.
ஞானா: (பாடி) இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு ….. அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
அப்பா: என்ன ஞானா நல்ல இன்பமாய் இருக்கிறாய் போலை கிடக்கு. என்ன விசேசம்?
ஞானா: ஒரு விசேசமும் இல்லை அப்பா. இந்தத் திருக்குறள் விசேசம்தான்.
அப்பா: திருக்குறளிளை அப்பிடி என்ன விசேசத்தைக் கண்ணிட்டாய். எனக்கும் சொல்லன்.
ஞானா: அது வந்தப்பா திருக்குறளிலை அறத்துப் பாலிலை அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழு மில எண்டு வள்ளுவர் சொல்லியிருக்கிறார் எல்லே.
அப்பா: ஓ அது உண்மைதான். அறன்வலியுறுத்தல் எண்ட நாலாவது அதிகாரத்திலை ஒன்பதாவது குறள் அதுக்கு இப்ப என்ன வந்திட்டிது?
ஞானா: உந்தக் குறளின்ரை கருத்தென்னப்பா?
அப்பா: அதுவந்து….தருமமான செயல்களைச் செய்து, அதனால் வருகிற மகிழ்ச்சிதான் சரியான இன்பமாகும். மற்ற வழிகளில் அடைகிற மகிழ்ச்சி இன்பம் அல்ல. புகழும் கூடக் கிட்டாது. எண்டதுதான் கருக்து.
ஞானா: உதிலை ஒரு சிக்கல் இருக்கப்பா. திருக்குறளிலை, காமத்துப் பாலுக்கு இன்பப் பால் எண்டும் சொல்லிறவை தானே. அப்ப காமத்தாலை வாற இன்பம் சிறந்த இன்பம் எண்டுதானே அதிலை வாற குறள்கள் எல்லாத்திலையும் சொல்லியிருக்கு. இதிலை அறம் செய்யிறதாலை வாற இன்பந்தான் பெரிய இன்பம் எண்டு சொல்லிறார். திருவள்ளுவர் இப்பிடி ஏறு மாறாய்ச் சொல்லுவாரே அப்பா?
அப்பா: பிள்ளை ஞானா உனக்கு, இன்பத்தைப் பற்றிய அனுபவம் கிடையாது. அதைப்பற்றி எனக்கும் உன்ரை அம்மாவுக்குந்தான் தெரியும். ஆனபடியாலை அம்மாவைக் கூப்பிடு அவவை வைச்சுக் கொண்டுதான் உதைப் பற்றிக் கதைக்க வேணும்.
சுந்தரி: (வந்து) என்னை ஒருத்தரும் கூப்பிட வேண்டாம். நான் எல்லாம் கேட்டுக் கொண்டுதான் நிண்டனான். என்னைக் கேட்டால் காம இன்பந்தான் எல்லா இன்பத்திலும் மேலான இன்பம் எண்டுதான் சொல்லுவன்.
அப்பா: என்ன சுந்தரி? திருவள்ளவருக்குத் தெரியாத காம இன்பம் உமக்குத் தெரியுமே? களவியலிலை 7 அதிகாரம், கற்பியலிலை 18 அதிகாரம் ஆக மொத்தம் 25 அதிகாரம், அதிலை 250 குறள்கள் இவ்வளவும் சொன்ன வள்ளுவருக்குத் தெரியாத காம இன்பமே உமக்குத் தெரியப் போகுது. அவரே அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழுமில எண்டால் அதிலை ஒரு உண்மை இருக்கத்தானே வேணும்.
சுந்தரி: என்ன உண்மை எண்டு சொல்லுங்கோவன். அதையுந்தான் கேட்போமே.
அப்பா: காம இன்பம் சிறந்த இன்பந்தான். ஆனால் அது உடலோடை சம்பந்தப்பட்ட இன்பம். உலகத்திலை தமனிசர் அனுபவிக்கிற இன்பங்கள் பல இருக்கு. உடலைத் தவிர மற்றக் கண், காது, மூக்கு, நாக்கு எண்ட நாலு பொறிகளும் அனுபவிக்கிற இன்பங்களும் இருக்குத் தானே.
சுந்தரி: அப்பா….உந்த ஐம்பொறிகளும் அனுபவிக்கிற இன்பம் காமத்திலை; இருக்கொண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறார் தானே. மறந்து போனியளே குறளை.
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.
எண்ட புணர்ச்சி மகிழ்தல் எண்ட அதிகாரத்திலை உள்ள இந்தக் குறளிலை மனிசர் ஐம்புலன்களாலும் அனுவவிக்கிற இன்பங்கள் எல்லாம் ஒண்டு சேர்ந்து பெண்ணிட்டை இருக்கு எண்டுதானே சொல்லியிருக்கிறார்.
ஞானா: அப்பா அம்பிட்டுப் போனியளே! அம்மாவும் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை. இப்ப என்ன சொல்லப் போறியள்.
அப்பா: ஞானா! அம்மா சொல்லுறது சரிதான். ஆனால் வள்ளுவரை மடக்கோலாது பிள்ளை. காம இன்பத்திலை எல்லா இன்பமும் இருக்கு. ஆனால் புகழ் உண்டோ? காம இன்பம் அனுவச்ச இரண்டு பேரோடுந்தான் நிக்கும். அதாலை அவையளுக்குப் புகழ் வருமோ? வராது. ஆனால் அறமான காரியங்களைச செய்யிற போது வாற மகிழ்ச்சியியோடை, பிறர் பாராட்டுகிற புகழும் உண்டு. அதனாலைதான் வள்ளவப் பெருந்தகை சொன்னார்
அறத்தான் வருவதே இன்பம் மற்றேல்லாம்
புறத்த புகழு மில.
எண்டு. மனச்சாட்சிக்கு இன்பம் கொடுக்கிறதும், அத்தோடு புகழையும் கொடுப்பதும் அறம் ஒண்டுதான். எவ்வளவு நுட்பமாய் மற்ற இன்பங்கள் புறத்த புகழு மில எண்டு சொல்லியிருக்கிறார் பாத்தியளே!
சுந்தரி: நல்ல விளக்கந்தான் அப்பா. ஆனால் இவள் பிள்ளை ஞானா எப்ப தன்னுடைய ஐம்புலன்களுக்கும் இன்பம் கொடுக்கப் பேறாள் எண்டு கேளுங்கோ.
ஞானா: அம்மா அவை புறத்த புகழு மில. நான் முதலிலை புகழைத் தேடப்பபோறன்.
அப்பா: சுந்தரி, எப்பிடி இருக்கு உம்மடை மகளின்ரை குறம்பு. திருக்குறளை வைச்சே எங்களுக்கு அடி போடிறாள்.
(இசை)

No comments:
Post a Comment