.
தூரத்தில் எங்கேயோ பௌத்த ஆலயத்திலிருந்து பிக்குகள் பிரித் ஓதும் சத்தம். 'புத்தம் சரணம் கச்சாமி' 'சங்கம் சரணம் கச்சாமி' என்று விட்டு விட்டுப் புத்தர்பெருமானின் திருப்பாதங்களைத் தொழுகின்ற அடியார்களது ஒலிகூடக்கந்தையாவை அமைதிப் படுத்தவில்லை. படுக்கையில் புரண்டு படுத்த அவனைக்கணநேரத்திற்குள் சுள் என்று குத்திய மூட்டைப் பூச்சி தட்டி எழுப்பிவிட்டது. பக்கத்துஅறையில் இருந்த தனிக்குடித்தனக் காரர்களின் பழைய காலத்துப் 'பிக்பென்'மணிக்கூடு டாண் டாண் என்று பன்னிரண்டு தடவைகள் அடித்து ஓய்ந்தது.கந்தையாவுக்குப் பெரியதொரு பெருமூச்சு வெளிப்பட்டது. கடந்த காலமும் குடும்பநினைவுகளும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன.
தூரத்தில் எங்கேயோ பௌத்த ஆலயத்திலிருந்து பிக்குகள் பிரித் ஓதும் சத்தம். 'புத்தம் சரணம் கச்சாமி' 'சங்கம் சரணம் கச்சாமி' என்று விட்டு விட்டுப் புத்தர்பெருமானின் திருப்பாதங்களைத் தொழுகின்ற அடியார்களது ஒலிகூடக்கந்தையாவை அமைதிப் படுத்தவில்லை. படுக்கையில் புரண்டு படுத்த அவனைக்கணநேரத்திற்குள் சுள் என்று குத்திய மூட்டைப் பூச்சி தட்டி எழுப்பிவிட்டது. பக்கத்துஅறையில் இருந்த தனிக்குடித்தனக் காரர்களின் பழைய காலத்துப் 'பிக்பென்'மணிக்கூடு டாண் டாண் என்று பன்னிரண்டு தடவைகள் அடித்து ஓய்ந்தது.கந்தையாவுக்குப் பெரியதொரு பெருமூச்சு வெளிப்பட்டது. கடந்த காலமும் குடும்பநினைவுகளும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன.
அப்பொழுது கந்தையாவுக்கு இருபது வயதிருக்கும். நெல்லியடி சென்றல் ஸ்கூலில்படித்து எஸ்.எஸ்.சி யைப் பாஸ் பண்ணிவிட்டு அதற்கு மேலே படிக்க முடியாமல்ஊர்ப்பொடியள் ஒன்றுகூடும் முருகையன் கோவிலின் பிள்ளையார் மண்டபத்திற்குமுன்னால் அந்தப் பன்னீர் மர நிழலில் உட்கார்ந்து அரசியல் தொடக்கம் சினிமாஉலகம் வரையில் நண்பர்களுடன் விளாசித் தள்ளுவான் கந்தையா.சிலவேளைகளில் சுவாமியை வைத்துத் தள்ளும் பெரிய சகடைச் சில்லுகளின் மேல்உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் உலக விவகாரங்களையும் ஊர்விவகாரங்களையும் அவன் அலசும் விதமே தனி
அலாதியாகவிருக்கும்.அப்போதுதான் எல்லோரும் கிளறிக்கல் உத்தியோகத்திற்குப் பரீட்சை எடுப்பதற்குவிண்ணப்பம் போடுகிறார்கள் என்று அறிந்து 'கோழி மேய்ச்சாலும் கோறண மேந்துஉத்தியோகம் வேணுமடா மேனை' என்று பக்கத்து வீட்டுச் சின்னாச்சியக்கைசொன்னதையும் ஞாபகத்திலை வைச்சுக்கொண்டு தானும் பதினைஞ்சு ரூபாமுத்திரையொட்டிச் சமாதான நீதவானைப் பிடிச்சு ஒரு கையொப்பமும் வேண்டித்தன்னுடைய பேரில் ஒரு விண்ணப்பத்தைப் போட்டு வைத்தான். சமாதானநீதவானுடைய பெண்சாதி கூடத் தம்பி 'நீ கவனமாகப் படிச்சுக் கிளறிக்கல்உத்தியோகம் பார்க்க வேணும். கொய்யாவின்ரை தோட்ட முயற்சி சரிப்படாது. இந்தக்காலத்துப் பொடியளுக்கும் தோட்டஞ் செய்யவோ, குனிஞ்சு நிமிர்ந்துமண்வெட்டவோ தைரியம் இராது. ஏதோ நல்லா வா மேனை. நாலு காசு சம்பாதிக்கவேணும்' என்று வாழ்த்தி அனுப்பினது அவனுக்கு ஞாபகம் வந்தது.
அலாதியாகவிருக்கும்.அப்போதுதான் எல்லோரும் கிளறிக்கல் உத்தியோகத்திற்குப் பரீட்சை எடுப்பதற்குவிண்ணப்பம் போடுகிறார்கள் என்று அறிந்து 'கோழி மேய்ச்சாலும் கோறண மேந்துஉத்தியோகம் வேணுமடா மேனை' என்று பக்கத்து வீட்டுச் சின்னாச்சியக்கைசொன்னதையும் ஞாபகத்திலை வைச்சுக்கொண்டு தானும் பதினைஞ்சு ரூபாமுத்திரையொட்டிச் சமாதான நீதவானைப் பிடிச்சு ஒரு கையொப்பமும் வேண்டித்தன்னுடைய பேரில் ஒரு விண்ணப்பத்தைப் போட்டு வைத்தான். சமாதானநீதவானுடைய பெண்சாதி கூடத் தம்பி 'நீ கவனமாகப் படிச்சுக் கிளறிக்கல்உத்தியோகம் பார்க்க வேணும். கொய்யாவின்ரை தோட்ட முயற்சி சரிப்படாது. இந்தக்காலத்துப் பொடியளுக்கும் தோட்டஞ் செய்யவோ, குனிஞ்சு நிமிர்ந்துமண்வெட்டவோ தைரியம் இராது. ஏதோ நல்லா வா மேனை. நாலு காசு சம்பாதிக்கவேணும்' என்று வாழ்த்தி அனுப்பினது அவனுக்கு ஞாபகம் வந்தது.
எப்படியோ சோதினையும் பாஸ் பண்ணித் தபாற் தந்தித் திணைக்களத்திலை வேலைபார்க்க விட்டு விட்டார்கள். கந்தையா வேலையேற்று இப்ப கிட்டத்தட்ட எட்டுவருஷங்கள் முடிந்து விடடன. இன்னும் கந்தையா அந்த அடிப்படை எண்பது ரூபாச்சம்பளத்திலைதான் இருந்து வருகிறான். ஆனால், வேலை அதுவும் கந்தையாகொழும்பிலை அரசாங்க உத்தியோகம் என்றவுடன் சின்னாச்சியக்கை ஊரிலைஆரையெல்லாமோ பிடிச்சு ஒருபடி தன் மகள் பாக்கியத்தைக் கந்தையாவுக்குக்கலியாணமும் கட்டி வைச்சுப் போட்டா. மகளின் கலியாணம் முடிஞ்ச அடுத்தமாசமே சின்னாச்சியக்கை சிவலோகம் போய்விட்டா. கந்தையாவுக்கு இந்தச்சிவலோகம் பரலோகத்திலை எல்லம் நம்பிக்கையில்லை. ஆனால் பிறப்பிலைசரியான நம்பிக்கை.
எட்டு வருஷத்திலை ஆறு பெண்களுக்கும் ஒரு ஆண்குழந்தைக்கும் தகப்பன் என்றபெயரைப் பெருமையோடு தட்டிக் கொண்டான் கந்தையா. இதைப்பற்றி நண்பன்ஒருவன் கேட்டபோது 'நானென்னப்பா உணர்ச்சியற்ற மரக்கட்டையா? அதுவும்இலங்கை பூமத்திய ரேகைக்கு அண்மையில் இருக்கும் உஷ்ண நாடு. அதன்சுவாத்தயத்தில் ஆண்டுக்கொன்றென்ன ஆறுமாசத்திற்கொரு குழந்தை பிறந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை' என்று லாவகமாகப் பேசித் தப்பித்துக் கொண்டான்கந்தையா.
கொழும்பில் ஒரு வீடு எடுத்து ஏழு குழந்தைகளையும் மனைவி பாக்கியத்தையும்கொண்டுவந்து வைத்திருக்கக் கந்தையாவுக்கு எவ்வளவோ ஆசை. வெள்ளவத்தைசவோய் தியேட்டரில் பாக்கியத்துடன் ஒரு ஆங்கிலப்படம் பார்க்க வேண்டுமென்றும்அப்புறம், முன்னாலுள்ள 'சைனிஸ்' ஹோட்டலில் அவளை அழைத்துச் சென்றுமுள்ளுக் கரண்டி பிடித்து 'நூடிள்ஸ்' சாப்பிட வேண்டுமென்றும் அவன் பலநாட்களாகக் கனவு கண்டிருக்கிறான்.
பிரதி வெள்ளிக்கிழமையும் வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவிலுக்குக் கணவனும்மனைவியுமாகத் தம்பதிகள் செல்வதையும் பெண்கள் காஞ்சிபுரம் பட்டுச்சேலைஉடுத்தித் தலைக்குப் பூவைத்துத் தேர்போல அசைந்து செல்வதையும் கண்டு தானும்பாக்கியமும் இப்படி இருக்க முடியவில்லையே என்று எத்த்னையோ தடவைகள்மனத்துள் பொருமியிருக்கிறான்.
'அலறிக்ஸ்' ஐஸ்கிறீம் கடையில் ஆடும் கதிரையில் உட்கார்ந்து தானும்மனைவியும் 'புருட் சலாட்' சாப்பிடவில்லையே என்று வேதனைப்பட்டிருக்கிறான்.இத்தனை இன்பங்களுக்கும் ஆசைகளுக்கும் அவனது சம்பளம் ஒத்துவரவில்லை.
ஆம். இன்னும் அவன் எண்பது ரூபா அடிப்படைச் சம்பளக்காரன். மாத முடிவில்மொத்தமாக நூற்றித் தொண்ணூறு ரூபா பத்துச்சதம் வரும். அதில் முத்திரை ஒட்டிக்கையொப்பமிடுவதற்குப் பத்துச் சதம் போக மீதி நூற்றித் தொண்ணூறு. மேலும்அஞ்சல் எழுதுவினைஞர் சங்கச் சந்தாப்பணம் இரண்டு ரூபாய் போக மீதி நூற்றிஎண்பது. அதிலும் போன தீபாவளிக்கு என்று எடுத்த உற்சவ முன்பணம் பத்துரூபாகழித்து மொத்தமாக நூற்றி எழுபது கையில் கிடைக்கும்.
இதில் காரியாலய கண்டீனுக்குப் பத்துரூபா. 'போட்ரெஸ்ரோறண்ட்'டுக்கு முப்பதுரூபா. வெள்ளவத்தை கிருஷ்ணபவனுக்கு இருபத்தைஞ்சு ரூபா. மல்லிகாவீதியிலுள்ள தனது இருண்ட அறைக்கு (பார்வைக்கு அறைபோல இருக்கும்) முப்பதுரூபா. மொத்தம் தொண்ணூற்றி ஐந்து ரூபா போக எழுபத்தி ஐந்து ரூபா. இதுமட்டுமா? காமினி லோண்டரிக்கு எட்டு ரூபா. சிகரெட் ஐந்து ரூபா. புகையிரத சீசன்டிக்கட் ஒரு ரூபா. பஸ் போக்குவரத்தும் இடைத் தேனீர்ச் செலவும் பத்து ரூபா.சினிமா பார்த்தால் மாதத்திற்கு மூன்று ரூபா முப்பது சதம். மீதி 42 ரூபா 70 சதம்.
பாக்கியத்திற்கு ஒரு நல்ல சேலை எடுக்கக்கூட இந்தப் பணம் போதாது.இதற்கிடையில் ஏழு பிள்ளை நல்ல தங்காளின் குடும்பம் போலவுள்ள தன் பெரியகுடும்பத்தை எவ்வாறு கொண்டு நடத்துவது?
நல்ல காலம் பாக்கியம் நல்ல தங்காளைப் போலத்தன் பிள்ளைகளைக் கிணற்றுள்தூக்கிப் போடவில்லை. தாய் மீனாட்சியக்கை செய்து வந்த தோசை சுட்டு விற்கும்வியாபாரத்தை அவள் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தாள். கந்தையாவுக்குத் தன்மனைவி தோசைசுட்டு விற்பது பெரிய கவலையைக் கொடுத்தது. ஆனால் என்னசெய்வது? வாழ்க்கை வண்டி ஓட வேண்டுமே?
ஊரில் மற்ற உத்தியோகத்தர்களின் மனைவிமார் மரக்கறி, மீன் வாங்கக்கூடக்கடைத் தெருவுக்குப் போறதில்லை. ஏதோ சமையலுண்டு அடுத்தவனின்வீட்டுக்கதையுண்டு என்று அவர்கள் உல்லாசமாக இருப்பதை எண்ணி எவ்வளவோசிந்தித்திருக்கிறான். தன்னுடைய மனைவியும் ஏன் அப்படியிருக்க முடியவில்லைஎன்று சிந்தித்திருக்கிறான்.
ஆனால் அவன் தான் எண்பது ரூபா அடிப்படைச் சம்பளக் காரனாச்சே! சிங்களமொழிச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசாங்க ஊழியருள் கந்தையாவும்ஒருவன். சிங்களம் படிக்கவில்லை என்பதால் அவனுக்கு ஆண்டுப்படி உயர்வு(இன்கிறிமென்ட்) இல்லை! இரண்டாந்தர உயர்வுப் பரீட்சை எடுக்கும் வாய்ப்புஇல்லை.
கந்தையாவுடன் ஒரே தினத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் வேலைக்குச் சேர்ந்தஉமாகயிலாயநாதன், இறக்குமதித் திணைக்களத்தைச் சேர்ந்த தில்லைவாணன்ஆகியோர் சிங்களம் எஸ்.எஸ்.ஸி பாஸ் பண்ணி இரண்டாந்தர உயர்வுப் பரீட்சையும்எடுத்துச் சித்தியடைந்து இப்போது கொழுத்த சம்பளம் வாங்குவதும் அவனுக்குத்தெரியும். ஆனால் ஏதோவொரு வைராக்கியம் அவனைச் சிங்களம் படிக்காமல்செய்துவிட்டது.
கந்தையாவுக்கு வேற்றுமொழிகள் மீது வெறுப்பில்லை அல்லது தனது தமிழ் மீதுஅபார வெறியுமில்லை. ஆனால் பெரும்பான்மை இனம் தனது பலத்தைப்பிரயோகித்துச் சிறுபான்மை இனத்திடம் தனது மொழி ஆதிக்கத்தைத் திணிப்பதைஅவன் விரும்பவில்லை. தமிழ் ஊழியர்கள் மூன்று வருடத்துள் சிங்களம் கட்டாயம்படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்திராவிட்டால் அவன் ஒருவேளைசிங்களத்தைப் படித்து ஒரு பண்டிதனாகக்கூட வந்திருப்பான்.
வெசாக் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளவத்தை டபிள்யூ ஏ.சில்;வா மாவத்தையில்போடப்பட்டிருந்த உயர்ந்த மேடையில் நடைபெற்ற கிராமிய நாடகத்தில் நடிகர்கள்சம்பாஷிக்கும் சத்தம் கந்தையாவின் காதுகளுக்கு எட்டியது.
தான் உத்தியோகம் பார்த்த இந்த ஏழு வருடத்தில் தனியாக நண்பர்களுடன் வெசக்பார்த்ததையும் அவர்கள் இளம் கன்னியர்களை வேண்டுமென்று கிட்டச் சென்றுமுட்டிமோதித் திரிந்ததையும் நினைத்து பெருமூச்சு விட்டான்.
அவனது தற்போதைய சூழ்நிலையில் எவ்வித கேளிக்கைகளிலுமே நாட்டஞ்செல்லவில்ல. காலையில் வந்த பாக்கியத்தின் - கடிதம் நெஞ்சை உறுத்தியது. 'மூத்தபிள்ளை செம்பவளம் கிழிஞ்ச பாவாடையுடன் பள்ளிக்கூடம் செல்ல எனக்குக்கவலையாகவிருக்கிறது. பருவம் வந்த அவள் இனியும் கவனிக்காமல் விடமுடியாது' என்று என்னவெல்லாமோ எழுதியிருந்தாள்.
'பாவம் பாக்கியம் கொழும்பமிலை குழாய்மாட்டின மாப்பிள்ளை என்று நம்பிவந்தாள். உத்தியோகத்துக்கு ஆசைப்பட்டாள் - அனால் அவள் கணவன்கந்தையாவோ இன்னும் எண்பது ரூபா சம்பளக்காரன் - பட்டமில்லை – பதவிஉயர்வேயில்லை. ஒரே கதைதான்.
அதிகாலை ஐந்து மணிக்கு ஊதுகின்ற வெள்ளவத்தை நெசவாலைச் சங்கு பூம்....பூம்..... என்று முழங்கியது. அப்போது விடிந்துவிட்ட தென்பதையும் தான் இரவுமுழுவதும் தூங்கவில்லை என்பதையும் கந்தையா உணர்ந்தான்.
பக்கத்துக் கட்டிலில் சுப்பிரமணியம் நன்கு குறட்டைவிட்டு அசந்து தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டான். அவனுக்கென்ன? தனிக்கட்டை. கலியாணமும்வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம் என்று விட்டு இருக்கிறான். சிங்களமும்எஸ்.எஸ். ஸி பாஸ் பண்ணிப் போட்டு இரண்டாந்தர உயர்ச்சிப் பரீட்சைக்குபடித்துக்கொண்டிருக்கிறான். வேறு புதிய ஊழியர்களுக்குப் பின்னேர வேளையில்மாதம் பதினைந்து ரூபாய் வாங்கிச் சிங்களம் சொல்லிக் கொடுக்கிறான்.
ம்.... கந்தையா தனது துவாயைத் தட்டித் தோளில் போட்டான். கோபால்பற்பொடியைத் தேய்த்தபின் குளிக்கும் அறையை நோக்கி நடையைக் கட்டினான்.
அவன் குளித்த பிறகு அதே கிடாரத் தண்ணீர் ஒன்பது பேர் குளிக்க இருப்பதும்அவனுக்குத் தெரியும். எனவேதான் நேரத்தோடேயே காலைக் கடன்களை கழிக்கச்சென்று விட்டான். அவனது நடையிலே தளர்ச்சி, உடலிலே சோர்வு. உள்ளத்திலேகுமைச்சல். பாவம் கந்தையா இப்பவும் அடிப்படைச் சம்பளம் எண்பது ரூபா.
(சுதந்திரன் - 03.09.1967)
Nantri: eelaththusirukathaikal.blogspot
No comments:
Post a Comment