ஞானா: அம்மா….அம்மா…..ஒரு செய்தி கேட்டியளே. என்ரை சிநேகிதியின்ரை boy friend கோபத்திலை ஆரோ ஒருத்தனைச் சுட்டுக் கொண்டு போட்டானாம். இப்ப அவன் மறியலிலை இருக்கிறானாம். இவள் என்ரை சிநேகிதி என்ன செய்யிறது எண்டு தெரியாமல் தவிக்கிறாள்.
சுந்தரி: ஏன் தவிப்பான்? அந்த அதர்மககாறனை மறந்திட்டு வேறை ஆளைப் பாக்க வேண்டியதுதானே.
ஞானா: இதொன்னம்மா உங்கடை கதை? எவ்வளவோ காலம் பழகின
Boy friend டிலை அன்பில்லாமல் இருக்கலாமே? அதுகும் போக உடுப்பு மாத்திறமாதிரி டிழல கசநைனெ டையும் மாத்தலாமே?
அப்பா: (வந்து) மாத்தேலாதுதான் ஞானா. நீ திருக்குறள் ஆராயிறனிதானே, திருக்குறளைத் தட்டிப் பாரன் உந்த நிலைபரத்துக்கு என்ன செய்லாம் எண்டு.
சுந்தரி: எனக்கப்பா சிரிப்புதான் வருகுது.
அப்பா: இதிலை என்ன சிரிப்பு இருக்குச் சுந்தரி?
சுந்தரி: எனக்கு ஒரு வேதக்காறச் சிநேகிதி இருக்கிறா அப்பா. அவ தன்ரை வாழ்க்கையிலை வாற சிக்கல்களுக்கு ஓடிப்போய்
Bible த் தட்டிப் பாப்பாவாம். Bible சொல்லிற வழியிலை போவம் எண்டு. அதுமாதிரித்தான் கிடக்கு நீங்கள் திருக்குறளைத் தட்டிப்பாக்கச் சொன்னது.
ஞானா: அம்மா.. அப்பா சொன்னதிலை ஒரு பிழையுமில்லை உங்கடை வேதக்காறச் சிநேகிதி செய்யிறதிலும் பிழை இல்லை. நானும் திருக்குறளைத் தட்டிப் பாத்தனான்தான். அன்புடைமைஎண்ட அதிகாரத்திலை ஏதும் இதுக்கு வழியிருக்குமோ என்டு. ஆனால் எது சரி எது பிழை எண்டது விள்ங்கேல்லை.
அப்பா: ஞானா! அன்புடைமை எண்ட அதிகாரத்திலை 76 வது குறளைப் பாத்தனியே?
ஞானா: பாத்தனான் அப்பா….இஞ்சை இருக்கப்பா அந்தக் குறள்:
அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை.
இதிலை வந்தப்பா… அறத்துக்கு மட்டுந்தான் அன்பு சார்பு. இதை அறியாதவர்கள் மறத்துகக்கும் அன்பு துணை போகும் எண்டு சொல்லுவார்கள் எண்ட மாதிரித்தானே பொருள் வருகுது.
சுந்தரி: உதைத்தான் நான் சொன்னனான் ஞானா. உன்ரை சிநேகிதியின்ரை
boy friend செய்தது அதர்ம். அது அறமான செயல் அல்ல. மறமான வன்முறை. அந்தச் செயலுக்கு அன்பு துணைப்போகாது. ஆனபடியாலை உன்ரை சிநேகிதி அவனுக்கு அன்பு காட்டக் கூடாது.
ஞானி: அப்பா…நீங்கள் என்ன நினைக்கிறியள்?
அப்பா: ஞானா உந்தக் குறளக்கு இரண்டு விதமாகச் கருத்துச் சொல்கிறார்கள். ஒண்டு அம்மா சொன்ன மாதிரி அன்பு வந்து தீய செயல்களுக்குச் சார்பாக இருக்கக் கூடாது. நல்ல செயல்களோடுதான் சார்ந்திருக்க வேண்டும் என்பது. மற்றக் கருத்து தீயசெயலைச் செய்த ஒருவனுக்கு அன்பு காட்டி அவனையும் நல்லவனாக்கலாம். என்பது.
ஞானா: அப்பிடி எண்டால் அப்பா…அறத்துக்கு மட்டுந்தான் அன்பு சர்பு என்று அறியாதவர்கள் சொல்லுவார்கள் ஆனால் மறமான செயல்களுக்கும் அன்பு துணை புரியும் எண்ட கருத்து வரும். இல்லையா அப்பா?
அப்பா: அப்பிடித்தான் ஞானா. இப்ப இந்த இரண்டு கருத்திலும் எது உத்தமமான கருத்தெண்டதை ஆராய்ந்து பார்த்து நடக்க வேணும்.
சுந்தரி: நல்ல கதை… நீளமில்லை, அப்பா. தீயசெயல் செய்யிறவை எல்லாருக்கும் அன்பு காட்டினால் அவையள் மேலும் மேலும் தீய வழியிலே போய்க் கொண்டிருப்பார்கள். தீய செயல்களுக்கு முடிவே இருக்காது.
ஞானா: ஓம் அம்மா. தீய செயல்களுக்கு முடிவே இருக்காது. ஆனபடியாலை தீய செயல்கள் செய்தவர்களையும், விரோதிகளையும் திருத்த வேணுமெண்டால் அவையளோடை அன்பு பாராட்டி அவயைளை வென்றெடுத்து, நல்லவழிப் படுத்திறது நல்லது தானே
சுந்தரி: நல்லதுதான் ஞானா. ஆனால் எனக்குத் தீயவைக்கு அன்பு காட்டிறது விருப்பம் இல்லை.
அப்பா: சுந்தரி உமக்கு விருப்பம் இல்லை எண்டால் விட்டிடும். ஞானாவுக்குத் தீயவைக்கும் அன்பு காட்டிறது விருப்பம் எண்டால் செய்யட்டும்.
ஞானா: ஓம் அப்பா. நான் என்ரை சிநேகிதிக்குச் சொல்லப் போறன் “நீ போய் உன்ரை Boy friend ஐச் சந்திச்சு அவனுக்கு ஆறுதலும் நல்ல புத்தியும் சொல்லி அவனைத் திருத்தப் பார்” எண்டு.
சுந்தரி: ஏதோ உனக்குச் சரி எண்டு படுகிறதைச் செய் ஞானா. ஆனால் திருவள்ளுவர் நட்பைப் பற்றி நாலைஞ்சு அதிகாரங்கள் எழுதி வைச்சிருக்கிறார். அதுகளை வாசிச்சுப் பாத்து நடக்கச் சொல்லி உன்ரை சிநேகிதிக்குச் சொல்லு. இப்ப வா…. வந்து இந்த மறக்கறியை வெட்டித்தா.
(இசை)
No comments:
Post a Comment