ஓஷோ சொன்ன கதை - 1

.ஒரு ஜென் சந்நியாசி மீது கோபம்க் கொண்ட அந்த தேசத்து அரசன், அவரை தூக்கிட உத்தரவிடுகிறான். கொல்வதற்கு முன்பு அவரசன் அவரிடம், " உனக்கு இன்னும் 24 மணி நேரம் தான் இருக்கிறது - நீ அதை எப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறாய்" என்று கேட்டார்.

இதைக்கேட்ட சந்நியாசி சிரித்தவாறு, " நான் எப்போதும் வாழுவது போல - கணத்துக்குக் கணம் வாழ்கிறேன் ! என்னைப் பொறுத்தவரையில், இந்த கணத்துக்கு மேல் எதுவும் கிடையாது. ஆகவே, எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன ? 24 வருடம் இருந்தால் என்ன ? எனக்கு இதில் எந்த வேற்பாடும் இல்லை. நான் கணத்துக்கு கணம் வாழ்ந்து வந்திருப்பதால், இந்த கணமே எனக்கு அதிகம் தான். இந்த ஒரு கணம் போதும்" என்றார்.

அரசர் ஒன்று புரியாமல் விழித்தார். அப்போது சந்நியாசி அரசரிடம், " நான் உங்களை ஒன்று கேட்க அனுமதி கொடுங்கள். நீங்கள் தொடர்ந்து இரண்டு கணங்கள் ஒரே சமயத்தில் வாழ முடியுமா ?" என்று கேட்டார்.

யாருமே அப்படி வாழ்ந்தது கிடையாது. வாழ்வதற்கு ஒரே வழி, ஒரு சமயத்தில் ஒரு கணம் வாழ்வது தான்.

யோக , யோகி, தியானம் பற்றி விளக்கம் சொல்ல ஓஷோ அவரள் உதாரணத்திற்கு சொன்ன கதை.

***

No comments: