உலகச் செய்திகள்

.
ஒபாமாவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய மாணவன் _
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதை உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவரொவர் ஒத்துக்கொண்டுள்ளார்.
சிறுமியைக் கடத்தி 10 வருடங்கள் பாலியல் அடிமையாக நடத்திய ஜோடி _
அநாதரவான செவிப்புலனற்ற 10 வயது சிறுமியொருவரை பிரித்தானியாவுக்குக் கடத்தி வந்து அவரை 10 வருட காலமாக பாலியல் அடிமையாக நடத்திய ஜோடி ஒன்று தொடர்பான வழக்கு பிரித்தானிய மின்ஷல் வீதி கிறவுண் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 


விடுதலைப்புலிகளுக்கு போர்க்கருவிகள் வாங்க சதி செய்ததாக இலங்கைத்தமிழர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு 
ஒபாமாவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய மாணவன் _


அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதை உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவரொவர் ஒத்துக்கொண்டுள்ளார்.

இவர் மீது ஆயுதத்தினை வைத்திருந்தமை, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தமை, ஜனாதிபதியைக் கொலை செய்யத்திட்டமிட்டிருந்தமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த உலுக்பெக் கொடிரோவ் ( 22) என்ற அவ் இளைஞன் அலபாமாவில் வைத்து கடந்த வருடம் ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போதே இவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஒத்துக்கொண்டுள்ளார்.

இவர் உஸ்பெகிஸ்தானில் இயங்கிவரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பொன்றின் கட்டளைகளுக்கிணங்கவே செயற்பட்டு வந்துள்ளார்.

இக் குற்றச்சாட்டுகளுக்காக சுமார் 30 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவருக்கு எதிர்வரும் மே மாதமளவில் தண்டனை வழங்கப்படவுள்ளது. 
__


விடுதலைப்புலிகளுக்கு போர்க்கருவிகள் வாங்க சதி செய்ததாக இலங்கைத்தமிழர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு
15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு
விடுதலைப்புலிகளுக்காக போர்க்கருவிகள் வாங்க சதி செய்ததாக, இலங்கை தமிழர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக போர்க்கருவிகள் வாங்க சதி செய்ததாக ரமணன் மயில்வாகனன் (வயது 35) என்ற இலங்கைத்தமிழருக்கு எதிராக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் நிïயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில், விடுதலைப்புலிகளுக்காக இங்கிலாந்து கம்பெனி ஒன்றிலிருந்து நீர் மூழ்கி கப்பல் மாதிரி சாப்ட்வேர், கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து இரவு பார்வை சாதனம் வாங்க சதித்திட்டம் தீட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரவு பார்வை சாதனம் வாங்குவது தொடர்பாக பிரிட்டிஷ் கொலம்பியா கம்பெனி பிரதிநிதியிடம் அவர் பேசியபோது, தனது பல்கலைக்கழக கல்வியின் 4-வது ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்க இரவு பார்வை சாதனம் தேவைப்படுவதாக பொய் காரணம் கூறி ஏமாற்றி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் விடுதலைப்புலிகளுக்காக கம்ப்ïட்டர் சாதனங்கள், மின்னணு உதிரிப்பொருட்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்கும் வேறு சிலருடன் இணைந்து செயல்பட்டுள்ளாராம்.இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் கனடாவிலிருந்து கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டுள்ளார். இவர் மீது நிïயார்க் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிபதிகள் கேள்விகள் எழுப்பியபோது, இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளதாக அரசு வக்கீல்கள் கூறி உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


சிறுமியைக் கடத்தி 10 வருடங்கள் பாலியல் அடிமையாக நடத்திய ஜோடி _

அநாதரவான செவிப்புலனற்ற 10 வயது சிறுமியொருவரை பிரித்தானியாவுக்குக் கடத்தி வந்து அவரை 10 வருட காலமாக பாலியல் அடிமையாக நடத்திய ஜோடி ஒன்று தொடர்பான வழக்கு பிரித்தானிய மின்ஷல் வீதி கிறவுண் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தினசரி பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இந்த சிறுமி சமையல், சுத்தப்படுத்தல், தைத்தல், உடைகளைக் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

இலிஸ் அஷாரும் (83வயது) அவரது மனைவி தலாத்தும் (66வயது) மேற்படி சிறுமையை 2000 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியாவுக்கு கடத்தி வந்தனர்.

கிரேட்டர் மான் செஸ்டரில் எக்கின்ஸ் எனும் இடத்திலுள்ள மேற்படி தம்பதியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்த சிறுமி அடிமையாக நடத்தப்பட்டுள்ளார்.

அச்சிறுமி இரவு நேரத்தில் சின்னஞ்சிறு அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டு கொங்கிறீட் தரையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உறங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

தற்போது சுமார் 20 வயதாகும் மேற்படி சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய அறையில் மலசலகூட வசதியோ தண்ணீர் வசதியோ இருக்கவில்லை.

இதனால் தாகமேற்படும் போதும் இயற்கைக் கடனை கழிக்க வேண்டிய தேவை ஏற்படும் போதும் தான் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையின் கதவைத் தட்டி குறிப்பிட்ட ஜோடியின் கவனத்தைத் தன்பக்கம் திசை திருப்ப முயற்சிப்பது வழமையாகும்.

ஒரு போதும் பாடசாலைக்கு செல்லாத இந்த சிறுமிக்கு பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிக் கொடுப்பனவுகளை பெறுவதற்கு வசதியாக தனது பெயரை கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. 
___

No comments: