உலகச் செய்திகள்

.
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் உடைப்பு

கேட் கர்ப்பம்: உறுதி செய்தது ஜேம்ஸ் மாளிகை

அமெரிக்க ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு!

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் உடைப்பு

பாகிஸ்தானில் கராச்சி நகரிலுள்ள சோல்ஜர் பஜார் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீராம் பிர் மந்திர் என்ற இந்துக் கோவில் உடைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றியும் ஏராளமான இந்துக்கள் குடியிருந்து வருகிறார்கள்.



இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கூறி நிலத்தின் உரிமையாளர் நேற்று திடீரென்று புல்டோசர் மூலம் கோவில் மற்றும் பல வீடுகளையும் இடித்து தள்ளியுள்ளனர்.



நீதிமன்றம் விதித்த தடை உத்தரவையும் மீறி இடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாக அங்குள்ள இந்து கவுன்சில் நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர்.   நன்றி வீரகேசரி  




கேட் கர்ப்பம்: உறுதி செய்தது ஜேம்ஸ் மாளிகை

By General
2012-12-04

பிரிட்டனின் இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பமாக இருப்பதாக புனித ஜேம்ஸ் மாளிகை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து புனித ஜேம்ஸ் மாளிகையின் பேச்சாளர் கூறுகையில், இளவரசி கேட் மிடில்டன் மூன்று மாதம் கர்ப்பம் தரித்துள்ளார்.


இதன் காரணமாக நேற்று காலையில் லண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சில நாட்களுக்கு அங்கேயே தங்கியிருப்பார் என தெரிவித்தார்.

இதனையடுத்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உட்பட உலகின் பல முக்கிய நாடுகளில் இருந்து வில்லியம்- கேட் மிடில்டன் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.    
நன்றி வீரகேசரி 






அமெரிக்க ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு!

By Kavinthan Shanmugarajah
2012-12-04 15:49:10

அமெரிக்க ஆளில்லா விமானமொன்றை கைப்பற்றியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

வளைகுடா கடற்பகுதி வான்பரப்பில் வைத்தே இவ்விமானத்தைக் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

ஈரானின் சக்தி மிக்க புரட்சிப்படைப் பிரிவே இவ் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளது.



சிறிய 'ஸ்கேன் ஈகிள்' விமானமொன்றே கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விமானமானது வளைகுடா பகுதியில் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக ஈரானிய இராணுவ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
      நன்றி வீரகேசரி 



No comments: