அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் 'இலக்கிய அரங்கம்' நிகழ்வு,


அனைத்து தமிழார்வலருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்,

அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் 'இலக்கிய அரங்கம்' நிகழ்வு, எதிர்வரும் 16.12.2012 - ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் 'இலக்கியச்சுடர்' த. இராமலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 'இலக்கியச்சுடர்' அவர்கள் சென்ற ஜீலை மாதம் இடம்பெற்ற சிட்னிக் கம்பன் விழாவில், தன் பேச்சாற்றலால் அவையோரைப் பெரிதும் கவர்ந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

'படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள்' எனும் புதியதோர் இயல் நிகழ்வையும், இங்கு அரங்கேற்றவிருக்கின்றோம். அனைவரையும் திறளாய் வந்து நிகழ்வைக் கண்டு களிக்குமாறு, அன்போடு வேண்டுகின்றோம்.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்.

No comments: