காதல் - தவமணி தவராஜா



ஒரு கண்ணோட்டம்
காதல் என்றால் என்ன?
அர்த்தம் சொல்ல முடியாது. ஆழம் காணமுடியாதது. காதல் இல்லையேல் சாதல், சாதல் என்கிறார்கள். நிறைவேறாத காதல் உதாரணம் (அம்பிகாபதி, அமராவதி, அனார்கவி, சலீம்) தெய்வீகக் காதல், அமரத்துவக் காதல் என்கிறார்கள். புனிதக்காதல் என்கிறார்கள். ஆனால் பல வருடங்களாக சந்தோஷமாகக் காதலித்தவர்கள் திருமணமானவுடன் சில மாதங்களிலே சலித்துப் போன கதை கதைக்கிறார்கள். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதும் இதுதானோ?
எது எப்படியிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு துணை தேவை. வயது வந்தவுடன் ஆணுக்குப் பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் ஓர் ஈர்ப்பு உண்டாகிறது. இது மனிதருக்கு மட்டுமல்ல உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் பொதுவான விதியாகும். உற்பத்திப் பெருக்கத்திற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்;டது. கூடல் காதலின் பின்தான் வயது ஏறஏற மனக்காதல் ஏற்படுகிறது. மனக்காதலை எவராலும் பிரிக்க முடியாது. உலகின் எந்தத்திக்கிலும் இருவரும் பிரிந்திருந்தாலும் மனதால் ஒன்று பட்டவர்கள் சேர்ந்தேயிருப்பார்கள். இப்போதுள்ள நவீன வசதிகளும் ஒன்றுபட்ட இதயங்களுக்கு ஓர் ஒளடதமாகும்.
மனதினால் ஒன்று படாதவர்கள் சேர்ந்து வாழும்போதும் பிரிந்திருப்பவர்கள் போன்றவர்கள். அங்கு நிம்மதிக்குப்பதில் சஞ்சலமே குடியிருக்கும். இதனாலேயே பிரிவுத் துயரங்களும் கஷ்டங்களும் உருவாகின்றது. ஆகையால் எல்லோரும் ஒன்றிணைந்து காதலைப் போற்றி சந்தோஷமாக வாழ என்னுடைய காதலர் தின வாழ்த்துக்கள்

No comments: