.
மெல்பேர்ணில் நிகழ்ந்த செல்வன் செந்தூரன் யோகரட்ணம் அவர்களின் வியக்கத்தக்க மிருதங்க அரங்கேற்றம்
Melbourne ல் George Wood Performing Arts centre ல் கடந்த 16.02.2013 சனிக்கிழமை மாலை கலாநிதி.சந்திரபானு பரதாலய அக்கடமி கல்லூரியின் மிருதங்க வித்துவான் ஸ்ரீ பாலஸ்ரீ இராசையாவின் மாணவன் செல்வன்.செந்தூரன் யோகரட்ணம் அவர்களுடைய மிருதங்க அரங்கேற்றம் மண்டபம் நிறைந்த கலைஞர்கள் கலைப்பிரியர்கள் மத்தியில் கோலாகலமாக அரங்கேறியது. செல்வன்.செந்தூரன் யோகரட்ணம் திரு.ஜெராட் யோகரட்ணம் திருமதி.பூங்கோதை யோகரட்ணம் ஆகியோரின் அன்புப் புதல்வன் ஆவார்.
மண்டப வாயிலில் அழகிய மலர்க்கொத்து வைக்கப்பட்டிருந்தது. அன்புக்குச் சின்னமாக அலங்கரிப்பது பூ என்பதை யாரும் மறுக்கமுடியாது. இளம் பெண்கள் கைகளில் மலர்த்தட்டு கர்க்கண்டு சந்தனம் குங்குமத் தட்டங்களுடன் வரவேற்றனர்.
மண்டபத்தில் உள்ள மேடையின் பின்புறத்தின் திரையில் யேசுபிரான் அனைவரையும் இரட்சிக்கும் காட்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அந்த அற்புதமான காட்சியைப் பார்க்கும் போது மிகவும் அழகாக இருந்தது. இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த பிரபல விற்பன்னர்கள் செல்வன்.செந்தூரன் யோகரட்ணம் அவர்களின் வாசிப்புக்கு பக்க பலமாக இருந்தனர்.
மிருதங்க அரங்கேற்றம் வர்ணம் ஆதி தாளம் கடனகுதூகலம் ராகத்தில் சரங்காத வத்சலே என்று ஆரம்பிக்கும் பாடலுடன் ஆரம்பமானது. பஜமானச என்று ஆரம்பிக்கும் பாடல் பகுடாரி ராகத்தில் ஆதி தாளத்தில் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பல பாடல்கள் அற்புதமாகப் பாடும் போது அதற்கு ஈடு கொடுத்தாற்போல செந்தூரன் தாள லயம் மாறாமல் லாவகமாக விரல்களினால் வாசித்ததைப் பார்க்கும் போது அந்த இளைஞன் ஒரு முழுமையடைந்த கலைஞனாகவே மிளிர்ந்தார் என்று தான் கூற வேண்டும்.
அரங்கேற்றம் களை கட்டத் தொடங்கியது என்றும் கூறலாம். இரண்டு கிறீஸ்த்தவப் பாடல்கள் பாடிய வேளை அந்தப் பாடல்களின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மிருதங்க வாசிப்பு அமைந்திருந்தது.
தனி ஆவர்த்தனம் மூலமாக தான் கற்ற மிருதங்கக் கலையின் சகல நுணுக்கங்களையும் மிகவும் நேர்த்தியாக வாசித்தார். அதற்கு ஏற்ப அனைவரும் கரகோஷத்தினை வெளிப்படுத்தி ஊக்கமளித்தனர். வழமையான அரங்றே;றங்கள் போல் இல்லாமல் புதுமைகள் பலவற்றைக் கொண்டிருந்த அரங்கேற்றம் என்றும் கூறலாம். லயம் தப்பாது தனி ஆவர்த்தனத்தில் லயஞானத்தோடு கோவைகள் அனைத்ததையும் இசகு பிசகின்றி இழுக்காமல் அதே நேரம் ஓடாமல் வாசித்திருந்தமையை யாவரும் வரவேற்றனர்.
இடைவேளையின் பின் முக்கியமாக ராகம் தாளம் பல்லவிää தில்லானா பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்களம் வாசிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கு விஷேச பிரதம விருந்தினராக ஸ்ரீமதி.உத்ரா விஜயராகவன் வருகை தந்திருந்தார். அவர் தனது உரையில் சங்கீத கலை ஞானம் படைத்த செந்தூரன் அவர்களைப் பாராட்டி தொடர்ந்தும் கலையை வளர்க்க வேண்டும் என்று கூறி அவரை வாழ்த்தியிருந்தார்.
தென்னிந்திய வித்துவான் திரு.கே.பரத் சுந்தர் வாய்ப்பாட்டுப் பாடää பிரபல வயலின் வித்துவான் திரு.விட்டல் ராமமூர்த்திää வயலின் இசை வழங்கää திருச்சி.கே.முரளி கடம் வாசிக்க மிருதங்க வித்துவான் ரி.ஆர்.சுந்தரேசன் மோர்சிங்ääää கஞ்சிரா வாசிக்கää தம்புராவினை செல்வி.பைரவி சிவராஜா வாசித்திருந்தார். அதற்கு எற்ப செந்தூரன் யோகரட்ணம் நாத மழை இசை வெள்ளத்தில் வாசிப்புப்பாணியைக் கொண்டு சென்றதென்றால் அது மிகையாகாது.
தரம்மிக்க இளைஞர்களின் கலை ஆர்வம்ää கலை ரசனைää ஆகியவற்றின் மூலம் இனம் கண்டு புலம் பெயர் நாடான அவுஸதிரேலியாவில் கலை உலகிற்கு அளப்பெரும் பணியைச் செய்து வரும் மிருதங்க வித்துவான் ஸ்ரீ பாலஸ்ரீ இராசையா அவர்கள் பத்துக்கும் மேற்பட்ட மிருதங்க அரங்கேற்றங்களை அவுஸ்திரேலியாவில் நிகழ்த்தியதுடன் இருபது வருடங்களுக்கு மேலாக தனது சேவையை ஆற்றி வருகின்றார் என்பதை மறக்க முடியாது. அவருக்கு தமிழ் மக்களின் வாழ்த்துக்களும்ää ஆதரவும் என்றுமே உள்ளது.
செந்தூரன் மிருதங்கக் கலையைப் பயின்று முதன் முதலாக அரங்கேற்றுவது போலன்றி சகல பக்கவாத்திய இசைக் கருவிகளுடன் சேர்ந்து வாசித்ததைப் பார்த்தால் ஒரு சிறந்த கலைஞனாக பரிணமித்ததைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் பாடல்கள் யாவும் தொடர்ந்து தாளலயங்கள் மாறும் போதெல்லாம் அதற்கு ஈடுகொடுத்து தனது திறமையை வெளிக்காட்டியது பார்வையாளர்களின் கரகோஷத்தில் இருந்து அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. கேள்வி ஞானம்ää கலை ரசனை என்பவை செந்தூரனிடம் நிறையவே இருந்தமையை அவருடைய வாசிப்பில் மிளிர்ந்தது எனலாம்.
அரங்கேற்றம் செய்வதோடு விட்டு விடாமல் தொடர்ந்தும் தாம் கற்ற கலையை மற்றவர்களுக்கும் பயன்படக் கூடியதாக கலைகளை வளர்க்க வேண்டும். இதே வேளை கலை ஆசிரியர்களும் இந்த விடயத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
செல்வன்.செந்தூரன் யோகரட்ணம் மிருதங்கக் கலையைப் பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று அரங்கேற்றம் செய்திருந்தாலும்ää அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு முதல் படிக்கல் என்று தான் கூறவேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் ஆரம்பம் முதல் இறுதி வரை செந்தூரன் யோகரட்ணம் அவர்களுக்கு உற்சாகம் கொடுத்த வண்ணம் இருந்தமையைக் கண்குளிரக் காணக்கூடியதாக இருந்தது.
எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வாதத்துடன் மிருதங்கக் கலையில் மென்மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
நவரத்தினம் அல்லமதேவன்
No comments:
Post a Comment