.
கிருஷ்ணா இயக்கும் "நெடுஞ்சாலை" | ||||||||
சூர்யா- ஜோதிகா நடித்து வெற்றி பெற்ற ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கியவர் கிருஷ்ணா. | ||||||||
இவர் அடுத்ததாக பைன் போகஸ் பட நிறுவனம்
சார்பாக சௌந்தர்ராஜன், ஆஜு இருவரும் இணைந்து தயாரிக்கும் "நெடுஞ்சாலை"
படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆரி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஷிவதா நடிக்கிறார். இவர்களுடன் கண்ணன் பொன்னையா, தம்பி ராமய்யா, பிரசாந்த் நாராயணன் சலீம்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தினைப் பற்றி இயக்குனர் கிருஷ்ணா, படப்பிடிப்புகள் பெரும்பகுதி முடிவடைந்துவிட்டாலும் தற்போது தேனி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாலையோர மக்களின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றார். தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் வசனம்- ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவு- ராஜவேல், இசை- சி.சத்யா எங்கேயும் எப்போதும் படத்திற்கு இசையமைத்தவர். கலை- சந்தானம், எடிட்டிங்- கிஷோர், நடனம்- நோபல், ஸ்டன்ட்- லிலீப் சுப்பராயன், பாடல்கள்- கார்த்திக் நேத்தா, மணி அமுதன், தயாரிப்பு மேற்பார்வை- கண்ணன், தயாரிப்பு- சௌந்தர்ராஜன், ஆஜு, கதை, திரைக்கதை, இயக்குனர்-கிருஷ்ணா. நன்றி விடுப்பு
|
No comments:
Post a Comment