வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு “பனையோ பனை”




ஞானா:       
என்ரை அப்பாவை மடக்கவே முடியாமல் இருக்கு. திருக்குறளிலை எதைக் கேட்டாலும் ஏதாவது மறுமொழி சொல்லித் தப்பியிடுறார். இன்டைக்கு ஆளை மடக்காமல் விடுகிறேல்லை.

அப்பா:       
என்ன ஞானா மடக்கிறது,  நீட்டிறுது எண்டு உன்ரை பாட்டிலை கதைக்கிறாய்?

ஞானா:       
அது வந்தப்பா பனைமரம் இருக்கெல்லே……..

அப்பா:       
பனைமரம் இருக்கேல்லை ஞானா, பனைமரம் நிக்குது. இலங்கையிலை,   யாழ்ப்பாணம்
        மன்னார்,  மட்டக்களப்பு எண்ட இடங்களிலை பனை மரம் நிறைய நிக்குது.

சுந்தரி:        அப்பா…. இவள் பிள்ளை ஞானாவுக்கு விளக்கமாய்ச் சொல்லுங்கோவன். தென்
        இந்தியாவிலை தமிழ்நாட்டிலும் பனைமரம் வளருதெண்டு.

அப்பா:        அதெண்டால் உண்மைதான். அது கிடக்கட்டும் …… ஞானா….இப்ப நீ ஏன் பனை
        மரத்தைப் பற்றி நிசை;சனி.

ஞானா:        அது வந்தப்பா பனை எண்ட சொல்லு திருக்குறளிலை இருக்கோ எண்டு யோசிச்சன்
        ஆனால் எனக்கு அப்பிடி ஒரு குறளும் தட்டேல்லை.

அப்பா:        குறள் எப்பிடித் தட்டும் எண்டு கேக்கிறன். நீ வந்து குறும்பு விடுறதுக்குச் சொல்லுத்
        தேடினால் கிடைக்குமே. புத்தகத்தைத் தட்டிப் பார். குறள் வந்து தட்டும்.

சுந்தரி:        அவள் பிள்ளை தெரியாமல்தானே கேக்கிறாள் அப்பா. நீங்கள் தெரிஞ்ச ஆள்
        சொல்லிக் குடுங்கோவன்.

அப்பா:        நான் அறிஞ்ச மட்டிலை சுந்தரி திருக்குறளிலை பனை எண்ட சொல்ல இரண்டொரு
        இடத்திலை வருகுது…..ஆனால்….

ஞானா:        ஆனால் எண்டு ஏன் இழுக்கிறியள் அப்பா…..பனையைப் பற்றி வள்ளுவர் சொல்லி
        இருக்கிறாரே? எங்கை சொல்லியிருக்கிறார்? பனை பயனுள்ள மரம் எண்டு சொல்லி
        இருக்கிறாரே.

அப்பா:        பனையின் பயன்களை வள்ளுவர் குறளிலை சொல்லேல்லை. அனால் பனை எண்ட
        சொல்லு திருக்குறளிலை இருக்கு எண்டுதான் சொல்ல வாறன்.

சுந்தரி:        எந்தக் குறள் எண்டு சொல்லுங்கோவன் அப்பா. அப்பதானே பிள்ளை ஞானா
        நம்புவள்.

அப்பா:        ஞானா செயந் நன்றியறிதல் எண்ட 11 வது அதிகாரத்திலை 104 வது குறளைப்
        பாத்திட்டுப் பனை எண்ட சொல்லு வருகுதோ இல்லையோ எணு;டு சொல்லு.

ஞானா:        ஓமப்பா இஞ்சை இருக்கப்பா குறள்.

                தினைத்துணை நன்றி செயினும் பனைத்துனையாக்
                கொள்வர் பயன்தெரி வார்.
        அப்பா இந்தக் குறளிலை வளளுவர் பனையைப்பற்றி ஒண்டும் பெரிசாய்ச்
        சொல்லேலiயே.

அப்பா:        ஞானா,  வள்ளுவப் பெருந்தகை பனையைப் பற்றியே அதிகாரம் எழுதியிருக்கிறார்?
        செய்ந் நன்றியறிதல் பற்றித்தான் அதிகாரம் எழுதியிருக்கிறார். இந்தக் குறளிலை
        தினையையும் பனையையும் உதவிபெற்ற மனிசருடைய உளப்பாங்குக்கு உவமை
        சொல்லியிருக்கிறார். நீர் என்ன சொல்லுறீர் சுந்தரி.

சுந்தரி:        நானும் அப்பிடித்தான் சொல்லிறன் அப்பா. பனை ஏண்ட சொல்லைப் பெரிய
        அளவுக்கும்தினை எண்ட சொலைச் சிறிய அளவுக்கம் சொல்லியிருக்கிறார்.
        அதாவது வந்து ஞானா தினை ஒரு வகைத் தானியம். மிகச் சிறிதாய் இருக்கும்.
        பனை வந்து உயரமான மரம். உயரத்திலை பெரிசாய் இருக்கும்.

அப்பா:        சரியாய்ச் சொன்னீர் சுந்தரி. ஒருவர் செய்த நன்றியின் பயனை உணரக்கூடியவர்கள்,
        ஒருவன் ஒரு சிறிய உதவியைச் செய்தாலும் அதை மிகப் பெரிதாகப்
        பாராட்டுவார்கள் என்பது இந்தக் குறளின் கருத்து.


ஞானா:        விளங்குதப்பா. திருக்கறளிலை பனை எண்ட சொல்லு இருக்கு. ஆனால் பனையின்
        பயன் சொல்லப்படயில்லை.

அப்பா:        பனையின் பயனை அறிய நீ திருக்குறளக்குப் போக வேண்டியதில்லை. என்னட்டைக்        கேள். நான் சொல்லிறன் அசல் யாழ்ப்பாணத்தான்.

ஞானா:        முந்தியும் ஒருக்கால் சொன்னனியள். இப்ப வேறை பயன் இருந்தால் சொல்லுங்கோ
        பாப்பம்.

அப்பா:        ஞானா பனையின் பயன் நிறைய இருக்கு. இப்ப கொஞ்சமாய்ச் சொல்லிறன் கேள்.
           
            குருத்தை வெட்டிச் சார்வாக்கிக்
            கூடை கடகம் பெட்டி குட்டான்
            பட்டை பறிகள் சுளகுதட்டு
            பாயும் பலபல பன்னமுமாய்
            உறியும் உமலும் திருகணையும்
            ஊற்று இறைக்கக் கொடிதானாய்
            எத்தனை எத்தனை ஏதனமாய்
            ஏடாய்த் தருவாய் உன்குருத்தை.

சுந்தரி:        அப்பா….உவள் பிள்ளைக்கு உதெல்லாம் எங்கை விளங்கப் போகுது.

அப்பா:        சுந்தரி,  ஞானாவுக்கு மட்டுமில்லை,  இந்தகாலத்துத் தமிழ் பிள்ளையள் ஒண்டுக்கும்
        உதுகள் விளங்காது. ஆனால் விளக்கிச் சொல்ல வேண்டியது எங்கடை கடமை.

ஞானா:        Very good  அப்பா,  விளக்கிச் சொல்லுங்கோ கேப்பம்.

அப்பா:        அதாவது வந்து ஞானா பனை மரத்தின்ரை ஓலைக் குருத்தை அது ஓலையாய்
        விரியமுந்தி வெட்டி எடுத்து வெய்யிலிலை காயவிட வேணும். அப்பிடிக் காஞ்ச
        குருததைச் சார்வு என்டு சொல்லுவினம். அதை விரிச்சால் மெல்லிய மஞ்சல்
        நிறத்திலை அந்த ஓலை இருக்கும்.

சுந்தரி:        அதிலை உள்ள ஈர்க்கை எல்லாம் வார்ந்து எடுத்து நல்ல நீளமான ஓலைத்
        துண்டுகளாக்கி எத்தினைகோ ஏதனங்கள் செய்யலாம்.

அப்பா:        கூடையள்,  மூடல் பெட்டிகள்,  பெரிய கடகங்கள் எல்லாம் இழைக்கலாம்.

ஞானா:        குட்டான் எனடால் என்ன அப்பா?

சந்தரி:        அதுவந்து ஞான அளவிலை சிறிய பெட்டிமாதிரியான ஒரு பொருள்.

அப்பா:        பழைய காலத்திலை பென்சில் பேனை போட்டுக் கொண்டு பேறது இப்பிடியான
        சின்க் குட்டானிலைதான் ஞானா.

ஞானா:        அப்பிடியென்டால் பறி என்டு சொல்லிறது என்னத்தை அப்பா.

அப்பா:        அதுவந்து ஞானா,  ஓலையாலை இழைச்ச கூடை. அதிலை மீன்களைப்
        பிடிச்சுப் போடுவினம். சில வேளை புல்லுச் செருக்கி அதிலை அடைஞ்சு
        கொண்டு போவினம்.

சுந்தரி:        சுழுகும் தட்டும் அரிசி புடைக்க நாங்கள் வைச்சிரக்கிறம் அதுதான்.

அப்பா:        ஞானா…….நாங்கள் அவசரமாய் ஒரு இடத்துக்குப் போக வேணும்.
        பிறகு வந்து மிச்சத்தைச் சொல்லிறன் இப்ப விடு மேனை.

ஞானா:        சரி அப்பா….உறி,  உமல் உதுகள் எனக்குத் தெரியாத சொல்லுகள்
        பிறகு கட்டாயம் சொல்ல வேணும்.

சுந்தரி:        அடுத்த முறை பாப்பம். இப்ப நாங்கள் போக வேணும் எங்களை விடு
        பிள்ளை.

(இசை)




No comments: