.
அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிக பிரமாண்ட இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள இக்கோயில் தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில், டிசம்பர் 23ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. 21 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலின் திருப்பணிகள் 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது.
ஆன்மிக தலமாக மட்டுமின்றி இந்தியாவின் பாரம்பரிய கட்டிட கலைகள்,. கலாச்சாரங்கள் ஆகியவற்றிற்கு மிகப் பெரிய சான்றாகவும், அடுத்த 1000 ஆண்டுகளுக்கு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும் விதமாக இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் அமைப்பதற்காக 10 கப்பல்களில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மார்பிள் கற்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நக்ரதி என்னும் கட்டிடக்கலை வகையில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலைச் சுற்றி கண்ணுக்கு குளுமை சேர்க்கும் மிகப் பெரிய தோட்டமும், நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.
35000 பளிங்கு மற்றும் மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், நிலஅதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் தலைசிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. 5 கூரிய கோபுரங்கள், 2 மிகப் பெரிய மாடங்கள், 4 மாடிகள், 122 தூண்கள், 129 நுழைவு வாயில்களையும் கொண்டுள்ளது இக்கோயில்.
21 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலின் முன்புறம் 91 தாமரை வடிவ பிரபதிபலிக்கும் கண்காணிகளைக் கொண்ட நீரூற்று அமைந்துள்ளது. இக்கோயில் கலாச்சார கூடம், உடற்பயிற்சி நிலையம், வகுப்பறைகள் கொண்டுள்ளது.
இக்கோயிலில் சூரியஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இவைகளும் இயற்கைக்கு தீங்கு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமும், நவீனமும் கலந்து மிகச் சிறந்த தொழில்நுட்பங்களால் இக்கோயில் அமைந்துள்ளது.
1 comment:
இந்த இந்துக்கோவிலில் எந்த சாமி இருக்கிறார்...முருகனா?பிள்ளையாரா?ராமரா? சிவனா? விஷ்ணுவா?
Post a Comment