அதிசயம் மிக்க அற்புதமான பரதநாட்டிய அரங்கேற்றம்.


.


அண்மையில் மெல்பேணில் நடைபெற்ற செல்வி சக்தி ஐஸ்வர்யா கண்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் அதிசயம் மிக்கதோர் அற்புத நிகழ்ச்சியாகப் பார்வையாளர்கள் அனைவரையும் பரவசம் கலந்த வியப்பில் ஆழ்த்தியது. செல்வி சக்தி கண்ணன் மூன்றுவயதிலிருந்தே பரதநாட்டியத்தை முறையாகக் கற்று வருபவர். இப்பொழுது பத்து வயது நிரம்பிய சக்தி கடந்த ஏழாண்டுகளாக பரத நாட்டியத்தில் இடைவிடாத பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்.

கடந்த 2012 ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி, மொனாஸ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள விசாலமான, றொபேட் பிளெக்வூட் மண்டபத்தில் அவரது பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. பரதசூடாமணி இந்திய நடனக் கல்லூரியின் இயக்குனரான திருமதி நர்மதா ரவிச்சந்திராவின் மாணவியான சக்தியின் அரங்கேற்றத்திற்கு வந்திருந்த ஏறத்தாழ ஆயிரம்  பார்வையாளர்களால் மண்டபம் நிரம்பிவழிந்தது. மெல்பேணின் பெரும்பாலான பகழ்பெற்ற நடனப்பள்ளிகளின் ஆசிரியைகளும், மற்றும் நுண்கலைப் பள்ளிகளின் ஆசிரியர்களும் சமூகமளித்திருந்தனர்.முதலில் பாடகர், திரு. ஹரி பிரசாத் அவர்கள் தமது கணீரென்ற குரலில் பிறையணியும் பெருமான் மைந்தனைப் போற்றிப் பணிந்தேனே என்ற இறைவணக்கப்பாடலை பாடினார். அரங்கேற்றம் பரதாஞ்சலியுடன் ஆரம்பமானது. “ஆனை முகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன் ஞானகுரு வாணிபதம் நாடு” என்ற பாடலுக்கும், அதற்கு ரவி ரவிச்சந்திரா அவர்களால் அமைக்கப்பட்டிருந்த அற்புதமான ஜதிக்கும் மிகவும் விறுவிறுப்பாக ஆடிய க்தியின் முதலாவது ஆட்டமே பின்னால் தொடரப் போகும் நடனங்களில் வெளிப்படுத்தப்படவிருக்கும் அவரது திறமைக்குக் கட்டியம் கூறும் விதமாக இருந்தது.


அடுத்ததாக விநாயகர்துதி இடம்பெற்றது. ஹரஹரப்பிரியா இராகத்திலும், ஆதி தாளத்திலும் அமைந்த, பாபநாசம் சிவன் அவர்களது பாடலான “கணபதியே கருணா நிதியே” என்ற பாடலுக்கு திருமதி நர்மதா  ரவிச்சந்திரா அமைத்திருந்த அழகான நடன அமைப்பை சக்தியின் ஆடல் மகிழ்ந்து இரசிக்க வைத்தது. தொடர்ந்து இடம்பெற்றது தமிழ், தெலுங்கு, சமஸ்திருதம் ஆகிய மும்மொழிகளில், கலாநிதி பாலமுரணி கிரு~;ணா அவர்களால் இயற்றப்பட்டிருந்த பாடல்.  அதற்குக் நர்மதா அமைத்திருந்த அற்புதமான நடனமாகும். அங்க அபிநயத்திலும், முகபாவதிதிலும் சக்தியின் வயதுக்கு மீறிய திறமை அதில் பளிச்சிட்டது.
அரங்கேற்றத்தில் நான்காவதாக தோடய மங்களம் இடம்பெற்றது.


அன்னமாச்சார்யா அவர்களது பாடல். பாடலுக்கான ஜதி அமைப்பும், நடன அமைப்பும் பத்மஸ்ரீ அடையாறு லக்ஸ்மன் அவர்கள். நான்கு வகை இராகங்களிலும், ஐந்து வகைத் தாளங்களிலும் அமைந்திருந்த இந்தச் சிறப்பான பாடலிலும், வனப்பான நடன அமைப்பிலும் கிரு~;ணனாகவும், இராமனாகவும், நரசிம்மனாகவும் மூவித முகபாவங்களைக் காட்டி விறுவிறுப்பாக ஆடவேண்டியிருந்த சவாலில் தனது திறமையால் வெற்றியடைந்த அரங்கேற்ற நாயகி சக்தியைப் பாராட்டிய மகிழ்வான கரகோச ஒலி மறைய நெடுநேரம் எடுத்தது.
ஐந்தாவதாக இடம்பெற்ற திரிசக்தி வர்ணத்திற்கான பாடலைக் கவி கண்ணன்

மூர்த்தி அவர்கள் இந்த அரங்கேற்றத்திற்காகவே இயற்றியளித்திருந்தார். நவராத்திரி காலத்தில் அரங்கேற்றம் நடைபெறுவதை முன்னிட்டு திருமதி. நர்மதா இரவிச்சந்திரா சக்திகளின் பெயர்களில் அமைந்த பன்னிரண்டு இராகங்களில் ஆதி தாளத்தில் இந்தப் பாடலுக்கு இசையமைத்ததுடன் நடன அமைப்பையும் செய்திருந்தார். ஜதியை ஆக்கியவர் திரு ரவி ரவிச்சந்திரா. பார்வையாளர்களை விழித்தவிழி மூடாமல் பார்க்கவைத்த நடனங்களில் இதுவும் ஒன்று. பத்துவயதுச் சிறுமியா இங்கே ஆடுவது என்று வியந்து பாராட்ட வைத்தது.அடுத்ததாக இடம்பெற்ற முருகன் கீர்த்தனத்தில் முதலில் சில நிமிடங்கள் மயில் தோகையுடனும்,  பின்னர் தோகையில்லாமலும் ஆடியபோது பார்த்தவர்கள் மிகவும் பரவசமுற்றனர். பத்துவயதுச் சிறுமியியான சக்தியின் அழகான அந்தச் சின்னஞ்சிறிய உடல் அந்த அழகான தோகைக்குள் நுழைந்திருந்தபோதும்,  பின்னர் மேடை முழுவதும் வளைந்து வளைந்து ஆடியபோதும்
மயிலொன்று அரங்கேறி வந்து ஆடுவது போன்ற உணர்வே ஏற்பட்டது.அடுத்து இடம்பெற்ற, ஆடினாயே கண்ணா என்ற பாடலுக்கான நடன அமைப்பைச் செய்திருந்தவர் ஆயிரம் அரங்கேற்றம் கண்ட கலைமாhணி திருமதி இந்திரா ராஜன் அவர்கள். அவரும் இந்த அரங்கேற்றத்திற்கு இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்து சக்தியின் திறமைகளை விதந்துரைத்தார். இந்த நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக அவர் அழைக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.பிரபல நாட்டிய மேதையான திருமதி. பத்மா சுப்பிரமணியம் அவர்களின் மாணவியான திருமதி சுஜாதா மோகன் அவர்களும் தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்தார். அடுத்ததாக இடம்பெற்ற இரண்டு நடனங்களையும் சக்திக்கு அவரே பயிற்றுவித்திருந்தார். முதலில் இடம்பெற்ற ஆடுபாம்பே என்ற பாம்பு நடனத்தில் சக்தி சபையோரை அசத்திவிட்டார். இப்படி ஒரு பாம்பினால்கூட ஆடமுடியுமா என்று பார்வையாளர்களை வியக்க வைத்தார். மிகவும் அசாத்தியத் திறமைதான்! அடுத்ததாக இடம்பெற்ற சிவ நடனத்தில் பார்வையாளர்கள் தமது இருக்கைகளின் நுனிக்கே வந்து அமர்ந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றியது. முகபாவமும்,  விறுவிறுப்பும்,  வேகமும் அத்தனை சிறப்பாக இருந்தன.
தில்லானா இடம்பெற்ற போது இந்தச் சிறு பிள்ளையின் மெல்லிய பாதங்கள் இவ்வளவு நேரம் ஆடவேண்டுமா என்று பார்வையாளர்களை அன்புருகிக் கவலைப்படுத்தும் அளவுக்கு நடன அமைப்பு இருந்தது. சக்தி அதனைச் சிறப்பாக நிறை வேற்றினார். தில்லானாவில் தனது திறமை முழவதையும் வெளிப்படுத்திச் சபையோரின் கரவொலியைத் தனதாக்கிக்கொண்டார்.

தில்லானா வைத் தொடர்ந்து இடம்பெற்ற “முத்தைத்தரு பத்தித்திரு நகை” என்ற திருப்புகழுக்கான நடனம் கலை உணர்வும் பக்தி உணர்வும் கலந்ததோர் உச்சப் பரவசத்தினைக் கொடுத்துப் பார்வையாளர்களை மெய்ம்மறக்கவைத்தது. மிகவும் சிக்கலான ஜதியோடு அமைந்த தத்திமெட்டில் வலப் பக்கம், இடப்பக்கம் என்று இருபுறமும் சீரான வேகத்துடன் சாதாரணமாக அரங்கேற்றத்தில் யாரும் ஆட முற்படாத மூன்றாம் காலப்பிரமாணத்தில் சக்தி ஆடியமை மிகவும் பாராட்டுக்குரியதாகும்.


திருப்புகழுக்கான நடனத்துடன் மங்களமும் இடம் பெற்று அரங்கேற்றம் நிறைவுபெற்றது.

செல்வி சக்தி  ஆரம்பம் முதல் இறுதிவரை எவ்வித களைப்பும், தோன்றாமல் மிகவும் உற்சாகமாக ஆடினார். இத்தனை சிறப்பாக ஆடுவது பத்து வயதுச் சிறுமியா என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் அவரின் ஆட்டத்தில் அத்தனை அழுத்தம் இருந்தது. அனுபவம் மிக்க நர்த்தகியொருவருக்குரிய தெளிவும்,  நிதானமும் தெரிந்தது. பத்து வயதிலேயே பரதநாட்டியத்தின் நுணக்கங்களையெல்லாம் கற்றறிந்ததோர் மேதைபோலவே சக்தியின் ஆடல் முறையும்,  அபிநயமும்,  பாவங்களும,  தாளக்கட்டும்; அமைந்திருந்தன.

திருமதி நர்மதா ரவிச்சந்திரா நடனத்தை மட்டுமன்றி,  வாய்ப்பாட்டு,  வயலின் என்பவற்றையும் கற்பிக்கும் ஓர் பல்கலைக் கலைஞர். கணீரென்று ஒலியெழுப்பும் அவரது சிறப்பான குரல்வளம் அவரின் திறமையான நட்டுவாங்கத்திற்கு மேலும் மெருகூட்டியது. இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த திறமைமிகு சங்கீத வித்துவான் திரு ஹரி பிரசாத் அவர்களின் வாய்ப்பாட்டுக்கு,  மிகப் பிரபலமானவர்கள் பக்கவாத்தியக் கலைஞர்களாக அமைந்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்கள். நர்மதாவின் கணவரும்,  ஏறத்தாழ தனது நாற்பது மாணவர்களுக்கு அரங்கேற்றம் கண்டவருமான பிரபல மிருதங்கக் வித்துவான் திரு ரவி ரவிச்சந்திரா மிருதங்கம் வாசித்தார். அவர்களது பிள்ளைகள் சாய் நிவேதன், சாய் சாரங்கன் ஆகியோரும் தாளவாத்தியக் கருவிகளை வாசிப்பில் இணைந்திருந்தனர். சர்வதேசப் புகழ்பெற்ற இசைவாத்தியக் கலை மேதைகளான திரு ஏஜீஏ ஞானசுந்தரம், வயலின், திரு. ரமணி தியாகராஜன் புல்லாங்குழல், ரவி ரவிச்சந்திராவின் மாணவரான ஹரி ரவீந்திரன்,  மோஸிங் என்றிப்படி மிகச் சிறந்தää அனுபவம் மிக்க கலைஞர்களின் திறமைகளுக்கு ஈடுகொடுத்துப் பத்து வயதுச் சிறுமியான சக்தி அற்புதமாக ஆடினார். பாடகரும், பக்கவாத்தியக் கலைஞர்களும் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் தமது திறமைகளை வெளிப்படுத்தி அரங்கேற்ற நாயகிக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள்.


கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட, சக்தி கல்விகற்கும்,   “Melbourne Presbyterian Ladies’ College” இன் கனிஷ்ட வளாகத்தின் தலைவி, செரில் பென்வேதி தனது உரையில் இந்தக் குழந்தை எப்படி இவ்வாறு ஆடுகிறாள் என்று தான் அதிசயப்படுவதாகக் கூறினார். தங்கள் பாடசாலையில்,  படிப்பில் மட்டுமன்றிக் கல்வி சாராச் செயற்பாடுகளிலும்கூட மற்றைய மாணவர்களுக்கு முன்னுதாரணம்மிக்க மாணவியாக சக்தி திகழ்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலாமேதைகள்,  தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், நுண்கலை வித்துவான்கள் முதலியோர் உட்படப் பலதரப்பினருக்கும் முன்னிலையில் இந்தச் சிறிய வயதில் எல்லோரும் மகிழ்ந்தும் வியந்தும் பாராட்டும் வகையில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தினைச் செவ்வையாகவும், சிறப்பாகவும் செல்வி. சக்தி ஐஸ்வர்யா கண்ணன் பூர்த்திசெய்தார் என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை. அவர் கல்வியிலும், கலையிலும் உயர்ந்து, வாழ்வில் பல்வேறு சிறப்புக்களைப் பெற்று புகழ்பூத்து விளங்க நமது பாராட்டுக்கள்.

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா7 comments:

Anonymous said...

Take a bow Shakkthi! Congratulations!!

Tamilmurasu said...

நன்றி உங்கள் பதிவிற்கு
பெயரைப் போட்டிருக்கலாமே

kalai said...

please write more info on this child please.

kalai

Anonymous said...

Excellent dance performance Shakkthi. I have been to several Arangetram’s but enjoyed your one very much. Keep it up…

Kamalanathan

Anonymous said...

Dear Shakkthi, I have never seen an arangetram like yours in my life. It was amazing. Can your guru organise another show for all the rasikas who missed out. please ?

RASARATNAM

jaya@jaya said...

Hi Shakkthi,
really loved your dancing! Have you posted your dance on u-tube? Please share the link.
thanks,

Jaya

Shakkthi said...

Hi Jaya, here is the link to some of my dances on youtube: https://www.youtube.com/channel/UC6F7DJSsZ7wnQHs89PAyDnA