நாடுகடந்த (நட்டுக்கழண்ட) தமிழீழ பாராளுமன்றத்தின் பிரித்தானிய அலைவு- (1) - அருளம்பலம்.


NKTபிரித்தானியாவில் பனிப்பொழிவுக்கான காலநிலை வந்ததோ என்னவோ நாடுகடந்த தமிழீழம் என்ற அமைப்பினருக்கும் தற்போது பிரித்தானியாவில் குளிர் காய்ச்சல் பிடித்துள்ளதாக தெரியவருகிறது. மாவீரர் தினத்தை அடுத்து நாடுகடந்த தமிழீழ அணியினர் தமது 4வது பாராளுமன்ற அமர்வினை நவம்பர் 29 அன்று பிரென்ற் நகர மண்டபத்தில் பிரமாண்டமாக நடாத்த ஒழுங்கு செய்திருந்தனர். சுமார் ஒரு வார காலமாக தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலிகள், மக்கள்  அனைவருக்கும் அழைப்புகள் உத்தரவுகளுடன் அமர்வு பற்றிய விளம்பரம் மற்றும் அது பற்றிய கலந்துரையாடல்கள் மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் திடீர் என்று 27ம்திகதி நாடு கடந்த தமிழீழக்காறார் தலையில் 155மில்லி மீட்டர் அட்லறி ஷெல்லொன்று விழுந்து வெடித்தது. பிரென்ற் நகர மண்டபம்> தமது மண்டபத்தை இவர்களிற்கு வாடகைக்கு விட இருந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டு 29ம் திகதி மண்டபம் உங்களுக்கு கிடையாது  என்று கூறிவிட்டார்கள். அமர்க்களமாக ஏற்றப்பட்ட புலிக்கொடி மற்றும் தமிழீழக் கொடி பிரென்ற் நகர மண்பத்தில் இருந்த அகற்றப்பட்டு அங்கிருந்த நா.க.தவின் விசேட பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

இது இலங்கை புலனாய்வு துறையின் மற்றுமொரு தாக்குதல் என்று வளமையான பாணியில் புலம்பிய நா.க.தவினர் அடுத்த மண்டபம் ஒன்றை தேடி அலைய ஆரம்பித்தனர். இதற்கிடையில் சில புலியெதிர் குழுவினர் தங்கள் எதிர்ப்பால்தான் மண்டபம் போனது என உரிமை கோரினர். நானும் யாரடா அது இப்படி கல்லுக்குத்தியிருப்பாங்கள் என்ற ஆர்வத்தில் சில தொடர்புகளிடம் விசாரித்தேன். உண்மையில் இலங்கை புலனாய்வு துறைக்கோ அல்லது இலங்கை து}தவராயலத்திற்கோ இது பற்றி ஒன்றுமே தெரியாதாம். இது பற்றி அவர்கள் ஒரு வரியில் “தங்கள் மற்றவர்களின் ஜனநாயக விடயங்களில் ‘பிரித்தானியாவில்’ தலையி்டுவதில்லை”; என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு உண்மையிலேயே புல்லரித்து விட்டது. தலையை சொறிந்த படி சிந்தனை செய்த போது தான் எனக்கு ஜேர்மன் புலிகளின் பொறுப்பாளர் ஒரு சமயம் எடுத்த கண்ணகி சபதம் ஞாபகத்திற்கு வந்தது.
புலிகளின் அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவின் சீடன் தன் இந்த வாகீசன். 2009இல் கஸ்ரோ இறந்த பின் முழுமையாக அனைத்துலக செயலகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நோர்வே நெடியவன் குழு.  “நான் உயிருடன் இருக்கும் வரை நாடுகடந்த தமிழீழ அரசின் அதாவது உருத்திரகுமார் அணியின் செயற்பாட்டை ஒரு போதும் ஐரோப்பாவில் அனுமதிக்க மாட்டேன்” என்ற இவரின் சபதத்தை காப்பாற்ற ஒரு வேளை இவர் சாரந்த  லண்டன் ஒற்றர்கள்தான் இதை செய்திருப்பார்களோ என்ற ஆர்வத்தில் எனது புலனாய்வை பொட்டம்மான் றேஞ்சிற்கு அந்த பக்கமாக முடக்கி விட்டேன்.
நோர்வே நெடியவன் குழுவின் அனைத்துலக செயலகம் தான் லண்டனில்  உள்ள தங்கள் ஆட்களை வைத்து இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்பது அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் உறுதியானது. எனது தொலைபேசிக்கு புதிய ஒரு முகவரியுடன் நா.க.த பாராளுமன்ற அமர்வு பற்றிய ஒரு குறுஞ்செய்தி வந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் திட்டமிட்டு ஒழுங்கு செய்த மண்டபம் மாற்றபட்பட்டுள்ளதாகவும் புதிய முகவரி பற்றி விரைவில் அறியத் தருவதாகவம் அதில் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
எனக்குத் தெரிந்த சில நா.க.தவினரிடம் கதைவிட்டு கதை புடுங்கியதில் ஹரோ ரெயினஸ் லேனில் உள்ள சொறஸ்ரியன் மண்டபம் தற்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தாங்கள் புலிக்கொடி மற்றும்  தமிழீழக் கொடியுடன்  பாராளுமன்றத்தை தற்போது அங்கு கொண்டு போவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இது நடைபெற்றது நவம்பர் 28 மாலை. நானும் ஹரோவில் வேலை முடிந்து நா.க.தவினரின் பாராளுமன்ற அமர்வு தயாரிப்புகள் எப்படி நடைபெறுகிறது என்று புதினம் பார்க்க ரெயினஸ்லேன் நோக்கி விரைந்தேன். மண்டபத்திற்கு வெளியில் ஒரு ஈ காக்காவையும் காணவில்லை. ஊரில் சப்பறம் கட்டுவது போல் பாராளுமன்றம் வளைவு ஏதாவது கட்டியிருப்பாங்கள் என்று பார்த்தால் அதையும் காணம் புலக் கொடியையும் காணோம். மண்டபத்துள் தலையை நுழைத்து மெதுவாக எட்டிப்பார்தேன். ஒரு பெண் கையில் தும்பு தடி போன்ற ஒரு தடியுடன் வேகமாக என்னை நோக்கி வந்தார். அடிக்காத குறையாக “உங்களை இந்த பக்கம் வரவேண்டாம் எண்டு சொன்னான் தானே ஏன் திரும்ப திரும்ப  வாறியள் உங்களுக்கு ஹோல் என்றை சீவியத்திலை கிடையாது” என்று மனிசி என்னிடம் எரிஞ்சு விழுந்துது. நான் அவவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு எனது அடையாள அட்டையை காட்டியதும் மனிசி என்னை கும்பிட்டு தயவு செய்து வெளியில் போக சொல்லி கேட்டது. நான் நசிஞ்சு நசிஞ்சு கேட்டதில் குடும்ப ஒருங்கிணைவு என்று தன்னிடம் யாரோ ஒரு தமிழர் மண்டபம் கேட்டதாகவும் தான் டயறியை பார்த்துவிட்டு சரி சொன்னதாகவும் உடனடியாக வந்தே முழுப்பணத்தையும் செலுத்தி விட்டு> “மண்டபத்தை சோடிக்க ஆட்களை கூட்டி வருகிறோம்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்களாம்.  இவர்கள் போய் ஒரு 5 நிமிடத்தில்  இன்னுமொருவர் அழைத்து நாளை இங்கு பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் இரகசிய சந்திப்பு நடைபெற உள்ளது. அது உங்கள் மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளதாக அறிந்தோம் உண்மையா? என்று கேட்டார்கள். அப்படி அதை நடாத்த நீங்கள் விட்டால் உங்கள் மண்டபம் பொலீசாரால் சீல்வைக்க கூடிய அபாயம் இருப்பதாகவும் வெருட்டியுள்ளனர்.
பிரென்ற் நகர மண்டபம் ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த கதையை கூறிவிட்டு வேண்டுமென்றால் அங்கு விசாரிக்க சொல்லி அந்த நகரசபை மண்டப தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துள்ளனர். ஆளை விடு சாமி என்று மனிசி அலறியடித்து ந.க.தவினரிடம் வாங்கிய அச்சவார காசையும் திருப்பிக்கொடுத்து விட்டு  “பொய் சொல்லி இனியும் என்னை ஏமாற்ற வேண்டாம் இனி இந்தப்பக்கம் வந்தல் பொலிசுக்கு நானே தொலைபேசி எடுப்பேன்” என்று அவர்களிற்கு ஏச்சுக்கொடுத்து அனுப்பி விட்டது.       
நா.க.தவினருக்கோ அப்பதான் யார் இப்படி செய்கிறார்கள் என்று மெதுவாக துப்புத்துலங்க வெளிக்கிட்டது. தம்முள் இருக்கும்  நெடியவன் குழு ஒற்றர்களின் சதி தான் இது என்பது அவர்களுக்கு மெதுவாக புரிய வந்தது. ஆனால் யார் இப்படி சுடச்சுட தமது தகவல்களை நெடியவன் குழுவுக்கு அனுப்புகிறார்கள் என்பதை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் இதை எப்படியாவது முறியடிச்சு நா.க.தவின் 4வது பாராளுமன்ற அமர்வை பிரித்தானியவில் நடத்துவது என நா.க.த போராளிகள் சபதம் எடுத்தனர். இதற்கிடையில் நெடியவன் குழு ஒரு து}து விட்டார்கள். இது ஒரு மறைமுக மிரட்டலாகவும் இருந்தது. பிரித்தானியாவில் எமது தயவின்றி நீங்கள் இந்த அமர்வை நடாத்த முடியாது. நீங்கள் எங்களுடன் இணைந்து நடத்துவதாக இருந்தால் நாம் ஒரு திறமான மண்டபத்தை உடன் தர முடியும் என்றும் கூறியுள்ளனர். நா.க.தவினருக்கு எல்லாம் வெட்ட வெளிச்சமாக தற்போது புரிய ஆரம்பித்தது. சரி நாங்கள் உங்கள் பாதையிலேயே வருகிறோம் என்று அவர்களுக்கு ஒரு அல்வா கொடுத்த படி மீண்டும் இரகசியமாக சவுத்தோல் பகுதியல் ஒரு மண்டபத்தை ஒழங்கு செய்து விட்டு கப்சிப் என்று இருந்தனர். ஹோல் விபரங்களை அன்றிரவு  இரகசியமாக வைத்திருப்பது. அமர்வு நாளான 29 காலை இது பற்றி அறிவிப்பது என முடிவெடுத்தனர்.
நவம்பர் 29 காலை 10 மணியளவில் கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் அனைவருக்கும் மண்டப விபரங்கள் அறிவிக்கப்பட்டது. குறுஞ்செய்தி போய் ஒரு பத்து நிமிடத்திலேயே சவுத்தோல் மண்டபத்திற்கும் நெடியவன் குழு அடித்தது ஒரு பெரிய ஆப்பு. மண்டபம் இந்தியர்களுக்கு சொந்தமானது. உங்கள் பிரதமரை கொன்ற புலிகளுக்கு மண்டபம் கொடுக்கிறீர்களா என்ற சென்டிமென்டல் மிரட்டல் நா.க.தவின் திட்டத்தை தவிடுபொடியாக்கியது. மாலையில் அமர்வு! மண்டபம் இன்னும் இல்லை! மக்கள் திரளாக வருகிறார்களோ இல்லையோ உலகெங்குமிருந்து வந்த நா.க.தவின் அமைச்சர் பட்டாளம்; மட்டும் மாடு கலைச்சு கலைச்சு முட்டுற வர்ணத்திலை கலர் கலரா உடுப்பை போட்டுக்கொண்டு அமர்வுக்கு ரெடியாக இருந்தார்கள்! ஆனால் மண்டபம் தான் ரெடியில்லை.  வெளியிலோ கடும் குளிர் வேறு. அனால் ஓடியாடித் திரிந்தும் இன்னும் மண்டபம் கிடைக்கவில்லை. எல்லாரும் நடு றோட்டில் நின்றபடி செவ்வாய் கிரகத்திற்கு போற பாணியில் மந்திராலோசனை நடாத்தியபடி இருக்க மீண்டும் நெடியவன் குழுவின் அழைப்பு  “மண்டபம் ரெடி நீங்க ரெடியா?”
இதற்கெல்லாம் அடி பணிய முடியாது இது நா.க.த அணியின் பிடிவாதம்.! ஆனால் அதிஸ்ட வசமாக ஒரு மண்டபம்  இல்லை இல்லை ஒரு மைதான் தான் இப்ப கிடைத்தது. நா.க.தவினரின் ஆதரவு அணி கடந்த இரண்டு வருடமாக மாவீரர் தினம் நடாத்தும் மைதானம் தான் இப்ப இருக்கு! அங்கு ஓழுங்கான ஒரு மண்டபம் கிடையாது. ஆனால் என்ன  செய்வது எப்படியாவது அமர்வை நடாத்த வேண்டும். சரியென்று ஒருவாறு அதை ஒழுங்கு பண்ணி விட்டு பட்டு வேட்டி காஞ்சிபுரம் சாறியுடன் நா.க.தவினர் சவுத்ஹேல் நடு றோட்டில் இருந்து கிறீன் பேர்ட்டில் உள்ள மைதனத்தை நோக்கிய தமது ஊர்வலத்தை தொடங்கினர்.
29 மாலை கிறீன் போட்டில் வெப்பநிலை -1. ஏற்கனவே நடு றோட்டில் நின்று குளிரில் விறைத்த ந.க.தவினர் நடு நடுங்கியபடி கிறீன்பேர்ட் மைதானத்திற்கு  வந்து சேர்நதனர். கனடா குளிர் கண்ட நா.க.தவின் கனேடிய உறுப்பினருக்கு பிரித்தானிய குளிரில் மண்டை விறைச்சு விட்டது. பிரித்தானி்ிய அமைச்சர் மற்றும் உதவி பிரதமருக்கு உடம்பு முழுவதுமே விறைத்து விட்டது. அமர்வும்  ஒருவாறு  தடல் புடலாக அரம்பித்த போதும் பேச வேண்டியவர்களால் எதுவுமே பேச முடியவில்லை. கிறீன் பேர்ட் மைதான மண்டபத்தில் வெளியில் இருந்து குளிரை விட மேசமான குளிர் உள்ளே! மண்டபத்தை சூடேற்றும் கருவி இருந்தும் குளிர் குறைவதாக தெரியவில்லை. அவர்களால் பேச முடியாத அளவு குளிர். ஏப்படியோ நெடியவன் அணி தயவின்றி ஒரு நாளாவது தமது அமர்வை நடாத்திய திருப்தியில் நா.க.தவினர் நெஞ்சை நிமித்தினார்கள். அன்றைய அமர்வு முடிந்ததும் இனியும் இப்படி அலைய  முடியாது என்ன இருந்தாலும் அவங்களும் எங்கடை ஆட்கள் தானே பேசாமல் நெடியவன் அணியின் பக்கம் சார்வதே சரி என அங்கிருந்த அனைவரும் ஏகமனதாக நடுங்கி நடுங்கி முடிவெடுத்தனர். நெடியவன் குழுவின் பாரிய சுற்றி வளைப்புக்கு உள்ளான நா.க.தவினர் இப்ப நெடியவன் குழுவிடம் சரண். ஆனால் சும்மா சொல்லக் கூடாது புலிகளை விஞ்சுமளவிற்கு நெடியவன் அணி ஒரு கொமாண்டே ஸ்ரைலில் நா.க.தவின் 4வது அமர்வை எப்படி முடித்தார்கள் என்பதையும் நா.க.தவின் அமர்வில் ஏன் பிரதமர் உருத்திரகுமார் அவர்கள் பங்கு பற்றவில்லை என்பதையும் அடுத்துதருகிறேன்.  
 நன்றி தேனீ 
தொடரும்.

No comments: