் சுயநினைவுக்கு வந்தார். அபிடேகத்துக்கு நீரெடுப்பதற்கு தான் குறுக்கே கிடந்தமையால் பெரிதும் வருந்திய அவர் “என்னை ஏன் படைத்தாய் இறiவா? நான் உன் பூசைக்கே இடைஞ்சலானேன். இனி இருந்து பயனென்ன என எண்ணி தன் வாழ்வை முடிக்க எண்ணினார். லோக சாரங்க முனி எனும் அந்தணர் இறைவன் திருவுருக்கு அபிடேகம் செய்வதற்கு திரு உருவச்சிலையை அலங்கரித்திருந்த பூக்களை மாலைகளைத் தலைப்பாகத்திலிருந்து அகற்றத் தொடங்கிய பொழுது மேல் நெற்றியிலிருந்து  இரத்தம் கசிவதைக் கண்டு பதறிப் போனார்.
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த சமயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவிழா. பெருமாள் திருவீதியுலாவரும் வேளை ஆங்கிலேயஅதிகாரி சட்டம் அமைதியை நிலைநாட்ட அங்கு வந்திருந்தார். சுவாமிக்கு இருமருங்கும் இருவர் கவரி வீசிக் கொண்டிருந்தனர். உடனே அவ்வதிகாரி கவரி வீசுவதை நிற்பாட்டு. ஒரு சிலைக்கு இது தேவையா? உடனே வேறு வழியின்றி நிற்பாட்டினார்கள். உடனே பெருமாளின் உடலில் வியர்வை அரும்பி துளிகளாக விழத் தொடங்கின. ஆங்கிலேய அதிகாரி உடனே ‘என்னை மன்னியுங்கள்’ என்று விழுந்து வணங்கினார்.


இங்கும் பெருமாள் லோகசாரங்க முனிக்கு உடனே போய் அப்பாணரைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். லோகசாரங்கமுனியும் ஓடினார். பாணர் அவரைக் கண்டதும் திரும்பவும் தன்னை மன்னிக்கும் படியும் என்ன தண்டனையானாலும் கொடுங்கள் என்றும் மிகவும் பணிவாகக் கேட்டார். ஆனால் பூசாரியோ பாணரை விழுந்து வணங்கி ஸ்ரீரங்கநாதர் உங்களை அழைத்து வரும்படி கூறினார் என்றார். என்னுடைய காலைக் கோவிலுக்குள் வைக்கமாட்டேன் என்று பாணனார் மறுத்து ஓதுங்க லோக சாரங்கமுனி அவரை அப்படியே தூக்கித்தோளில் சுமந்தவாறு கோவிலுள் சென்று எம்பெருமான் வீற்றிருக்குமிடம் சென்றடைந்தார். ஸ்ரீரங்கப் பெருமாளைக் கண்ட முனி வாகனனாய் அமையப்பெற்ற திருப்பாணாழ்வார் பாடிய பாசுரம்

ஆமல னாழிப் பிரான் அடியார்;க் கென்னை யாட் படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதி னரங்கத் தம்டான் திருக்
கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே

என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடியருளினார், காட்டவே கண்ட திருப்பாணாழ்வார். ஆழ்வார் பாசுரங்களில் திருமேனி யழகு பாதாதிகேசமாகக் காட்டி ஸ்ரீமன்நாராயணனை எவ்வாறு நாம் இன்புற்று அனுபவிக்கலாம் என்பதைக் காட்டுகின்றார்.
பெருமாளின் “சிவந்த ஆடை, அதன் மேல் அயனைப் படைத்ததோரெழில் உந்தி மேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே”, திரு ஆரமார்பு, செவ்வாய், ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே, பெரிய வாய கண்கள். கோலமாமணி யாரமும் முத்துத்தாமமும் முடிவில்ல தோரெழில் நீலைமேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே என்றிவ்வாறு அரங்கமாமணியினை வர்ணிக்க சொற்களால் முடியாமல் ஐயோ என்று விழிக்கின்றார். என்னமுதைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாவே என்று பக்தி பெருக்கில் வெளியிடுகின்றர். இவரும் இறுதியில் பெருமாளோடு ஒன்றாகின்றார்.

திருமழிசை ஆழ்வார் பெற்றோருக்கு ஒரு தசைப்பிண்டமாகப் பிறந்தார். பெற்றோர் அந்த தசைப்பிண்டத்தைக் கொண்டுபோய் காட்டில் எறிந்துவிட்டனர். ஆனால் இறைவன் திருவருளால் அழகிய தொரு குழந்தையாக மாறியது. ஆனால் உணவெதுவும் உண்ணாமலிருந்த அக்குழந்தையைச் சிலர் கண்டனர். ஒரு வயோதிய தம்பதியினர் அக்குழந்தையை எடுத்துச் சென்றனர். ஆனால் எவரிடமிருந்தும் உணவு பெறவில்லை. இதனை அறிந்த வேறொரு வயோதிக தம்பதிகள் சிறிது பாலை எடுத்துச்சென்றனர். அவர்களிடமிருந்து பாலைப் பெற்றுப் பருகிற்று. பாலை அவர்களிடமிருந்து பெற்ற அக்குழந்தை ஒரு நாள் சிறிது பாலை மிச்சம்  விட்டது. அதை அருந்திய வயோதிகத் தம்பதியினர் இளைமையைப் பெற்றதுமல்லாமல் பின்னர் ஒரு மகனையும் பெற்றனர். கணிகண்ணன் என்று அக்குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்டது. கணிகண்ணனுக்கு திருமழிசை ஆழ்வார் குருவானார். திருமழிசை ஆழ்வாரும் கணிகண்ணனும் காஞ்சீபுரம் சென்றனர். அங்கு திரு வெட்டாவிலுள்ள திருமால் கோவிலுக்குச் சென்று வழிபடுவது அவர்களுக்குப்பிரியமானது. ஒரு வயோதிபமாது கனிகளைக் சுத்தப்படுத்தியும் அவர்கள் இருப்பிடத்தைச் சுத்தம் செய்தும் வந்தாள். ஒரு நாள் இந்த பெண்ணின் பணிவிடைகளில் திருப்தியடைந்த குரு அவளுக்கு மீண்டும் இளமையைக் கொடுத்துமல்லாமல் மிக அழகாக மிளிரவும் அருள் புரிந்தார். இப்பெண்ணைக் கண்ட அவ்வூர் அரசன் அவளை மணந்து கொண்டான். மன்னன் வயதினால் தளர்ச்சியடையத் தொடங்கினாலும் இப்பெண்ணில் அதிக மாற்றமில்லாததைக் கண்ட மன்னன் அதிசயித்து அவளிடம் காரணம் கேட்டான். குணிகண்ணனை அழைத்து அரசன் குருவிடம் கூறி தனக்கும் மீண்டும் இளமையடைய அருள் புரிய வேண்டுமென்றும் முடியாதென மறுக்கவே அரசன் தன்னைப் பற்றிப் பாடும்படி கேட்டான். இறைவனையல்லாது வேறெவரைப் பற்றியும் பாடமுடியாது என்று கூறக்கேட்ட அரசன் அன்றே கணிகண்ணனை நாட்டைவிட்டுப் போய்விட வேண்டுமென்று உத்தரவிட்டான். ஆழ்வார் கணிகண்ணன் புறப்படுவதற்குரிய ஆயத்தங்களைக் கேட்டறிந்து கனிகளுடன் பெருமாளிடம் கோவிலுக்குச் சென்று “கணிகண்ணன் போகின்றான், செந்நாப்புலவனும் போகின்றேன். நீ கிடக்க வேண்டாம் உன் பாம்பணையைச் சுருட்டிக்கொள்” என்று கூறி திரும்பிப் பாராமலே  ஊர் எல்லைக்கப்பால் சென்றனர். இதனால் இந்நகரம் பல்வேறு இயற்கைச் சோதனைக்குள்ளானது யாரும் முன் வந்து காப்பாற்றவில்லை. கோவிலில் பெருமாள் இல்லை என அறிந்த காஞ்சி மன்னன் திரு மழிசை  யாழ்வாரையும் கணிகண்ணனையும் தேடிக்கண்டு பிடித்து மீண்டும் காஞ்சிபுரத்துக்கே வரும்படியும் வேண்ட, மன்னனின் வேண்டுதலையேற்று காஞ்சிபுரத்துக்குத் திரும்பினர். பக்தனே காஞ்சிபுரத்திற்குத் திரும்பும் பொழுது பகவான் திருமாலும் அவர்களுடன் மீண்டும் திரும்பினார். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் இதனால் இவருக்கு உண்டாயிற்று. திருமழிசை ஆழ்வார் பெருமைக்கும் அவர் பக்தியின் ஆழத்திற்கும் வேறென்ன சான்று வேண்டும்.

இன்றாக நாளையே யாக இனிச்சிறிது
நின்றாக நின்னருளஎன் பாலதே – நன்றாக
நான் உன்னை யன்றி யிலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னை யன்றி இலை.

ஸ்ரீராம பத்தன்

ஊனின்மேய ஆவி நீ உறக்கமோ டுணர்ச்சிநீ
ஆனில் மேயஐந்தும்நீ அவற்றுள் நின்ற தூய்மைநீ
வானிலோடு மண்ணும்நீ வளங்கடற் பயனும் நீ
யானும்நீ அதன்றிஎம்பி ரானும்நீ இராமனே

திருமழிசை ஆழ்வார் எவ்வளவு திடமான பக்திகொண்டுள்ளார். என்பதையும் அவரது பக்தி உச்சசிலையையும் காட்டி நிற்கின்றது ‘யானும் நீ’ எனும் பதமும் ‘நீ என்னையன்ற இலை’ என்பதும்.

தொடரும் ............

No comments: