உலகச் செய்திகள்

டெல்லியில் பலியான மாணவியின் உடல் இன்று அதிகாலை தகனம்

 ஐவரிகோஸ்டில் அழிவுடன் ஆரம்பித்த புத்தாண்டு!

 இஸ்ரேலில் புதிய மைல்கல்லை எட்டிய யூதர்கள்

டெல்லியில் பலியான மாணவியின் உடல் இன்று அதிகாலை தகனம்

ஐவரிகோஸ்டில் அழிவுடன் ஆரம்பித்த புத்தாண்டு! பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி உயிரிழந்த மாணவியின் உடல் டெல்லி வந்தடைந்த சிலமணி நேரத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த 16-ந் தேதி மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கியது.
பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து மாணவியை தூக்கி வெளியே வீசியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு நீதி கோரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


பின்னர் அம் மாணவி இந்திய மத்திய அரசின் செலவில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். மாணவியின் உடல் நேற்று நள்ளிரவு ஆம்புலன்ஸ் விமானம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது.
டெல்லிக்கு கொண்டுவரப்பட்ட மாணவியின் உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கடுமையான பனிமூட்டத்துக்கு இடையே மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.    நன்றி வீரகேசரி 

2013-01-01 

ஐவரி கோஸ்ட் நாட்டில் புதுவருடத்தையொட்டி நடைபெற்ற நிகழ்சியொன்றில் சனநெரிசலில் சிக்கி சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 பேர் காயமடைந்துமுள்ளனர்.
அந்நாட்டின் அபிட்ஜான் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தாண்டையொட்டி மைதானமொன்றில் வானவேடிக்கை நிகழ்வொன்று இடம்பெற்றதுள்ளது. இதனை பார்வையிடும் பொருட்டு பெருந்தொகையான மக்கள் அங்கு கூடியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கியே பெருந்தொகையானோர் உயிரிழந்துள்ளனர்.   நன்றி வீரகேசரி

இஸ்ரேலில் புதிய மைல்கல்லை எட்டிய யூதர்கள்

 
இஸ்ரேலில் யூதர்களின் சனத்தொகை புதிய மைல்கல்லொன்றினை எட்டியுள்ளது.
அந்நாட்டு புள்ளிவிபரங்களின் படி இஸ்ரேல் வசிக்கும் யூதர்களின் எண்ணிக்கை 6 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இதுவொரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகின்றது.
இவ் எண்ணிக்கையானது இரண்டாம் உலகப் போர் காலப்பகுதியில் ஐரோப்பிய யூதர்கள் ஹிட்லர் தலைமையில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட எண்ணிக்கைக்குச் சமமானதென சுட்டிக்காட்டப்படுகின்றது.
இஸ்ரேலின் மொத்த சனத்தொகையான 7.89 மில்லியனில் 75.4 வீதமானோர் யூதர்கள் என்பதுடன் 20 வீதமானோர் அரேபியர்கள் எனவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும் உலகளாவிய ரீதியில் யூதர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.
யூதப்படுகொலையின் முன்னர் உலகளாவிய ரீதியில் யூதர்களின் எண்ணிக்கை 18 மில்லியனாக இருந்தது.
படுகொலைகளுக்கு பின்னர் அவ் எண்ணிக்கை 13 மில்லியனுக்கு சற்று அதிகமாக இருந்தது.
தற்போதும் அவ் எண்ணிக்கை 13 மில்லியனாகவே உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி 


No comments: