இலங்கைச் செய்திகள்

.
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்: யாழ். பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்

மன்னாரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காரணங்கள், அறிவித்தலின்றி யாழில் 9 பேர் கைது

சட்ட வழிமுறைகள் ஊடாக யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு பத்திரிகைகளுடன் இராணுவம் போராடுகிறது
   என்.சத்தியமூர்த்தி

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்: யாழ். பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்

மன்னாரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படையினரால் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமானது.

இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். ஸ்ரீதரன், ஈ. சரவணபவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இளைஞர் அணியினர் உட்பட 500 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

'தமிழ் மக்களை கொலை செய்யாதே", 'இனவாத ஒடுக்குமுறையை நிறுத்து", 'கைது செய்த மாணவர்களை விடுதலை செய்", 'அராஜகங்கள் வேண்டாம்" போன்ற பதாகைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.   

 நன்றி வீரகேசரி 

இந்திய வீட்டுத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் அநீதியான முறையில் பகிரப்பட்டமையினை கண்டித்து மன்னார் பிரஜைகள் குழுவும், மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு மற்றும் காணியுரிமைக்கான மக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.


யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து பல இன்னல்களைக் கடந்து மீள்குடியேறிய மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வில் இடம்பெற்ற அநீதியைச் சுட்டிக்காட்டியும், நீதியான முறையில் பகிர்வுகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியும், அதே யுத்தத்தில் இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறி தொழில் துறைகளை இழந்த மீனவர்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் உபகரணங்களையும் வழங்குவதில் காட்டப்படும் பாரபட்ச செயற்பாடுகளை கண்டித்தும் அவற்றின் தெரிவிலும், விநியோகத்திலும் சீர் செய்யுமாறு கோரியும் குறித்த உண்ணாவிரதம் இடம்பெற்று வருகின்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்திலிருந்து அனைத்து கிராமங்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மீள்குடியேற்றக் கிராம மக்கள் அதிகளவில் கலந்துகொண்டனர்.

நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதி நிதிகள், அருட்தந்தையர்கள் என பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.


மேலும் இன்று மாலை 3 மணியளவில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி  

 

 

 

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
By Hafeez
2012-12-05 15:21:48

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைதுஇ பெண் மாணவர்களின் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்தமை ஆகியவற்றை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பேராதனை கலஹா சந்தியில் ஒன்று கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் பௌத்த பிக்குகள் உட்பட்ட நூற்றுக் கணக்கான மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோ~மிட்டு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.

“வையாதே வையாதே எம் மீது கை வையாதே”, “பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே இராணுவம் செல்வதை உடன் நிறுத்து” இ “கைது செய்த மாணவர்களை உடன் விடுதலை செய்” போன்ற கோ~ங்களை எழுப்பினர்.


நன்றி வீரகேசரி  

 

 

 

  காரணங்கள், அறிவித்தலின்றி யாழில் 9 பேர் கைது


By Priyarasa
2012-12-05 11:29:34
எவ்வித காரணமும், அறிவித்தலும் இன்றி 9 பேர் விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர்களின் உறவினர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட கைதுகளுக்கும் தமக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லையெனவும் தம்மால் இதனையிட்டு எதுவும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு விசாரணைகளுக்கென பொலிஸாரினால் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 

 

 

 

 

 

சட்ட வழிமுறைகள் ஊடாக யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு பத்திரிகைகளுடன் இராணுவம் போராடுகிறது
   என்.சத்தியமூர்த்தி
இராணுவ முகாம்களுக்கு அருகில் அமைந்துள்ள குடிமக்கள் வாழ்விடங்களைச் சுற்றியுள்ள ஆயுதப்படையினரின் பிரசன்னம் ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் மோசமாக இல்லாவிட்டாலும் அளவுக்கு மீறிய ஆயுதப்படையினரின் பிரசன்னம் ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தலாம். நல்ல நேரங்களில்கூட அளவுக்கதிகமான ஈடுபாடு ஒரு நட்பை வெறுக்கும் தன்மையான ஒரு உறவை உருவாக்குமே தவிர, நல்லதையல்ல. திரும்பவும் இது ஒரு உலகளாவிய நிகழ்வாகவே இருக்கிறது, மற்றும் இரு தரப்பினரும் இதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
uthayanjagath_jayasuriyaயாழ்ப்பாணத்திலிருந்து பிரசுரமாகும் இரண்டு தமிழ் செய்திப் பத்திரிகைகளுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையூடாக இராணுவம் சொல்ல நினைப்பது - மற்றும் சரியாகச் சொல்வதானால்: “இராணுவம் சட்டத்துக்கு மேலானது அல்ல, அதேபோல நாங்கள் சட்டத்துக்கு கீழானவர்களும் அல்ல, மற்றும் இராணுவத்தினதும் மற்றும் எங்கள் வெற்றி வீரர்கள் ஆகியோரின் நல்ல பெயரைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் உக்கிரமாகப் போராடுவோம்” என்கிற செய்தியையே.
நீதிமன்ற வழக்கு, ஒவ்வொரு பத்திரிகையிடமும் 100 மில்லியன் ஸ்ரீலங்கா ருபாய்களை நட்டஈடாகக் கோருகிறது. அவை இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்.ஜெனரல். ஜெகத்சூரியாவின் பெயரினால் தொடரப்பட்டுள்ளன.
இராணுவத்தின் அறிக்கைகளின்படி இதேபோன்ற இன்னும் பல வழக்குகள் வரக்கூடும் என்று நம்பப்படுகிறது. இராணுவ தலைமையகத்தின் பணிப்பாளர்(சட்ட) அலுவலகம், மற்றும் ஜெனரல். ஜெகத்சூரியா ஆகியோர் கைநிறைய விடயங்களை வைத்துள்ளார்கள், மற்றும் எதற்கும் தயாராக அவர்களின் பேனாவில் எப்போதும் மை நிறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், பரப்பப்படும் வதந்திகள் மற்றும் ஆயுதப் படைகளுடன் அடிக்கடி தொடர்புடைய வேறு விடயங்கள் போன்ற சட்டரீதியான கவலைகளுக்கு தீர்வுகாண நீதித்துறையை அணுகி திருத்திக் கொள்வதுதான் சிறந்த வழி. இராணுவ அறிக்கை தெரிவித்திருப்பது, யாழ்ப்பாணத்தில் ஒரு தற்கொலை சம்பவம் இடம்பெற்றால்கூட இந்த இரண்டு பத்திரிகைகளும் அந்தப் பகுதியில் ஒரு இராணுவ முகாம் இருப்பதாக அறிவிப்பதை சுட்டிக்காட்டத் தவறுவதில்லை, இதன்படி தேவையற்ற முறையில் இராணுவத்தின்மீது அவதூறு பரப்புகிறது”.
இவைகள் நீதிமன்றங்களினால் தீர்ப்பளிக்க, அல்லது சிவில் சமூகங்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய விடயங்களாகும். ஆனால் சில நோக்கங்களை கொண்ட ஊடகப் பிரிவினர், ஒரு பயணத்தை நடுவழியில் நிறுத்துவதுபோல, ஏதாவது ஒன்றை அல்லது இரண்டையுமே மாற்றீடு செய்ய வழி தேடுகிறார்கள். அல்லது அதுதான் இராணுவத்தினருடைய தற்போதைய குற்றச்சாட்டாக உள்ளது. ஊடகங்கள், சிவில் சமூகங்கள் மற்றும் ஆட்சிஅமைப்பு என்பனவற்றிற்கு பதிலாக தங்களை மாற்றீடு செய்ய முயற்சிக்கின்றன, இந்த ஊடக விசாரணை என்பது உண்மைகளை திரித்துக் கூறுதல் என்பதைவிட மோசமானவை.
அது சாதாரணமாக யுத்த களத்துக்கு வெளியே உள்ளவர்களை, சட்டத்தை பயன்படுத்தி எதிர்ப்பாளர்களை அதட்டிக் கீழடக்க முயலுவதைப் போன்றது என்கிற பழியை இராணுவம் மற்றும் அரசாங்கம் மீது சுமத்துவதை ஒத்தது. ஊடகத்துறையின் நண்பர்கள் மற்றும் ஜனநாயகத்துக்காக குரல் எழுப்புபவர்கள், போன்றவர்கள் அதிக செலவுமிக்க நீதிமன்ற வழக்குகள் விமர்சனங்களை நிரந்தரமாகவே மௌனமாக்கிவிடும் என்று வாதிப்பது வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல. இதுபோன்ற நீதித்துறையின் தீர்ப்புகள் ஊடக நிறுவனங்களின் வியாபாரத்தை பாதிப்பதுடன் அவற்றுக்கு நட்டமேற்படுத்தி நிரந்தரமாக முடக்கிவிடுவதற்கும் சாத்தியம் உள்ளது. அல்லது அதுதான் விவாதமாகவும்; இருக்கும். ஸ்ரீலங்காவிற்கு இது ஒன்றும் அதிசயமான சம்பவமல்ல. நிச்சயமாக இனப்போர் மற்றும் வன்முறைகளுக்குப் பின்னர்  ஆயுதப்படைகள் மீள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு போன்றவற்றில் ஈடுபட்டு வந்துள்ளதால், இது ஒன்றும் விசித்திரமான சம்பவம் அல்ல. சந்தேகக் கண்கொண்டு நோக்கி வந்த சர்வதேச சமூகம் போரினால் சீரழிந்த வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆயுதப் படைகள் ஆற்றிவரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை குறைந்தது ஓரளவுக்காவது ஏற்றுக்கொண்டுள்ளது.
மற்றைய விவாதங்களையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு நோக்கினால், ஆயுதப்படைகள் திட்டமிடலாளர்கள், நிறைவேற்றுபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆக பங்களிப்பு செய்திருக்காவிட்டால் இந்த மீள்கட்டுமானப் பணிகள் இத்தனை விரைவாக நிறைவேறியிருக்குமா என்கிற அரசாங்கத்தின் கேள்வியுலும் நியாயம் இல்லாமல் இல்லை. மீள்கட்டுமானப் பணிகளுடன் ஒத்து நோக்கும்போது மீள்குடியேற்றம் நிறைவடையாமல் அல்லது திருப்தி தராமல் இருக்குமாயின் அதற்கு ஆயுதப்படையினரை குறை சொல்ல முடியாது. அது அரசாங்கத்தின் நிருவாக முடிவு, அதற்கு இராணுவம் சில உள்ளீடுகளை வழங்கியிருக்கலாம்.
இராணுவ முகாம்களுக்கு அருகில் அமைந்துள்ள குடிமக்கள் வாழ்விடங்களைச் சுற்றியுள்ள ஆயுதப்படையினரின் பிரசன்னம் ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் மோசமாக இல்லாவிட்டாலும் அளவுக்கு மீறிய ஆயுதப்படையினரின் பிரசன்னம் ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தலாம். நல்ல நேரங்களில்கூட அளவுக்கதிகமான ஈடுபாடு ஒரு நட்பை வெறுக்கும் தன்மையான ஒரு உறவை உருவாக்குமே தவிர, நல்லதையல்ல. திரும்பவும் இது ஒரு உலகளாவிய நிகழ்வாகவே இருக்கிறது, மற்றும் இரு தரப்பினரும் இதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
சமூக ஒருங்கிணைப்பு
ஆயுதப்படைகள் வடக்கு மற்றும் கிழக்கில் வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் விசித்திரமான சூழ்நிலையில், வதந்திகள் பரவுவதும், மற்றும் கீரீஸ் பிசாசுகள் என்ற ஒன்று இல்லாதபோதும்கூட பிசாசுகளின் போக்கு உள்ளது என்கிற ஊகங்களைத் தெரிவிக்கும் அறிவித்தல்கள் மற்றும் பதிவுகள் பற்றிய ஒரு நீண்ட வரலாறும் உள்ளது. இன்னும், சமூகத் தலைவர்களின் பங்களிப்புக் கொண்டு ஒருங்கிணைப்பு குழுக்களை அமைப்பது பற்றி இராணுவம் சிந்திக்கலாம், மற்றும் பொதுவான குறிப்பிட்ட தன்மையான முறைப்பாடுகளை கவனிப்பதற்கான ஒரு உள்ளக பொறிமுறையை இந்தக் குழுக்களுடாக ஏற்படுத்துவதன் மூலம் அவற்றை நிவர்த்தி செய்யலாம்.
ஈழப்போர் - 4 ன் உச்சக்கட்டத்தின்போது, ஆயுதப்படையினர் புரிந்த மிகைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளைப் பற்றியே எந்த நேரமும் சர்வதேச சமூகம் முறைப்பாடு செய்து வருகிறது, அந்தக் காலப்பகுதியில் தனிப்பட்ட படைவீரர்கள்மீது கூறப்பட்ட குறிப்பிட்ட புகார்கள் சம்பந்தமாக நடத்தப்பட்ட 7000க்கும் மேற்பட்ட இராணுவ நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் குறிப்பிடுகிறது.
முன்னும் பின்னுமாக ஏற்பட்ட ஆயுதப்படைகளின் தளபதி சரத் பொன்சேகாவின் திடீர் திருப்பம் விடயங்களுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ஆரம்பத்தில் தவறு செய்த படைவீரர்களுக்கு எதிரான போர்க்கால நடவடிக்கைகள் எல்லாவற்றையும் அவர் திறமையான செயலாகவே எடுத்துக் கொண்டார். அது உறுதியான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது அதிக காலம் நிலைத்திருக்கவில்லை.
இன்னும் நிலமைகள் ஒரு பொது வடிவம் பெற்று, மற்றும் தமிழ் சமூகத்தினரிடையே ஏற்பட்ட அதிக தொகையான யுத்த மரணங்கள் பற்றிய தகவல்கள் வெளிப்பட ஆரம்பித்ததும் பிரச்சினைகள் நிலை மாறத் தொடங்கின. அரசாங்கம் தற்காப்பை மேற்கொள்ள முயன்றிருக்கலாம், ஆனால் எதையும் செய்வதற்கு ஏற்ற நேரமோ அல்லது சாய்வையோ மேற்கொள்ள முடியாமல் சர்வதேச சமூகத்திடமிருந்து ஆயுதப்படையினரை பாதுகாப்பது என்கிற முடிவில் கொண்டுவந்து சேர்த்தது.
ஐநாவின் ஒருதலைப்பட்ச அறிக்கைகள் அல்லது என்ன?
ஐநா அறிக்கைகளில், ஈழப்போர் - 4; முடிவடைந்ததிலருந்து, பயங்கரவாத மோதலின் கடைசிக் கட்டத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் இழப்பு மிகைப்படுத்தப்பட்டவை, என்பதை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. பெற்ரியின் அறிக்கை ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படுவதற்கிடையில் வெளியே கசிவதற்கு வழங்கப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொண்டால்,பொதுமக்கள் செறிவான இடங்களில் அரசாங்கம் குண்டுத் தாக்குதல் நடத்தியது என்கிற குற்றச்சாட்டையும் வெளிவிவகார அமைச்சு ஒரு விதிவிலக்காகவே எடுத்துக் கொண்டுள்ளது, அரசாங்கம் வடபகுதிக்கான உணவு மற்றும் மருந்துகளை வேண்டுமென்றே மட்டுப்படுத்தியது மற்றும் நலன்புரிக் கிராமங்களின் இயல்பு பற்றி அடிக்கடி எழுப்பப்பட்ட குற்றச்சாட்டான, அவை இராணுவம் நடத்தும் காவல் முகாம்களைப் போலிருந்தன என்பனவற்றையும் அடிப்படையற்றவை என்று மறுத்துள்ளது.
இப்போது பெற்ரியின் அறிக்கையில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அல்லது முன்னர் தருஸ்மான் அறிக்கையில் குறிப்பிட்டவைகள், இரண்டுமே ஐநா நடைமுறையின்படி செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட குறிப்புதவிகளுக்காக வெளியிடப்பட்ட உள்ளக ஆய்வுகள்.இரண்டுமே செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப் படுவதற்கு முன்னர் வெளியே கசியவிடப்பட்டன.
தருஸ்மான் அறிக்கையிலிருந்து பாடம் பெற்றுக்கொண்டிருந்தும்கூட ஐநா நிருவாகம் பெற்ரியின் அறிக்கையில் அப்படியான நிகழ்வு திரும்பவும் இடம்பெறாமல் உறுதி செய்வதற்கு அக்கறை காட்டாததை பற்றி வருத்தத்துடன் குறிப்பிடவேண்டி உள்ளது. பெற்ரியின் அறிக்கை வெளியிடப்படும் முன்னர் அதன் சில பாகங்கள் கறுப்பு மையினால் மறைக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு முன்னர் வெளியே கசிந்த அறிக்கையில் அந்த பகுதிகள் தெளிவாக வெளியாகியிருந்தன. அப்படியானால் எது உத்தியோகபூர்வ அறிக்கை? செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு முதலே உள்ளேயிருந்து யாராவது முன்கூட்டியே தீர்ப்பு வழங்கியுள்ளார்களா? அல்லது அவன் அல்லது அவள் அல்லது அவர்கள், செயலாளர் நாயகம், அறிக்கையை பார்ப்பதற்கு முன்னரே அவருக்கு மேலதிக அழுத்தங்களை வழங்க விரும்பினார்களா? யார் அவர்கள்? ஏன் அவர்கள் தொடாந்தும் அணுகுகிறார்கள்?
ஐநா நடவடிக்கைகளில் இந்த வகையான கசிவுகள் எப்போதும் ஏற்பட்டதில்லை. இந்த தொடர்ச்சியான  கசிவின் தன்மையானது, காரண காரியங்களின் சுயாதீனத் தன்மையை அடையாளம் காட்டுகிறது, நிச்சயமாக ஐநா நிருவாக அமைப்பின் ஒரு பகுதியினர் ஸ்ரீலங்காவை தொந்தரவு செய்வதையும் மற்றும் அவமானப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்கள். அல்லது, குறிப்பிட்ட ஒரு உபாயம் ஐநாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளதா? பான் கீ மூனின் அரசாட்சியில் உண்மையில் ஏதோ மோசமான சில இடம்பெறுகின்றன.
ஐநா அறிக்கைகளின்படி அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வெளிக் கொணர்ந்ததின்படி, ஈழப்போர் - 4 ல், எல்.ரீ.ரீ.ஈயின் பாத்திரம் மற்றும் அதன் பங்களிப்பு என்பனவற்றைப்பற்றி சிறிதளவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் புலம்பெயாந்தவர்கள் உட்பட குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர், அல்லது அவர்களது புரவலர் தேசங்கள்,மற்றும்; தங்கள் அருகிலிருக்கும் தொகுதிமீது அழுத்தங்களை நீண்டகாலமாக செலுத்திய அவற்றின் அரசியல்வாதிகள் பற்றி எதுவும் வெளியிடாமல் அமைதி காக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அறிக்கைகள் பக்கச்சார்பானவை மட்டுமன்றி,அவை பெரும்பாலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பதிப்புகளை மட்டுமே மேற்கோள் காட்டுகின்றன. இங்கு அரசாங்கம் பிரச்சினையில் இணைந்து கொள்வதற்கு விரும்புவதில்லை, இங்கு அரசாங்கத்துக்கு வெளியிலிருக்கும் அறிவுள்ள ஆட்கள், தெளிவுடன் காரணங்கள்,தரவுகள் மற்றும் உண்மைகள் என்பனவற்றை வைத்துக்கொண்டு வெளிப்படையாக பேச முடியும். சில தொண்டு நிறுவனங்கள் கூட அவர்கள் வாதிடும் உணர்வின் ஒரு பகுதியாக மூன்றாம் நாடுகளில் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன. இது தனிப்பட்டவர்களின் வாழ்க்கை மற்றும் கண்ணியம் உட்பட நிறுவனங்களின் தொண்டாற்றும் உணர்வுகளின் உரிமை மற்றும் அரசாங்கத்தின் கடமைகள், பொறுப்புகள் என்பனவற்றுக்கும் அப்பால் உள்ள வழியில் செல்கிறது. மனித உரிமைகள் மீதான அவர்களின் அக்கறை உண்மையானதும் தீவிரமானதுமாக இருக்குமானால். அத்தகைய தான, தருமங்கள், அவர்களின் சொந்த வீட்டிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். எங்கள் காலங்களில் நடைபெற்ற ஈராக் மற்றும் ஆப்கான் போர்கள்,அவற்றின் காலத்தையும் விஞ்சி தேசிய மனச்சாட்சியை முற்றுகையிட்டபடி பல ஆண்டுகள் மற்றும் தசாப்தங்கள் கடந்தும் உயிர்வாழும்.
பூச்சிய பாதிப்பு கொள்கை
நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது. அது வழங்கப்பட்டதாக நன்றாகத் தெரியவும் வேண்டும். ஐநா உட்பட,அரசாங்கத்தையும் மற்றும் ஆயுதப் படைகளையும் அதேபோல சர்வதேச சமூகத்தையும் பொறுத்தமட்டில் இது பெரிதும் உண்மையாகும்.இதன்படி இருபக்கத்திலிருந்தும் --- மற்றும் இனப்பிரச்சினையின் எல்லா பங்காளர்களிடமிருந்தும் - அவர்கள் பொதுவாக வெளிப்பக்கத்தை மட்டுமே பார்ப்பதால் பிரச்சினையின் உட்பக்கத்தை நன்றாக அவதானித்து அவர்களின் ஆதரவையும் ஒத்தாசையையும் வழங்க வேண்டும்.
அளவுக்குமீறிய பொதுமக்கள் இழப்பு எண்ணிக்கையை வெளியிட்டுள்ளதாக ஐநா மீது கண்டனம் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் அறிக்கையில் சாத்தியமானவரை முதல் முறையாக பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முந்தைய சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் சேவையில் நீண்டு தொடர்புகளைக் கொண்டு களத்தில் பணியாற்றியவர்கள் என்று அரசினால் அடையாளம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கையை தெரிவித்தபோது அவர்கள் பரிகசிக்கப்பட்டார்கள்.
வெளிவிவகார அமைச்சின் அறிக்கைகூட முன்னர் அரசாங்கம் வெளியிட்ட ‘பொதுமக்கள் பாதிப்பு பூச்சியமாக இருக்கும்படி நடத்தப்பட்ட போர்’ என்கிற அறிக்கைக்கு முற்றிலும் விரோதமாக முகத்தில் கரி பூசும்வண்ணம் அமைந்துள்ளது. அது கொள்கைக்காக ஒன்றும் களநிலைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மற்றொன்றும் என்பதைப் போலுள்ளது. ஐநா மனித உரிமைகள் சபையில் (யு.என்.எச்.சி.ஆர்) அரசாங்கத்தின் செயல் திட்டத்தின் ஒருபகுதி ஆயுதப் படைகளின் குற்றச்சாட்டின் தன்மையைப் பரிசீலிக்கும் கட்டாயத்துக்கு உட்பட்டிருந்தது. அதில் ஒரு விடயம் அரசாங்கம் சர்வதேச சுமூகத்தின் கோரிக்கைகளுடன் போட்டி போடவேண்டியிருந்தது,மற்றவிடயம் அவர்கள் பொதுமக்கள் அல்ல புலிகள் என்று விவாதிக்க வேண்டியிருந்தது. அரசாங்கம் நம்பத்தகுந்ததையும் ஏற்றுக்கொள்ளத் தக்கதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
அரசாங்கமும் மற்றும் ஆயுதப்படையினரும் ஒரேசமயத்தில் பத்திரிகைகளுக்கு எதிராக இராணுவத்தால் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் சாதகமான விளைவுகளை அவதானிக்க வேண்டும். தீர்ப்பானது இராணுவத்துக்கு எதிராக வருமானால், அவற்றை சரி செய்வதற்கான பொறிமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்துமா? அல்லது அதற்கு ஒருபடி மேலே சென்று ஒரு கொள்கை விடயத்தைப்போல பொதுமக்களின் சுற்றாடலில் இருந்து எவ்வளவு சாத்தியப்படுமோ அவ்வளவு தொகையான ஆயுதப்படையினரை அங்கிருந்து வெளியேற்றுமா?
(நன்றி: சண்டே லீடர்)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 நன்றி தேனீ

 

No comments: