. கும்கி |
![]() |
கேரளா வனக்காடுகளில் எடுக்கப்பட்டிருக்கும் கும்கி படம் முழுவதும் ஒரே பசுமையாக தெரிகிறது.![]() யானைக்கு கொடுக்கப்பட்ட கதையை வைத்தே கதாநாயகனை இப்படத்தில் காண்பித்திருக்கிறார் பிரபு சாலமன். அனாதையான விக்ரம்பிரபு, தன் மாமாவான தம்பி ராமையா மற்றும் வளர்க்கும் யானை மாணிக்கத்துடன் ஊர் ஊராக சென்று திருவிழாக்களில் கலந்து கொண்டு பிழைத்து வருகிறார். கொமெடியாக காட்டப்பட்டுள்ள மாமா தம்பி ராமையாவின் பேச்சைக்கேட்டு யானை ஒரு கடையில் ஊருகாய் பாக்கெட்டை திருட இதை விக்ரம் பிரபு பார்த்து விடுகிறார். இதனால் கோபித்துக்கொண்டு நாயகன் செல்ல, யானை குழந்தையாட்டம் பின் தொடர்கிறது. யானை வேகமாக நடந்து வருவதைக்கண்டு மக்கள் பயந்தோட பொலிஸார் வருகிறார்கள். யானையின் உரிமத்தை பொலிசார் கேட்க, அது தவறிவிட்டது என தம்பி ராமய்யா பதிலளிக்க இதனால் யானை பறிபோகிறது. பின்னர் நண்பர் ஒருவரின் உதவியுடன் நாயகன் யானையை மீட்கின்றார். ![]() கும்கி என்பது காட்டு யானைகளை விரட்ட உதவும் யானைகள். மிகவும் பலம்வாய்ந்தவை. ஆனால் நாயகனிடத்தில் இருப்பதோ, திருவிழாக்களில் பங்கேற்கும் யானை. இருப்பினும் தன் யானையை மீட்டுத்தந்த நண்பருக்கு மீண்டும் ஏதாவது உதவி செய்யவேண்டுமென எண்ணுகிறார் விக்ரம். இன்னும் 2 நாட்களில் கும்கி யானையை ஏற்பாடு செய்துவிடுவதாக நண்பர் சொல்ல ஆதிகாட்டிற்குள் நுழைகிறார் நாயகன். அப்போதே நாயகி லட்சுமிமேனனை நாயகன் விக்ரம் பார்க்க, காதலில் மூழ்கிறார். காதலில் மூழ்கினாலும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்ட என்ன செய்யப்போகிறோம்? என்று நாயகன் நினைக்க அதற்கேற்றாற்போல் தன் யானைக்கு பயிற்சியும் தருகிறார். ஆனால் பயிற்சியை ஏற்றுக்கொள்வது போல் யானை இல்லை, எருமைமாட்டைக் கண்டு யானை பின்வாங்குவது கை தட்டல்கள். ![]() அவர் காதலை லட்சுமி மேனன் ஏற்றுக்கொண்டாலும் நாயகியின் தந்தை, விக்ரம் பிரபு மேலும் நாயகியின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறார். நாயகனும் நாயகியும் தனியாக இருக்கும் நேரத்தில் வன அதிகாரியொருவர் இவர்களை பார்த்துவிடுகிறார். அதை லட்சுமி மேனனின் தந்தையிடம் கூற, அவர் நம்ப மறுக்கிறார். இதனால் நாயகனும் நாயகியும் தங்களது காதலை மறந்து பிரிந்து விடுகின்றனர். மறுநாள் அறுவடைத்திருவிழா என்பதால் அறுவடை ஜோராக நடக்கிறது. இந்நேரத்தில் தன் யானைக்கு மதம் பிடிக்க, அதை கட்டிப்போட்டு விடுகிறார் நாயகன். அப்போதே கொம்பன் என்ற காட்டு யானை நாயகனின் தங்குமிடத்திற்கு வர, இரண்டு யானைகளும் சண்டை போடுகிறது. ![]() இந்த சண்டையின் போது நடந்த தீ விபத்தில் தம்பி ராமைய்யாவும் இறந்துவிட நாயகன் அனாதையாக்கப்படுகிறார் என்பதே படத்தின் க்ளைமேக்ஸ். இந்த க்ளைமேக்ஸ் பிடிக்க வில்லை என சிலர் கூறினாலும் படம் எதார்த்தமாக அமைந்திருக்கிறது. இசை, ஒளிப்பதிவு இரண்டும் கும்கியின் கம்பீரத் தந்தங்கள். கொம்பன் வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பதைபதைப்பூட்டும் இமானின் இசை, பாடல்களில் சொக்கவைக்கிறது. புற்களுக்கு இடையில் பயணிக்கும்போதும், ஹோவெனக் கொட்டும் அருவியின் தலை மேல் ஏறி இறங்கிச் சுற்றிச் சுழன்று பரவசப்படுத்தும்போதும் மயக்குகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. யுகபாரதியின் பாடல் வரிகள் கதைக்கு அழுத்தம் சேர்க்கின்றன. |
நன்றி விடுப்பு |
தமிழ் சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment